Pranesh Infant Raj
” அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய் “ Name Bharatha Sirpi Dr. R. Pranesh Infant Raj Father’s Name G.Rajkumar Mother’s Name R. Thangam( Retd Teacher) Date Of Birth 01.11.2000 Native Thanjavur School Name St. Anthony’s Higher Secondary School College Name Annai Velankanni Arts and Science College Current Place Thanjavur அதுவே மனிதனின் சிறந்த அறம் என்ற கொள்கையை தன் உயிர் மூச்சாக சுவாசித்து கொண்டு இருக்கும் சமூக சேவகர், தன்னம்பிக்கை பேச்சாளர் வரும் காலத்தில் தன் அரசியல் தொண்டின் மூலம் மக்களுக்காகவே பணி செய்து தன் வாழ்நாட்களை அர்பணிக்க காத்திருக்கும் பாரத சிற்பி DR. R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல். உங்களின் சொந்த ஊர் பற்றி சொல்லுங்கள் பாரத சிற்பி DR . R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ? என்னுடைய சொந்த ஊர் தமிழ் நாட்டில் உள்ள பாரம்பரிய வரலாற்று பெருமைகள் பல கொண்டு விளங்கி கொண்டு இருக்கும் தஞ்சாவூர் ஆகும். என் ஊரின் புகழ் என்பது இந்த உலகம் அறிந்த ஒன்றே ஆகும். இங்கே காணப்படும் தமிழரின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் கண்டு ஒரு தமிழனாய் நான் பெருமிதம் கொள்கினறேன்.மேலும் தரணியின் பசி போக்கும் தஞ்சை மண்ணின் விவசாயம் வேறு எந்த மண்ணையும் விட சிறந்தது என்று ஒரு தமிழனாய் நான் எண்ணி மகிழ்கின்றேன். என் சொந்த ஊரின் பெருமைகள் கூறி நான் மகிழ்ந்தாலும் கூட “யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதே என்னுடைய தாரக மந்திரம். செல்லும் ஊர் எல்லாம் என் ஊரே..! அங்கே வாழும் மக்களுக்கும் என் உறவினர்களே…! அவர்களிடம் வேற்றுமை இல்லாமல் அன்பு செய்வதே என் பணி ஆகும். எந்த இடத்தில் அன்பு சமமாக இருக்கின்றதோ அந்த இடத்தில் எந்த வித ஏற்தாழ்வுகளும் இருக்காது என்பது என்னுடைய கருத்து ஆகும். மனிதனாய் நாம் அனைவரும் சமம். மனிதராய் இருந்து பிற மனிதனுக்கு உதவிகள் செய்வது என்பது பெரும் வரம் என்றே நினைக்கிறேன்.அது எல்லாருக்கும் அமைவதில்லை எனக்கு அது அமைந்ததுள்ளது என்பது எனக்கு மன நிறைவான மகிழ்ச்சியை தருகின்றது. உங்களின் குடும்ப பிண்ணனி பற்றி சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ? என்னுடைய குடும்பம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அப்பா G. ராஜ் குமார். நூலகத்தில் பணியாற்றியவர். அம்மா R.தங்கம். ஆசிரியராக பணியாற்றிவர்,எனது பாட்டி ஆசிரியராக பணியாற்றியவர். எனக்கு அண்ணன் ஒருவர் இருக்கின்றார்.அவரும் அலுவலக வேலையில் இருக்கின்றார். ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மிகவும் மகிழ்ச்சியான குடும்பம் ஆகும். உங்களின் படிப்பு பற்றி சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ? என்னுடைய பள்ளி படிப்பினை St.ANTHONY’s HIGHER SECONDARY SCHOOL ல் படித்தேன். B.SC. DCN.DSE. படத்து உள்ளேன். B.SC (MATHS) இளங்கலை பட்டப்படிப்பினை ANNAI VELLANKANNI ARTS AND SCIENCE COLLEGE ல் படித்தேன். பொதுவாக ஆசிரியர்கள் தான் ஒரு சமூகத்தை வழி நடத்தும் சிறந்த மேய்ப்பான்கள் அல்லது கடவுள்கள் என்று கூட சொல்லலாம். அப்படி பார்க்கையில் என்னை வழி நடத்தி இன்று நான் ஒரு சமூக சேவகராக சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைந்தவர்களில் முக்கியமானவர்களாக கருதுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் எனது ஆசிரியர்களே. ஆசிரியர்கள் பற்றிய உங்களின் கருத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அவர்களின் பெயர்களை நீங்கள் சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ? என்னுடைய பள்ளியின் தாளாளர் Head master திரு. ஃபாதர் J அந்தோனிசாமி அவர்கள். என்னுடைய ஆங்கில ஆசிரியர் திரு. F . ஆல்பர்ட் அவர்கள். என்னுடைய கணித ஆசிரியர் திரு.