Darshini Arulanandam

WhatsApp Image 2023 06 17 at 2.38.23 PM

மாடலிங் இவளின்
உயிர் மூச்சு
என்று கொண்டு..!

மாடலிங் துறையில் தடைகள் பல கடந்து வந்த
பீனிக்ஸ் பறவையாய்..!

உயிர்த்தெழுந்து..!

தன் அழகான நளின மிகு புகை படங்களில்
மக்களின் மனம்
கவர்ந்து…! வரும்..!

மாடல் தர்ஷினி அருளானந்தம் அவர்களுடன் ஒரு அனல் பறக்கும் அழகான நேர்காணல்..!

மாடலிங் துறைக்கு நீங்கள் எவ்வாறு வந்தீர்கள்…?

நான் மாடல் ஆக வேண்டும் என்பது எனது சிறு வயது விருப்பமோ, கனவோ கிடையாது, நான் டாக்கரா வேண்டும் என்றே எண்ணினேன், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலம் தான், அங்கே நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன், பின்பு டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்ததால் அங்கிருந்து வெளியில் வந்து, பிளஸ் ஒன், பிளஸ் டூ, வேறு பள்ளியில் சேர்ந்தேன், அங்கே பையாலஜி எடுத்து படித்தேன்..!

அங்கு தான் எனக்குள் இருக்கும் ஆர்ட் மற்றும் மாடலிங் பற்றி உணர தொடங்கினேன்,
நானாக வரையவும், எழுதவும் தொடங்கினேன், நான் எனக்குள்ள திறமைகளை உணரவே இரண்டு ஆண்டுகள் ஆனது. ஆனால் அப்பொழுது எனக்கு அங்கே பல தடைகள் வந்தது…! இருந்தாலும் கூட என்னுடைய friends சிலர் என்னை ஊக்க படுத்தினர், நீ செய் என்று…!

அதனை அடுத்து நான் ஆர்க்கிடெட் படிக்கலாம் என்று முடிவு செய்த பிறகு அதற்காக நான் தேர்ந்தெடுந்த இடம் சென்னை தான், நான் எடுக்கும் முயற்ச்சிகளுக்கு இங்கே வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பினேன், சென்னையில் ஆர்க்கிடெட் படிப்பதற்க்கா ஒரு அகடாமியில் சேர்ந்தேன்,

அப்பொழுது தான் நான் எழுதிய பதிவுகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட ஆரம்பித்தேன், நான் எழுதுவதற்க்கான போட்டோக்களை Goole போன்ற தளங்களில் தேடி எடுப்பதில் எனக்கு பெரும்பாலும் விருப்பங்கள் இருந்து இல்லை, அதனால் நானே போட்டோக்கள் எடுக்க ஆரம்பித்தேன், அப்பொழுது தான் என்னில் உள்ள மாடலிங் ஆர்வம் பற்றி அறிந்தேன், என்னையே புகைப்படங்கள் எடுத்து அதற்க்கு ஏற்றாற் போன்ற பதிவுகளை பதிவிட ஆரம்பித்தேன், அப்பொழுது தான் தொடங்கியது எனது மாடலிங் பயணம்…!

நீங்கள் மாடலிங் துறைக்கு வருவதற்கு இருந்த தடைகள் பற்றி கூறுங்கள் தர்ஷினி…?

என்னை பொறுத்த வரையிலும் எல்லாம்மே தடைகள் தான்…!

நான் பள்ளியில் படிக்கும் போதே தொடங்கியது…! நீ ஏன் இதை பண்ணுற..! இதை செய்யாத போன்ற பல தடைகள் இருந்தது…!

அதற்கு அடுத்து கலேஜ் அங்க எல்லாருமே நான் போடுற போஸ்ட்ட வச்சு என்னை எனக்கு தெரியாமலே பேசுறது, அடுத்து என்னோட பிரண்ட்ஸ் கூப்பிட்டு அவங்களை பயமுறுத்தி ஏன்..? கூட பேச விடாம செய்யிறது…!

இந்த மாதிரி நிறையா இருந்தது…!

அதையெல்லாம் தாண்டி வீட்டில் அப்பா, அம்மா, என்னை எவ்வளவு தைரியம்மா வளர்த்து இருந்தாலும் கூட, என்னை அவங்க வந்து இந்த மாதிரி எல்லாம் செய்யாத, நல்லா படின்னு தான் சொன்னாங்க,
நான் என்ன பண்ணுறேன், அதையெல்லாம் பத்தி அவங்க யோசிக்கவும் இல்லை suport பண்ணவும் இல்லை…!

