DHARANI RAJENDRAN

DHARANI RAJENDRAN

கடின உழைப்பிற்கு என்றும் தோல்வி என்பதே இல்லை மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் தன் திறமையின் மூலமாக
வெற்றி பெற்று வரும்
தாரணி ராஜேந்திரன் உடன் ஒரு அழகான நேர்காணல்.

Name Dharani rajendran
Fathers name Rajendran
Mothers name Amutha
Dob 28/04/1997
Native place coimbatore
School namemanis hr sec sch
Clg name psg cas, bharathiyar university, srm delhi
Current place coimbatore
Occupation phd scholar , past 1 year working as hod maths in cbse school
Awards/recognitiongold medalist in msc, got cheif guest in many places
Movie names or ablum or advertisements names breakup, marakuma nenjam, Queen(Q)

உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் தாரணி ( DHARANI RAJENDRAN )…?

என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். நான் தற்பொழுது கோயம்புத்தூரில் வசித்து வருகிறேன்.
நான் தற்பொழுது PhD
Srm டெல்லியில் படித்து வருகிறேன். படிப்பில் ஆர்வம் அதிகம் தான் நான் B sc மற்றும் MSC ல் gold medalist.

கோல்டு மெடலிஸ்ட்டா இருந்தா உங்களுக்கு நடிப்பின் மீது எவ்வாறு ஆர்வம் இருந்தது (DHARANI RAJENDRAN )… ?

நடிப்பின் மீது எப்படி ஆர்வம் வந்தது என்றால் அது சரி வர நினைவில் இல்லை,நான் கோயம்புத்தூரில் உள்ள பள்ளியில் என் படிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்கு ஆசிரியராக ஒரு வருடம் பணியாற்றினேன். அதற்கு முன்னதாகவே இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் என்னுடைய ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தேன். அப்பொழுது தான் எனக்கு நடிப்பில் ஆர்வம் வந்தது என்று நினைக்கின்றேன். நான்கு வருடங்களுக்கு மேல் இன்ஸ்ட்டா பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வருகிறேன். தொடக்கத்தில் அவ்வளவாக முதலில் ரீச் ஆகவில்லை பார்வையாளர்களிடம்.ஆனால் தொடர்ந்து என்னுடைய கடின உழைப்பும் திறமையான நடிப்பும் இன்று இன்ஸ்ட்டா பக்கத்தில் என்னை ஒரு பிரபலமாக மாற்றியுள்ளது என்றால் அது என்னுடைய ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களவே சென்றடையும் என்று சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

உங்களின் மாடலிங் துறை பற்றி சொல்லுங்கள் தாரணி ராஜேந்திரன் …?

நான் மாடலிங்கிள் 25 shoot செய்து உள்ளேன்.ராம்ப் வாக்கில் பங்கேற்று உள்ளேன்.

உங்களின் film வாய்ப்புகள் பற்றி சொல்லுங்கள் தாரணி ராஜேந்திரன் ( DHARANI RAJENDRAN) …?

என்னுடைய திறமையான நடிப்பின் மூலமாகவும், இன்ஸ்ட்டா பக்கத்தில் என்னுடைய ரீல்ஸ் மூலமாகவும் சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன்.
எனக்கான கதாபாத்திரத்திற்க்காக காத்து இருக்கிறேன்.
அதற்கான கடின முயற்ச்சிகளையும், பயிற்ச்சிகளையும் செய்து வருகிறேன்.
சீரியல் துறையிலும் வாய்ப்புகள் வருகின்றன. அது சினிமாவாக இருந்தாலும் சீரியலாக இருந்தாலும் அதில் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன்.
இதை தவிர இரண்டு short film நடித்து உள்ளேன்.

நீங்கள் மாடலிங் மற்றும் நடிப்பு என உங்களின் லட்சிய கனவுகளுக்கு உங்களுக்கு துணையாக இருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் தாரணி…?

முதலில் நான் இதைப்பற்றி என் குடும்பத்தினரிடம் சொல்லிய போது. அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் கூட அதை அவர்கள் நிராகரிக்கவில்லை. உனக்கு சரி என்றால் நீ அதை செய் என்று தான் கூறினார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு நான் படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே ஆரம்பத்தில் இருந்து.
அதற்கு அடுத்து என்னுடைய முயற்சிகளிலும் வெற்றிகளிலும் துணையாக இன்று வரை இருப்பவர்கள் என்னுடைய பிரண்ட்ஸ்கள் தான்.

நீங்கள் சினிமா துறையில் கடந்து வந்த தடைகள் பற்றி சொல்லுங்கள் தாரணி ( DHARANI RAJENDRAN )…?

நான் கடந்து வந்த தடைகள் என்றால் என்னிடம் திறமைகள் இருந்தும் சில இடங்களில் என்னுடைய நேர்மையான குணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது. அதைப் பற்றி நான் பெரிதாக என்றும் வருத்தப்பட்டது இல்லை. அதற்கு அடுத்து நடிப்பு துறையை பொருத்த வரை பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.

நீங்கள் நடித்துள்ள advertisment name பற்றி சொல்லுங்கள் தாரணி…?

Advertisment name என்றால் breakup, marakkuma nenjam, Queen (Q)

உங்களைப் போல் நடிப்பு துறையில் சாதிக்க போராடும் வர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…?

எந்த ஒரு செயலைப்பற்றி அதிகம் யோசித்து உழைக்கின்றீர்களோ அதில் உங்களுக்கு ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.இது நடிப்பு மட்டும் இல்லை எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.

சினிமா உலகம் பற்றி உங்களின் பார்வை தாரணி…?

இங்கே திறமை இருந்தும் பல காரணங்களால் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது கிடைக்காமல் போகிறது. என்பதே மிகவும் கவலை தருகிறது. தாரணி உங்களுடனான இந்த நேர்காணல் எங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது.சினிமா துறையில் நீங்கள் சிறந்த நடிகையாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 ✍️சுபா கிட்டு.

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×