அமலன் ராஜேஷ் அவர்கள்.என்னுடைய NSS ஆசிரியர் J. பிரிட்டோ அவர்கள். இன்னும் ஆசிரியர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு கல்வியை கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவரும் என்னுடைய இன்றைய வளர்ச்சிக்கு காரணம் ஆனவர்களே. அவர்கள் அனைவரும் இந்த நேரத்தில் என்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் கூற கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் சிறந்த சமூக சேவகர் என்பது நம் நாடு மட்டும் இல்லாமல் இந்த உலகம் அறிந்த ஒன்றே ஆகும்.ஆனால் இந்த சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் எப்போது எங்கு உருவானது அதைப் பற்றி சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ்..? உங்களது இந்த கேள்வி மகிழ்ச்சி தருகின்றது மிகவும் நன்றி, முதலில் நான் சமூக செய்தது என்றால் என்னுடைய பள்ளி படிப்பின் போது தான் அது பள்ளி அளவிளானது 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளில் படிக்கும் போது JRC ல் சேர்ந்து பணியாற்றினேன்.8,9, மற்றும் 10 வகுப்புகளில் படிக்கும் போது சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் JRC ல் சேர்ந்து பணியாற்றினேன். 11 மற்றும் 12 வகுப்பில் படிக்கும் போது NSS சேர்ந்து பணியாற்றினேன்.அதில் லீடராக இருந்து மற்றவர்களை வழி நடத்தினேன். இது எல்லாம் சமூக சேவை செய்ய எனக்குள் இருந்த தூண்டுதலான நிகழ்வுகளாக இருந்தாலும் கூட. நான் சமூக சேவை செய்ய முக்கிய காரணமாக இருந்தவர் என்னுடைய பாட்டி p. விசுவாசம் அவர்கள் தான்.என்னுடைய கார்டியனும் அவர்களே . மற்றும் என்னுடைய பெற்றோர்கள் நான் செய்யும் ஒவ்வொரு சிறிய சமூக சேவைகளிலும் கூட என்னை ஊக்கப்படுத்தியவர்கள். நீங்கள் எப்போது பள்ளியையும் தாண்டி இந்த சமூகத்தில் உள்ள மக்களுக்கு சேவைகள் செய்ய வேண்டும் என்று உணர்ந்தீர்கள் பாரத சிற்பி DR. R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ் ? நான் பள்ளியை தாண்டி இந்த சமூகத்தில் வாழும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உணர்ந்தது நான் பள்ளி படிக்கும் போது சென்று இருந்த NSS கேம்ப் ல தான். அப்பொழுது தான் இந்த வெளி உலகத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையை பற்றி நான் உணரத்தொடங்கினேன்.அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றே என் மனதினை பாதித்து இன்று உங்கள் முன் என்னை சமூக சேவகராக நிறுத்தியுள்ளது. உங்களின் மனதினை பாதித்த அந்த நிகழ்வு என்ன அதைப் பற்றி சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R. பிரனேஷ் இன்பன்ட் ராஜ்..? ஒரு மனிதனில் மாற்றம் வேண்டும் என்றால் அவனுக்குள் ஏதேனும் ஒரு மகிழ்ச்சியான அல்லது ஒரு சோகமான அல்லது ஒரு புரட்சியான பாதிப்பு இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். அதே மாதிரி என்னுள் நிகழ்ந்த ஒரு பாதிப்பே என்னுடைய சமூக சேவைக்கு வழி வகுத்தது. நான் பள்ளியில் படிக்கும் போது NSS கேம்ப் சென்று இருந்தேன்.