Name | Charumathi S |
Fathers name | Saravanan R |
Mothers name | Chandra S |
Dob | 11.08.2003 |
Native place | keelapoongudi, Karaikudi |
School name | Sir M venkatasubba Rao matric hr sec school |
Clg name | MOP Vaishnav college for women |
Current place | Valasaravakkam, Chennai |
Occupation | Content creator |
Degree | BCA |
hlights | YouTube shorts community Ambassador, YouTube India |
Awards/recognition | Famous monocting creator, SMILE’23, Internet icon of the year, CIDA’24 |
“பிறரின் விமர்சனங்கள் நம்மை என்ன செய்து விடப்போகிறது. நம்மிடம் தவறுகள் இல்லாத போது” என்று தன் You Tube மற்றும் Insta videos மூலம் மக்களின் மனங்களை கவர்ந்து வரும் சாரு அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல்.
உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் சாரு ( Charumathi ) ?
என்னுடைய சொந்த ஊர் காரைக்குடி பகுதியில் உள்ள கீழப்பூங்குடி கிராமம். ஆனால் நான் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறேன். School studies -sir M venkata subba Rao matric higher secondary school-ல் படித்தேன். BCA சென்னையில் உள்ள MOP Vaishnav college for women படித்தேன்.
உங்களுக்கு மோனோ ஆக்டிங் மீது எப்பொழுது ஆர்வம் வந்தது அதைப் பற்றி சொல்லுங்கள் சாரு ( Charumathi )?
முதலில் மோனோ ஆக்டிங் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு அதைப் பற்றி என்னுடைய சிறுவயதில் எதுவும் தெரியாது. நான் பள்ளியில் படிக்கும் போது கூட படிப்பு தொடர்பான போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வெற்றி பெற்றேன். நான் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கொரோனா லாக் டவுன் வந்தது. அதற்கு அடுத்து 12th முடித்த பிறகு நான் ஒரு யூடியூப் சேனல் தொடங்கினேன் அப்பொழுது அன்றாடும் நடக்கும் நிகழ்வுகளை வீடியோவா யூடியூப் சேனலில் பதிவிட தொடங்கினேன்.அப்பொழுது தான் மோனோ ஆக்டிங் செய்ய தொடங்கி வீடியோக்கள் பதிவிட்டேன். அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது.எனக்கும் மோனோ ஆக்டிங் மீது ஆர்வம் வந்தது.
உங்களுக்கு யூடியூப் சேனல் எவ்வாறு தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது சாரு..?
முதலில் எனக்கு அதிக அளவில் போன் பயன்படுத்தும் பழக்கம் கூட இருந்தது இல்லை.மேலும் You Tube and Insta பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. என்னுடைய அக்கா மற்றும் அம்மா இவர்கள் தான் யூடியூப் சேனல் தொடங்கும் Idea கொடுத்தது. சொல்ல வேண்டும் என்றால் என்னிடம் யூடியூப் சேனல் தொடங்கும் போது கேமரா எதுவும் இல்லை.
உங்களின் யூடியூப் சேனல் வீடியோக்கள் பற்றி சொல்லுங்கள் சாரு ( Charumathi ) …?
முதலில் நம் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை வீடியோக்களாக எடுத்து யூடியூப் சேனல்களில் லாங் பாம் வீடியோவாக பதிவிட ஆரம்பித்தேன்.அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு அடுத்து என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவினை பதிவிட்டேன்.
உங்களது வீடியோவிற்க்கான content எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றீர்கள் அதைப் பற்றி சொல்லுங்கள்…?
முதலில் நான் யூடியூப் சேனல் தொடங்கிய நேரம் என்று பார்த்தால் என்னுடை college studies தொடங்கும் முன்பே ஆரம்பித்து விட்டேன். அப்பொழுது என்னுடை அக்கா தான் content கொடுப்பாங்க.அதற்கு அடுத்து நானாகவே content பற்றி யோசிக்க தொடங்கினேன். அப்பொழுது நான் பார்க்கும் நிகழ்வுகள் மற்றும் நான் கடந்து வரும் நிகழ்வுகள் பற்றிய எண்ணங்கள் தோன்றும் போது அதை சிறு சிறு point ஆக எழுதி வைக்க தொடங்கினேன்.அதை வீடியோ contant ஆக எழுத தொடங்கி அதை வீடியோவாக பதிவிட்டேன். இப்போதும் கூட என்னுடைய வீடியோ பதிவுகளுக்கான தேடல் என்னுள்ளே இருந்து கொண்டே இருக்கும்.
உங்களின் யூடியூப் மற்றும் இன்ஸ்ட்டா சேனல் வீடியோ பதிவுகளினால் நீங்கள் அடைந்த மகிழ்ச்சியான மறக்க முடியாத நிகழ்வு எது சாரு ( Charumathi ) …?
