ICONIC STAR

WhatsApp Image 2023 06 17 at 2.38.28 PM 1 1

San Rechal Gandhi

அழகும் திறமையும்நிறைந்துதிறமைகள் நிறங்களை நிராகரிப்பது இல்லைஎன்ற தன்னம்பிக்கையோடு மேடையில்அன்னம் போல் நடை பயின்று ரசிகர்களின்மனங்கவர்ந்துவரும். மாடலிங் தேவதை San Rechal உடன் ஒரு அழகான நேர்காணல். உங்களின் மிஸ் இந்தியா கனவு பற்றி சொல்லுங்கள்…(San Rechal) மிஸ் இந்தியா ஆக வேண்டும் என்பது எனது கனவு என்று சொல்வதை விட.அதுவே என் வாழ்வின் லட்சியம் ஆகும்.அதற்கான கோச்சிங் கிளாசில் சேருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.எவ்வளவு தான் நம்மிடம் திறமைகள் இருந்தாலும்.அதை வெளி கொண்டு வர பொருளாதாரமும் தேவைப்படுகிறது.அதையும் தாண்டி நாம் நம் கனவினை வென்று சாதிக்க வேண்டும்.அதற்கான ஸ்பான்ஸர்கள் எனக்கு கண்டிப்பாக கிடைப்பார்கள் என்றநம்பிக்கை என்னிடம் உள்ளது. நீங்கள் மாடல் என்ற நிலைக்கு வருவதற்கு கடந்து வந்த கடின பாதைகள் பற்றி சொல்லுங்கள்…? கடின பாதைகள் என்றால்…?என்னுடைய நிறத்தினால் நிறைய இடங்களில் நிராகரிக்கபட்டுள்ளேன்.என்னுடைய கலருக்கு பவுன்டேசன் இருக்கிறதா என்று மேக்கப் பீல்டில் இருப்பவர்கள் ஏற்று கொள்ள வைப்பதற்க்கே எனக்கு பல மாதங்கள் தேவைப்பட்டது.என்னோட skin tone க்கு முதலில் white கலர் பவுண்டேசன் உடன் கண்ணுக்கு போடுகிற மை சேர்த்து தான் போட ஆரம்பித்தார்கள்.அதுக்கு பிறகு தான் இந்த கலர்ல இருக்கிறவங்களுக்கும் மேக்கப் போடலாம் அப்படிங்கிறதே ஏற்று கொள்ள ஆரம்பிச்சாங்க.நிறையா இடத்துல என்னோட கலர பத்தி பேசுறப்ப நான் சண்டை எல்லாம் போட்டு இருக்கேன்.நம்மளோட ஒரிஜினல் கலர் என்னாங்கிறதே மறந்து விட்டு.இன்னைக்கு எல்லாரும் கலரை வச்சு நிராகரிக்கிறது ஒரு தவறான கண்ணோட்டம்.என்னை ஒரு மாடல்ன்னு யாரும் முதலில் சொல்ல சொல்ல இவங்க ஒரு dark model.அப்ப white இருக்கிறவங்களை ஒயிட் மாடல்ன்னு சொல்ல வேண்டியது தானே.அவங்கள மட்டும் ஏன் model சொல்லனும் சொல்லுங்க பார்க்கலாம்.இப்ப மேக்கப் போடுறாவங்களை பாருங்க சில பேர் கழுத்து ஒரு கலர்லையும், முகம் ஒரு கலர்லையும் இருக்கும்.அங்க உங்களோட எந்த கலர் வெளில தெரியுது.அதை எப்படி நீங்க ஏற்று கொள்கிறீர்கள் .கலர்ங்கிறது just நம்மோட உடம்போட எலும்புகளை மூடுற ஒரு தோலோட நிறம்அவ்வளவு தான்.அதை தவிர நாம அதுக்கு முக்கியத்துவம் குடுத்து பேசுறது முட்டாள் தனம். இப்ப jewelry add பாருங்க நிறையா மாடல்கள் வருவாங்க.அதை அவ்வளவு ஒரு கலரா காட்டுவாங்க. ஏங்க white இருக்கிறவங்க மட்டும் தான் jewelry போடுறாங்களா. அப்படி போட்டா jewelry sales ரெம்ப குறைவாக தான் இருக்கும். ஏன் மக்களோட பார்வையில அந்த ஒரு கற்பனையை கொண்டு போய் சேர்க்கணும். Dark ka இருக்கிறவங் jewelry போட்ட இன்னம் அழகா இருப்பாங்க அந்த மாதிரி உண்மையை மாடல்கள் வச்சு எடுக்காலம். என்னோட கலர சொல்லி என்னை வேணாண்ணு சொல்லுவாங்க அந்த இடத்தில எல்லாம் என்னோட திறமையை பாக்க மாட்டாங்க. அங்க எல்லாம் என்னோட குரல் உயரும்.அதை பாத்து என்னை மாதிரி ஒவ்வொரு துறையிலும் இருக்கிறவங்க வெளில வர ஆரம்பிச்சாங்க அவங்களும் பேச ஆரம்பிக்க தொடங்கினார்கள். அதுவே எனக்கு ஒரு வெற்றி தான். ஆனால் இப்ப இப்ப தான். நிறம் இல்லாமல் திறமையை மட்டும் பார்த்து தேர்ந்தெடுக்கிற நிறையா talent show நடக்க்கிறது. முதலில் எனக்கு ஏற்பட்ட தடைகளின் போது என்னை நானே நம்ப தொடங்கினேன். அதுவே என் ஒவ்வொரு வெற்றியை நோக்கிய முயற்ச்சிகளுக்கும் நம்பிக்கையாக அமைந்துள்ளது. மாடலிங் துறைக்கு நீங்கள் எவ்வாறு வந்தீர்கள் அதைப் பற்றி பேசலாம் San Rechal..? மாடலிங் துறை என்பது என்னை பொறுத்த வரை புதிதான ஒன்று தான்.எனது குடும்பத்தில் உள்ள யாருக்கும் மாடலிங் அனுபவம் என்பது சிறிதும் கிடையாது.இருந்தாலும் என்னுடைய சிறிய வயதில் இருந்தே வெஸ்டர்ன் உடைகளை எனது அம்மா எனக்கு அணிந்து விடுவார்.பிறகு அது எனக்கு பிடித்த உடையாக மாறியது.ஆனால் அது பலரின் பார்வையில் விமர்சன பேச்சுக்களாக மாறும்.உடை என்பது ஒரு மனிதனின் வாழ்வை எவ்வாறு தீர்மானிக்கும்.அது நாகரீகத்தின் போக்கில் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து கொண்டே தான் வருகின்றது. \”ஆரம்பத்தில் ஆடைகள் அணியாத மனிதன்உடை அணிய தொடங்கியது நாகரீகத்தின் வளர்ச்சி தானே…! ஏன் அவர்கள் ஆடை அணியவில்லை அணிந்தார்கள் என்று யாரும் விமர்சிக்கவில்லை.அதை நாம் ஏற்று கொண்டோம். அதை போல் தான் அன்றைய உடைகளிலிருந்து இன்றைய உடை மாற்றம் வரை என்பது என்னுடைய கருத்து. என்னுடைய ஆர்வம் தான் என்னை ஒரு மாடலாக உருவாக தூண்டியது. இன்று நான் ஒரு western மாடல்.அதற்கு பல தடைகளை கடந்து தான் வந்துள்ளேன்.இன்றளவும் கடந்து கொண்டு தான் இருக்கின்றேன். Black model and Indian model இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன….? என்னோட கலர வச்சு இங்க இருக்கிறவங்க எல்லாம் என்னை பிளாக் மாடல்ன்னு சொல்லுறாங்க.ஆனால் வெளிநாடுகளில் எல்லாம் என்னை ஒரு இன்டியன் மாடல்ன்னு தான் சொல்லுறாங்க.இந்த மாதிரி ஒரு வேறுபாடு நம்மில் இடம் தான் இருக்கிறது.எப்பவும் ஒருத்தவங்களோட திறமையை வச்சு தான் சொல்லணுமே தவிர அவங்களோட நிறத்த வச்சு சொல்லக்கூடாது. உங்களுடைய படிப்பு கனவுகள் பற்றி..? நான் Medical Admission க்கு prepare செய்கின்றேன். Neet exam க்கு படித்து வருகின்றேன்.என்னுடைய மிஸ் இந்தியா கனவு நிறைவேறியவுடன் .மருத்துவம் படித்துBiology center ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது லட்சியம் ஆகும். அது மட்டும் இல்லாமல் சவுத் இன்டியன் மாடல் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்க வேண்டும் என்பதும் எனது கனவு ஆகும். உங்களின் பொது வாழ்வு பற்றி….? பொது வாழ்வு என்றால் நான் Neet தேர்விற்க்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகின்றேன். மாதம் ஒரு முறை கிராமத்தில் உள்ள நூலகங்களுக்கு சென்று வாசிக்க தெரியாத மக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த கதைகளை வாசித்து காட்டுகின்றேன். இதை தவிர வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் கூட நாம் நிற பிரிவினை பார்க்கின்றோம்.அவ்வாறு இருப்பது கூடாது என்று வலை தளத்தில் பதிவுகள் செய்கின்றேன். உங்களின் தனி திறமைகள் பற்றி…? நான் ஒரு மேடை பேச்சாளர் அதை சார்ந்து பரிசுகள் பல பெற்றுள்ளேன். தற்பொழுது முதல்வராக இருக்கும் திரு.ஸ்டாலின் அவர்களிடம் ரூ. 10000 பரிசும் பெற்றுள்ளேன். நீங்கள் மாடலிங் துறையில் பெற்றுள்ள டைட்டில்கள் பற்றி சொல்லலாமே எங்களுக்கும் ரசிகர்களுக்கும்…? டைட்டில்ஸ் சொன்னாமிஸ் பாண்டிச்சேரி.மிஸ் கருப்புநிறத்தழகி.மிஸ் டார்க்கஸ்ட் குயின்.மிஸ் சைனிங் ஸ்டார்.எம்பியரிங் மாடல் சவுத். Above all title winner. Next Queen of madras 1 st runner up. Miss BFW \”22\” RUNNER UP. இப்பொழுது இவ்வளவு தான். உங்கள் மாடலிங் வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்கள்…? முதலில் என்னுடைய அப்பா எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னுடைய முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்.அவருடைய பெயர் Gandhi Devaraju. அதற்கு அடுத்து என்னுடைய நண்பர் SATHYAநான் சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் உன்னால் முடியும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை தந்து என்னை இவ்வளவு வெற்றிகள் காண செய்தவர். நீங்கள் உங்களை போல் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு கூறுவது…? உங்களிடம் பணம் இல்லையென்றால்இல்லை என்றே சொல்லுங்கள்.பிறருக்காக உங்களுடைய கஷ்டங்களிலும் பணம் செலவு பண்ணுவதை நிறுத்துங்கள்.அது யாராக இருந்தாலும். உங்களுக்கான முயற்ச்சிகளை நீங்கள் உங்களை மட்டுமே நம்பி செய்யுங்கள். அவ்வளவு தான்…! San Rechal Gandhi அவர்களின் மிஸ் இந்தியா கனவு நிறைவேறி அவர் மிஸ் வேர்ல்ட் டாக வலம் வந்து மகிழ நாம் வாழ்த்துவோம். ✍️சுபா கிட்டு.

