Dilip Kumar Reddy

WhatsApp Image 2023 06 17 at 2.38.26 PM

நடிகர் | தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்| ஓவியர்| மாடல்|தீலீப் குமார் ரெட்டியின்| சினிமா பயணமும்| வாழ்வியலும்|

நடிகர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஓவியர் மாடல் என கலை துறையில் பல திறமைகள் கொண்டவராய் விளங்கிவருபவர் நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள்.

தீலீப் குமார் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரியில் பிறந்தவர். தனது சொந்த ஊரிலேயே பள்ளி கல்வி தன்னை முடித்த நடிகர் தீலீப் குமார் ரெட்டி. தனது கல்லூரி கல்வி தன்னை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் பயின்றார். அண்ணா பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் கேம்பஸ்ஸில் EEE பட்டம் பெற்ற நடிகர் தீலீப் குமார் ரெட்டி அதன் பின்னர் MBA பயின்றார் , இன்று வரை நடிப்போடு இணைந்து சாப்ட்வேர் இன்ஜினியராகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் இவர் மீடியா துறை, சினிமா துறை. ஸ்டோஜ் ஷோக்கள், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், ஓவியர் , மாடல், டான்ஸர், என கலை துறையிலும் தன் திறமைகளை வெளிபடுத்தி ரசிகர்களை மகிழ்ச்சியூட்டி வருகிறார், இவரின் டெலிவிஷன் பயணம் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை இங்கே பார்க்கலாம்.

Current serialNala Dhamayanthi serial at Zee Tamil.
Movie name Lara (One of the main lead role)
AwardSouth Indian Golden awards SIGA for raising actor

நடிகர் தீலீப் குமார் ரெட்டியின் ஆரம்ப கால ஸ்டேஜ் நடிப்பும்|ஆர்வமும்|

இவர் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும் போதே பள்ளியில் நடைபெறும் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.

அன்று தொடங்கியது இவரின் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பயணத்தின் சிறு தொடக்கம் . இன்று South India வின் புகழ் பெற்ற தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நடிகர் தீலீப் குமார் ரெட்டி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும்.
இவ்வாறு சிறந்த புகழ் பெற்ற இவருக்கு டெலிவிஷன் துறையின்
மீது எவ்வாறு ஆர்வம் வந்தது என்று காணலாம்.

நடிகர் தீலீப் குமார் ரெட்டி| அவர்களின் டெலிவிஷன் சீரியல்களும்| அதில் அவரின் கதாபாத்திரங்களும்|

நடிகர் தீலீப் குமார் அவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று
நடித்து வந்தார்.

அது முதலில் அவ்வளவாக மக்களிடம் இவரை அறிமுகபடுத்தவில்லை என்றே கூறலாம்.

இருந்தாலும் தன் நடிப்பின் திறமை மீது தன்னம்பிக்கை கொண்டு போராடினார்.

ஜீ தமிழ் சேனலில் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிகர் தீலீப் குமார் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் விக்கி என்பதாகும்.இதில் இவரின் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே சீரியலில் தீலீப் என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பினை அழகா வெளிபடுத்தி இருப்பார் தீலீப் குமார்

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான உயிரே சீரியலிலும் தனது திறமையான நடிப்பினை வெளிப்படுத்தினார் நடிகர் தீலீப் குமார்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலிலும் நடித்துள்ளார்.

நடிப்பின் பல கோணங்களில் தனது திறமை வாய்ந்த நடிப்பினை வெளிபடுத்திவரும் இவருக்கு.

காற்றுக்கென்ன வேலி சீரியலில் வரும் ஆகாஷ் கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று டெலிவிஷன் துறையில் இவருக்கு என்று புகழ் பெற்ற தனி பெயரினை பெற்று தந்தது என்று
கூறினால் அது உண்மையே.

காற்றுக்கென்ன வேலி சீரியலின் இயக்குனர் பிரான்சிஸ் கதிரவன்
அவர்கள் இந்த கதைக்காக இவரின் நடிப்பினை பார்த்து தேர்வு செய்ததார்.

