GURU LAKSHMAN

WhatsApp Image 2023 06 16 at 5.24.51 PM

முத்தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் பிறந்த..! தங்க தமிழனே!

வெள்ளி திரை மீது கொண்ட பற்றினால்
நடிகனாய் சாதிக்க
போராடினான் தனியொருவனாய் இவன்!

தன்னம்பிக்கை என்பதை வலிமையாக கொண்ட சாதனை நாயகனே!

உனது நண்பர்களும் பெற்றோர்களும் உனக்கு துணையாக தோல் கொடுக்க…!

சென்னையில் வாய்ப்புகள் தேடி…!
போராட தொடங்கினாய்…!
கலை துறையில்…!

அங்கே சோதனைகளும் தோல்விகளும் உன் திரை உலக கனவினை
உயிர்பித்து செல்ல…!

துன்பங்களை தூர எறிந்து முயன்றாய் கர்ஜிக்கும் சிங்கமாய் நடிப்பில் சாதித்திட….!

மீடியா உலகில் இன்று புகழின் உச்சியில் இருக்கும் உனது நடிப்பு…!

மக்கள் மனங்களில் மகிழ்வாய் எதிரொலிக்கிறது…!

யூடியூப் சேனல்களில் வெளிவந்த உனது
சைபாய் பால்ஸ் லவ்…!

வெற்றி வலம் வர..!

தொடர்ந்தது மீடியாவில்
உனது திறமையான நடிப்பு…!

சிறந்த நடிகனாய் மட்டும் அல்லாது…! பல திறமைகள் கொண்ட
கலைஞனே…!

உனது எழுத்து இயக்கத்தில் வெளிவர
இருக்கும் வெப்சீரியல்கள்…!

சிறந்ததொரு வெற்றியினை பெறட்டும்…!

உனது நடிப்பின் பல பரிமாணங்களை வெள்ளி திரையிலும்
இந்த சமுதாயம் கண்டு
மகிழட்டும்…!

இனிவரும் இளைய சமுதாயத்திற்க்கு உனது சோதனைகளும்
சாதனைகளும்…!

நம்பிக்கை ஊட்டட்டும்…!

உலக நாயகன் கமல்ஹாசன் உடன் சிறுகதாபாத்திரம் ஏனும் ஏற்று…!

நடித்திடும் உனது கனவு
விரைவில் நினைவாகட்டும்…!

எதிர்காலத்தில் சிறந்தொரு நடிகனாய்
உன்னை திரை துறை
கண்டு மகிழட்டும்…!

பல விருகள் உனது வெற்றி படங்களின் வருகைக்காக காத்திருக்கட்டும்….!

மக்களின் மகிழ்ச்சி ஒன்றே தன் லட்சியம்
என்று கொண்ட நடிகனே…!

தொடரட்டும் உனது நடிப்பின் சாதனை நிறைந்த பயணங்கள்

என மகிழ்ந்து வாழ்த்துகிறது .

✍🏿subha kittu

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×