Dharshini sudhakar

WhatsApp Image 2024 04 24 at 8.04.50 AM

ஒரு நாள் கண்டிப்பா நாம நினைச்சது நடக்கும் ,அதுக்காக நாம பல நாள் கடினமான பாதையில நாம பயணிக்கணும் என்று தன்னுடைய முயற்சிகளின் மூலம் முன்னேறி வரும் டாக்டர் மற்றும் நடிகை என பல்வகை திறமை கொண்டு வலம் வரும்
தர்ஷினி சுதாகர் உடன் ஓர் அழகான நேர்காணல்.

Name Dharshini sudhakar
Fathers namesudhakar
Mothers name Selvarani
Dob 24/09/2000
Occupation Doctor
Degree MBBS
Native place coimbatore
School name velammal vidhyashram
Current place abudhabi
Clg name anna medical college
Movie names or ablum or advertisements names singaari, jam roll, vaan

உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் ( dharshini sudhakar ) தர்ஷினி…?

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.அங்க தான் 10th வரைக்கும் CBSE படித்தேன். அதற்கு அடுத்து 11th நாமக்கல் படித்தேன் அங்க matric syllabus அதுனால படிக்க கஷ்ட்டமா இருந்தது.அக்காவோட studies related கோயம்புத்தூர் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அங்க தான் 12th படித்தேன்.
அதற்கு அடுத்து மொரீசியஸ்ல உள்ள மெடிக்கல் காலேஜ்ல Mbbs join பண்ணுணேன். அங்க தான் என்னோட டாக்டர் படிப்பை complete பண்ணுணேன்.

டாக்டர் ஆகணும் அப்படிங்கிறது உங்களோட கனவா dharshini sudhakar ….?

டாக்டர் ஆகணுங்கிறது என்னோட கனவுங்கிறதை விட என்னோட அப்பா அம்மாவோட கனவுன்னு சொல்லலாம்.ஏன்னா என்னோட அக்கா டாக்டர்.அதுனாலை நானும் டாக்டர் ஆகணுங்கிறது அவங்களோட கனவா இருந்தது. First எனக்கு டாக்டர் ஆகிறதுலை இன்டரஸ்ட் இல்லை தான். ஆனா மொரிசியஸ்ஸில் டாக்டருக்கு படிக்கும் போது அந்த நாட்டோட language தெரியாது.அதுனால எனக்கு Hospital உள்ள பேஸண்ட்கிட்ட பேச முடியாம கஷ்ட்டப்பட்டேன்.
ஏன்னா அங்க இருக்கிற எல்லாருக்கும் English தெரியாது.அதுக்கு அடுத்து போக போக எல்லாம் சரியானது.
என்னுடைய மருத்துவ படிப்பை நான் விருப்பத்துடன் படித்து முடித்தேன், டாக்டர் ஆவதன் மூலமா நான் நிறையா பேருக்கு உதவி செய்யணுண்ணு நினைக்கிறேன், மருத்துவம் என்பது கண்ணால பாக்க முடியாத கடவுளை மனிதர்கள் நேர்ல பாக்கிற மாதிரி so நான் என்னோட டாக்டர் தொழிலை பணத்துக்காக இல்லாம சேவையாகவும் பண்ணணுண்ணு நினைக்கிறேன், அதுவும் இந்தியாவுல மருத்துவரா பணியாற்றனுங்கிறது என்னோட விருப்பம்.

ஒரு டாக்டரா இருக்கிற உங்களுக்கு மீடியா துறை மீது எப்படி ஆர்வம் வந்தது dharshini sudhakar …?

பொதுவா என்னோட சின்ன வயசுலை இருந்தே மீடியா துறை எனக்கு மிகவும் பிடிக்கும், அப்படி தான் எனக்கு மீடியா மீது ஒரு ஆர்வம் வந்தது.அதுக்கு கொரோனா லாக்டவுன் டைம்ல நான் இன்ஸ்டாகிராம்ல என்னோட பதிவுகளை போட ஆரம்பித்தேன்.
அப்படியே அது என்னை மீடியா துறைக்கு மிக நெருக்கமாக அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்து நிறையா மூவிஸ்ல நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் அந்த சமயத்தில் நீட் எக்ஸாம் வந்ததால் ஒரு படம் எல்லாம் பூஜை வர சென்று அதில் நடிக்க முடியாமல் நின்று போனது.

மீடியா மீது ஆர்வம் உள்ள உங்களுக்கு யார் முன்மாதிரியாக இருந்தது – dharshini sudhakar ….?

