Ismath Banu நமக்கான கனவுகளை நோக்கி பயணிக்கும் போது அதில் வெற்றி பெறுவதற்கான காத்திருப்பிற்க்கு அதிக பவர் இருக்கிறது,என்ற தன்னம்பிக்கையுடன்.
ஜர்னலிஸ்ட், நடிகை என பல முகம் கொண்டு மீடியா உலகில் சாதனைகள் படைத்து வரும் இஸ்மத் பானு அவர்களுடன் ஓர் அழகான நேர்காணல்.
Mothers name | meera |
Fathers name | asan ali |
Dob | 09.03.1999 |
Native place | Chennai |
School name | corley |
Clg name | madras Christian college |
Occupation | Occupation -actress |
Current place | Current place -chennai |
Degree | B.A journalism |
Movie names or ablum or advertisements names | Asural,Label,jbaby, veppam kulir mazhai,Netrikkan, ayogya, mahamuni, azhagiya kanney,Bommai naayagi, GuluGulu |
உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் பானு (Ismath Banu )…?
சொந்த ஊர் தற்பொழுது சென்னை தான். நான் பாண்டிச்சேரி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி படிப்பை முடித்தேன். அதற்கு அடுத்து சென்னை வர வேண்டிய சூழ்நிலை. பள்ளி படிப்பை முடித்த பிறகு எனக்கு ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது.மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்ல B. A . ஜர்னலிஸம் படித்தேன். என்னுடைய குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தது. எனவே எனது படிப்பிற்கான பணத்தினை பகுதி நேர வேலை செய்தே பெற்றேன். அதாவது home social service, எலெக்ட்ரிஷியன் கடைகளில் பில்லிங். வாய்ஸ் ஓவர்.இந்த மாதிரி பார்ட் டைம் job செய்தேன்.
ஒரு ஜர்னலிஸ்ட்டான உங்களுக்கு நடிகை ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததா Ismath Banu …?
ஆரம்பத்தில் இல்லை. நான் ஜர்னலிஸ்ட்டாக வேண்டும் என்பதே எனது விருப்பம். ஜர்னலிஸம் படித்து விட்டு அது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தேன். பல சேனல்களில் ஆங்கரிங் செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது வந்தது தான் இந்த நடிப்பு வாய்ப்பு. நடிப்பு என்பது என் வாழ்வில் நீங்காத ஒன்றாக இருக்கப்போகிறது என்பதை நான் அப்பொழுது அறிந்து இருக்கவில்லை.
சினிமா வாய்ப்புக்களுக்காக உங்களின் தேடல் பற்றி சொல்லுங்கள் பானு…?
முதலில் எனக்கு கிடைத்த role என்றால் ஒரு ரிப்போர்ட் role தான். அப்பொழுது எனக்குள் தோன்றிய ஒன்று நமக்குள் நடிப்பு என்ற திறமை உள்ளது அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று. அதற்கு அடுத்து ஒரு படத்திற்கான ஆடிசன் போய் இருந்தேன். அப்பொழுது நான் நடித்த அத்த ரிப்போர்ட்டர் ரோல் வீடியோவை காண்பித்து. நீங்கள் இதே மாதிரி நடிக்க வேண்டும் என்றார்கள்.அது நான் தான் என்று சொன்னேன். முதலில் நான் அயோக்கியா movie ல் தான் ரிப்போர்ட்டராக role நடித்தேன்.அதற்கு அடுத்த நான் நடித்த movie வெளிவரவில்லை. இருந்தாலும் எனது நடிப்பு திறமைக்கான கேரக்டர்கள் தொடர்ந்து வர தொடக்கின. என்னுடைய ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக சிறந்த முறையில் உள்வாங்கி நடிக்க தொடங்கினேன். மீடியா வாய்ப்பு தேடி நான் ஓடிய போது.என்னை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாத மீடியா. என் நடிப்பை கண்டு என் பக்கம் சிறிது சிறிதாக திரும்ப தொடங்கியது, நடித்து கொண்டே எனது ஜர்னலிஸம் தொடர்பான வேலையையும். இன்ஸ்டாகிரமில் content writing work செய்து கொண்டு இருந்தேன்.
அசுரன் படத்தில் நடித்த உங்களின் அனுபவம் பற்றி சொல்லுங்கள் பானு…?
நான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு role ம் எனக்கு நடிப்பின் பரிமாணத்தில் ஒவ்வொரு அனுபவத்தை தான் தந்து செல்கிறது. வெற்றி மாறன் sir அலுவலகத்தில் இருந்து போன் வந்த போது என்னால் முதலில் நம்ப முடியாத நிலையே. அதற்கு அடுத்து அசுரன் படத்திற்கான ஆடிசனுக்கு சென்றேன். அங்கே என்னை போல் பல பெண்கள் கலந்து கொண்டனர். நானும் கலந்து கொண்டேன்,முதலில் நான் எந்த ஒரு செயலிலும் வெற்றி பெறுவதை பற்றி யோசிக்க மாட்டேன்,அதில் என்னுடைய பங்களிப்பு என்ன . நமக்கான வாய்ப்பு வரும் போது கண்டிப்பாக நம்மால் வெற்றி பெற முடியும் என்பதே என் எண்ணமாக இருக்கும்,இதே எண்ணத்தில் தான் அசுரன் பட ஆடிசனில் கலந்து கொண்டேன்.
