சாதிப்பதற்க்கு ஒரு லட்சிய கனவு போதுமோ
கேமராவின் மூலம்
காட்சிகளை காதலித்து
கொண்டு
நடனம்.ஓவியம்.நடிப்பு.பாட்டு
என்று பல துறைகளில்
முன்னேறி சாதித்து
வரும்
ஐஸ்வர்யா வடிவுடன் ஒரு வண்ணமயமான நேர்காணல்.
சென்னை girl ஐஸ்வர்யா வடிவு கேமரா women ஐஸ்வர்யா வடிவு இரண்டு கேரக்டரின் சாதனைகள் பற்றி சொல்லுங்கள்
சென்னை கேள் ஐஸ்வர்யா ரெம்ப சுட்டி தனங்கள் செய்பவள்
நான் கல்லூரியில் படிக்கும் போதும் என்னை சுட்டி தனங்களின் குயின் என்று கூட சொல்லலாம் அந்த அளவிற்கு நான் நாட்டி கேள்.
எனக்கு பிடித்த ஒரு செயல் செய்ய வேண்டும் என்றாலும் கூட பிறரின் பார்வையில் அது எவ்வாறு விமர்சிக்க படும் என்பதை பற்றி சிந்திப்பவள்.
ஆனால் கேமரா women ஐஸ்வர்யா தனக்கு பிடித்த செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். அதில் எவ்வாறு சாதனைகள் புரிவது என்பதை பற்றி மட்டுமே சிந்திப்பவள்.
பிறரின் விமர்சனங்களை பற்றி கவலைபடுபவள் இல்லை.
எனக்கான வாழ்வை நானே வாழ வேண்டும் என்று என்னுபவள்.
கனவுகளை நீங்கள் எவ்வாறு எப்பொழுது காதலிக்க ஆரம்பித்தீர்கள்
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என்று சொல்லலாம்.
இந்த துறையில் மட்டுமே கனவுகள் கண்டு சாதிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் இல்லை.
எனக்கு ஆர்வம் அதிகம் இருக்கும் அனைத்து துறைகளிலும் நிறைய அனுபவங்களை கற்று கொள்ள வேண்டும். அதன் மூலம் நான் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவள் நான்.
அதனால் எனக்கு கனவுகள் நிறைய உண்டு.
கனவுகள் என்பது ஓர் இரவோடு முடிவது இல்லை.
ஒவ்வொரு இரவுகளிலும் ஒரே மாதிரியான கனவுகளை நாம் கண்பது இல்லை.
அவ்வாறு இருக்கும் பொழுது. நாம் ஏன் ஒரே இலட்சியத்தை வைத்து கொண்டு அதில் கனவுகள் கண்டு அதன் பின்பு ஓட வேண்டும்.
சாதனைகள் புரிந்திட இந்த உலகத்தில் நிறைய துறைகள் இருக்கும் போது.
எனவே நான் எனது கனவுகளை காதலிக்கிறேன் என் மனதை உற்ச்சாக படுத்தி என்னை அன்போடு வெற்றியை நோக்கி அழைத்து செல்வதும் என் கனவுகளே.
ஐஸ்வர்யா வடிவின் ஷார்ட் ஃபிலிம் மற்றும் ஆல்பம் சாங் பற்றி உங்களின் இனிமையான குரலில் சொல்லுங்கள் பார்க்கலாம்
நான் கல்லூரியில் படிக்கும் போதே எனது நண்பர்கள் நான் செய்யும் அழகான குறும்பு நடிப்பினை கண்டு. நீ ஏன் நடிக்க கூடாது என்று கேட்டார்கள்.
அது தான் என் நடிப்பின் தொடக்கம் என்று கூறலாம்.
முதலில் அவர்களோடு மற்ற நண்பர்கள் எடுக்கும் ஷார்ட் பிலிம்
சூட்டிங் சென்று அவர்கள் அங்கு எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்று பார்க்க தொடங்கினேன். கேமரா direction and script work அதுவே எனக்குள் அவற்றை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது.
அந்த ஷார்ட் பிலிம்மில் எனக்கு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . என்னுடைய முதல் ஷார்ட் பிலிம் minalani tamilselvi
அந்த ஷார்ட் பிலிம்ல என்னோட முகம் தெரியாத ஒரு சிறிய ரோல் பண்ணியிருப்பேன்.
இரண்டாவதாக நான் பண்ணுண்ண ஷார்ட் பிலிம். நாவல்.
அதுக்கு அடுத்து அறம் செய்ய விரும்பு.அதனை தொடர்ந்து இதா மச்சா லவ் கானா ஆல்பம் பாடல்களில் நான் டான்ஸர் Work பண்ணியிருக்கேன்.
அதுக்கு அடுத்து கருப்பழகி கானா ஆல்பம் சாங்
உங்களின் போட்டோ கிராப்பிங் அனுபவம் பற்றி மற்றும் உங்களுக்குள் உள்ள திறமைகள் பற்றி மனம் திறங்கள்
முதலில் நான் நடிப்பதற்க்காவே மீடியா துறைக்கு வந்தேன்.
