Harsha Harish

IMG 20240519 WA0012

நாம் நினைப்பதே நம் வாழ்வில் நிகழும் என்று தன் மேல் நம்பிக்கை கொண்டு இன்றைய சினிமா துறையில் நடிகையாக வலம் வரும் ஹர்ஷா அவர்களுடன் ஒரு மகிழ்வான நேர்காணல்.

Name
Harsha Veena RH
Fathers nameHarish Kumar R
Mothers nameSanthiyaa Harish
Dob 02.10.2008
Native place Coimbatore
School name Nios
Current place Chennai
Occupation Artist
Movie names or ablum or advertisements names Aranmanai 4, Mr.X etc.. Ad- Vellammal bodhi Campus, Adhithya Campus, Nuero Hospital, Jayachandra textiles, Sathya etc..

உங்களின் சொந்தஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் ஹர்ஷா ( Harsha )..?.

என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர்.நான் படித்ததும் அங்கே தான்.ஆனால் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன்.

உங்களுக்கு நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது ஹர்ஷா ( Harsha ) …?

எனக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.அது என்னுடைய சிறுவயதில் இருந்தே இருந்தது என்றே நினைக்கின்றேன்.

உங்களுக்கான சினிமா வாய்ப்புகள் எவ்வாறு வந்தது…?

நம்மிடம் திறமைகள் இருந்தாலும் கூட நாம் தான் வாய்ப்புக்களை தேடி செல்ல வேண்டும்.இன்றைய சினிமா உலகில் பல நபர்கள் திறமை இருந்தும் வாய்ப்புகள் இன்றி பலர் இருக்கின்றார்கள். எனக்கான வாய்ப்பு என்பது என்னிடம் நடிப்பின் திறமை இருந்தும் கூட அதற்கான காத்திருப்பின் தேடலில் கிடைத்தது.

உங்களின் ஃபேஷன் டிசைனிங் பற்றி சொல்லுங்கள் ஹர்ஷா ( Harsha ) …!

எனக்கு பிரபலமான ஃபேஷன் டிசைனராக வேண்டும் என்பது விருப்பம் ஆகும். என்னுடைய பேஸன் டிசைனிங் கூட என் சினிமாவில் நடிப்பு பயணத்திற்க்கு ஒரு வழிகாட்டல் ஆகும்.

தற்போது நீங்கள் எந்த எந்த படங்களில் நடித்து வருகின்றீர்கள் ( Harsha ) …?

நான்  மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறேன்.இதை தவிர பட வாய்ப்புகள் வந்தாலும் கூட எனக்கான கதாபாத்திரத்தினை தேர்வு செய்து நடிப்பதற்காக அதை பற்றி ஆலோசித்து வருகின்றேன்.

உங்கள் அழகின் ரகசியம் என்பது உங்களின் உடற்பயிற்சிகள் தானா ஹர்ஷா…?

அழகு என்பது நம் உடல் ஆரோக்கியத்தில் தான் உள்ளது என்று எண்ணுகிறேன். பொதுவாக எனக்கு உடற்பயிற்சி செய்வது பிடிக்கும்.அதனால் அதை தொடர்ந்து தீவிரமாக செய்து வருகிறேன். நீங்கள் கூறுவது போல் என் அழகின் ரகசியம் அதுவாக கூட இருக்கலாம். நாம் சிரிப்பது கூட நம் அழகிற்கான ஒரு உடற்பயிற்சி தான். உங்களின் இந்த சினிமா உலக நடிப்பு பயணத்தில் உங்களின் நம்பிக்கையாக எதை சொல்ல விரும்புகிறீர்கள் ஹர்ஷா…?

 நான் எவ்வித சினிமா பின் புலமும் இன்றி இன்று ஒரு நடிகையாக இருக்கிறேன் என்றால் என் மீது எனக்குள்ள நம்பிக்கை தான். என்னால் முடியும் என்பதை முதலில் நான் நம்புகிறேன். அதற்கு அடுத்து நான் நம்புவதையே இந்த உலகம் மிகச்சிறந்த பரிசாக எனக்கு வழங்குகிறது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு…!

உங்களது சினிமா பயணத்தில் உங்களுக்கு துணையாக இருப்பவர்கள் யார்…?

எனக்கு துணையாக இருப்பவர்கள் என்றால் என்னுடைய குடும்பம். என் அம்மா அப்பா, அக்கா அவர்களை தான் சொல்ல வேண்டும். அதற்கு அடுத்து எனக்கு பெரிய அளவில் நட்பு வட்டம் இல்லை.இருக்கும் சில நண்பர்களும் எனக்கு நடிப்பு பயணத்தில் துணையாக இருக்கின்றார்கள்.

நீங்கள் சினிமா துறையில் நடிகையாக இன்று முன்னேறி வருகின்றீர்கள்.இந்த இடத்திற்கு வர நீங்கள் கடந்து வந்த தடைகள் பற்றி சொல்லுங்கள் ஹர்ஷா…?

தடைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை.இது எல்லா துறைகளுக்கும் உண்டு , தடைகள் பற்றி நாம் நினைக்க ஆரம்பிக்கும் போது நாம் அங்கே தோல்வி தான் அடைகின்றோம். எனக்கு வரும் தடைகளையும், விமர்சனங்களையும் ,எனது வெற்றியின் தூண்களாக கருதுகிறேன்,அதைப் பற்றி நான் கவலைப்படுவது இல்லை.

உங்களின் movies மற்றும் advertisement பற்றி சொல்லுங்கள்..?

  • அரண்மனை 4.
  • Mr.X.மற்றும் சில படங்கள்.
  • advertisements- vellammal bodhi campus, Adhitya campus, Nuro Hospital, Jeyachandra textiles. Sathya.

இதை தவிர பல விளம்பர படங்களில் நடித்து உள்ளேன்.

உங்களின் கனவாக எதை சொல்வீர்கள் ஹர்ஷா..!

சினிமா உலகில் சிறந்த நடிகையாக வேண்டும். ஃபேஷன் துறையில் சிறந்த நபராக வலம் வர வேண்டும் என்பதே என்னுடைய கனவு ஆகும்.

உங்களை போல் சினிமா மற்றும் ஃபேஷன் துறையில் சாதிக்க வருபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ஹர்ஷா…?

உங்களால் முடியும் என்ற எண்ணத்தோடு போராடுங்கள்.
வெற்றி பெறுவீர்கள் நீங்கள்.

உங்களின் மிக எதார்த்தமான நடிப்பினால் மக்களின் மனதை மிகவும் அழகாக கவர்ந்து வருகின்றீர்கள். இதனால் நீங்கள் மிக விரைவில் சினிமா உலகில் சிறந்த நடிகையாக பல விருதுகள் பெறுவீர்கள் என்று உங்களை வாழ்த்துகின்றோம்.

✍️சுபா கிட்டு
Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×