மேலும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் தனது கதாபாத்திரத்தினை எழுதிய எழுத்தாளர் ஜெ.தீபா ஜானகிராமன் அவர்கள். தன் நடிப்பில் வரும் வசனங்களை மிகவும் அழகாக எழுதி தன் நடிப்பிற்க்க உயிரோட்டம் கூடுத்ததாகவும் கூறுகிறார்.

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை கலைஞர்கள் ஜோடிகளாக பங்கு பெறும் Reality show வில் இவர் டயானாவுடன் இணைந்து கலந்து கொண்டார்.

இவ்வாறு பல சீரியல்களில் நடித்தும் நடித்துக்கொண்டும்
இருக்கும் நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் சினிமாவில் எவ்வாறு அறிமுகமானர் என்பதை நாம் பார்க்கலாம்.

நடிகர் தீலீப் குமார் ரெட்டி| அவர்களின் சினிமா உலக பயணம்|

இவர் டெலிவிஷன் சீரியல்களில் நடித்து கொண்டு இருந்த பொழுது சினிமா துறையில் இருந்து வாய்ப்புகள் வந்தது
நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். இதில் வரும் நீ யார் என்று வரும் பாடலில் இவர் வருவார்.இந்த படத்தில் இவர் பேசி நடித்த காட்சிகள் வெளிவரவில்லை.

இருந்தாலும் இவர் வரும் இந்த பாடல் நடிகர் தீலீப் குமார் ரெட்டிக்கு சிறந்த பெயரினை வாங்கி தந்தது என்று கூறலாம்.

இந்த படத்திற்க்கு பின்பு ஆரி அர்ச்சுன் உடன் ஓடு என்ற திரைபடத்தில் நடிக்கிறார் தீலீப் குமார்.

நடிகர் தீலீப் குமார் ரெட்டியின்| தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்பயணமும்|விருதுகளும்|

தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள்.
எண்ணற்ற ஸ்டேஜ் ட்ராமக்களில் நடித்து உள்ளார்.மிகவும் நடிப்பில் திறமை வாய்ந்த இவருக்கு

தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசும் விருதுகள் (Best stage play actor/ dancer from tamil nadu government 2018. Best supporting actor award from isai 24×7-2021 )வழங்கி கெளரவித்தது.

நடிகர் தீலீப் குமார் ரெட்டியின்| டான்ஸ் பயணம்|

நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் சிறந்த டான்ஸர் ஆவார்.பல ஸ்டேஜ் ஷோக்களில் இவரின் அழகான நடனத்தினால் மக்களின் மனங்களை மகிழ்ச்சி படுத்தி கொண்டு வருகிறார் நடிகர் தீலீப் குமார் .

நடிகர் தீலீப் குமார் ரெட்டி|சிறந்த ஓவியர்

நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் சிறந்த ஓவியரும் ஆவார்.
தான் பார்க்கும் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக வரையும் திறமை கொண்டவர்.இவருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் மிகவும் அதிகம்

தான் வரைந்த ஓவியங்களுக்காக ஆந்திர அரசிடம் விருதுகள் பெற்றுள்ளார் நடிகர் தீலீப் குமார் ரெட்டி.

நடிகர் தீலீப் குமார் ரெட்டியின் நடிப்பும்| அதனுடன் இணைந்து தொடரும்| சாப்ட்வேர் இன்ஜினியர் பணியும்|

மிகவும் சிறந்த நடிகர் டான்ஸர் மற்றும் ஓவியர் என்று நம்மால் அறியப்படும் தீலீப் குமார்
நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி நடித்து வரும் போதும்

அதனுடன் தொடர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியர் பணியையும் செய்து வருகிறார்.

மீடியாவில் நடிக்க வரும் பெரும்பாலான இளைஞர்கள் பல போராட்டங்களுக்கு பின்பே வெற்றியினை
அடைய முடியும் என்பது
உண்மை தான்.

