Iswaryaa
வாழ்க்கையில் சிறு சிறு சோகங்களை கடந்து சென்று இந்த அழகான வாழ்க்கையை ரசித்து வாழுங்கள். ஏனென்றால் வாழ்க்கை என்பது குறுகிய காலமே … என்று தன் இயல்பான அழகான கண்ணோட்டத்தின் மூலம் பல தடைகள் கடந்து இன்று டிஜிட்டல் மீடியாவில் தன் முயற்சிகள் மூலம் இன்ஸ்ட்டா மற்றும் யூடியூப் பக்கங்களில் ஆங்கிலமும் தமிழும் கலந்த வீடியோக்கள் மற்றும் IT English வீடியோக்களை பதிவிட்டு சாதனைகள் புரிந்து வரும் ஐஸ்வர்யா அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல். Name Iswaryaa Fathers name Panneer selvam Mothers name Radha Date of birth 17/01/2001 Native place Kumarapalayam School name SSM Lakshmi Ammal Metric Higher Secondary School College name PSG Tech Current place Bangalore Degree BE CSE உங்களுடைய சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் ஐஸ்வர்யா (Iswaryaa) …? என்னுடைய சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தில் அருகே உள்ள குமாரபாளையம் ஆகும். ஆனால் நான் தற்பொழுது பெங்ளூரில் வசித்து வருகின்றேன்,எனது பள்ளி படிப்பினை SSM LAKSHMI AMMAL METRI HIGHER SECONDARY SCHOOL ல் படித்தேன்,PSG TECH ல் BE CSE ல் படித்தேன். உங்களுக்கு சிறு வயதில் இருந்தே இன்ஸ்ட்டா மற்றும் யூடியூப் பக்கங்களில் வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் இருந்ததா அதைப் பற்றி சொல்லுங்கள் ஐஸ்வர்யா..? இல்லை ஆனால் நான் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போது நிறைய போட்டிகள் நடைபெறுவதை தொகுத்து பேசியுள்ளேன். அதற்கு அடுத்து அதைப் பற்றி நான் பெரிதாக யோசித்து இல்லை,நான் நான்கு மாதங்களாக தான் யூடியூப் ரீல்ஸ். ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றேன்,நான் பொழுது போக்காக தொடங்கிய ஒரு விஷயம் தான் என்னுடைய யூடியூப் ரீல்ஸ் ,அது மக்களிடம் தொடக்கத்தில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்றது.எனக்கும் ரீல்ஸ் பதிவிடுவதில் ஆர்வம் இருந்தது. அது இன்றுவரை என்னுடைய ரீல்ஸ்கள் மூலம் தொடர்ந்து வருகின்றது,மேலும் என்னுடைய ஆங்கிலமும் தமிழும் கலந்த வீடியோ பதிவுகள் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று அவர்கள் எளிதாக ஆங்கிலத்தில் பேச பயனுள்ளதாக அமைந்தது,அதனால் நான் யூடியூப் மற்றும் இன்ஸ்ட்டா பக்கத்தில் ரீல்ஸ் மற்றும் ஆங்கிலமும் தமிழும் கலந்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றேன். உங்களுக்கு எவ்வாறு ஆங்கிலமும் தமிழும் கலந்த வீடியோக்கள் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது உங்களது யூடியூப் இன்ஸ்ட்டா பக்கங்களில் அதைப் பற்றி சொல்லுங்கள் ஐஸ்வர்யா…? முதலில் நான் பொழுது போக்காக தொடங்கிய ஒரு விஷயம் தான் என்னுடைய ரீல்ஸ்கள். ஆனால் அவ்வாறு அந்த ரீல்ஸ்களை நான் பதிவிட்டு கொண்டு வரும் போதே. எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது நம்மில் பல பேர் நன்றாக படித்து இருந்தாலும் கூட ஆங்கிலம் பேச சிரமப்படுகின்றோம்,அதனால் நான் அதை என்னால் இயன்ற வரை எவ்வாறு எளிதாக்க முடியும் என்று எண்ணிணேன். அந்த எண்ணத்தில் உருவானதே என்னுடைய ஆங்கிலமும் தமிழும் கலந்த வீடியோக்கள். அது எண்ணற்ற நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அவர்களின் கமன்ட்ஸ் மூலமாக அறிந்து கொண்டேன். அதனால் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட தொடங்கினேன்,நான் ஒரு IT Company ல் பணிபுரிந்து வருகின்றேன்.