எவ்வளவோ மறக்க முடியாத மகிழ்வான நிகழ்வுகள் உள்ளன. அதில் என் அம்மாவிற்கு மிகவும் மகிழ்வான மறக்க முடியாத தருணம் அதே சமயம் எனக்கும் மிகவும் மகிழ்வான மறக்க முடியாத தருணம் என்றால். எங்களது கிராமத்தில் என்னுடைய எங்களது கிராமம் தொடர்பான பொங்கல் பண்டிகை வீடியோ தொகுப்பில் அங்கு உள்ள கோயில்கள் பற்றியும் விழாக்கள் கொண்டாடப்படும் முறைகள் பற்றியும் பதிவிட்டு இருந்தேன்.அப்பொழுது அதை பார்த்த எங்கள் கிராம மக்கள் என்னை பாராட்டி கெளரவித்த நிகழ்வு எனக்கு மிகவும் மறக்க முடியாத நிகழ்வு ஆகும்.
நீங்கள் சிறந்த யூடியூப் மற்றும் இன்ஸ்ட்டா பிரபலமாக நீங்கள் கடந்து வந்த தடைகள் பற்றி சொல்லுங்கள் சாரு ( Charumathi ) …?
தடைகள் என்றால் என்னுடைய படிப்புகளுக்கு இடையில் வீடியோக்களை பதிவிட நேரம் என்பது எனக்கு மிகவும் குறைவாகவே இருக்கும். அப்பொழுது மிகவும் சிரமமாக இருக்கும். அதனால் முதலில் லாங் பாம் வீடியோக்களை பதிவிட்ட நான் short வீடியோக்களை பதிவிட தொடங்கினேன்.என்னுடைய வீடியோக்கள் 1k viewers கடந்து சென்றது. அதற்கு அடுத்து தொடர்ந்து வீடியோக்களை பதிவிட தொடங்கினேன்.தற்பொழுது அதிக பார்வையாளர்களை என்னுடைய யூடியூப் மற்றும் இன்ஸ்ட்டா வீடியோக்கள் கடந்து சென்றுள்ளன. வீடியோக்களுக்கான கன்டன்ட் மற்றும் எடிட்டிங் நேரங்கள் என்னுடைய படிப்பை பாதிக்காதவாறு நான் பார்த்து கொண்டேன்.
உங்களின் யூடியூப் மற்றும் இன்ஸ்ட்டா பதிவுகளின் வெற்றிக்கு துணையாக இருந்தவர்கள் பற்றி…?
என்னுடைய family and friends தான் சொல்லுவேன்.எனக்கு முதலில் வீடியோக்கள் பதிவிடுவதில் சிறு பயம் இருந்தது.அதில் இருந்து என்னை வெளியில் கொண்டு வந்தவர் என்னுடைய அம்மா மற்றும் அக்கா. அதற்கு அடுத்து என்னுடைய friends என்னுடைய வீடியோ shoot மற்றும் editing சில சமயம் எனக்கு துணையாக இருப்பவர்கள். அதற்கு அடுத்து யூடியூப் சேனல்களில் நான் வந்த பிறகு ஜெனி and ஷர்மி sister எனக்கு பிரண்ட்ஸ் ஆனாங்க. மற்றும் நான் கடந்து வந்த ஒவ்வொரு நிலையில் உள்ள நண்பர்களும் என்னுடைய வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு வகையில் துணையாக இருந்தார்கள் என்றே சொல்லலாம்.
உங்களின் ரசிகர்கள் பற்றி சொல்லுங்கள் சாரு…?
என்னுடைய ரசிகர்கள் பற்றி எண்ணும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் அன்பில் நான் மேலும் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்ட்டா பக்கங்களில் வளர்ச்சி அடைந்து சாதித்து வருகிறேன் என்றே சொல்வேன்.
சிறந்த யூடியூப்பர் மற்றும் இன்ஸ்ட்டா பிரபலமாக இருக்கும் உங்களுக்கு சினிமா மீது ஆர்வம் உள்ளதா சாரு…?
தற்போது இல்லை, ஆனால் அதற்கான வாய்ப்பு வருகிறது.என்னுடைய ஆர்வம் எல்லாம் எனக்கான கேமரா உலகம் அது என்னுடையதாக இருக்க வேண்டும். அதில் நான் எவ்வாறு மேலும் சாதிக்க வேண்டும் என்பதே.
நீங்கள் வாங்கிய Awards பற்றி சொல்லுங்கள் சாரு..?
Awards பற்றி சொல்ல வேண்டும் என்றால்
- Famous monocting creator SMILE’23
- Internet icon of the year, CIDA’24.
உங்களைப் போல் யூடியூப் மற்றும் இன்ஸ்ட்டா பதிவுகளில் சாதிக்க வருபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் சாரு…?
நம் பதிவுகளில் மீதும் நம் மீதும் தவறுகள் இல்லாத போது நாம் எதைப்பற்றியும் எந்த ஒரு விமர்சனங்கள் பற்றியும் அச்சப்பட தேவையில்லை , அதை நினைத்து நம் முயற்சிகளை கைவிட வேண்டிய அவசியம் இல்லை. நம்மால் முடியும் என்றால் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்பதே நான் எனக்கும் பிறருக்கும் சொல்வது. உங்களின் நேர்காணல் எங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது. உங்களின் யூடியூப் மற்றும் இன்ஸ்ட்டா பதிவுகள் அதிக viewers கடந்து நீங்கள் சாதனைகள் படைக்கவும்.உங்களின் மற்றொரு யூடியூப் சேனல் தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்.
நன்றி