தன்னம்பிக்கையை துணையாக கொண்டு
தனக்கென கலை உலகில் தனி இடம்
பெற்று….
வெற்றியின் நாயகனாக வளர்ந்து வரும் கலைஞனே
பள்ளி பருவத்தில்
பல போட்டிகளில் பங்கேற்று
சுட்டி தனங்களோடு
புன்னகை பூத்தாய்
உனது குடும்பத்திலும் நீ
செல்ல பிள்ளை தான்
கல்லூரி கல்வி கனவுகளின் மேடையாக மாறி
ஸ்டேஜ் ஷோ
நடிப்பு என
உன் திறமைகளை வளர்த்தது…
பி.காம் கல்வி பயின்ற
போதும்
அதில் ஈடுபட மனம் விரும்பாது
மீடியா துறையில் சாதிக்க எண்ணிணாய்
சோதனைகள் பல தாண்டி
வாய்ப்புகள் தேட தொடங்கினாய் சென்னையில்…
கல்லூரி காலங்களிலேயே
கருத்தாளம் மிக்க
சிறு சிறு வீடியோக்களை
பாஸிட்டிவ் டோஜேஜ் என்ற சேனலின் மூலமாக
மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றாய்
நடிப்பில் ஆர்வம் கொண்டு ஷார்ட் பிலிம் என முன்னேறி
சென்ற போதிலும் அது
தடையாகவே அமைந்து
வீழ்ச்சி என்பது உண்டோ உன்னிடம்
திறமைகள் இருக்கும் பொழுது…
முயற்சிகள் பல செய்தாய் உனது
இலட்சிய பாதையில்
முன்னேறி சென்றிட…
சோதனைகள் உன்னை
வால் இட்டு கிழித்த
போதும்….
வீழ்ந்து விடாது
பேஸ் ஆப் சென்னை
பிரஸ் பேஸ் ஆடிசனில்
பங்கு கொண்டாய்
நான்கு டாப் யூடியூப் சேனல்களில் வாய்ப்புகள் தேடிய
போதும்…
கலை துறை அலுவல படிகளில் ஏறி இறங்கி
வாய்ப்புக்களுக்காக
காத்திருந்தாய்…
நோட்டா பட புரோமஸில்
வாய்ப்பு வந்திட
அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை
பேஸன் ஆப் சென்னையில் யூத் ஜ கேன் டைட்டில் பெற்று விட…
வாய்ப்புகள் உன்னை நாடி வந்தன
இன்டியா கிளிப்பில் முதல் நாள் அன்றே
இரண்டு இன்டர்வியூக்கள் என
ஆறுமாத காலங்களில் அடுக்கடுக்காக பதினெட்டு இன்டர்வூயூக்கள்
தொடர்ந்து உனது திறமையை நிருபித்து
புகழ் பெற்றது…
இதற்காக நீ கண்ட சோதனைகளை சொல்லில் அளவிட இயலுமா…
சிவானியின் இன்டர்வியூ ஆங்கர் உலகில் ஐந்து மில்லியன் வீவர்ஸை தான்டி
வெற்றியின் புகழ் எட்டிட செய்தது
ப்ரியா பவானி சங்கர்
வரலெட்சுமி சரத்குமார்
என ஒரு வருடத்திலேயே
பல வெற்றி இன்டர்வியூக்கள்
இன்டியா கிளிப்பில்
வெளிவந்து சாதனைகள் படைத்தது
உனது கனவுகளை நிறைவேற்ற மேலும்
ஒரு வாய்ப்பு
கலாட்டா சேனலில்
கடல்ராஜா ஷோ
கேம் ஷோ
எப்3
ஜி3
என பல வெற்றி ஷோக்கள்…
ஹிப் ஆப் தமிழா ஆதித்யாவின் நட்பு
வெள்ளி திரையில் நீ
தோன்றிட துணையாய்
அமைந்தது….
வரவிருக்கும் சிவக்குமார் சபதம் திரைப்படத்தில்
சிறந்ததொரு சிறிய
கதாபாத்திரம்…
ஆதித்யா அவர்களின் சிறந்த பாராட்டினை
பெற்றிடவே…
நடிப்பு துறையில் உனக்காக ஆர்வம்
மேலும் வளர்ந்தது…
மிமிக்ரி உலகில் சாதனைகள் பல படைக்க இருக்கும்
நாயகனே
கலை உலகில் வாய்ப்புகள் தேடும் இளைஞர்களுக்கு
வாய்ப்பினை தரும் நிலையில் உனது திறமைகள் மேலோங்கி வளரட்டும்
200க்கும் மேற்பட்ட ஷோக்கள் உனது ஆங்கரில் வெளிவந்த போதிலும்…
இன்னும் எண்ணற்ற ஷோக்களின் வாய்ப்புகள்
உன் கரம் சேரட்டும்
உனது பெற்றோர் சகோதரரின் நம்பிக்கை
உற்சாகத்தில்
விடா முயற்சியோடு
வெற்றி பெற்று
வெள்ளி திரை உலகில்
நீங்காத புகழோடு
வாழ்த்திட வாழ்த்துகிறது
✍🏿 subha kittu