என்னுடன் பணியாற்றும் நண்பர்களே என்னுடைய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறுவதை கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. மேலும் IT தொடர்பான English வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றேன்,இந்த வீடியோக்கள் மூலம் பலர் பயன் பெற்று வருகின்றார்கள் என்று கூறுவதில் எனக்கு மகிழ்ச்சியே. உங்களது இந்த டிஜிட்டல் மீடியா பயணத்தில் உங்களுக்கு துணையாக இருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் ஐஸ்வர்யா ( Iswaryaa )…? நான் முதல் முறை வீடியோ பதிவிட ரொம்ப தயங்கினேன். அப்போது என்னோட நண்பர் ஒருத்தர் ரொம்ப உறுதுணையாக இருந்து என்னைய தொடர்ந்து வீடியோ பதிவிட உதவி செய்தார். நான் வீடியோ போட தொடங்கியதற்கு முதல் காரணமே அவங்கதான்,என்னுடைய அம்மா மற்றும் தங்கை எனது இந்த டிஜிட்டல் மீடியா பயணத்தில் எனக்கு துணையாக இருக்கின்றார்கள்,அதற்கு அடுத்து மிகவும் என் டிஜிட்டல் மீடியா பயணத்தில் துணையாக இருப்பவர்கள் என்றால் ,என்னுடைய நண்பர்கள் தான்.அவர்கள் என்னுடைய இந்த மீடியா பயணத்தில் மிகவும் துணையாக இருக்கின்றார்கள். என்னால் இந்த மீடியா துறையில் சாதிக்க முடியும் என்று எனக்குள் ஒரு நம்பிக்கையை கொடுத்தவர்கள் அவர்கள் தான். நீங்கள் உங்களது யூடியூப் மற்றும் இன்ஸ்ட்டா பக்கங்களில் மேலும் எவ்வாறான வீடியோக்களை பதிவிட விரும்புகிறீர்கள் ஐஸ்வர்யா (Iswaryaa)…? நான் சமூக கருத்துக்கள் உள்ள வீடியோக்களை பதிவிட விரும்புகிறேன்.மேலும் நீண்ட நேர வீடியோக்கள்,English related IT வீடியோக்கள்,போன்றவற்றை பதிவிட விரும்புகிறேன். உங்களின் பார்வையில் உங்களின் யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் இன்ஸ்ட்டா ரீல்ஸ் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ஐஸ்வர்யா ( Iswaryaa)…? என்னுடைய வீடியோக்கள் மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதே சமயம் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அது அவ்வாறு இருப்பதற்கு நான் என்னுடைய மனமார்ந்த கடின உழைப்பினை அளிக்கின்றேன் அவ்வளவு தான். உங்களைப் போல் சாதிக்க வருபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ஐஸ்வர்யா ( Iswaryaa )…? உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தில் நீங்கள் ஈடுபடுவதை விட,உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கும் என்றால் அதில் நீங்கள் நம்பிக்கையுடன் ஈடுபட்டு போராடுங்கள் ,கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்…! “If a door closes, a window opens. Instead of focusing on the closed door, focus on the window that has opened for you” நீங்கள் இந்த ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதினால் உங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவான நிகழ்வாக எதை கருதுகின்றீர்கள் ஐஸ்வர்யா ( Iswaryaa ) அதைப் பற்றி சொல்லுங்கள் ….? நான் ஒரு சராசரி பெண்.என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது எனது யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் இன்ஸ்ட்டா ரீல்ஸ் வீடியோக்கள் தான்,என் திறமையை எனக்கே அடையாளம் காட்டிய எனது வீடியோ பதிவுகளே எனக்குள் நான் உணர்ந்த நெகிழ்வான தருணம்,என் ஆங்கிலமும் தமிழும் கலந்த வீடியோக்களை பார்த்து பலர் இன்று தயக்கமின்றி ஆங்கிலம் பேசுகின்றனர்.நல்ல பணிகளுக்கு சென்று உள்ளனர்.இதை அவர்களே கமண்ட்டில் கூறும் போது.நான் மேலும் மகிழ்ச்சி அடைகின்றேன்,இது அனைத்தும் என் வாழ்வில் பொன்னான மறக்க முடியாத நிகழ்வுகளே ஆகும்,உங்களின் இந்த நேர்காணல் எங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது.மேலும் நீங்கள் இந்த டிஜிட்டல் மீடியா துறையில் பல சாதனைகள் புரிந்திட வாழ்த்துகின்றோம். சுபா கிட்டு