தரணி போற்றும் தஞ்சை இவர்கள் பூர்வீகம்…!
தடையின்றி சீறும் உழைப்பில் இவர்கள்
மின்னல் வேகம்!
அன்பைப் பொழியும்
அண்ணண்கள்!
அன்னைக்கு என்றும்
தங்க மகன்கள்!
அன்பு அண்ணன்கள்
அருன் அரவிந்த் அவர்களே….!
நீங்கள் தடைகள் கண்டு தகர்ந்திடவில்லை
விமர்சனங்கள் கண்டு வீழ்ந்து விடவில்லை….!
முயற்சிகள் கொண்டு
கடின உழைப்பின் துணையோடு
சாதிக்க துணிந்து எழுந்தீர்…!
இன்றோ மீடியா சரித்திரமே உங்களை துயில் கொள்ள நேரமின்றி பாராட்டி பார்க்கின்றது….!
சின்னத்திரை மட்டுமா உங்களின் புகழ் பாடியது…!
இதோ வெள்ளிதிரையும் உங்களின் திறமை கண்டு வியக்கிறது!
உங்களை
அதன் வெற்றி பாதையில் நடை பயில அழைத்து
விருதுகள் பல வழங்கி வாழ்த்தி கொண்டு இருக்கின்றது….!
இன்னும் வாழ்த்த காத்திருக்கின்றது…!
சிங்கம் என கர்ஜிக்கும்
உங்களது முயற்சிகளும்
வெற்றிகளும்….!
என்றும் தாழ்ந்தும்
வீழ்ந்தும் போவதில்லை…!
விமர்சனங்கள் என்பது எல்லாம் உம்
வெற்றிக்கு வழி வகுக்கும் வெகுமதி தான்….!
வீறு நடை போட்டு
இன்னும் பல வெற்றிகள் பெற காத்திருக்கும்
வெற்றியின் திரு மகன்களே….!
உங்களின் வெற்றி பயணம் ஓய்வின்றி
தொடரட்டும்….!
என்று வாழ்த்தி உங்களை வரவேற்க்கின்றேன்…!