San Rechal Gandhi Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.26 PM 1 1

Shanaya Daphne

யார்? இந்த நடிகை ஷணாயா டாஃப்னி இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சிறந்த நடிகைகளுள் தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் இருப்பவர் தான் நடிகை ஷணாயா டாஃப்னிஇவர் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் கல்லூரியில் பையோ மெடிக்கல் இன்ஜினியரிங் பயின்றார்.( Bio medical Engineering)முதலில் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் .B.sc bio chemistry பிரிவில் சேர்ந்து ஒரு மாதம் படித்தார் ஷணாயா டாஃப்னி .இடையே இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கவோ.. அங்கிருந்து தன் கல்லூரி கல்வியை நிறுத்தி விட்டு . இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தார் இவர். அங்கே தனது கல்வியை முடித்த ஷணாயா டாஃப்னிபணியாற்ற தொடங்கினார்.இருந்தாலும் இவர் மனதில் எதை பற்றியோ ஒன்றின் தேடலும் ஆர்வமும் இருந்து கொண்டே இருந்தது. தன் உடன் இருந்தவர்கள் தன்னம்பிக்கை கொடுக்கவே .கலை துறை சார்ந்து எதாவது ஒரு நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு தனக்கான இலக்கு எதுவென்று தேட தொடங்கினார் நடிகை ஷணாயா டாஃப்னி நடிகை ஷணாயா டாஃப்னியின்|| நடிப்பின் தொடக்கம்|| நடிகை ஷணாயா டாஃப்னி சிறுவயதில் இருந்தே கலைத்துறை சார்ந்த நிகழ்வுகள் நிகழ்ச்சிகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்தனக்கு தானே சூழ்நிலைகளை கற்பனை செய்து கொண்டு நடித்து பார்ப்பார்அவ்வாறு செய்து பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகமாகவே இருந்ததுஆனால் தான் ஏன்? அவ்வாறு செய்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லைபின்னாளில் தான் ஒரு நடிகையாக வளர்வதற்க்கு அது தான் அடித்தளமாக அமைந்திருக்கும் என்பதும் நடிகை ஷணாயா டாஃப்னி க்கு தெரியாத ஒன்றே.இருந்தாலும் தனது முயற்ச்சியை கைவிடாமல் தன் முயற்ச்சிகளை செய்து கொண்டு இருந்தார் நடிகை ஷணாயா டாஃப்னி.ஒருவரின் முயற்சி அவரை வெற்றியின் வழியில் உயர்த்தும் என்பதற்கு நடிகை ஷணாயா டாஃப்னி சிறந்த எடுத்துக்காட்டாவார். நடிகை ஷணாயா டாஃப்னியின்||குடும்ப பிண்ணணியும்||சினிமா நிராகரிப்பும்||. சினிமா துறை பற்றி சிறிதும் அறியாத குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகை ஷணாயா டாஃப்னி.அவ்வாறு இருக்கையில் இவர் எவ்வாறு நடிகையானார் என்று நாம் எண்ணலாம்.ஷணாயா டாஃப்னி தான் நடிகையாக வேண்டும் என்ற தனது கருத்தை பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் அதை ஆதாரிக்கவில்லை மாறாக எதிர்க்கவே தொடங்கினர்.எனவே நடிப்பின் மீது ஏற்பட்ட தீராத காதலினால் தன்வேலையை விட்டு விட்டு . சென்னை வந்தார் நடிகை ஷணாயா டாஃப்னிஅங்கே வந்தவுடன் தன் பெற்றோரிடம் எந்த ஒரு தொடர்பும் இல்லாமலே தனக்கான வாய்ப்புக்களை தேட தொடங்கினார் நடிகை ஷணாயா டாஃப்னி. நடிகை ஷணாயா டாஃப்னியின்|| ஆடிசன்களும்|| சினிமா தேர்வுகளும்|| சிறிதும் சினிமா துறை அனுபவம் அற்றவராக தான் நடிப்பதற்க்காக மட்டுமே சென்னை வந்தவருக்குஎங்கிருந்து ஆதரவும் வாய்ப்புக்களும் வரும்.தான் எதிர்பார்த்த நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் இவரின் முயற்ச்சியை விமர்சிக்கவே செய்தனர்.சினிமாவின் மீது பற்று கொண்டவர்கள் இவரை உற்சாகம் படுத்தினர்.இந்த தன்னம்பிக்கை மேலும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தை அதிகரிக்க செய்ததுபல சினிமா பட ஆடிசன்களின் தேர்வில் பங்கேற்றார்.அவ்வாறு வேறு ஒரு பட வாய்ப்ப்பிற்க்காக அவர் பங்கு பெற்ற ஆடிசனின் மூலம் கிடைத்தது சினிமா படம் ஒன்றிற்க்கான வாய்ப்புஅந்த படத்தின் பெயர் ஜாம்பி ஆகும்.இதுவே இவரின் முதல் பட வாய்ப்பு ஆகும்.ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் நடிகை ஷணாயா டாஃப்னி. நடிகை ஷணாயா டாஃப்னியின்|| சினிமா படங்களும்|| குறும் படங்களும்|| மற்றும் நடிப்பில் பல பரிமாணங்களும்|| நடிகை ஷணாயா டாஃப்னி பல சினிமா படங்களிலும்குறும்படங்களிலும்நடித்துள்ளார் இதோ இவரின் திறமையான நடிப்பிற்க்கு சான்றான படங்களின் வரிசைகள் ஜாம்பி ( zombie combination with Madras central Gopi)இதனை அடுத்து நடிகை வரலெட்சுமியுடன் டேனிதிரைப்படம் (Danny) மற்றும் நடிகை ஐஸ்வர்யா மேனன் உடன் வேழம் ( vezham) இதனை தொடர்ந்து Surveillance zone Independent movie as lead character இதில் சிறப்பான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருப்பார். நடிகர் நாசர் உடன்மேதகு 2 (medhagu 2)இதில் இவரின் நடிப்பின் திறமைக்கேற்ற கதாபாத்திரம் யாதென கேட்டேன் ( yadhana kayeten)as female lead.