RJ Sha

WhatsApp Image 2023 05 25 at 3.35.05 PM 1

மோட்டிவேஷ்னல் போச்சுக்களின் மூலம்
திரை கலைஞர்கள்
விளையாட்டு வீரர்கள்
மற்றும் பல பிரபலங்களின் வாழ்க்கையில்

கடந்து வந்த இன்னல்களையும்
வெற்றி அவர்கள் கரம்
பிடித்த நிகழ்வுகளையும்

எடுத்து உரைத்து அவர்களின் இதயங்களை மட்டும்
அல்லாது

மக்களின் இதயங்களிலும் வாழ்ந்து வரும்

ரேடியோ மெர்சியின் ஆர் ஜே ஷா அவர்களே…

பள்ளி கல்வியில் சிறந்தொரு தங்க பதக்கம் வென்ற
முதல் மாணவணாய்
வந்த பொழுதிலும்…

மீடியாவின் கொண்ட பற்றினால்
நீ படிக்க கையில் எடுத்த
வீடியோ விஸ்காம்…

குடும்பத்தினரிடையே அதிர்ச்சியான மன நிலையினை உண்டாக்கிய போதிலும்

உனது ஆர்வம் கண்டு
தோல் தட்டி துணை நின்ற அப்பாவின் நம்பிக்கையில் கலை உலகில் துளிர்க்க தொடங்கினாய்…

இன்று பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலிக்கிறது உனது குரல்…

பள்ளி காலத்தில் நீ
பாய்ந்திடும் புலி தான்
பேச்சு போட்டிகளில்…

கலகலப்பான நகைச்சுவை பேச்சுக்களின் மூலம்
ரேடியோ துறையில்

ஆர்.ஜே.வாக
சாதித்திடும் கலைஞனே…

கல்லூரி முதலாம் ஆண்டிலே
சன் டிவியின் இன்டர்வியூவில் தேர்வு
பெற்றாய்..

ஆனால் அங்கே கல்லூரி பட்டம் என்பது
தடையாக இருந்தது….

தோல்விகள் என்பது உன் நம்பிக்கையை
உடைத்து விடுமா என்ன

ஒரு கப் கான்பிடன் என்ற புத்தகத்தை எழுதிய உன்னை

வணக்கம் ….
ரேடியோ மெர்சி என்றாலே
மக்கள் தங்களை அறியாமலே

உனது அழகான சமுதாய கருத்துக்கள் நிறைந்த பேச்சில் அடிமையாகி தான் போகின்றனர்….

வந்தது ஒரு சிறிய வாய்ப்பு ரேடியோ மெர்ச்சியில்
உனது புகழ் வளர்ந்திட..

ஆரம்பத்தில் டிரெய்னராக அடியெடுத்து வைத்தாய்
அந்த தளத்தில்…

அங்கே சந்தித்து உரையாடினாய் பல பிரபலங்களை…

இன்று சாதனைகள் படைத்து
உனது மோட்டிவேஷன்
பேச்சுக்கள் மூலம்

பல இளைஞர்களின் கனவினை உயிர் பித்து வரும் சாதனைகளின் நாயகனே…

முதலில் சின்னத்திரையில் வந்து வாய்ப்பு சரவணன் மீனாட்சி மூலமாக

பல சீரியல் வாய்ப்புகள்
வந்த போதிலும்
மக்களிடம் நல்ல கருத்துக்களை

கொண்டு செல்லும் கதாபாததிரங்களையே
தேர்வு செய்தாய்…

ஜி.வி.பிரகாஷின் மூலமாக பென்சில் திரை படம்
அதிலும் சிறந்ததொரு கதாபாத்திரம்…

வெள்ளி திரையில் உனது நடிப்பினை கண்டு

பல திரைப்பட வாய்ப்புகள் ஒன்று இரண்டு என வர
தொடங்கின…

துப்பாக்கி முனை திரைப்படம்
திருப்பு முனைதான்
வெள்ளி திரையில் உனக்கு…

திரை உலகில் சாதிக்க
சோதனைகள் பல
தாண்டி வந்தாய்

அப்பாவிற்கு செய்த
சத்தியத்திற்க்காக
மட்டும் அல்லாது
உனது மனிதநேயத்தின்

உயிர் மூச்சாக மக்கள்
நலன் காத்திடும்
சமூக விழிப்புணர்வுகளை

பேசிடும் சிறந்த நல்லதொரு மனிதனே…

உனது புகழ் ரேடியோ மெர்சி மட்டும் அல்லாது
சின்னத்திரை வெள்ளி திரைகளில் …

காற்றில் கலந்து கலை
உலகில் பரவட்டும்

மோட்டிவேஷ்னல் நாயகனே

இதுபோன்ற எண்ணற்ற
வாய்ப்புகள்
உன்னை தேடி
வந்து…

வெற்றியின் முகவரி நீ
என்று சொல்லி
மகிழட்டும்…

என உன்னை வாழ்த்தி
தான் பெருமை
கொள்கிறது .

✍🏿 subha kittu

Scroll to Top