முன்மாதிரியாக இருந்தாருன்னு சொல்லுறதை விட என்னை மீடியா துறையில சாதிப்பேன்னு ஏன் மேல நம்பிக்கை வச்சது என்னோட தாத்தா தான்,அவரோட princess கூட என்ன சொல்லலாம்.
நான்னா அவருக்கு அவ்வளவு பிடிக்கும்.அவங்க ஒவ்வொரு டைம் லீவுக்கு இந்தியா வரும் போது எல்லாம் ஏதாவது ஒரு டைலாக் கொடுத்து என்னை நடிக்க சொல்லி பயிற்சி கொடுப்பாங்க,எனக்கு எங்க தாத்தா கூட இருக்க மிகவும் பிடிக்கும்,ஆனா அது ரெம்ப நாள் நீடிக்கவில்லை எனக்கு 13 வயது இருக்கும் போதே அவங்க இறந்திட்டாங்க,அதுக்கு அடுத்து எனக்கு support பண்ண யாரும் இல்லை,என்னால தாங்கிற முடியாத இழப்புன்னா அது என்னோட தாத்தா இழப்பு தான்,இதை தவிர அம்மா எனக்கு ரெம்ப பிடிக்கும்,அப்பா மிகவும் கண்டிப்பானவர்.

உங்களுடைய மீடியா துறையில உங்களுக்கு துணையாக இருப்பவர்கள் யார் – தர்ஷினி சுதாகர்..?

துணையாக நிற்பவர்கள் யாரும் இல்லை,என்னுடைய முயற்சிகளினாலே நான் மீடியா துறையில் வாய்ப்புகள் பெற்றேன். எதுவாக இருந்தாலும் என்னுடைய தனி முயற்சிகளின் வெற்றிகளும், தோல்விகளுமே,மீடியா துறைதவிர துணையாக இருப்பவர்கள் என்றால் என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு Moral support கா இருந்து வருகிறார்.

உங்களுடைய மருத்துவ தொழில், மீடியா துறை என்று வரும் போது எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் தர்ஷினி….?

முதலில் என்னுடைய மருத்துவ தொழில் க்கு தான்.
ஏனென்றால் உயிர் காக்கும் மருத்துவம் என்பதை விட புனிதமானது எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்,அதற்காக என்னுடைய நடிப்பையும் மீடியா துறையும் வேண்டாம் என்று மறுக்கவில்லை,மருத்துவமும், மீடியாவும் எனக்கு இரண்டு கண்கள் போன்றது.இரண்டிலையுமே என்னுடைய வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்..!

நீங்கள் நடித்துள்ள Movie name Adds name பற்றி சொல்லுங்கள் தர்ஷினி…?

Singaari ,jam roll, van.

உங்களின் கனவு பற்றி சொல்லுங்கள் – தர்ஷினி சுதாகர்…?

எங்கு வாழ்ந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழணும்,நமக்கு பிடிச்ச மாதிரி வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை,அவ்வளவு தான்,இப்ப நடிகையாக எந்த role கொடுத்தாலும் நான் best பண்ணணும்,ஒரு டாக்டரா என்னோட பேஷண்ட்ட நான் care பண்ணி பாத்து அவங்களை கியூர் பண்ணணும் அவ்வளவுதான்,நம்மளோட வாழ்க்கை ஏதாவது ஒரு வகையில பயனுள்ளதா இருக்கணும் அவ்வளவு தான்.

உங்களை போல சாதிக்க போராடும் இளைஞர்களுக்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க தர்ஷினி….?

உங்களோட லட்சியம் எதுவா இருந்தாலும் அதை நிறைவேற்ற போராடணும்.அடுத்தவங்க விமர்சனத்துக்காக அதை வேணாண்ணு தூக்கி வீசி எறியிறது முட்டாள் தனம்,நம்மளோட வேலையை சரியாக செய்யும் போது அதற்கான தோல்வி முதலில் கிடைத்தாலும். வெற்றி இறுதியில் கிடைக்கும்,தோல்வி அடைஞ்சிட்டோம்முன்னு அடுத்தவங்க விமர்சனத்துக்காக நம்மளை நம்ம தாழ்த்தி பயந்து ஓட ஆரம்பிச்சா..!,அது நம்மோட வாழ்க்கை முடிவா மாறும்,எதிர்த்து போராடி ஜெயிக்கணும்,அப்ப தான் உன் கூட இருக்கிறவங்களே உன்னை திரும்பி பார்ப்பாங்க அவ்வளவு தான் நான் சொல்ல விரும்புறது.

மீடியா மற்றும் மருத்துவத்துறையில் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும்
தர்ஷினி சுதாகர் அவர்களின் கனவுகள் நிறைவேற நாமும் வாழ்த்தி மகிழ்வோம்.

✍️சுபா கிட்டு

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×