மற்றும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் என நடிகை ஷணாயா டாஃப்னி யின் திறமையான நடிப்பின் வெவ்வேறு திறமையான பரிமாணங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. நடிகை ஷணாயா டாஃப்னியின்|| நடிப்பில் வெளிவந்த குறும்படங்கள்|| மெய் (mei) short flixMaayai ( released in kalai puli S Danu channel) இதை தவிர பல குறும்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஷணாயா டாஃப்னி அவர்கள் மேலும் வென்டர் யூடியூப் சேனலில் அத்தை பொண்ணு மற்றும் 90s Weds 2kids series லிலும் நடித்துள்ளார் Acted in an important role for black sheep series\” Yavarum nalam\” போன்றவைகள் இவரின் திறமையான நடிப்பிற்க்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நடிகை ஷணாயா டாஃப்னி|| அவர்கள் இணைந்து நடித்த பிரபலங்கள்|| வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர்கள் ஆரம்பத்தில் மிக பிரபலமான நடிகர்களின் நடிப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லைஅதுவும் போராட்டங்கள் நிறைந்த சினிமா துறையில்இருந்தாலும் இவரின் திறமையான நடிப்பின்மூலம் பல பிரபலங்களின் திரை படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் நடிகை ஷணாயா டாஃப்னிஅந்த பிரபலங்கள் யார்? தெரியுமா மிகவும் பிரபலமான புகழ்வாய்ந்த நடிகையான அமலா அக்கினேனி உடன் இணைந்து ஹை ப்ரீச்டஸ் சீரியல்மற்றும் நடிகர் நாசருடன் இணைந்து ஒரு சிறந்த கதாபாத்திரம் மேதகு 2 திரை படத்தில்மேலும் இவரின் சிறந்த நடிப்பின் வாய்ப்பாக நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் என பல பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷணாயா டாஃப்னி நடிகை ஷணாயா டாஃப்னியின்|| நம்பிக்கை நிறைந்த வரிகள்|| தன் நடிப்பை மட்டுமே துணையாக கொண்டு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக விளங்கும் ஷணாயா டாஃப்னி அவர்கள்.கூறும் நம்பிக்கை நிறைந்த வரிகள் என்னவென்றால்எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் தனக்கான முயற்ச்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்அவ்வாறு செய்வதால் மட்டுமே நமக்கான லட்சியங்களை அடையமுடியும் என்று கூறும் நடிகை ஷணாயா டாஃப்னிதான் சிறந்த நடிகையாக வேண்டும் என்ற தனது முயற்ச்சியை தொடர்ந்து செய்து கொண்டு வருவதாகவும்அது தன்னை சினிமா உலகில் வெற்றி பெற செய்யும் என்று நம்பிக்கையோடு கூறும் இவர் ஒரு முறை நடிகர் பார்த்திபன் அவர்களை சந்தித்தபோது அவர் கூறிய வார்த்தைகள் மிகவும் ஊக்கபடுத்தியது. அதை இன்று வரையிலும் கடைபிடித்து வருகிறார் நடிகை ஷணாயா டாஃப்னி.எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் தொடர்ந்து முயற்ச்சிகள் செய்து தனக்கான இலக்கினை அடைந்தாள் கண்டிப்பாக அந்த துறையில் வெற்றி பெறலாம் என்பதே அவர் கடை பிடிக்கும் வழி ஆகும். நடிகை ஷணாயா டாஃப்னி|| கடந்து வந்த கடின பாதைகள்|| சினிமா துறையில்|| தான் நடிக்க வந்த காலகட்டத்தில் தான் நிறைய போராட்டங்களை சந்திக்க நேர்ந்தது என்று கூறும் இவர்தொடக்கத்தில் பெப்ஸி ஊழியர்கள் ஸ்ட்ரைக். ஜீ எஸ் டி. கோவிட் என பல சூழ்நிலைகளில் படங்களின் ஆடிசன்கள் பெரும்பாலும் நடை பெறாமல் இருந்ததுஅந்த நேரத்திலும் தனது நடிப்பிற்க்கான வாய்ப்புகள் தேடும் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது என்று கூறும் நடிகை ஷணாயா டாஃப்னிஅதனால் மனம் சோர்ந்து போகவில்லை தொடர்ந்து தனது முயற்ச்சிகளை செய்து கொண்டு இருந்தார்அதன் வெற்றியாக கிடைத்து சினிமா வாய்ப்புகள் நடிகை ஷணாயா டாஃப்னிக்கு நடிகை ஷணாயா டாஃப்னியின்|| சினிமா சாதனைகள்|| பொதுவாக சினிமாவை நேசிப்பவர்கள் அதில் சாதிக்க பல சூழ்நிலை போராட்டாங்களை கடந்தே ஆக வேண்டும்அதிலும் எவரின் உதவியும் இன்றி சினிமாவில் சாதிப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது சினிமாவில் தன் சாதனை எதுவென்று கூறும் நடிகை ஷணாயா டாஃப்னிதன் நடிப்பினை மட்டுமேகொண்டுசினிமாவை பற்றி ஆரம்பத்தில் அறியாமல்வந்துஇன்று தன்னை அடையாளபடுத்தும் அளவிற்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவதே தனக்கான பெரும் சாதனை என்று கூறுகிறார் நடிகை ஷணாயா டாஃப்னி நடிகை ஷணாயா டாஃப்னி||அவர்களின் திருமண வாழ்வு|| நடிகை ஷணாயா டாஃப்னி அவர்களின் திருமணம் ஒரு காதல் திருமணம் ஆகும்தன் கணவரும் ஒரு சிறந்த நடிகர் .ஷணாயா டாஃப்னி அவர்களின் கணவர் இவரை நடிப்பு துறையில் முன்னேறி செல்ல ஊக்கபடுத்தி வருகிறார்.இதை போன்றே நடிகை ஷணாயா டாஃப்னியும் தன் கணவருக்கு நடிப்பு துறையில் சாதித்திட சிறந்த தோழியாக ஊக்க படுத்தி வருகிறார் இருந்து வருகிறார். தன் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தன் கணவரை எண்ணி மனம் நெகிழ்ந்து கூறுகிறார் நடிகை ஷணாயா டாஃப்னி மேலும் தொடக்கத்தில் சினிமா துறையை நிராகரித்த பெற்றோர்கள்பின்பு அவரின் திறமையான நடிப்பினை கண்டு மகிழ்ந்து நடிப்பு துறையில் சாதனைகள் படைத்திட உற்சாகம் ஊட்டி வருகின்றார்கள்என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் நடிகை ஷணாயா டாஃப்னி நடிகை ஷணாயா டாஃப்னி அவர்களின்||கனவும்||நடிப்பில் அவரின் லட்சியமும்|| நடிகை ஷணாயா டாஃப்னி அவர்கள் தான் சிறந்த கதாபாத்திரத்தினை ஏற்று நடிக்க வேண்டும்என்றும் அது திரையில் தனக்கான அடையாளத்தை நடிப்பில் பெற்று தர வேண்டும் என்றும் கூறும் இவர் சினிமாவை பொறுத்த வரை முதலில் திரையில் சிறந்த நடிகையாக அமையும் கதாபாத்திரம் முதலில் கிடைக்க வேண்டும். அதன் பின்னரே ஒரு நடிகர் நடிகைகளுக்கு வெற்றி தோல்வி என்பது என்று கூறுகிறார் . அவ்வாறு தனக்கு கிடைக்கும் கதாபாத்திரம் தோல்வியுற்றாலும் அது தனக்கு மகிழ்ச்சியையே தரும் என்கிறார் நடிகை ஷணாயா டாஃப்னி . அந்த கதாபாத்திரம் ஆனது தனக்கான புகழை தேடி தருவாதாக மட்டும் இருக்க கூடாதுதன்னை சிறந்த நடிகையாக அடையாளபடுத்த வேண்டும் என்று கூறும்இவர்தன் உயிர் மூச்சு உள்ளவரை சினிமாவை சுவாசிக்க வேண்டும் தினசரி சூட்டிங் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் நடிகை ஷணாயா டாஃப்னி. இவர் ஒரு சிறந்த நடிகையாக வேண்டும் என்றும் இவரின் கனவு நிறைவேறி பல வெற்றிகள் பெற வேண்டும் என்றும் நாம் வாழ்த்துவோம்

