ஆங்கர், மாடல், நடிகை என்று பன்முக திறமை கொண்டு எட்டு வருடங்களாக மீடியா துறையில் தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற்று வரும் AYISHA (ஆயிஷா)அவர்களுடன் ஒரு சந்திப்பு.
உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் ஆயிஷா…?
எனது சொந்த ஊர் சென்னை . சென்னையில் உள்ள I ,W,H,S,S, SCHOOL, தான் என்னுடைய பள்ளி படிப்பை முடித்தேன்.
அதன் பிறகு TAMIL NADU OPEN UNIVERSITY ல் B.A ENGLISH LITERATURE படித்தேன்.
Name | Ayisha.A |
Father\’s name | Ali Babu.I |
Mother\’s name | Mariyam |
DOB | 08.05.1995 |
Native place | Chennai |
School name | I.W.H.S.S.School |
Collage name | Tamilnadu Open University |
Current place | Mylapore |
Occupation | Actinng |
Highlights | Doing myself best |
Degree | B.A – English |
Awards | Upcoming actress & Best VJ |
Serials | Oviya ( Colors tamil channel) |
Shows | Climax (Raj TV show) |
நீங்கள் எத்தனை வருடங்களாக மீடியா துறையில் இருந்து வருகிறீர்கள்.அந்த துறையில் என்ன என்ன பணிகள் செய்து வருகிறீர்கள் அதைப் பற்றி கூறலாமே….?
நான் மீடியா துறையில் எட்டு வருடங்களாக இருந்து வருகிறேன்.ஆரம்பத்தில் ஆங்கரிங் தான் பண்ண ஆரம்பித்தேன்.
2015 ல் – MK TUNS CHANNEL ல் ஆங்கரிங் செய்தேன்.
அதனை தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் வர தொடங்கின.
5 to 6 வருடங்கள் RAJ TV CHANNEL ல் ஆங்கரிங் செய்தேன்.
அதில் CELEBRITY INTERVIEW, LIVE PROGRAM , RECORDING SHOWS, போன்ற நிகழ்ச்சிகள் செய்தேன்.
அதற்கு அடுத்து 7 வருட இடைவெளிக்குப் பின் சீரியலில் நடிக்க தொடங்கினேன்.
ZEE TAMIL CHANNEL ல்
யாரடி நீ மோகினி.
COLOURS TAMIL CHANNEL ல் ஓவியா, SUN TV ல் லட்சுமி ஸ்டோர்ஸ், போன்ற சீரியலில் நடித்து உள்ளேன்.
எனக்கு MOVIE வாய்ப்புகள் வந்தது, ஆனால் அதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்தது இல்லை.
அதனால் எனக்கு மிகவும் பிடித்து ஆர்வம் உள்ள துறையானா மாடலிங் கில் எனது கவனத்தை செலுத்தி வருகிறேன்.
இருந்தாலும் எனக்கு ஆங்கரிங் மற்றும் நடிப்பும் மிகவும் பிடித்துள்ளது.
மாடலிங்கில் உங்களது லட்சிய கனவுகள் பற்றி சொல்லுங்கள் ஆயிஷா…?
மாடலிங் துறையில் மிக சிறந்த இடத்தினை அடைய வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும்.
அதற்கான முயற்சிகளை செய்து வருகிறேன்.
ஒரு நிறுவனத்தின் மிக சிறந்த மாடலாக இருக்க வேண்டும் என்பது எனது கனவு ஆகும்.
கனவுகள் என்பது நாம் சாதிக்க நினைக்கும் லட்சியத்திற்க்கு தன்னம்பிக்கை கொடுப்பது ஆகும்.
எனவே எனது சிறந்த மாடலாக வேண்டும் என்ற கனவு எனது முயற்சிகளுக்கும் பெறவிருக்கும் வெற்றிக்கும் தன்னம்பிக்கை கொடுத்து என்னை அதற்காக தயார் செய்தும் வருகிறது.
மாடலிங் துறையில் நான் மிகவும் பிரபலமான நபராக வலம் வர வேண்டும்.
இது தான் எனது எண்ணமும், செயலும் ஆகும்.
நீங்கள் மீடியா துறையில் சாதிப்பதற்கு கடந்து வந்த தடைகள் பற்றி சொல்லுங்கள்….?
நான் மட்டும் இல்லை எந்த ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்றாலும் தடைகள் பல கடந்து தான் வர வேண்டும். அது எந்த தடையாக இருந்தாலும் அதை பற்றி நினைத்து முடங்கி போகாமல் முன்னேறி செல்ல வேண்டும்.சில பேர் ஆரம்பத்தில் அந்த தடைகளை பார்த்து முடங்கி போவாங்க.இன்னும் சில பேர் காத்திருந்து அந்த தடைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து அவங்களோட வேலைகளை செய்ய தொடங்குவாங்க.
எனக்கு ஏற்பட்ட தடைகளை பற்றி நான் கவலை கொண்டது இல்லை அதை கடந்து வந்து உள்ளேன்.இன்னும் கடந்து வர காத்து கொண்டும் உள்ளேன்.
நீங்கள் வாங்கிய AWARDS பற்றி சொல்லுங்கள் ஆயிஷா…?
நான் வாங்கிய AWARDS என்றால்
UP COMING ACTRESS & BEST VJ.
உங்களின் மீடியா மற்றும் மாடலிங் துறைக்கு பின்னால் இருந்து உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்கள் யார்…?
என்னுடைய அம்மா தான் என்னுடைய ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் இருந்து எனக்கு துணையாக இருப்பவர்.
உங்களை போல் சாதிக்க போராடும் நபர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?
\” பிறர் சொல்வதில் கவனம் செலுத்தாதே
உன் மனம் என்ன சொல்கிறதோ அதை செய் \”
ஏனென்றால் அடுத்தவர்கள் மிகவும் எளிதாக அறிவுரை சொல்லி விட்டு நம்மை கடந்து சென்றுவிடுவார்கள்.
அதை பற்றி நாம் சிந்திப்பது பயனற்றறு நமக்கானது என்னவென்று நம் மனம் தான் முடிவு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்தால் தான் நாம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற முடியும் என்பதே நான் எனக்கும் பிறருக்கும் சொல்லி கொள்வது.
ஆயிஷா அவர்களின் சிறந்த மாடலாக வேண்டும் என்ற கனவு நிறைவேறி வெற்றி பெற்று பல விருதுகள் அவர்கள் பெற்றிட வாழ்த்துவோம்.
✍️சுபா கிட்டு