Roselin

Roselin

நீ நீயாக இரு

ரோஸ்லின்(Roselin) – நீ நீயாக இருப்பதற்கே பல போராட்டங்களை கடந்து தான் வெற்றி பெற வேண்டும்,என்ற தன்னம்பிக்கையை தனக்கு துணையாக கொண்டு தன் முயற்சிகளால் Product Designer ராக முன்னேற்றம் கண்டு வெற்றி பெற்று வரும் ரோஸ்லின் அவர்களுடன் ஒரு அழகிய நேர்காணல்.

NameRoselin 
Fathers nameRajan
Mothers nameKumari
Dob27:10:1999
School nameSagaya Madha Matriculation Hr.sec.school
OccupationProduct Designer

உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் ரோஸ்லின்(Roselin)…?

 நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.என்னுடைய அப்பா திரு. ராஜன் அவர்கள் ஒரு பெயிண்டர். அம்மா திருமதி.குமாரி அவர்கள், என்னுடைய பெற்றோர்களுக்கு 18 வருடங்கள் கழித்த பின்னர் பிறந்த பெண்குழந்தை தான்நான், சென்னையில் உள்ள Sagaya matha Matriculation Higher Secondary school ல் 12th வரை படித்தேன், அதன் பின்னர் சோகோவில் படித்தேன்.

உங்களின் சிறுவயதில் இருந்தே நீங்கள் product designer ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததா ரோஸ்லின்(Roselin)…?

 இல்லை – டாக்டர் ஆக வேண்டும் என்பதே என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் என்னால் பணம் இல்லாததால் படிக்க முடியவில்லை. நான் பிளஸ்டூ முடித்த பின்பு என்னுடன் படித்த எல்லோரும் கல்லூரியில் சேர்ந்தனர் அதன் பின்பு என் மாமாவின் மூலம் சோகோ பற்றிய விபரங்கள் தெரிய வந்தது.அதன் பின்னர் அதில் எக்ஸாம் எழுதினேன் அங்கே எனக்கு இடம் கிடைத்தது என்னுடைய படிப்பை சோகோவில் தொடர ஆரம்பித்தேன்.

உங்களின் Product Designer Work பற்றி சொல்லுங்கள் ரோஸ்லின்(Roselin)…?

ரோஸ்லின்(Roselin)-நான் படித்து முடித்த பின்னர் எனக்கு அங்கேயே Product Designer Work கிடைத்தது.இன்று என்னுடைய பணியில் கவனம் செலுத்தி முன்னேற்றம் கண்டு உள்ளேன் இன்னும் பல முன்னேற்றங்கள் கண்டு வெற்றி பெறுவேன். என்னுடைய வேலையினால் என்னுடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.நாங்கள் குடியிருந்த சுனாமி குவார்ட்ஸ்ஸில் இருந்து என்னுடைய பெற்றோர்களை ஒரு வாடகை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளேன்.என்னுடைய கடின உழைப்பினால் முன்னேறி சொந்தமாக ஒரு வீடு வாங்கி அவர்களை அங்கே மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்ற கனவு எனக்கு உள்ளது.

உங்களுடைய கனவு லட்சியம் என்று எதை சொல்வீர்கள் ரோஸ்லின்(Roselin)…?

ரோஸ்லின்(Roselin)-என்னுடைய கனவு லட்சியம் என்றால் ஃபேஷன் தொடர்பா என்னுடைய வேலை இருப்பதால். 4 or 5 years முடிந்ததும் புட்டிக் Start பண்ணலாண்ணு இருக்கேன்.அதை வெற்றிகரமாக நடத்தணும் அப்படிங்கிறது தான் என்னோட கனவு லட்சியம்.

Product designer ராக இருக்கும் நீங்கள் இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட் மீது எவ்வாறு ஆர்வம் செலுத்தினார்கள் ரோஸ்லின்(Roselin)….?