Shanaya Daphne Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.26 PM

Dilip Kumar Reddy

நடிகர் | தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்| ஓவியர்| மாடல்|தீலீப் குமார் ரெட்டியின்| சினிமா பயணமும்| வாழ்வியலும்| நடிகர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஓவியர் மாடல் என கலை துறையில் பல திறமைகள் கொண்டவராய் விளங்கிவருபவர் நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள். தீலீப் குமார் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரியில் பிறந்தவர். தனது சொந்த ஊரிலேயே பள்ளி கல்வி தன்னை முடித்த நடிகர் தீலீப் குமார் ரெட்டி. தனது கல்லூரி கல்வி தன்னை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் பயின்றார். அண்ணா பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் கேம்பஸ்ஸில் EEE பட்டம் பெற்ற நடிகர் தீலீப் குமார் ரெட்டி அதன் பின்னர் MBA பயின்றார் , இன்று வரை நடிப்போடு இணைந்து சாப்ட்வேர் இன்ஜினியராகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் இவர் மீடியா துறை, சினிமா துறை. ஸ்டோஜ் ஷோக்கள், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், ஓவியர் , மாடல், டான்ஸர், என கலை துறையிலும் தன் திறமைகளை வெளிபடுத்தி ரசிகர்களை மகிழ்ச்சியூட்டி வருகிறார், இவரின் டெலிவிஷன் பயணம் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை இங்கே பார்க்கலாம். serials kaatrukenaveli , Naladhamayenthi , Pudhu pudhu arthangal , Ninaithale Enikum, uyire. Movie Lara Award South Indian Golden awards SIGA for raising actor நடிகர் தீலீப் குமார் ரெட்டியின் ஆரம்ப கால ஸ்டேஜ் நடிப்பும்|ஆர்வமும்| இவர் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும் போதே பள்ளியில் நடைபெறும் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அன்று தொடங்கியது இவரின் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பயணத்தின் சிறு தொடக்கம் . இன்று South India வின் புகழ் பெற்ற தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நடிகர் தீலீப் குமார் ரெட்டி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும்.இவ்வாறு சிறந்த புகழ் பெற்ற இவருக்கு டெலிவிஷன் துறையின்மீது எவ்வாறு ஆர்வம் வந்தது என்று காணலாம். நடிகர் தீலீப் குமார் ரெட்டி| அவர்களின் டெலிவிஷன் சீரியல்களும்| அதில் அவரின் கதாபாத்திரங்களும்| நடிகர் தீலீப் குமார் அவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்றுநடித்து வந்தார். அது முதலில் அவ்வளவாக மக்களிடம் இவரை அறிமுகபடுத்தவில்லை என்றே கூறலாம். இருந்தாலும் தன் நடிப்பின் திறமை மீது தன்னம்பிக்கை கொண்டு போராடினார். ஜீ தமிழ் சேனலில் செம்பருத்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிகர் தீலீப் குமார் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் விக்கி என்பதாகும்.இதில் இவரின் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே சீரியலில் தீலீப் என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பினை அழகா வெளிபடுத்தி இருப்பார் தீலீப் குமார் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான உயிரே சீரியலிலும் தனது திறமையான நடிப்பினை வெளிப்படுத்தினார் நடிகர் தீலீப் குமார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலிலும் நடித்துள்ளார். நடிப்பின் பல கோணங்களில் தனது திறமை வாய்ந்த நடிப்பினை வெளிபடுத்திவரும் இவருக்கு. காற்றுக்கென்ன வேலி சீரியலில் வரும் ஆகாஷ் கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று டெலிவிஷன் துறையில் இவருக்கு என்று புகழ் பெற்ற தனி பெயரினை பெற்று தந்தது என்றுகூறினால் அது உண்மையே. காற்றுக்கென்ன வேலி சீரியலின் இயக்குனர் பிரான்சிஸ் கதிரவன்அவர்கள் இந்த கதைக்காக இவரின் நடிப்பினை பார்த்து தேர்வு செய்ததார். மேலும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் தனது கதாபாத்திரத்தினை எழுதிய எழுத்தாளர் ஜெ.தீபா ஜானகிராமன் அவர்கள். தன் நடிப்பில் வரும் வசனங்களை மிகவும் அழகாக எழுதி தன் நடிப்பிற்க்க உயிரோட்டம் கூடுத்ததாகவும் கூறுகிறார். ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை கலைஞர்கள் ஜோடிகளாக பங்கு பெறும் Reality show வில் இவர் டயானாவுடன் இணைந்து கலந்து கொண்டார். இவ்வாறு பல சீரியல்களில் நடித்தும் நடித்துக்கொண்டும்இருக்கும் நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் சினிமாவில் எவ்வாறு அறிமுகமானர் என்பதை நாம் பார்க்கலாம். நடிகர் தீலீப் குமார் ரெட்டி| அவர்களின் சினிமா உலக பயணம்| இவர் டெலிவிஷன் சீரியல்களில் நடித்து கொண்டு இருந்த பொழுது சினிமா துறையில் இருந்து வாய்ப்புகள் வந்ததுநடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். இதில் வரும் நீ யார் என்று வரும் பாடலில் இவர் வருவார்.இந்த படத்தில் இவர் பேசி நடித்த காட்சிகள் வெளிவரவில்லை. இருந்தாலும் இவர் வரும் இந்த பாடல் நடிகர் தீலீப் குமார் ரெட்டிக்கு சிறந்த பெயரினை வாங்கி தந்தது என்று கூறலாம். இந்த படத்திற்க்கு பின்பு ஆரி அர்ச்சுன் உடன் ஓடு என்ற திரைபடத்தில் நடிக்கிறார் தீலீப் குமார். நடிகர் தீலீப் குமார் ரெட்டியின்| தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்பயணமும்|விருதுகளும்| தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள்.எண்ணற்ற ஸ்டேஜ் ட்ராமக்களில் நடித்து உள்ளார்.மிகவும் நடிப்பில் திறமை வாய்ந்த இவருக்கு தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசும் விருதுகள் (Best stage play actor/ dancer from tamil nadu government 2018. Best supporting actor award from isai 24×7-2021 )வழங்கி கெளரவித்தது. நடிகர் தீலீப் குமார் ரெட்டியின்| டான்ஸ் பயணம்| நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் சிறந்த டான்ஸர் ஆவார்.பல ஸ்டேஜ் ஷோக்களில் இவரின் அழகான நடனத்தினால் மக்களின் மனங்களை மகிழ்ச்சி படுத்தி கொண்டு வருகிறார் நடிகர் தீலீப் குமார் . நடிகர் தீலீப் குமார் ரெட்டி|சிறந்த ஓவியர் நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் சிறந்த ஓவியரும் ஆவார்.தான் பார்க்கும் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக வரையும் திறமை கொண்டவர்.இவருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் மிகவும் அதிகம் தான் வரைந்த ஓவியங்களுக்காக ஆந்திர அரசிடம் விருதுகள் பெற்றுள்ளார் நடிகர் தீலீப் குமார் ரெட்டி. நடிகர் தீலீப் குமார் ரெட்டியின் நடிப்பும்| அதனுடன் இணைந்து தொடரும்| சாப்ட்வேர் இன்ஜினியர் பணியும்| மிகவும் சிறந்த நடிகர் டான்ஸர் மற்றும் ஓவியர் என்று நம்மால் அறியப்படும் தீலீப் குமார்நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி நடித்து வரும் போதும் அதனுடன் தொடர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியர் பணியையும் செய்து வருகிறார். மீடியாவில் நடிக்க வரும் பெரும்பாலான இளைஞர்கள் பல போராட்டங்களுக்கு பின்பே வெற்றியினைஅடைய முடியும் என்பதுஉண்மை தான். அதை போன்றே நடிகர் தீலீப் குமாரும்.தொடர்ந்து சூட்டிங் இருந்தால் தனது சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இரவிலும்.சூட்டிங் இல்லாத நேரங்களில் வழக்கம் போல் செய்து வரும்.இவரின் கடின உழைப்பினை நாம் பாராட்டி தான் ஆக வேண்டும். தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு மேலாக இரவில் தொடர்ந்து சாஃப்ட் வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவர். அதிகாலை நேரங்களில் சூட்டிங் இருந்தால் சரியான நேரத்திற்க்கு சென்று விடுவார். இரவு நேர சூட்டிங் இருந்தாலும் தன் பணியினை செய்ய தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் தனக்கு உதவியாக இருப்பதாக கூறும் நடிகர் தீலீப் குமார் ரெட்டியின் இரவு நேர தூக்கம் என்பது மிகவும் குறைவே. நடிகர் தீலீப் குமார் ரெட்டி| சாதித்திட எண்ணும் இளைஞர்களுக்கு| கூறும் நம்பிக்கை வரிகள்| இன்று சினிமா துறை மட்டும் இல்லாமல் வேறு எந்த துறையாக இருந்தாலும் சாதித்திட துடித்திடும் இளைஞர்களை விமர்சித்து பேசுபவர்கள் பலர் உண்டு. நீ முன்னேறினாய் என்று உற்ச்சாகம் ஊட்டுபவர்களை விட நீயா முன்னேறினாய் என்று விமர்சிப்பவர்கள் இங்கே அதிகம். அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தனக்கென்று ஒரு வேலையினை தன் வருமானத்திற்க்காக ஏற்படுத்தி கொண்டே தனது லட்சிய கனவுகளை நிறைவேற்ற வழிகளை தேடி சாதனைகள் செய்ய வேண்டும் ஏனென்றால் எந்த ஒரு துறையாக இருந்தாலும் எளிதில் சாதனைகள் படைத்திட முடியாது. என்பதே நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் இன்றைய சாதிக்க போராடும் இளைஞர்களுக்கு கூறும் நம்பிக்கை நிறைந்த வரிகள் ஆகும். நடிகர் தீலீப் குமார் ரெட்டி| அவர்களின் நடிப்பின் லட்சிய கனவுகள்| இவர் சிறந்த துணை நடிகராக மக்களின் மனங்களில் இடம் பெற வேண்டும் என்பதையே தனது லட்சிய கனவாக கொண்டுள்ளார். நடிகை மனோரமா இவருக்கு மிகவும் பிடித்த நடிகை ஆவார். அவரை போன்றே வேறுபட்ட குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்களின் மனங்களை மகிழ்விக்க வேண்டும் என்பது இவரின் விருப்பம் ஆகும். நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்களின்| நடிப்பு சார்ந்த கருத்துக்கள்| நடிப்பில் திறமை வாய்ந்தவர்கள் எண்ணற்ற பேர்கள் உண்டு. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் எவ்வளவோ பேர்கள் திறமையான நடிப்பு இருந்தும். சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போராடிவறுமையில் வாழ்கின்றார்கள். இவ்வாறு திறமையான நபர்களுக்கு நடிக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படுதல் வேண்டும். அதன் பின்னர் மற்றவர்களுக்கான வாய்ப்பினை வழங்கலாம் என்ற கருத்தினை நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள் கூறுகிறார். நடிகர் தீலீப் குமார் ரெட்டி| அவர்களின் தொடரும் சினிமா டெலிவிஷன் பயணங்கள் நடிகர் , டான்ஸர், மாடல், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், ஓவியர், சாப்ட்வேர் இன்ஜினியர் என பல திறமைகள் கொண்டு சாதிக்க போராடும் நடிகர் தீலீப் குமார் ரெட்டி அவர்கள்.சிறந்த நடிகராக மக்களின் மனங்களில் இடம் பெற்று எண்ணற்ற விருதுகள் பல பெற வேண்டும் என்று நாம் வாழ்த்துவோம். ✍🏿சுபா கிட்டு