எனக்கான வாய்ப்பு அசுரன் படத்தில் கிடைத்தது.
சினிமா பற்றி உங்களின் கருத்து…?
எத்தனையோ பேர் திறமை இருந்தும் கூட இந்த சினிமா உலகத்தில ஓடிக்கிட்டே தான் இருக்காங்க தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று,எனக்கென்று சினிமா நடிகையாக ஒரு வாய்ப்பு கொடுக்கும் போது அதை நான் பயன்படுத்தி வெற்றி பெற போராடணும்.
ஒரு நடிகையாக என்னுடைய நடிப்பை மக்கள் ரசித்து பார்க்கணும்.அவங்க மனதில் நான் ஒரு சிறந்த நடிகையாக இருக்கணும். நம்ம எவ்வளவு பெரிய அவார்ட் வாங்கினாலும் அதைவிட பெரியது ஒரு ரசிகரோட கை தட்டல் இல்லையா. என்னுடைய நடிப்பு மக்களுக்கானதா இருக்கணும்.
சினிமா உலகத்திலை நீங்கள் கடந்து வந்த தடைகள் பற்றி…?
கஷ்ட்டங்கள் என்பது சினிமா மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் உண்டு. நான் முதலில் சினாமாவிற்க்குள் வரும் போது அதை பற்றி தெரியாது.சினிமா துறையில் யாரும் எனக்கு அறிமுகம் இல்லை. அதனால் ஒவ்வொரு விஷயங்களிலும் நான் போராடியே வர வேண்டியது இருந்தது. என்னுடைய சினிமா உலகில் முதலில் அதிகம் நான் நம்பியது என்னை மட்டுமே. என்னுடைய துணிச்சல் என்னை சில இடங்களில் நேர்மையாக தைரியத்துடன் போராட வைத்து ஒரு நடிகையாக உங்களின் கண் முன்னால் நிறுத்தியுள்ளது. ஏற்க்கும் கதாபாத்திரம் சிறியதோ, பெரியதோ அதில் நான் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே என் எண்ணம். மேலும் சினிமா உலகில் என் வாழ்நாளின் இறுதி வரை சிறந்த நடிகையாக வலம் வர வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.
நீங்கள் நடித்துள்ள சினிமா, ஆல்பம் மற்றும் விளம்பர படங்கள் பற்றி சொல்லுங்கள் பானு..?
Asuran, label,jbaby, veppam kulir mazhai,Netrikan,ayogya,mahamuni,azhagiya kanney, Bommai naayagi, GuluGulu, இன்னும் பல படங்களில் நடித்து உள்ளேன்.
உங்களின் ஜர்னலிஸ்ட் மற்றும் நடிப்பு பயணத்தில் உங்களுக்கு துணையாக இருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள்…?
என்னுடைய family and friends தான்.அவக்க என்னுடைய ஒவ்வொரு முயற்சி மற்றும் வெற்றி தோல்விகளிலும் என்னுடன் இருப்பவர்கள்.
உங்களுடைய தன்னம்பிக்கையான வரிகள் என்றால் எது …?
இது தான் நாம் என்று ஒரு வட்டத்துக்குள்ளே நம்மளை அடைச்சுக்கிட்டு அதுக்குள்ள முடங்கி போய் இருக்க கூடாது,நமக்கான வாழ்க்கை என்பது விசாலமானது. So நம்முடைய கனவுகளுக்காக நம்ம போராடி வெற்றி பெறணும் அவ்வளவு தான்.
உங்களைப் போல் சாதிக்க வரும் இளைஞர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் பானு ( Ismath Banu )…?
முதலில் நம் மீது நமக்கு நம்பிக்கை வேணும்,நாம ஆசைப்படுறது எல்லாம் ஒரே நாள்ல கிடைக்காது,அப்படி கிடைச்சிட்டா அது வாழ்க்கையே இல்லை,அதுக்காக நாம காத்திருக்கணும்ஒவ்வொரு காத்திருப்பும் பல வலிகளை கடந்து தான் வெற்றிக்கு வழி காட்டும்.
உங்களுக்கு ஒரு விஷயம் வேண்டும், வேண்டாம் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தது போராட வேண்டும்,அதுவே உங்களின் வெற்றிக்கு துணையாக இருக்கும்,உங்களுடனான இந்த அழகான நேர்காணல் எங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தருகின்றது.
சினிமா துறையில் சிறந்த நடிகையாக வேண்டும் என்ற உங்களின் கனவுகள் நிறைவேற வாழ்த்துகின்றோம்.
✍️சுபா கிட்டு