இந்த மாதிரி சொல்ல முடியாத அளவுக்கு தடைகள்,

அதுக்கு அடுத்து அங்க இருந்து வெளில வந்து வேற காலேஜ்ல ஆர்க்கிடெட் join பண்ணுனேன்,

இப்ப என்னோட படிப்பு மற்றும் மாடலிங் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன்…!

உங்களின் இன்ஸ்டா பதிவுகள் பற்றி எங்களிடம் சொல்லலாமே தர்ஷினி…?

முதலில் இன்ஸ்டாகிராம் பற்றி முழுமையாக தெரியாமல் தான் அதில் பதிவுகள் போட ஆரம்பித்தேன்…!

அதில் எனது பதிவுகளுக்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது,

அதே சமயம் எதிர்ப்புகளும் இருந்தது,

கொரோனா கால கட்டத்தில் என்னுடைய மாடலிங் புகைபட பதிவுகளும், ரீல்ஸ்களும் பதிவிட ஆரம்பித்தேன் அதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது…!

அங்கிருந்து எனக்கு மாடலிங் துறைக்கான வாய்ப்புகள் வர தொடங்கியது…!

இருந்தாலும் மாடலிங் மற்றும் ரீல்ஸ் இவைகளை எல்லாம் தவிர எனக்கு சமூகம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்களை கூற வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்..!

நடிப்பில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா தர்ஷினி….?

ஆர்வம் இருக்கின்றது, இருந்தாலும் கூட நம் தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கான ஹீரோயின் வாய்ப்புகள் மிகவும் குறைவே…!

ஒரு ஹீரோயின் என்றாலே அவர்களை வெள்ளை நிறத்தில் திரையில் காட்டும் வழக்கம் இன்று வரை
தமிழ் சினிமாவில் தொடர்கிறது, வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்களே தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக அறிமுக படுத்த படுகின்றார்கள், ஏன் அவ்வாறு செய்ய வேண்டும், நடிக்க வாய்ப்பு தேடும் தமிழ் பெண்களுக்கு அந்த வாய்ப்பினை தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் தரலாமே…! இது என்னுடைய கருத்து ஆகும். நான் நானகவே நடிக்க விரும்புகிறேன், இதற்கு எதற்கு நிற வேறுபாடுகள், இந்த நிலை தமிழ் சினிமாவில் மாற வேண்டும் என்பது என் விருப்பம் ஆகும்.

இந்த சமுதாயத்தின் பார்வையில் மாடலிங் பற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்…?

இந்த சமுதாயத்தின் பார்வையில் மாடலிங் அதை ஆதரிப்பவர்கள் பலர் இருந்தாலும்..! அதற்கு எதிராக பேசுபவர்களும் இருக்கின்றார்கள்…!

நான் ஒரு பதிவு இன்ஸ்டாவில் போட்டேன் என்றால்..!

அதை பார்ப்பவர்கள் எந்த மாதிரி comments பண்ணுகின்றார்கள் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தாலும் கூட…!

அடுத்தவரை விமர்சிப்பது என்பது தவறான ஒன்றே ஆகும்…!

ஆனால் இந்த தடைகள் அனைத்தையும் மீறியே மாடலிங் மட்டும் அல்ல பிற துறைகளிலும் நாம் சாதிக்க வேண்டும்…!

உங்களின் மாடலிங் வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்கள் என்று நீங்கள் யாரை கூறுகின்றீர்கள் தர்ஷினி…?

என்னுடைய மாடலிங் வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்கள், முதலில் என்னுடைய பெற்றோர்கள் துணையாக இருக்கவில்லை. இருந்தாலும் தற்பொழுது அவர்கள் முழுமையாக ஆதரவு தரவில்லை என்றாலும் என்னுடை மாடலிங் துறையை சிறிது ஆதரிக்கின்றனர், அதற்கு அடுத்து என்னை சுற்றியுள்ள நண்பர்கள்..!

உங்களை போல் சாதிக்க வரும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் தர்ஷினி…?

என்னை போல் சாதிக்க வருபவர்களுக்கு முதலில் நான் சொல்ல விரும்புவது,
யார் என்ன சொன்னாலும் அதை எல்லாம் தகர்த்து எறிந்து உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து உங்களது முயற்ச்சியில் நீங்கள் வெற்றி பெற போராடுங்கள் அதுவே நீங்கள் உங்கள் மீது நீங்கள் வைக்கும் மிகப்பெரிய வெற்றி முயற்சி ஆகும்..!

(தர்ஷினி அருளானந்தம் அவர்களின் மாடலிங் கனவுகள் நிறைவேறி அவர் சிறந்த மாடலாக வர வேண்டும் என்று வாழ்த்துவோம்..!

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×