Dilip Kumar Reddy Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.24 PM 1 1

VJ Saranya ganesh

யார்? இந்த சரண்யா கணேஷ் நம்மால் சரண்யா கணேஷ் என்று அழைத்து அறியப்படும். இவரின் இயற்பெயர் சரண்யா. கணேஷ் என்பது இவரின் அப்பாவின் பெயராகும் கோயம்புத்தூரை தனது சொந்த ஊராக கொண்ட இவரின் பிறந்த தேதி ஜீன் 5 ஆகும்.சினிமாவை பற்றி சிறிதும் அனுபவம் இல்லாத குடும்பத்தில் பிறந்தவர்.இவ்வாறு இருந்தவர் மீடியா துறையில் எவ்வாறு அறிமுகமானர்என்ற கேள்வி தோன்றலாம்.எந்த ஒரு துறையிலும் சாதிப்பது என்பது எளிதில் நடந்துவிடாதுபல போராட்டங்களை கடந்தே முன்னேறி செல்ல வேண்டும்அவ்வாறே இன்று முன்னேறி ஆங்கர்.ஷோ புரொடியூசர்.வாய்ஸ் ஓவர்.மற்றும் இணை இயக்குனர் . நடிகை என்று கலை உலகின் பல பரிமாணங்களில் முன்னேறி கொண்டு வரும் நடிகை சரண்யா கணேஷின் ஆரம்ப கால மீடியா பயணம் எவ்வாறு தொடங்கியது என்று பார்க்கலாம். சரண்யா கணேஷ்| பள்ளி கல்லூரி கல்வியும்| கார்ப்ரேட் கால் சென்டர் வேலையும்| பள்ளி கல்லூரி நாட்களில் சரண்யா அவர்கள் எந்த ஒரு மேடை நிகழ்வுகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது இல்லை. காரணம் திறமை இல்லாமல் இல்லை.. பிறரின் முன்னிலையில் பேசுவதற்கு சிறிது தயக்கம்இவ்வாறு இருக்கையில்சரண்யா எவ்வாறு ஆங்கராக மாறியிருக்க முடியும்.என்று எண்ணலாம். தன் கல்லூரி கல்வி முடித்த பின்னர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கார்ப்ரேட் கால் சென்டரில்தனது பணியை தொடங்கினார் இன்று நடிகை, ஆங்கர், ஷோ புரொடியூசர், இணை இயக்குனர் என்று அழைக்கப்படும் சரண்யா கணேஷ். கார்ப்ரேட் கால் சென்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து முதலில் தொகுத்து வழங்க தொடங்கினார்.இங்கிருந்தே இவரின் மீடியா துறையின் மீதான ஆர்வம் துவங்கியது.இதுவே இவர் பல டிவி சேனல்களில் பணியாற்ற அடித்தளமாகவும் விளங்கியது. ஆங்கர் |மற்றும் ஷோ புரொடியூசராக| நடிகை சரண்யா கணேஷ்| நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் கொண்ட இவர் முதலில் ஆங்கராக அறிமுகமான நிகழ்ச்சியே live show தான். இதனை தொடர்ந்து u tv ல் ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் (live show special interviews) ..Raj Tv ல்ஆங்கராக நகைச்சுவை நாயகன் நாகேஷ்.ஸ்ரீ தேவி ஒரு சூப்பர் ஸ்டார் (sri devi oru super star)Mega Ten movies( மெகா டென் மூவிஸ்)பாட்டு தலைவன் TMS( patu talaivan Tms)போன்ற நிகழ்ச்சிகளை ஆங்கராக தொகுத்து வழங்கி வருகிறார் பொதிகை டிவியில் (DD)Hello ungalutan (ஹலோ உங்களுடன்) மற்றும் Cine Quiz live show ளை ஆங்கராக தொகுத்து வழங்கி வருகிறார். புதிய தலைமுறை டிவியின் எண்டர்டெயின்மெண்ட் சேனலான புதுயுகத்தில் புரோகிராம் புரொடியூசர்( program producer) மற்றும் ஆங்கராக(Anchor) பல நேரடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகை சரண்யா கணேஷ் அவைகள் நேரம் நல்ல நேரம்(neram nalla neram) Azhaikkalam sammaikkalam( live show) Neram nalla neram ( live show) Doctor on call ( live show) Arivom arogym( அறிவோம் ஆரோக்கியம் நேரலை நிகழ்ச்சி) வாய்ஸ் ஓவர் வழங்கி வருகிறார். மேலும் ருசிக்கலாம் வாங்க (Rusikkalam vanga) மற்றும் Compass join cont down நிகழ்ச்சிகளில் புரொடியூசராக புதுயுகம் சேனலில் பணியாற்றி வருகிறார் நடிகை சரண்யா கணேஷ். Tune 6 music tv ல்Best Wishes show ல் நேரலை நிகழ்ச்சியில் ஆங்கராகவும் Open mouth நிகழ்ச்சியில் வாய்ஸ் ஓவர் (voice over) செய்தும் வருகிறார்நடிகை சரண்யா கணேஷ். Mk Tv ல் forth live showKolly wood play list live showJust arrived live show க்களை தொகுத்து வழங்கி வருகிறார். Raj music ல் தொடர்ந்து ஆங்கராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். Super TV ல் மருத்துவ நேரம் என்ற நேரடி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார் இவர். வானவில் டிவியில் Cine Chips and Fine Max நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகை சரண்யா கணேஷ். இணை இயக்குனராக பணியாற்றிய நடிகை சரண்யா கணேஷ்| சரண்யா கணேஷ் அவர்களுக்கு இயக்குனர் துறையில் ஆர்வம் அதிகம் உண்டு.விஸ்வல் கம்யூனிகேஷன் கல்வி பயிலாத போதிலும்.தனது கல்லூரி கல்வியில் வேறு துறையில் பட்டம் பெற்ற போதும்.இயக்குனரின் பணிகள் அனைத்தும் தன் அனுபவத்தின் மூலமாக கற்றுக் கொண்டார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் அழகர்சாமியின் தயாரிப்பில் வேந்தர் டிவியில் வெளிவந்தஏழாம் உயிர் என்ற டிவிதொடரில் இணை இயக்குனராக அவரின் போஸ்ட் புரொடக்சனில் பணியாற்றினார்.இது இவருக்கு மேலும் இயக்குனர் துறையில் சாதிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. நடிகை சரண்யா கணேஷை| ஊக்குவிக்கும் நண்பர்களும்| பெற்றோர்களும்•| ஆரம்பத்தில் மீடியா பற்றி தனது பெற்றோரிடம் கூறிய நடிகை சரண்யாவிற்க்கு எதிர்ப்பு பெரிதும் இல்லாத ஒரு ஆதரவற்ற சூழ்நிலையே நிலவியது எனலாம்..பின்பு கார்ப்ரேட் கால் சென்டரில் தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் தனது நண்பர்கள் வட்டத்தில் பெரிதும் வரேவேற்க்கபட்டது. பின்பு நடிகை சரண்யா கணேஷிற்க்கு பெற்றோர்களும் நண்பர்களும் மீடியாவில் தொடர்ந்து வரும் அவரின் ஆங்கரிங் நிகழ்ச்சிகளை கண்டு உற்ச்சாகமும் நம்பிக்கையும் கொடுக்க ஆரம்பித்தனர்.இது மேலும் அவருக்கு மீடியா துறையில் சாதித்திட உற்ற துணையாக இன்று வரையிலும் இருந்து வருகிறது. சினிமாவில் நடிகை சரண்யா கணேஷின்| நடிப்பும்|லட்சிய கனவும்| இரண்டு மூன்று திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் நடிகை சரண்யாஇயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு 2. இயக்குனர் Zion Raja இயக்கத்தில் வெளிவந்த பொது நலன் கருதி. இயக்குனர் S.S சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த பக்கா மற்றும் நடிகை லட்சுமி மேனன் உடன் இணைந்து ஏஜிபி (சைக்கார்ட்டிஸ் டாக்டர் கதாபாத்திரத்தில்) போன்ற படங்களில் இவர் நடித்து உள்ளார் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வேண்டும் என்பதே இவரின் லட்சிய கனவு ஆகும்.இதற்க்கான முயற்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் நடிகை சரண்யா கணேஷ்இவரின் இந்த முயற்சிவெற்றியாக மாறி இவரை சிறந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் புகழ் மிக்க நடிகையாக நாம் திரையில் வெகு விரைவில் காணும் காலமும் அருகில் தான் உள்ளது.என்ற எதிர்பார்ப்புக்களுடன் காத்திருப்போம். மீடியா துறையில் பெண்களின் வருகையும்|அதற்கு நடிகை சரண்யாவின் கருத்துக்களும்| எல்லா துறைகளிலும் கால் பதித்து வெற்றிகள் பெறுவது கடினம் நிறைந்தது தான்.அதிலும் பெண்கள் ஒவ்வொரு துறைகளிலும் முன்னேற்றம் அடைய ஆண்களை விட அதிகமாக போராட வேண்டியுள்ளது. அதை போன்றே மீடியா துறையில் ஆண்களின் வருகையை விட பெரும்பாலும் பெண்களின் வருகை என்பதும் விமர்சிக்கப்படுகிறது. நம்மை சுற்றி விமர்சிப்பவர்கள் நாம் எந்த நிலையில் இருந்தாலும் விமர்சித்துகொண்டே தான் இருப்பார்கள். அவற்றை தூக்கி எறிந்து விட்டு நம் மீது நம்பிக்கை வைத்து எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் முன்னேற்றம் அடைய வேண்டும். மீடியா மீது ஆர்வம் கொண்ட எத்தனையோ திறமை வாய்ந்த பெண்கள் முட்டுக்கட்டையான முட்டாள்தனமான விமர்சனங்களில் முடங்கி போய் விடுகின்றார்கள். இந்த நிலை மாற வேண்டும்.மீடியாவில் சாதித்திட எண்ணும் பெண்களுக்கு போராட்டாங்கள் இல்லாமல் இல்லை..இது மீடியாவில் மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் உண்டு. நாம் நமக்கான பாதை எதுவென்று சரியாக வகுத்து கொண்டு மீடியாவில் பயணிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து வரும் எந்தவொரு போராட்டங்களிலும் இருந்து எளிதாக வெற்றி கண்டு.. சாதிக்கலாம். விமர்சிப்பவர்கள் என்றும் அதே நிலையில் தான் இருப்பார்கள் அவர்களை திரும்பி பார்த்து பின்னோக்கி செல்வதை விட..திரும்பி பார்க்காமல் முன்னேறி சென்று வெற்றிகள் பெற வேண்டும் பெண்கள். மீடியா துறையில் சாதித்திட எண்ணும் பெண்களை இந்த சமுதாயம் விமர்சிக்காமல் உற்ச்சாகம் ஊட்டி வரவேற்க்க வேண்டும்என்பதே நடிகை சரண்யா கணேஷின் கருத்து ஆகும். நடிகை சரண்யா கணேஷ்| அவர்களின் லட்சிய| வெற்றி|

