முயற்சி செய்தால் நம்மால் முடியாது என்று எதுவும் இல்லை என்பதை தன் வாழ்நாளில் வெற்றிகரமாக நிறைவேற்றி கொண்டு வரும் இன்ஸ்ட்டாகிராமில்ஆங்கில பயிற்சி வகுப்பு மற்றும் எண்டெர்டெயின்மென்ட் வீடியோக்கள் பதிவிட்டு வரும் சாதனை பெண் ஜெயா அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல்.
Name | Jaya |
Father\’s name | Jegadeesan |
Mothers name | Maheshwari |
Dob | 23/08/2001 |
Native | Trichy |
School | Integrated Indian school Kuwait |
College | Krishna college of technology, Coimbatore |
Degree | BTECH IT |
Current place | CHENNAI, OMR |
Highlights | Communication skill trainer |
உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி கூறுங்கள் ஜெயா..?
என்னுடைய சொந்த ஊர் திருச்சி அங்கே தான் நான் ஆறாம் வகுப்பு வரை படித்தேன், பின்னர் என்னுடைய படிப்பிற்க்காக வேறு பள்ளியில் சேர்த்தார் அப்பா, அப்பாவின் உழைப்பின் கஷ்ட்டங்கள் எல்லாவற்றையும் நாங்கள் உணர வேண்டும் என்று அப்பா எண்ணிணார், அவ்வாறு நான் பார்த்து வளர்ந்ததால் எந்தவொரு கஷ்ட்டமான சூழ்நிலைகளையும் கடந்து செல்லும் முன்பக்குவம் எனக்கு இன்று வந்துள்ளது என்று நினைக்கின்றேன், அதன் பின்னர் என்னுடைய கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் படித்தேன்.இன்று IT ல் பணிபுரிந்து வருகின்றேன்.
உங்களின் வேலை பணிகளுக்கு இடையில் எவ்வாறு உங்களது ஆங்கில இன்டர்வியூ பயிற்சி வகுப்புகள்..?
முதலில் சொல்ல வேண்டும் என்றால் முதலில் நான் ஆங்கிலம் பேச கஷ்ட்டப்பட்டேன், அடுத்தவர்கள் எல்லாம் நான் ஆங்கிலம் பேசும் போது விமர்சனம் செய்வார்கள், அப்பொழுது நான் நினைப்பேன் பேசுவது என்பது எந்த மொழியாக இருந்தால் என்ன என்று, ஆனால் வேற மொழிகள் தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமானது என்று வேலைக்கு இன்டர்வியூ, போகும் போது தான் தெரிந்தது, அதனால் ஏன் நாமே இன்டர்வியூ சம்மந்தப்பட்ட ஆங்கில பயிற்சி வீடியோக்கள் நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது பதிவிட ஆரம்பித்தேன், முதலில் Black hole என்று பதிவுகள் போட ஆரம்பித்தேன், நான் எப்படி முதலில் ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன், என்று பதிவிட்டேன் ஆரம்பத்தில் அது அவ்வளவாக பார்வையாளர்களை போய் சேரவில்லை, அதுக்கு அடுத்து இன்ஸ்ட்டாகிராமில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் பற்றி பதிவிட ஆரம்பித்தேன், அதற்கு ஓரளவு வரவேற்பு இருந்தது தொடர்ந்து பதிவிட்டேன், அதிக பார்வையாளர்கள் அதனால் பயன் அடைந்துள்ளனர், ஆரம்பத்தில் இலவசமாக நிறைய பார்வையாளர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் வீடியோ பதிவிட்டேன், பின்னர் என்னுடைய ஆங்கில பயிற்சி வகுப்புக்கள் தொடர்பான வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் அதிகமானார்கள், அதனால் நிறையா பேர் பயனடைய ஆரம்பித்தார்கள், இது மேலும் என்னுடைய முயற்சிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது, இதனால் இதை எனது வேலை பணிகளுக்கு இடையே தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன், இந்த பதிவுகள் ஆரம்பத்தில் The expound என்ற பெயரில் தான் போட ஆரம்பித்தேன்.இதில் ஆன்லைன் இன்டர்வியூ தொடர்புடையது என்பதால் இதில் நிறையா பேர் பயன் அடைந்துனர்.
ஆங்கில பயிற்சி வகுப்புகள் தவிர நீங்கள் வேறு என்ன என்ன பதிவுகள் உங்களுடைய இன்ஸ்டா பதிவு பக்கத்தில் பதிவிட்டு வருகின்றீர்கள் ஜெயா..?
ஆங்கில பயிற்சி வகுப்புகளை தவிர மூவி ரீவிவ்ஸ் அது போன்ற எண்டர்டெயின்மெண்ட் பதிவுகளையும் பதிவிட்டு வருகிறேன். இதுவும் எனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ள பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது. தொடர்ந்து 5 மாதங்களாக பதிவிட்டும் வருகின்றேன்.
உங்களது ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடர்பான வீடியோக்களால் எத்தனை பேர் பயன் அடைந்துள்ளனர் ஜெயா..?
எனக்கு தெரிந்து 4000 பேருக்கு மேல் பயன் அடைந்துள்ளனர்.
இன்னும் எண்ணற்றோர் பயன் அடைந்தும் வருகின்றனர்.
உங்களுடைய கனவு லட்சியம் என்றால் எதை கூறுவீர்கள் ஜெயா..?
ஒரு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் உள்ள மேடையில் எனது ஆங்கில பயிற்சி வகுப்புகள் மற்றும் ஒரு துறையில் ஒருவர் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் போன்ற எனது கருத்துக்களை பேச வேண்டும் அது அவர்களை சென்றடைய வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும்.
உங்களை போல் முயற்சி செய்து ஒவ்வொரு துறையிலும் சாதிக்க துடிக்கும் நபர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ஜெயா..?
நான் ஒவ்வொரு முறையும் எனக்கான முயற்சிகளை செய்து காத்து கொண்டு இருப்பேன், அதற்கான வெற்றி என்னை தேடிவரும்.
உங்களுக்கான லட்சிய முயற்சிகளை நீங்கள் செய்யுங்கள்
வெற்றி உங்களை தேடி வரும்.உங்களால் முடியாது என்று எதுவும் இல்லை.
நம்ம வாழ்க்கையில நம்மால முடிந்த வரைக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வளவு தான் நான் கூறுவது.
உங்களின் இந்த முயற்சிகளுக்கும் வெற்றிகளும் உறுதுணையாக இருப்பவர்கள் யார் என்று நினைக்கின்றீர்கள் ஜெயா…?
பொதுவாக நான் என்னுடைய முயற்சிகள் மட்டுமே எனது வெற்றிகளை வழி நடத்தி செல்லும் என்று நம்பிக்கை கொள்வேன். இதையும் தாண்டி எனது இந்த சாதனைகளுக்கு காரணம் என்னுடைய அப்பா கொடுத்த தன்னம்பிக்கை, மற்றும் என்னுடைய பதிவுகளை பார்வையிடும் பார்வையாளர்கள் மற்றும் உறவினர்கள் இவர்களும் என்னுடைய வெற்றிக்கு காரணமானவார்கள் ஆவார்கள். தன் தன்னம்பிக்கை கொண்டு சாதனை புரிந்து வரும் சாதனை பெண் ஜெயாவின் லட்சிய கனவுகள் நிறைவேறி அவரின் ஆங்கில இன்டர்வியூ பயிற்சி வகுப்புகளால் இன்னும் எண்ணற்றோர் பயன் பெற வாழ்த்துவோம்.
✍️சுபா கிட்டு