ரோஸ்லின்(Roselin) -இன்ஸ்ட்டாகிராம் பக்கம் மீது ஆர்வம் செலுத்துவதற்கு எனக்கு நேரம் இல்லை தான். இடையில் எனக்கு ஏற்பட்ட சில டிப்ரசனில் இருந்து வெளிவருவதற்க்காக ஏதாவது செய்யலாம் என்று நினைத்த போதுதான் இன்ஸ்ட்டாகிராம் பக்கம் எனது கவனம் சென்றது. என்னுடைய ஆபிஸிற்க்கு நான் இருக்கும் இடத்திலிருந்து நான்கு மணி நேரம் டிராவல் பண்ணி செல்ல வேண்டும். அந்த நேரங்களில் இன்ஸ்ட்டாகிராமில் போஸ்ட் போட தொடங்கினேன்.என்னை சுற்றி உள்ளவர்கள் பல பேர் கேட்பார்கள் உனக்கு எதுக்கு இந்த வேலை. ஏன் டிரஸ் எல்லாம் இந்த மாதிரி போடுற அப்படி இப்படின்னு கேட்பாங்க ஆனா அது எல்லாம் நான் கடந்து வந்துருவேன்.

நாம ஒண்ணு செய்யலான்னு நினைக்கும் போதே விமர்சனம் வர தொடங்கிரும் வெளில உள்ள நபர்களால அதுக்காக நாம அந்த வேலையை செய்யாம விடக்கூடாது நமக்கு ஒரு விஷயம் நிம்மதியும் சந்தோஷமும் பிறருக்கு தீங்கு இல்லாமல் கிடைக்குதுன்னா அது நாம செய்யலாம்.அடுத்தவங்க சொல்லுறதுக்காக எல்லாம் நம்மளை நம்மை மாற்றிக்க வேண்டிய எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை.

ஒரு product designer ஆகவும் இன்ஸ்ட்டா பிரபலமாகவும் இருக்க நீங்க கடந்து வந்த தடைகள், விமர்சனங்கள் பற்றி சொல்லுங்கள் ரோஸ்லின்(Roselin)…?

 ரோஸ்லின்(Roselin) -நிறையா விமர்சனங்கள் இருக்கு ஏன் உங்க பொண்ணை இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறீங்க அடுத்த வீட்டுக்கு போற பொண்ணு தானே அப்படின்னு எங்களை சுற்றியுள்ளவர்கள் என்னுடைய அம்மாவிடம் சொல்லும் போது அம்மா அதை எல்லாம் தாண்டி தான் படிக்க வைச்சாங்க. நான் என்னுடைய வேலை தொடர்பா வெளில எங்காவது நான் போகும் போது என்னா இங்க அங்க போறாங்க உன்னோட பொண்ணு வெளில எல்லாம் போறாங்கன்னு விமர்சனம் வரும் ஆனா எங்க அம்மா அதைப் பற்றி எல்லாம் என்கிட்ட வந்து கேட்க்கமாட்டாங்க அவங்களுக்கு நான் எல்லாம் சரியாக தான் செய்வேன் அப்படிங்கிற நம்பிக்கை எப்போதும் இருக்கும்,என்னை விமர்சிப்பவர்களை பற்றி எல்லாம் நான் கவலை பட்டது இல்லை. நான் எப்படி முன்னேறி செல்ல வேண்டும் அதை பற்றி மட்டும் தான் நான் சிந்திப்பேன்.

உங்களை மாதிரி சாதனைகள் செய்ய போராடுறவங்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்க ரோஸ்லின்(Roselin)…?

முதலில் உன்னை பாரு.உனக்கு என்ன வேண்டுமோ அதை நீயே முடிவு பண்ணு,அதுல வெற்றி பெற்ற அது உன்னுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி.தோல்வி பெற்றா அதுக்கு அடுத்து நீ என்ன பண்ணணுண்ணு முடிவு பண்ணு. உன்னோட முடிவை நீயே எடுத்தா அடுத்தவங்களை குறை சொல்ல வேண்டியது இல்லை,உன்னோட வாழ்க்கையில ஒரு வெற்றி கிடைக்கணும் அப்படின்னா நீ போராடு அதுக்காக காத்திரு உன்னோட முயற்சிக்கு கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி கிடைக்கும்.ஆகவே நீ நீயாக இரு .இதை தான் நான் follow பண்ணுறேன்.இதையே தான் பிறருக்கும் சொல்லுறேன்.

உங்களுடைய Highlights பற்றி சொல்லுங்கள் ரோஸ்லின்(Roselin)…?

Always eager to connect, Inspire , learn and grow 

மிகவும் நன்றி ரோஸ்லின். உங்களுடைய கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்.

 ✍️ சுபா கிட்டு

Scroll to Top