VJ Saranya ganesh Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.28 PM

Pavithra

குயில் என தன்குரலின் இனிமையினால் ரசிகர்களின் மனம்தீண்டிநடிப்பு நாட்டியம்இசை எனகலைகளின் அனைத்து அழகியமுகங்களிலும் ஒளிர்ந்துவெள்ளி திரையில்ஒளிர்ந்தும் மேலும்அழகுற ஒளிர காத்திருக்கும் cute beauty பவித்ராவிடம்ஒரு அழகான நேர்காணல். உங்களின் நடனம் இசை பாடல் பற்றிஅழகான உங்களின் குரலில் இனிமையாகஎங்களுக்காக கூறுங்கள் பார்க்கலாம்..? என்னுடைய சிறிய வயதில் இருந்தே எனக்கு இசையின் மீது தீராத காதல்.நான் பிளஸ் ஒன் படிக்கும் போதேஎன்னுடைய பரதநாட்டிய நிகழ்ச்சியினை அரங்கேற்றம் செய்தேன்,அது மட்டும் இல்லாமல் கர்நாட்டிக் மீயூசிக்கும் அரங்கேற்றம் செய்தேன், எனக்கு பாடுவதில் மிகவும் ஆர்வம் அதிகம். உங்களின் இசை உலக வாழ்வில் நடிப்பின் பயணம் எப்போது தொடங்கியது…? இந்த ஒரு வருட காலமாக தான்என் நடிப்பின் மூலமாக நடிப்பு துறையில் முன்னேறி வருகின்றேன்.நடிப்பு என்பது என்னுடைய பேஷன்.சினிமா துறையில் சிறந்த ஹீரோயினி ஆக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் ஆகும்.அதையும் தாண்டி சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்.சிறந்த குணச்சித்திர நடிகையாக வேண்டும் என்பதும்எனது கனவு ஆகும்.அதற்கான வாய்பிற்க்காக நான்காத்திருக்கின்றேன்.மிகவும் விரைவாகவே வெள்ளி திரையில் எனது நடிப்பு வெளிவரும் அது மக்களின் மனதில் என்னை ஒரு திறமையான நடிகையாக நிலை நிறுத்தும்… அந்த தருணங்களே என் வாழ்வில் சிறந்த மகிழ்ச்சியான தருணங்கள் ஆகும்.நாட்களும் நேரங்களும் எனக்கான அந்த மகிழ்ச்சியான தருணங்களை ஏந்தியே காத்திருக்கின்றன என்பது எனது நடிப்பின் திறமை மீது நான் கொண்ட நம்பிக்கை ஆகும். நீங்கள் பாடிய பாடல்களின் ஆல்பங்கள் உங்களின் குறும்படங்கள் பற்றி சொல்லுங்கள் இந்த ஒரு வருடத்தில்நான் நடிப்பு மற்றும் இசை துறையில் அடைந்துள்ள முன்னேற்றம் என்னை பொறுத்த வரையிலும் ஒரு மன நிறைவையே அளிக்கின்றது என்றே சொல்கிறேன்ஏன் என்றால்.இங்கே கலை உலகை பொறுத்தவரையிலும்.இங்கே திறமையானவர்கள் மிகவும் அதிகம்ஆனால் அவர்களுக்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு.அதுவும் யாருடை உதவியும் இல்லாமல் சினிமா சார்ந்த துறைகளில் முன்னேறுவது என்பது நாம்\” கண்களை கட்டி கொண்டு சரியான இலக்கை அடைய போராடும் கஷ்ட்டங்கள் நிறைந்த நிலையே ஆகும்.நானும் அதே போல் தான்.என்னுடைய திறமையினாலே இந்த குறுகிய காலத்தில் இசை மற்றும் நடிப்பு துறையில் முன்னேறி வந்துள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சியும் மேலும் தன்னம்பிக்கையும் தருகின்றது. நான் இரண்டு பைலட் ஃபிலிம் மில் லீட் கேரக்டரில் நடித்துள்ளேன். சில மியூசிக் ஆல்பங்கள் பாடியும், பல மீயூசிக் ஆல்பங்கள் பாடி கொண்டும் இருக்கின்றேன். இது மட்டும் இல்லாமல் அவார்டுக்காக அனுப்பப்பட்டுள்ள குறும்படங்களில் நடித்து உள்ளேன்.மேலும் என்னுடைய விருப்பங்களில் ஒன்று வேறுபட்ட பெண் கதாபாத்திரம்ஏற்று நடிக்க வேண்டும் என்பது ஆகும்.Pilot film – Manik AntonyAnd uruttu. (Going to be released in mxplayer) Music album name illatarasi. இந்த கலை துறையில் நீங்கள் கடந்து வந்த கடின பாதைகள் பற்றி….? என்னை பொறுத்த வரையிலும் எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற வேண்டும் என்றாலும்.அதில் பல கஷ்டங்களையும் நிராகரிப்புகளையும் கடந்தே வர வேண்டும்.அதிலும் சினிமாவை பொறுத்தவரை அது கொஞ்சம் அதிகம் என்றே கூறலாம்.ஒரு 100 ஆடிசனில் கலந்து கொள்ளும் போது அதில் இரண்டு ஆடிசனில் தான் தேர்வு செய்ய படுவோம்.அதிலையும் ஒன்று தான் சூட்டிங் வரை போகும்.அதுவும் release ஆவது என்பது கடினமே. உங்களின் படிப்பு பணி பற்றி சொல்லுங்கள்…? நான் பிளஸ் டூ திருச்சியில் பயின்றேன் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றேன்.பின்பு NIT நாக்பூரில் இன்ஜினியரிங் பயின்றேன். தற்போது ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகின்றேன். இருந்தாலும் அந்த வேலை எனக்கு மனநிறைவை தந்தாலும்.சினிமா மற்றும் இசை துறையில் நான் ஈடுபடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினையும் மன நிறைவினையும்தருகின்றது. என்னை பொறுத்த வரையிலும் வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என்பது இருக்க தான் செய்யும். நாம படிச்ச படிப்புக்கான வேலையை விருப்பம் இல்லாமல் செய்யிறத விட நமக்கு புடிச்சு ஒரு வேலை செய்யிறப்பஒரு மன நிறைவு கிடைக்கும். ஏன்னா நம்மளோட கல்வி நமக்கு ஒரு சுமையா மாறிட கூடாது என்பது என்னுடைய கருத்து ஆகும். Cute beauty பவித்ரா அவர்களின் வெள்ளி திரை மற்றும் இசை உலக சாதனைகள் தொடர்ந்து வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம். ✍️சுபா கிட்டு

