Aranthangi Nisha

Aranthangi Nisha

நகைச்சுவை உலகில் ஜொலிக்கும் தங்க தாரகையாய்
புன்னகை என்னும் ஆபரணம் சூடிய பாரதியின் புதுமை பெண்ணாய்…….

புதுக்கோட்டை அறம் தாங்கி கிராமத்தில் பொன் மகளாய் பிறப்பெடுத்து…..

ஏழ்மை எண்ணி நகைத்த போதிலும்
அதை கண்டு சிறிதும்
கலங்காது….

புயலென சீறி கர்ஜித்த
சிங்க பெண்ணே…

புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி உன் திறமைக்கு அடிகோலாய்….

கருத்தம்மா என்று அடை
மொழி இட்டு அன்று அழைத்தவர்களுக்கு தெரியுமா…..

இன்று கருத்தாழம் மிக்க நகைச்சுவை சிந்தனைகளின் பிறப்பிடத்தின் ஊற்று
நீ என்று….

திறமை உள்ளவர்களை முதலில் எண்ணி நகைக்கும் விசித்திர சமுதாயம் இது….

மனம் நோகும் போது எல்லாம் நகைச்சுவை நடிகர் வடிவேல் அவர்களின் நகைச்சுவை ஊன்றுகோலாய்

தோல்விகள் பல கடக்க துணையாய் நின்றது…

பெண்கள் என்றும் சாதிக்க பிறந்தவர்களே
அந்த பெண்களின் சாதனை சரித்திரம் தன்னில் முயற்ச்சியும்
சாதனையும் பொன் எழுத்துக்களாய் உன்
புகழ் பாடட்டும்

கல்லூரி காலம் கனவினை மெய்பித்தது
பட்டி மன்ற பேச்சாளராய் பலர்
அறிந்திட செய்தது….

வாய்ப்புகள் உன்னை நாடி வரிசையில் தவம் நின்றிடவே…..

இதன் இடையே இல்லற வாழ்வின் துணையான ரியாஸ்

இருகரம் கோர்த்து லட்சிய பாதையில் இணைந்து
பயணிக்க….

தடைகள் பல தகர்த்து எறிந்தாய் தங்க பெண்ணே……

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் என்ற
நிதர்சனங்கள் மாறி….

உங்களின் வெற்றிக்கு பின்னால் உங்கள் கணவர்….

திறமைகள் பல உன்னை அணி வகுத்து
தன் பெயர் இட்டு கொள்ள….

அழைத்தது சின்னத்திரையில் விஜய் டி.வி.

கலக்கப்போவது யாரு சீசன் 5
உன் நகைச்சுவையை
திரையிட்டு காட்டியது
வெளி உலகிற்கு…

பெண்கள் முன்னேற்றம் என்றாலே விமர்சித்து வீண் பலி போடும் உறவுகளின் மத்தியில்….

சிறிதும் அதை எண்ணி
மனம் நோகாது
உங்களை

சாதிக்க வைத்த ரியாஸ் அவர்களின் செயல்
இந்த சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டே…

சின்னத்திரையில்
பல போராட்டங்களையும்
கடந்து

வெற்றி சாதனைகள்
Vj ..Mr mrs சின்னத்திரை…கூக்கு வித் கோமாளி ..பிக்பாஸ் 4 என நீண்டு செல்ல…

800க்கும் மேற்பட்ட மேடை நிகழ்வுகள்…
யூடியூப் சேனல் என்று

புகழின் உச்சம் தொட்ட
செந்தமிழ் பெண்ணே….

உன்னை கண்டு பெருமிதம் கொள்கிறது
பெண்கள் இனம்…

வெள்ளித்திரையிலும்
வீறு கொண்டு களம்
இறங்கி

சாதனைகள் என்பது
உனக்கு சாதாரண நிகழ்வு என்று திறமை
மீது நம்பிக்கை கொண்டு நடித்த திரைப்படங்களின்
வரிசைகள் இதோ

கலகலப்பு_2
இரும்பு திரை
ஆண்தேவதை
கோலமாவு கோகிலா

உன் விடா முயற்சிக்கு
வெற்றி கனியாய் விளங்கி வலம் வர…

மேலும் தொடரட்டும் திரையுலக வெற்றி பயணம்….

நிறம் கண்டு மனம் வெந்து.. வறுமையின் பிடியில் தன் திறமைகளை மரணிக்க வைக்கும் பெண்களிற்க்கு….

நம்பிக்கை வித்திடும்
உன் நகைச்சுவை கலை
உலகின் போராட்ட
வெற்றி பயணம்…..

பணம் கொண்டு ஆற்ற
முடியாத மனதின் கவலைகள் எல்லாம்
உன் புன்னகை கொண்டு ஆற்றிடும்
புன்னகை அரசியே

பொன் இதழ்கள் சிந்தும்
நகைச்சுவை அமிர்தத்தை கேட்டு வியந்திட

தவம் இருக்கிறது இச் சமுதாயம்…..

புனிதம் நிறைந்த உங்களின் நகைச்சுவை
பணி தொடரட்டும்..

சின்னத்திரை வெள்ளி திரை என்று திக்கெட்டும் உங்களின்
புகழ் வெற்றி முரசு கொட்ட வாழ்த்துகிறது.

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×