அதை போன்றே நடிகர் தீலீப் குமாரும்.தொடர்ந்து சூட்டிங் இருந்தால் தனது சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இரவிலும்.சூட்டிங் இல்லாத நேரங்களில் வழக்கம் போல் செய்து வரும்.இவரின் கடின உழைப்பினை நாம் பாராட்டி தான் ஆக வேண்டும்.

தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு மேலாக இரவில் தொடர்ந்து சாஃப்ட் வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவர்.

அதிகாலை நேரங்களில் சூட்டிங் இருந்தால் சரியான நேரத்திற்க்கு சென்று விடுவார்.

இரவு நேர சூட்டிங் இருந்தாலும் தன் பணியினை செய்ய தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் தனக்கு உதவியாக இருப்பதாக கூறும் நடிகர் தீலீப் குமார் ரெட்டியின்

இரவு நேர தூக்கம் என்பது மிகவும் குறைவே.

நடிகர் தீலீப் குமார் ரெட்டி| சாதித்திட எண்ணும் இளைஞர்களுக்கு| கூறும் நம்பிக்கை வரிகள்|

இன்று சினிமா துறை மட்டும் இல்லாமல் வேறு எந்த துறையாக இருந்தாலும் சாதித்திட துடித்திடும் இளைஞர்களை விமர்சித்து பேசுபவர்கள் பலர் உண்டு.

நீ முன்னேறினாய் என்று உற்ச்சாகம் ஊட்டுபவர்களை விட

நீயா முன்னேறினாய் என்று விமர்சிப்பவர்கள் இங்கே அதிகம்.

அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

தனக்கென்று ஒரு வேலையினை தன் வருமானத்திற்க்காக ஏற்படுத்தி கொண்டே தனது லட்சிய கனவுகளை நிறைவேற்ற வழிகளை தேடி சாதனைகள் செய்ய வேண்டும்

ஏனென்றால் எந்த ஒரு துறையாக இருந்தாலும் எளிதில் சாதனைகள் படைத்திட முடியாது.

என்பதே நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் இன்றைய சாதிக்க போராடும் இளைஞர்களுக்கு கூறும் நம்பிக்கை நிறைந்த வரிகள் ஆகும்.

நடிகர் தீலீப் குமார் ரெட்டி| அவர்களின் நடிப்பின் லட்சிய கனவுகள்|

இவர் சிறந்த துணை நடிகராக மக்களின் மனங்களில் இடம் பெற வேண்டும் என்பதையே தனது லட்சிய கனவாக கொண்டுள்ளார்.

நடிகை மனோரமா இவருக்கு மிகவும் பிடித்த நடிகை ஆவார்.

அவரை போன்றே வேறுபட்ட குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்களின் மனங்களை மகிழ்விக்க வேண்டும் என்பது இவரின் விருப்பம் ஆகும்.

நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்களின்| நடிப்பு சார்ந்த கருத்துக்கள்|

நடிப்பில் திறமை வாய்ந்தவர்கள் எண்ணற்ற பேர்கள் உண்டு.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் எவ்வளவோ பேர்கள் திறமையான நடிப்பு இருந்தும்.

சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போராடி
வறுமையில் வாழ்கின்றார்கள்.

இவ்வாறு திறமையான நபர்களுக்கு நடிக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படுதல் வேண்டும். அதன் பின்னர் மற்றவர்களுக்கான வாய்ப்பினை வழங்கலாம்

என்ற கருத்தினை நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் கூறுகிறார்.

நடிகர் தீலீப் குமார் ரெட்டி| அவர்களின் தொடரும் சினிமா டெலிவிஷன் பயணங்கள்

நடிகர் , டான்ஸர், மாடல், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், ஓவியர், சாப்ட்வேர் இன்ஜினியர் என பல திறமைகள் கொண்டு சாதிக்க போராடும் நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள்.சிறந்த நடிகராக மக்களின் மனங்களில் இடம் பெற்று எண்ணற்ற விருதுகள் பல பெற வேண்டும் என்று நாம் வாழ்த்துவோம்.

✍🏿சுபா கிட்டு

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×