Pavithra Read More »

WhatsApp Image 2023 05 26 at 4.53.21 PM 1 1

Priyanka nair (aslanarjun)

மயில் தோகை விரித்தாடிநடனம் பழகும் இவளிடம் தன் திறமை மிகுந்த அழுகுற நடனத்தால்மக்களின் மனம்வென்ற நாட்டியபெண்ணே…! பள்ளி காலத்தில் தொடங்கியது உன் நடனத்தின் பயணம் நடனம் மட்டும் இவளின்அறிமுகம் அல்லபள்ளி நாட்களில் ஆர்ட்டிஸ்ட், நேஷ்னல் பிளேயர்.சிங்கர் என்று திறமையின் பலபெயர்கள்முகவரிகள் இட்டுகொண்ட உன்னிடத்தில் சாதிக்க போராடும் பெண்களை எளிதில்விமர்சித்து விடுபவர்கள் இங்கேபலர் உண்டு அதில் வெந்து தனிந்துவிடாதுசாம்பலில் உயிர் பெறும் பீனிக்ஸ் பறவையாய்சிறகுகள் விரித்துபறந்தாள் நடனவானில் எண்ணற்ற நடன மேடைகளில் இவள்காலின் சலங்கைகொஞ்சி ஒலித்திட வந்தது பல நடன வாய்ப்புகள் உன்னைதேடி இசை இன்றி நடனமோஇவர் இன்றி உனதுநடனத்தின் அசைவுகளோ உன் லட்சிய பாதையில்இணைந்து கைகோர்க்கும் கணவர்முரளிதரன் உன் வெற்றியின் பின்னால் இருந்துஉயர்த்திடும் நல்மனிதராய் அவரை புகழ்ந்துவணங்கிட உனக்குமொழிகள் போதாது என்று உன் கண்கள் கூறுகிறது நன்றிகள்காதலாலய் உற்ற துணையாக உயிர் தோழிரிதன்யா உடன் இருந்துதன்னம்பிக்கை ஊட்டும் அம்மா மீனா நாயர் உன் மனமோநன்றிகளின் மகிழ்வாய் இன்றும்இவர்களுக்கு உன் வலிகள் கடந்தநடனத்தின் சாதனைபயணங்கள்இனிவரும் இளையதலை முறைக்கு நம்பிக்கை பாதையாகஅமையட்டும் தமிழகம் மட்டுமின்றிஉலகெங்கிலும் உன்ஒர்க் ஷாப்பில்இருந்து திறமை வாய்ந்த நடனகலைஞர்கள் பலர்உருவாகட்டும் வெள்ளி திரைகளில் பல கொரியோ கிராபிவாய்ப்புகள் நாடிவந்து விருதுகள் உன் கரங்களில் ஒளிரட்டும்என்று உம்மை இன்றும் என்றும் வாழ்த்தி மகிழ்கிறது .

Priyanka nair (aslanarjun) Read More »

EGAVALLI

EGAVALLI

சின்னத்திரை வெள்ளி திரை என்றுதன் திறமை மிகுந்தநடிப்பால் ரசிகர்களின் மனதில் மின்னி ஜொலித்திடும்சிங்க பெண்ணே முதலில் kalaingar டிவியில் ஒளிபரப்பான Bhavani சீரியலில் அறிமுகமாகி சின்னத்திரையில் தனக்கென்று நடிப்பில்தனி முத்திரை பதித்தாள் அதனை தொடர்ந்து வந்தது பல வாய்ப்புகள் விளம்பர படங்கள் மற்றும் தொலைக்காட்சிதொடர்கள் என தன் நடிப்பின் மீது நம்பிக்கை கொண்டு போராட தொடங்கினாள் சின்னத்திரையில் முன்னணி குணசித்திரகதாபாத்திரங்களை ஏற்று நடித்தாள் வெள்ளி திரையும் இவளின் திறமையான நடிப்பு கண்டு தன் பக்கம் ஈர்த்து செல்லஇவளின் நடிப்பில் வெளிவந்தது சிலதிரை படங்கள் சுட்டி தனங்களின் ராணியாய்துடிப்பு மிகுந்ததன் பேச்சினால்மக்களின் மனங்களைகொள்ளை கொண்டபாரதியின் புதுமைபெண்ணே சின்னத்திரை வெள்ளி திரை என உனதுநடிப்பின் பொன்னா தருணங்கள் ‌தொடர்ந்து பல வெற்றிகளையும்விருதுகளையும்உனக்கு பெற்றுதரட்டும் சிறந்ததோர் கதையில்நீ சிறப்பான கதாபாத்திரம்ஏற்று தமிழ் திரை உலகில்சிறந்த குணச்சித்திர நடிகையாக நீவலம் வரும் காலம் மிகவும் அருகில்தான் உள்ளது நடிப்பு துறையில்உனது கனவுகள் நிறைவேறி சாதனைகள் புரிந்துதிரை உலக சரித்திரம்உன்னை பேசி புகழ்ந்திட இந்த பொன்னாளம் உனது பிறந்த நாளில் எந்நாளும் உன்னை வாழ்த்தி மகிழ்கிறது மோட்டிவேட்டிவ் தமிழா💐

EGAVALLI Read More »

ARUN

ARUN PADMANABAN

வெற்றிகள் என்பது உன் விரல் அசைவில் தான்….! சீறிடும் காற்றில் புன்னகைத்து ஆடிடும் மலராய்….!இவன்! தோல்விகளினால் வாடி விடாதுமுகம் மலர்ந்து …! வெள்ளி திரையின் கடின வழியில் முன்னேறி சென்றான்…! விளம்பர படங்களின் மூலமாக முதலில் அறிமுகமாகிய.! விடா முயற்சிகள் கொண்ட பன்முக திறமை கொண்ட கலைஞனே…! அசிஸ்டன்ட் டரைக்டர் டெக்னீசியன் புரொடக்ஷன்ஸ் டிசைனர் என…! திரை துறையில் வெற்றியின் தடம் பதித்து வரும் சாதனைகளின் நாயகனே…! கேரளம் தன்னில் பிறந்து விஸ்வல் கம்யூனிகேஷன் கல்விபயின்று….! மலையாள திரை உலகில் நீ கோ ச்சா.என்ற திரைபடத்தின் மூலம்….! அறிமுகமாகி மக்களின்மனம் வென்ற நடிகன் இவன்..! உனது திறமை கண்டுதமிழில் வெள்ளி திரைவாய்ப்பளித்தது….! நனையாத மழை…ஒரு புலி நாலு ஆடு திரைப்படங்கள்…! நண்பர்கள் வட்டம் உன்னை மேலும் உற்சாகம் ஊட்ட…! கலர்ஸ் தமிழ் சேனலில்மலர் சீரியல்கம்பீரமாய் இவனின்நடிப்பின் புகழ்உரைத்தது….! மாங்கல்ய சந்தோஷம் சீரியலோ மக்களின்மனதை திருடியது…! சின்னத்திரை வெள்ளி திரைகளில் புகழ் பெற்று விளங்கும் நடிகனே…..! நடிப்பில் பாய்ந்திடும் புலியெனஇன்னும் பல சாதனைகள் படைப்பாய்நீ…..! வெகு விரைவில் உனதுநடிப்பில் வெளிவர இருக்கும் கல்ட் திரைப்படமும்….! உனக்கு வெற்றி திரைப்படமாக அமைந்து…! பல வெற்றி விருது மேடைகளுக்கு உன்னை அழைத்து செல்லட்டும்…! திரை உலகில் சாதிக்க போராடும் இளைஞர்களுக்கு…! தோல்விகள் என்பது வெற்றியை அறிந்திடஉதவும் அனுபவங்கள்…! என்ற உனது நம்பிக்கைதுளிர்க்கும் வார்த்தைகள்…! இலட்சியங்களின் உயிரோட்டமாக துடிக்கட்டும்…! மலையாளம் தமிழ் இந்தி ஆங்கில மொழிகளின் கலை துறையில்…! சாதனைகளின் வெற்றிநிகழ்வுகள் உன்னால் தொடரட்டும்…! திரை உலக சரித்திர பக்கங்கள் உன்னை எழுதட்டும்…! வெள்ளி திரையில் என்றும் நீ வெற்றி கதாநாயகனாய்….!விளங்கி சிறந்திட…! மனம் மகிழ்ந்து நெகிழ்ந்து வாழ்த்துகிறது .

