NATARAJAN

NATARAJAN

அச்சம் என்பது அறவே இல்லை
துச்சமென நீ எடுத்த செயலில் துணிந்து நின்றால்…..

லந்தர் கோட்டையில் திரை வாசம் அறிந்திடாத குடும்பத்தில் பிறந்த….

இன்றைய சத்யா சீரியலின் வெற்றி இயக்குனரே….

சின்னத்திரையில் சாதித்திட
தடைகள் பல கடந்து வந்தாய்…..

சூழ்ச்சிகள் கண்டு அஞ்சாது
சூழ்நிலை கைதியாகாது…

காத்திருந்து சாதிக்க
பிறப்பெடுத்தாய்
கலை தாயின் மடியில்
இயக்குனராய்……

ஆரம்பத்தில் அப்பாவின் நகைச்சுவையில் தொடங்கியது உனது திரை பயணம்…..

இயக்குனர் பாக்யராஜ் உடன் இணைந்து பயணித்த அந்த ஐந்து வருடங்கள்……

இயக்குவதில் திறமை கொண்ட வெற்றி நாயகனே…….

உன்னை பாராட்டி அவர் வாய்ப்பளித்த தூர்ஷனில் நியாயம் கேட்க்கிறோம்.. கதையின் கதை சீரியல்கள்…

.வெற்றியை உச்சி முகர்ந்து பார்த்திட செய்தது….

தூர்தர்ஷனில் மேலும் உனது வெற்றி இயக்கத்தில் வெளியானது

சதுரங்கம்.. புதுயுகம் சீரியல்கள்……

வெற்றியின் ரகசியம் என்னவென்று
ஆராய்ந்தால்…..

அங்கே ஆக சிறந்த ரசிகனும் நீயே……

நதி எங்கே போகிறது
நடிகை ரோஜாவின் முதல் சீரியல்

உன் திறமை தன்னை
கொண்டு சேர்த்தது மக்கள் மனதில்…….

மேலும் முத்தாய்ப்பாக இரண்டு குறும்படங்கள் விஜய் டெவிவிஷனில்

இயக்குனர் அரியணையில் அமர்த்த்தி அலங்கரித்தது…..

சின்னத்திரை பயணம் சிறிது மன நிறைவு அடைந்திடாத தருணத்தில்……

வெள்ளி திரையில் மூன்று வருடங்களாக முயற்சிகள்…..

அது பலன் அளிக்காத போதிலும் வீழாது
சாதிக்க களம் புகுந்தாய்
சின்னத்திரையில்….

பத்து வருடங்களாய் தொடர்ந்து டெலிவிஷன் பணிகள்…..

ஓய்வு அறியாது உழைத்தாய்…

நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு நண்பர்கள் நம்பிக்கை ஊட்ட….

மீண்டும் சாதனை படைத்தாய்
மக்கள் மனதில்

உனக்கென தனி இடம்
பிடித்தாய் சத்தயா சீரியல் மூலமாக…..

வெற்றி என்பது விரைவாக கிடைத்து விடாது….

சாதிக்க எண்ணி துடிப்பவர்கள் எல்லாம்
அதன் நீண்ட வரிசையில்

காத்திருந்தே ஆக வேண்டும்…

என்று இனி வரும் இளைய சமுதாயத்திற்க்கு கூறி
துணை நிற்க்கும்….

இயக்குனரே உனது வெற்றி தழைத்தோங்கி
இந்த தரணியில் நிலைபெறட்டும்…

சின்னத்திரை வெள்ளி திரையிலும் சிறந்த இயக்குனாராய் உனது
சாதனைகள் தொடர்ந்திட…..

வாழ்த்தி மகிழ்கிறது .

Scroll to Top