சந்தியா தட்சிணாமூர்த்தி

WhatsApp Image 2023 08 27 at 4.20.05 PM 1 e1697349838105

நடனம் இன்றி இவள் இல்லை இவள் இன்றி நடனமும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பரதநாட்டியம் மற்றும் பல்வேறு வகையான நடனம் கற்று அந்த நடனத்தையே தன் உயிராக சுவாசித்து ஆஸ்திரேலியாவில் அந்த பல வகையான நடனத்தை
பிறருக்கு கற்று கொடுத்து வரும் டிக்டாக் பிரபலம் சந்தியா தட்சிணாமூர்த்தி அவர்களுடன் ஒரு சந்திப்பு..

NameSandya Dakshinamurthy
Father\’s nameDakshinamurthy Srinivasan
Mother\’s nameJayanthi Dakshinamurthy
NativeBangalore
UniversityCurtin University
Current placePerth Australia
DegreeB.com
OccupationCustomer service specialist – Bank
AdsAhm insurance/Hoyts

உங்களின் சொந்த ஊர் பற்றி சொல்லுங்கள் சந்தியா…?

என்னுடைய சொந்த ஊர் பெங்ளூர் ஆனால் தற்பொழுது நானும் எனது குடும்பமும் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறோம்.
இங்கு உள்ள BANK ஒன்றில் நான் பணிபுரிந்து வருகிறேன்.

BANK பணியாளராக இருக்கும் உங்களுக்கு பரதநாட்டியம் மற்றும் பல்வேறு வகையான நடனங்களின் மீது எவ்வாறு எப்பொழுது ஆர்வம் வந்தது சந்தியா….?

நான் இப்பொழுது தான் BANK ல் வேலை செய்கிறேன். ஆனால் பரதநாட்டியம் என்பது என் உயிர் உணர்வோடு கலந்து என்றே சொல்வேன்.ஏனென்றால் எனக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது ஒரு தீராத காதல் என்றே சொல்ல வேண்டும்.அதன் படியே பரதநாட்டியமும் கற்று கொண்டேன்.என்னுடைய ஆறு வயதிலேயே பல மேடைகளில் என்னுடைய பரதநாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளது.
அதனை தொடர்ந்து பல்வேறு வகையான நடனங்களை நான் கற்று கொண்டேன்.அன்றிலிருந்து இன்று வரை நடனம் என்பது என் வாழ்வோடு இணைந்தே பயணித்து வருகிறது.


இப்பொழுது என்னுடைய வீட்டில் மாலை நேர free style dance வகுப்புகளை நடத்தி வருகிறேன்.இதில் பல மாணவர்கள் நடனம் கற்று வருகின்றனர் இது எனக்கு நிறைவான ஒரு மன மகிழ்ச்சியினை அளிக்கிறது.
கலைகள் என்பது நம்மோடு அழிவது அல்ல நாம் பிறருக்கு கற்று கொடுப்பதினால் வாழ்வது என்பது என்னுடைய எண்ணம் ஆகும்.

உங்களின் வேலை பணி நடனம், நாட்டியம் வகுப்புகளுக்கு இடையே உங்களின் கவனம் எவ்வாறு டிக்டாக் பக்கமாக திரும்பியது சந்தியா…?

நான் என்னுடைய media videos மற்றும் பொழுது போக்கு videos போன்றவற்றை டிக்டாக்கில் பதிவிட ஆரம்பித்தேன் என்னுடைய dance தொடர்பான வீடியோக்களை பதிவிட்டேன்.அது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இது எனக்குள்ளும் ஒரு நம்பிக்கை தந்தது தொடர்ந்து இன்று வரை டிக்டாக் தளத்தில் என்னுடைய reels பதிவிட்டு வருகிறேன்.
இதில் என்னை support பண்ணி வரும் comments களை ஏற்று கொள்வேன்.அதில் என்னுடைய சிறு தவறுகளை சுட்டிக் காட்டி இருந்தால் அதை மாற்றி கொள்வேன்.அதற்கு மாறாக தேவையற்ற comments களை நான் எடுத்து கொள்வதில்லை.அதில் நான் கவனம் செலுத்துவதும் இல்லை.

உங்களின் இந்த முயற்ச்சிகளுக்கும் வெற்றிகளும் துணையாக உங்களுடன் இருப்பவர்கள் யார் சந்தியா…?

என்னுடைய குடும்பம் தான் என்னுடைய முயற்ச்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் பின்னால் இருக்கிறார்கள் என்று சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களுக்கு நடிப்பின் மீது ஆர்வம் உள்ளது என்று சொல்கிறீர்கள் விரைவில் தமிழ் திரையுலகில் உங்களை நாங்கள் காணலாமா….?

எனக்கு நடிப்பதில் விருப்பம் அதிலும் தமிழ் சினிமாவில் நடிக்க மிகவும் ஆசை தமிழ் படங்கள் அதிகமாக பார்ப்பேன், ஆனால் அதற்கு யார் எனக்கு வழிகாட்டியாக இருப்பார்கள் யாரை அணுகி வாய்ப்பு கேட்பது என்பது எனக்கு தெரியவில்லை.இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறேன். என் மீதும் என் நடிப்பின் மீதும் எனக்கு தன்னம்பிக்கை அதிகம் உள்ளது.
நம் எண்ணமே செயலாகும் என்பது என்னுடைய தன்னம்பிக்கை ஆகும்.
இதை தவிர தமிழ் சினிமா அவார்ட் நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பேன்.

நீங்கள் உங்களுக்கும் , பிறருக்கும்
சொல்லி கொள்ள விரும்பும் தன்னம்பிக்கை வரிகள் சந்தியா….?

வாழ்க்கை என்பது ஒரு பயணம் அதில் இன்பம் துன்பம் என எந்த இடையூறுகள் வந்தாலும் அதை நேராக எதிர் கொள்ள வேண்டும்.

அதற்கு மாறாக பயப்பட்டாலுமா ஓடி மறைந்தது கொண்டாலும் எதுவும் மாறிவிட போவதில்லை அதை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும். அது தோல்வியானால் அனுபவம். வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அவ்வளவு தான்.

சந்தியா தட்சிணாமூர்த்தி அவர்களின் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு விரைவில் நிறைவேறி சிறந்த நடிகையாக அவர் வலம் வர நாம் வாழ்த்துவோம்

✍️சுபா கிட்டு

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×