ARUN PADMANABAN

ARUN

வெற்றிகள் என்பது உன் விரல் அசைவில் தான்….!

சீறிடும் காற்றில் புன்னகைத்து ஆடிடும் மலராய்….!இவன்!

தோல்விகளினால் வாடி விடாது
முகம் மலர்ந்து …!

வெள்ளி திரையின் கடின வழியில் முன்னேறி சென்றான்…!

விளம்பர படங்களின் மூலமாக முதலில் அறிமுகமாகிய.!

விடா முயற்சிகள் கொண்ட பன்முக திறமை கொண்ட கலைஞனே…!

அசிஸ்டன்ட் டரைக்டர் டெக்னீசியன் புரொடக்ஷன்ஸ் டிசைனர் என…!

திரை துறையில் வெற்றியின் தடம் பதித்து வரும் சாதனைகளின் நாயகனே…!

கேரளம் தன்னில் பிறந்து விஸ்வல் கம்யூனிகேஷன் கல்வி
பயின்று….!

மலையாள திரை உலகில் நீ கோ ச்சா.
என்ற திரைபடத்தின் மூலம்….!

அறிமுகமாகி மக்களின்
மனம் வென்ற நடிகன் இவன்..!

உனது திறமை கண்டு
தமிழில் வெள்ளி திரை
வாய்ப்பளித்தது….!

நனையாத மழை…ஒரு புலி நாலு ஆடு திரைப்படங்கள்…!

நண்பர்கள் வட்டம் உன்னை மேலும் உற்சாகம் ஊட்ட…!

கலர்ஸ் தமிழ் சேனலில்
மலர் சீரியல்
கம்பீரமாய் இவனின்
நடிப்பின் புகழ்
உரைத்தது….!

மாங்கல்ய சந்தோஷம் சீரியலோ மக்களின்
மனதை திருடியது…!

சின்னத்திரை வெள்ளி திரைகளில் புகழ் பெற்று விளங்கும் நடிகனே…..!

நடிப்பில் பாய்ந்திடும் புலியென
இன்னும் பல சாதனைகள் படைப்பாய்
நீ…..!

வெகு விரைவில் உனது
நடிப்பில் வெளிவர இருக்கும் கல்ட் திரைப்படமும்….!

உனக்கு வெற்றி திரைப்படமாக அமைந்து…!

பல வெற்றி விருது மேடைகளுக்கு உன்னை அழைத்து செல்லட்டும்…!

திரை உலகில் சாதிக்க போராடும் இளைஞர்களுக்கு…!

தோல்விகள் என்பது வெற்றியை அறிந்திட
உதவும் அனுபவங்கள்…!

என்ற உனது நம்பிக்கை
துளிர்க்கும் வார்த்தைகள்…!

இலட்சியங்களின் உயிரோட்டமாக துடிக்கட்டும்…!

மலையாளம் தமிழ் இந்தி ஆங்கில மொழிகளின் கலை துறையில்…!

சாதனைகளின் வெற்றி
நிகழ்வுகள் உன்னால் தொடரட்டும்…!

திரை உலக சரித்திர பக்கங்கள் உன்னை எழுதட்டும்…!

வெள்ளி திரையில் என்றும் நீ வெற்றி கதாநாயகனாய்….!
விளங்கி சிறந்திட…!

மனம் மகிழ்ந்து நெகிழ்ந்து வாழ்த்துகிறது .

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×