ARUN PADMANABAN Read More »

WhatsApp Image 2023 05 26 at 3.35.40 PM 1

Deepa balu

2k காதலியாய் மக்களின் மனதினை கவர்ந்து இன்று நடிப்பு துறையில் வளர்ந்து வரும்நாயகியாய் புகழ் பெற்றாள் இவள் சிறுவயதில் இருந்தே நடிப்பில் தனியொரு ஆர்வம் அவற்றை நினைவாக்கிட கனவுகள் பல கொண்டு சோதனைகள் கடந்து நடிப்பில் சாதித்திடமுயன்றால் தடைகள் உன் லட்சிய வழிகளை மூடியது டாக்டர் ஆக வேண்டும் என்ற தன் குடும்பத்தின் கனவினை நினைவாக்கினாள் கல்லூரி மூன்றாம் ஆண்டிலே சில யூடியூப் சேனல்களில் வாய்ப்புகள் வந்ததுஉன்னை தேடி மாடல் ஆங்கர் டான்ஸர்என கலை துறையில் பயணித்த போதும் அதில் மனம் நிறைவுறாது நடிப்பில் சாதித்திட நாக் அவுட் சேனலில் வாய்ப்பினை பெற்றாய் தனது துடிப்பான நடிப்பின் மூலம் பல சார்ட் பிலிம்களில் திறமையான நடிகையானாய் தேன் மிட்டாய் 2kகாதலிபட்டி தொட்டி மூலைகள்எங்கும் உனது வெற்றி கொடிநாட்டியது இன்ஸ்ட்டாகிராம் சோசியல் மீடியாக்களில் உனக்கென எண்ணற்றரசிகர்களின் கூட்டம் உன்னை வட்டமிட்டு வலம் வந்தது சென்னையில் பிறந்த சிங்கார தமிழ் மகளே மருத்துவ துறையில் மகத்தான பணியாற்றிசாதனைகள் படைத்திடுவாய் யூடியூப் சேனல்களில் மட்டும் அல்லாது சின்னத்திரையில் பல சீரியல் வாய்ப்புகள்உன்னை நாடி வரட்டும் வெகுவிரைவில் வெள்ளி திரையிலும்பல வெற்றி வாய்ப்புகள்பெற்று திரை உலகில் கால் பதித்துபல வெற்றி திரைப்படங்களில் தோன்றி வெற்றி பயணம் தொடரட்டும் நடிப்பு துறையில் சாதனை படைத்திடஎண்ணும் இளைஞர்களுக்கு உனது தன்னம்பிக்கை ஒரு எடுத்துக்காட்டாகவிளங்கிட பல இளைஞர்களை திரை துறை காணட்டும் வருங்காலம் உனது நடிப்பின் புகழ் தன்னைகூறி விருதுகள்வழங்கி உன்னை வாழ்த்தட்டும்என்று மாபெரும் மகிழ்ச்சிபுன்னகை கொண்டுவாழ்த்ததிசிறப்பு பெருகிறது . ✍🏿 subha kittu

Deepa balu Read More »

WhatsApp Image 2023 05 25 at 3.35.04 PM

Vj Annamalai

தன்னம்பிக்கையை துணையாக கொண்டு தனக்கென கலை உலகில் தனி இடம்பெற்று…. வெற்றியின் நாயகனாக வளர்ந்து வரும் கலைஞனே பள்ளி பருவத்தில்பல போட்டிகளில் பங்கேற்று சுட்டி தனங்களோடுபுன்னகை பூத்தாய் உனது குடும்பத்திலும் நீசெல்ல பிள்ளை தான் கல்லூரி கல்வி கனவுகளின் மேடையாக மாறி ஸ்டேஜ் ஷோநடிப்பு எனஉன் திறமைகளை வளர்த்தது… பி.காம் கல்வி பயின்றபோதும்அதில் ஈடுபட மனம் விரும்பாது மீடியா துறையில் சாதிக்க எண்ணிணாய் சோதனைகள் பல தாண்டிவாய்ப்புகள் தேட தொடங்கினாய் சென்னையில்… கல்லூரி காலங்களிலேயேகருத்தாளம் மிக்கசிறு சிறு வீடியோக்களை பாஸிட்டிவ் டோஜேஜ் என்ற சேனலின் மூலமாக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றாய் நடிப்பில் ஆர்வம் கொண்டு ஷார்ட் பிலிம் என முன்னேறி சென்ற போதிலும் அதுதடையாகவே அமைந்து வீழ்ச்சி என்பது உண்டோ உன்னிடம்திறமைகள் இருக்கும் பொழுது… முயற்சிகள் பல செய்தாய் உனதுஇலட்சிய பாதையில்முன்னேறி சென்றிட… சோதனைகள் உன்னைவால் இட்டு கிழித்தபோதும்…. வீழ்ந்து விடாதுபேஸ் ஆப் சென்னைபிரஸ் பேஸ் ஆடிசனில்பங்கு கொண்டாய் நான்கு டாப் யூடியூப் சேனல்களில் வாய்ப்புகள் தேடியபோதும்… கலை துறை அலுவல படிகளில் ஏறி இறங்கிவாய்ப்புக்களுக்காககாத்திருந்தாய்… நோட்டா பட புரோமஸில்வாய்ப்பு வந்திடஅதில் முன்னேற்றம் ஏதும் இல்லை பேஸன் ஆப் சென்னையில் யூத் ஜ கேன் டைட்டில் பெற்று விட… வாய்ப்புகள் உன்னை நாடி வந்தன இன்டியா கிளிப்பில் முதல் நாள் அன்றேஇரண்டு இன்டர்வியூக்கள் என ஆறுமாத காலங்களில் அடுக்கடுக்காக பதினெட்டு இன்டர்வூயூக்கள் தொடர்ந்து உனது திறமையை நிருபித்துபுகழ் பெற்றது… இதற்காக நீ கண்ட சோதனைகளை சொல்லில் அளவிட இயலுமா… சிவானியின் இன்டர்வியூ ஆங்கர் உலகில் ஐந்து மில்லியன் வீவர்ஸை தான்டி வெற்றியின் புகழ் எட்டிட செய்தது ப்ரியா பவானி சங்கர்வரலெட்சுமி சரத்குமார்என ஒரு வருடத்திலேயேபல வெற்றி இன்டர்வியூக்கள்இன்டியா கிளிப்பில் வெளிவந்து சாதனைகள் படைத்தது உனது கனவுகளை நிறைவேற்ற மேலும்ஒரு வாய்ப்பு கலாட்டா சேனலில்கடல்ராஜா ஷோகேம் ஷோஎப்3ஜி3என பல வெற்றி ஷோக்கள்… ஹிப் ஆப் தமிழா ஆதித்யாவின் நட்புவெள்ளி திரையில் நீதோன்றிட துணையாய்அமைந்தது…. வரவிருக்கும் சிவக்குமார் சபதம் திரைப்படத்தில்சிறந்ததொரு சிறியகதாபாத்திரம்… ஆதித்யா அவர்களின் சிறந்த பாராட்டினைபெற்றிடவே… நடிப்பு துறையில் உனக்காக ஆர்வம்மேலும் வளர்ந்தது… மிமிக்ரி உலகில் சாதனைகள் பல படைக்க இருக்கும்நாயகனே கலை உலகில் வாய்ப்புகள் தேடும் இளைஞர்களுக்கு வாய்ப்பினை தரும் நிலையில் உனது திறமைகள் மேலோங்கி வளரட்டும் 200க்கும் மேற்பட்ட ஷோக்கள் உனது ஆங்கரில் வெளிவந்த போதிலும்… இன்னும் எண்ணற்ற ஷோக்களின் வாய்ப்புகள் உன் கரம் சேரட்டும் உனது பெற்றோர் சகோதரரின் நம்பிக்கைஉற்சாகத்தில் விடா முயற்சியோடுவெற்றி பெற்று வெள்ளி திரை உலகில்நீங்காத புகழோடுவாழ்த்திட வாழ்த்துகிறது ✍🏿 subha kittu

Vj Annamalai Read More »

Scroll to Top