Aszika saran

WhatsApp Image 2023 06 17 at 2.38.25 PM

நீங்கள் சென்னைவாசியா ஆஷிகா…?

ஆமாம் நான் சென்னைவாசி தான், இருந்தாலும் எனது சொந்த ஊர் பீகார், ஆனாலும் பிறந்து வளர்ந்தது படிச்சது எல்லாம் சென்னை தான்,

நீங்கள் மாடலிங் துறைக்கு எவ்வாறு வந்தீர்கள் பற்றி எங்களிடம் அழகாக சொல்லலாமே ஆஷிகா….?

முதலில் நான் மாடலிங் துறைக்குள் வருவேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை, என்னுடைய நண்பர்கள் நீ மாடலிங் செய்தால் நல்லா இருக்கும், மாடலிங் துறையில் முயற்சி பண்ணி பார் என்று எனக்கு ஒரு தன்னம்பிக்கை கொடுத்தனர், அதன் பிறகே நான் மாடலிங் பேஜன்ட்டில் கலந்து கொண்டேன். அதில் runner ஆகவும் வந்தேன்.அதுவே என்னால் மாடலிங் துறையில் தொடர்ந்து சாதிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை தந்தது, அப்படியே தொடர்ந்தது எனது மாடலிங் துறையில் வளர்ச்சியும், வெற்றியும்.

மாடலிங் துறையில் இருந்த நீங்கள் எவ்வாறு சினிமா துறைக்குள் வந்தீர்கள் ஆஷிகா…?

மாடலிங் துறையில் இருந்தது நான் சினிமாதுறைக்கு வருவதற்கு முன்னால் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது, அதில் நடித்தேன் அது நடிப்பில் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கற்று தந்தது.
அதற்கு அடுத்து எனக்கு தெரிந்த நண்பர்களின் மூலமாக எனக்கு movies ல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அப்பொழுது
நான் நினைத்தேன் மாடலிங் மட்டும் இல்லாமல் எனது சிறந்த நடிப்பின் மூலம் சினிமா துறையில் நிலைத்து நிற்க்க முடியும் என்று,
Modeling, photoshoot \’s and adds போய் கொண்டு இருந்த எனது வாழ்க்கை சினிமாவின் பக்கம் திரும்பியது,

நீங்கள் நடிக்கும் படத்திற்க்கு எவ்வாறு கதை தேர்வு செய்கிறீர்கள் என்று கூறுங்கள் ஆஷிகா…?

நல்ல கதையில் சிறந்த ஒரு கதாபாத்திரம் என்று நான் தேர்வு செய்கின்றேன்,சின்ட்ரல்லா படத்தில் எனக்கு last timeing ல தான் வாய்ப்பு கிடைத்தது, இருந்தாலும் சிறந்த கதைக்காக அந்த படத்தில் நடித்தேன்,
அதை போன்று எனக்கு அடுத்தடுத்து வரும் படங்களின் வாய்ப்புக்களிலும் கதைக்கும் கதாபாத்திரத்திற்க்கும் முக்கியத்துவம் கூடுத்தே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றேன்…!

உங்களின் த்ரில்லர் மற்றும் சைக்கோ த்ரில்லர் கதாபாத்திரங்கள் பற்றி கூறுங்கள் நாங்களும் ஒரு த்ரில் உடன் கேட்க்கின்றோம்…?

த்ரில்லர் மற்றும் சைக்கோ த்ரில்லர் கதாபாத்திங்கள் எனக்கு தானாகவே நண்பர்களின் மூலம் அமைந்தது, அதில் என்னுடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கவே ரசிகர்களுக்கு அது பிடித்துபோனது, சின்ட்ரல்லாவை தொடர்ந்து வந்த படங்களிலும் எனக்கு த்ரில்லர் கதாபாத்திரங்களே கிடைத்தது.நானும் அதை விரும்பி ஏற்றே நடித்தேன்.

ஆனால் என்னுடைய நிஜவாழ்க்கையில் நான் ஒரு அமைதியான பெண் தான்.

நீங்கள் மாடலிங் மற்றும் சினிமா துறையில் வருவதற்கு நீங்கள் கடந்து வந்த தடைகள் பற்றி சொல்லுங்கள் ஆஷிகா…?

தடைகள் இல்லாத துறைகளே இல்லை.
அதையெல்லாம் தாண்டி தான் நாம் ஜெயித்து ஆக வேண்டும்.

முதலில் என்னுடைய குடும்பத்தில் யாரும் மீடியா துறையின் பிண்ணனியில் இல்லை, இருந்தாலும் கூட அவர்கள் எனக்கு எந்த ஒரு எதிர்ப்பும் சொல்லவில்லை,

நண்பர்களின் support இருந்தாலும் கூட நான் ஒரு தனிநபராகவே இருந்து போராடி வர வேண்டியது இருந்தது.

இப்படியே தோல்விகள், நிரகாரிப்புக்கள் சிலவற்றை கடந்து போராடியே இன்று மீடியா துறையில் எனது முன்னேற்றமான வளர்ச்சி தொடர்ந்து வருகின்றது.

சினிமா மற்றும் மாடலிங் இல்லாமல் வெப்சீரியல் பண்ணியிருக்கேன், நான் நன்றாக நடனம் ஆடுவேன்.

நீங்கள் வாங்கிய விருதுகள் பற்றியும்
உங்களின் நடிப்பில் வெளிவந்த படங்கள் பற்றியும் கூறுங்கள் ஆஷிகா…?

நான் வாங்கிய Awards என்றால்

Sita awards
Miss promising actor 2022.

Mr&Miss fashion icon 2017.

Miss kriya 2017 runner up.

Miss Tamil Nadu 2018 finalist,

Miss photogenic 2018,

கிங்ஸ் ஆப் டான்ஸ் விஜய் டிவி சீசன் -1
2016,

YouTube series: funny factor -Alaparraigal series,

அதுக்கு அடுத்து நான் நடித்த படங்கள் என்றால்.

சின்ட்ரல்லா (2021)
Metro 2 (yet to release)

அதுக்கு அடுத்து

AGP – லட்சுமி மேனன் lead ( Released Jan 2022)

பிரபு தேவா project jus completed.

Web series one completed-yet to release.

அதுக்கு அடுத்து என்னோட add shoot

Namba unnavau.

Otto shirts brand.

Azar app.

Viral sign government add.
Done lots of photoshoots.

உங்களை போல் இன்று சாதிக்க போராடும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ஆஷிகா…?

உங்களின் திறமை மீது நீங்கள் நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள்
எந்த தடைகள் வந்ததாலும் அதில் உங்கள் கவனத்தை செலுத்தாமல் உங்களின் லட்சியங்களை நோக்கி செல்லுங்கள்,
கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

உங்களின் லட்சியம் கனவுகள் பற்றி..?

சினிமா துறையில் நான் ஒரு சிறந்த நடிகையாக வர வேண்டும் என்பதே எனது கனவு மற்றும் லட்சியம் ஆகும்.

Modeling, actors and multi-talented Ashika saran அவர்களின் சிறந்த நடிகையாக ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற நாமும் வாழ்த்துக்கள் கூறுவோம்.

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×