அந்த கேம்ப் முடிவடைவதற்கு மீதம் மூன்று நாட்கள் இருந்து.அப்பொழுது என்னிடம் 15 ரூபாய் பணம் மட்டுமே கையில் இருந்தது. அப்பொழுது ஒரு வயதான பாட்டி ஒருவர் வந்தார் என்னுடைய பார்வையில் அவர் பசியில் இருப்பது போல் தோன்றியது.எனவே நான் என்னிடம் இருந்த பணம் 15 ரூபாயை அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்க மறுத்து விட்டார். நீ பார்ப்பதற்கு என் பேரன் போல் இருக்கிறாய் எனக்கு ஏதாவது உன் கைகளால் வாங்கி கொடு என்றார். அவர் கூறிய அந்த வார்த்தை என் மனதில் ஏதோ ஒரு உணர்வினை ஏற்படுத்தியது.நாங்கள் இருந்த பகுதியில் கடைகள் இல்லை.என்ன வாங்கி தருவது என்று நான் யோசித்த போது அந்த வழியாக டீ விற்க்கும் ஒருவர் டூவிலரில் வந்தார் அவரிடம் நான் ஐந்து ரூபாய்க்கு பன்னும் பத்து ரூபாய்க்கு டீயும் வாங்கி கொடுத்தேன். அதை சாப்பிட்ட அவரின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு மகிழ்ச்சி.நீ நல்லா இருப்பா என்று என்னை வாழ்த்தினார். அந்த வாழ்த்தே இன்று என்னை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய இன்று வரை என்னை வழி காட்டி அழைத்து வருகின்றது. அந்த பாட்டிக்கு அன்று நான் செய்த சிறு உதவியே என் முதல் சமூக சேவை. என் மனதினை பாதித்த நிகழ்வும் அதுவே ஆகும். இதை நான் அன்று என்னுடைய பள்ளி தாளாளர் அவர்களிடம் ஆசிரியரிடமும் மற்றும் என்னை சார்ந்த நண்பர்களிடமும் கூறினேன்.இன்று பிறரிடமும் உங்களிடமும் கூறுகின்றேன். கொரோனோ காலகட்டத்தில் நீங்கள் சமூக பணி செய்தீர்கள் அல்வா அதனைப் பற்றிய உங்களின் அனுபவங்களை கூறுங்கள் பிரனேஷ்..? உலகமே ஒரு அறைக்குள் முடங்கியிருந்த காலகட்டம் அது. அந்த சமயத்தில் நான் என்னால் இயன்ற சமூக சேவைகளை இன்டர்நேஷனல் யுனைடெட் கலாம் பவுண்டேசன் உடன் இணைந்து செய்தேன்.ஏனென்றால் நான் அந்த காலகட்டத்தில் மக்களுக்கு உதவிகள் செய்ய எனக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. நான் மனம் நிறைந்து சமூக சேவை செய்தேன்.கடவுள் என்னுடன் இருக்கிறார் என்று உண்மையுடன் பணியாற்றினேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று அரவணைத்தேன் மருத்துவமே அவர்களை கண்டு அஞ்சி இடைவெளிகளோடு சிகிச்சை அளித்த போது. மேலும் தண்ணீர் பந்தல் அமைத்தேன்.இலவசமாக மருந்துகள் ஒவ்வொரு வீடுகள் தோறும் சென்று வழங்கினேன். எந்த கொரோனாவும் என்னை பாதிப்படைய செய்யவில்லை.மக்களின் அன்பும்,அரவணைப்பும் கடவுளாக இருந்து என்னை பாதுகாத்தது. அந்த யுனைடெட் கலாம் பவுண்டேசன் நிறுவனம் நான் கொரோனா காலத்தில் சிறப்பாக சமூக சேவை ஆற்றியதற்காக BEST SOCIAL WORKER AWARD எனக்கு வழங்கியது.அதனை அதன் பவுண்டர் திரு.DR.செந்தூர்பாண்டியன் அவர்கள் வழங்கினார்.இன்று அந்த நிறுவனத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கின்றேன்.அதாவது இன்டர்நேஷனல் ஜென்ரல் செகரட்ரியாக இருக்கின்றேன். மேலும் எங்களது நிறுவனத்திற்க்கு ஐநா வில் இருந்து அழைப்பு வந்தது.அந்த அமைப்பில் இன்று நான் ஐநா மனித உரிமைகள் அமைப்பு நாடுகளின் peace ambassador மற்றும் ஜென்ரல் செகரட்டியாக உள்ளேன் . நீங்கள் டாக்டர் APJ அப்துல் கலாம் கொள்கைகளை பின்பற்றுபவர் என்று பிறர் சொல்ல கேள்விப்பட்டோம் அதைப் பற்றி எங்களிடம் சொல்லுங்கள் பாரத சிற்பி DR.R.பிரனேஷ்
Pranesh Infant Raj Read More »