கேமரா துறையின் மீது எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. நிறையா ஷார்ட் பிலிம்ல் கேமரமேனாக வேலை பார்த்த அனுபவம் உண்டு.
ஆனால் நடிப்பை விட எனக்கு கேமரா direction வாய்ப்பு கிடைத்தது.
அதை பற்றி நான் பணியாற்றிய ஷார்ட் பிலிம் மூலம் கற்று கொண்டேன்.
இப்பொழுது ஷார்ட் பிலிம் மற்றும் சினிமா துறையில் பணிபுரியும் கேமராமேன்களுக்கு அஸிஸ்டென்ட் கேமராமேனாக பணி புரிந்து வருகிறேன்.இதுமட்டும் இல்லாமல் கேமரா சார்ந்த வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை தற்பொழுது வரை செய்து வருகிறேன்.
மேலும் வரவிருக்கும் kombi kadu என்ற film ல்
Assistant camera women பணிபுரிந்து வருகிறேன்.
இதை தவிர்த்து Assistant director in my ex boyfriend film ல் பணிபுரிந்து வருகின்றேன்
திறமைகள் இதுதான் என்று வரையறை இல்லை
நான் ஒரு actors டான்ஸர்.drawing artist.
Singer and model.
இன்னும் நிறைய விஷயங்களை வெவ்வேறு துறைகளில் கற்று கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்.
இது தான் ஒருவரின் சாதனை என்று வரையறை செய்து அந்த வட்டத்திற்க்குள் அடங்கி விடுவதில் எனக்கு சிறிதும் விருப்பம் இல்லை.
இது தான் நான்.
நீங்கள் மீடியா துறையில் சாதித்திட கடந்து வந்த தடைகள்
தடைகள் என்று சொன்னால் . என்னோட குடும்பம் நான் நடிக்க போறேன்னு சொல்லுறப்ப அதை அவங்க ஏற்று கொள்ளவில்லை.அதுக்கு அடுத்து சில நண்பர்கள்.உறவினர்கள் எல்லாரும் உன்னால் எல்லாம் நடிக்க முடியாது ஏனென்றால் உன்னுடைய ஸ்கின் நிறம் குறைவு.உன்னோட health problem . இதையெல்லாம் மீறி நீ எப்படி சாதிக்க முடியும்.அந்தமாதரி எல்லாம் சொல்லுறப்ப எனக்கே ஒரு சமயம் ஏன் மேல நம்பிக்கை இல்லாமல் போயிருச்சு.கொஞ்ச நாள் எதுவும் முயற்சி பண்ணம்மா இருந்தேன்.அதற்க்கு அடுத்து நானா சிந்திச்சு பார்த்தேன் ஏன் நாம பிறரரோட விமர்சனத்துக்காக வாழணும்.நமக்குள்ள திறமை இருக்கும் போது நினைச்சு.ஒவ்வொரு வாய்ப்புக்களா நண்பர்கள் மூலம் தேட ஆரம்பிச்சேன். அதுல இப்ப ஓரளவிற்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன்.
நாம வாழ்ந்து சாகும் போது நம்மள நம்ம சார்ந்தவர்களுக்கும் மட்டும் தெரியக்கூடாது.
இந்த சமுதாயத்தில இருக்கிறவங்களுக்கும் தெரியணும்.அந்த மாதிரி தான் வாழணும்.
அதுக்கு நாம சாதிச்சு ஒரு பிரபலம் ஆகணும்.
அது தான் என்னோட ஆசை.
உங்களோட படிப்பு மற்றும் முதல் உங்களின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிர்வு பற்றி
நான் BBA Airline and Airport management pursuing பயின்று வருகிறேன்.
ஒரு பார்லரில் பகுதிநேர பணிபுரிந்து வந்தேன்.
அப்பொழுது ஹையாத்ஹோட்டலில் ஒரு ஷோ நடந்தது. அதில் கொஞ்சம் மாடன் உடை அணிந்து dance பண்ணணும்.அப்ப மேக்ப் எல்லாம் முடிச்சிட்டு அங்க ஒரு lighting room இருந்து அங்க நான் ஒரு போட்டோ எடுத்து
அதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போட்டேன்.மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருந்தது. அதுக்கு முன்பு நான் என்னோட இன்ஸ்டா பக்கத்தில் போட்ட போட்டோஸ் விட இந்த போட்டோவிற்க்கு அதிக வரவேற்பு இருந்தது.
சரி மக்கள் நமக்கிட்ட இந்த மாதிரி ஒரு திறமைய எதிர்பாரக்கிறாங்கன்னு
எனக்குள்ள அந்த சமயம் ஒரு எண்ணம் தோன்றியது.
✍🏿சுபா கிட்டு