Jewellery Designer Vaishali Dhanda

Jewellery Designer Vaishali Dhanda

மிஸஸ் இந்தியா மற்றும் மிஸஸ் யுனிவர்ஸ் மற்றும் ஜுவல்லரி டிசைனர் வைஷாலி தண்டா அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல். (Jewellery Designer Vaishali Dhanda )

Nick Name vaishu
NameVaishali Dhanda
Insta id halidhandaoffical
Current CityChennai
Date of Birth02/04/79
Profession jewellery designer and model
Awards iron lady 22 , mrs India 23 , mrs.universe 23

*உங்களின் ஜுவல்லரி டிசைனர் work பற்றி சொல்லுங்கள் வைஷாலி ?

ஜுவல்லரி டிசைனர்  work பற்றி நான் சொல்ல வேண்டும் என்றால், அது மிகவும் எதார்த்தமாக நடந்தது தான். என்னுடைய சிறுவயதில் நான் எனது பெற்றோர்களுடன் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அங்கே இருக்கும் shop  களில் ஜூவல்லர்ஸ் பார்க்கும் போதும் அதை பற்றி ஒரு ஆர்வம் வருவது உண்டு. ஆனால் அதை பற்றி நான் பெரிதாக ஒன்றும் எண்ணியது இல்லை.

பெரும்பாலான பெண்களின் திருமண வாழ்க்கைக்கு பின் அவர்களின் கனவுகளும், லட்சியங்கள், மற்றும் விருப்பங்கள் மனதிற்க்குள் புதைக்கப்பட்டு விடுகின்றன, அதற்கு அடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை பற்றி அவர்கள் சிந்திப்பதும் இல்லை அவர்களை அவர்களை சுற்றியுள்ளவர்களே சிந்திக்க விடுவதும் இல்லை,

ஆனால் என்னுடைய வாழ்க்கை அப்படி இல்லை, எனது திருமணத்திற்கு பின்பே என் வாழ்க்கையில் நான் சாதிக்க தொடங்கினேன், அதில் மிக முக்கியமான ஒன்று தான் இந்த ஜுவல்லரி டிசைனர் work. எனது மகள் பிறந்த பின்பு தான். ஜுவல்லரி டிசைன் பற்றி எனக்கு ஆர்வம் இருப்பதை எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.அது தெரிந்தவுடன் அவர்கள் என்னை உற்சாகப் படுத்தி என்னால் சாதிக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை அளித்தனர்.அதன் பிறகு தான் நான் அதைப்பற்றி படிக்க தொடங்கி இன்று அந்த துறையில் சாதித்தும், சாதிக்கவும் தொடங்கியுள்ளேன்- Jewellery Designer Vaishali Dhanda

திருமணத்திற்கு பிறகு உங்களுக்கு ஜுவல்லர்ஸ் டிசைன் பற்றி எவ்வாறு ஆர்வம் அதிகரித்தது வைஷாலி ? -Jewellery Designer Vaishali Dhanda

அதற்கு காரணம் என்னுடைய மகள் என்றே கூறுவேன்.அவளுடைய கைரோகள் மற்றும் சிறு சிறு தடயங்களை நான் மறக்காத நினைவு பொக்கிஷங்கள் ஆக வைத்துக்கொள்ள நினைத்தேன்.அதை ஜுவல்லர்ஸ் ஷாப்களில் டிசைன் செய்து தரும் படி கேட்க்கும் போது அது அவர்களால் சரிவர முடியவில்லை, அதனால் எனக்குள் அதை நாமே செய்தால் என்ன என்று தோன்றியது.அதுவே நான் இன்று ஜுவல்லர்ஸ் டிசைனராக இருப்பதற்கு முக்கிய காரணம் என்றே நான் நினைக்கிறேன். அதற்கு அடுத்து நான் அதைப்பற்றி அமெரிக்காவில் உள்ள GIA படித்தேன்.
முதலில் சில்வரில் டிசைன் செய்தேன், அதற்கு அடுத்து கோல்டில் செய்ய தொடங்கினேன் இன்று பல்வேறு வகையான டிசைசன்கள் செய்து வருகிறேன். என்னைப்போல் பலர் சிறு குழந்தைகளின் ஞாபகங்களை ஜுவல்லர்ஸ்ஸாக செய்ய விரும்புகின்றனர். ஆனால் அது அவர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அதை என்னுடைய டிசைனிங் ஒர்க் மூலம் மிக எளிதில் அவர்களுக்கு எளிதில் கிடைக்கும் படி செய்து வருகிறேன். எனது மகள் பெயரில் ஜுவல்லரி டிசைன் நிரோஷா ஷாப் ஒன்றை நடத்தி வருகிறேன்- Jewellery Designer Vaishali Dhanda

ஜுவல்லரி டிசைனரில் இருந்து மிஸஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸஸ் இந்தியாவாக நீங்கள் மாற்றம் அடைந்து எப்படி வைஷாலி ?

அது கொரோனா கால கட்டத்தில் நான் இருந்தபோது உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தேன். அதாவது யோகா போன்ற உடற்பயிற்ச்சிகள், அதற்கு அடுத்து மிஸஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்ச்சிகளை மேற்க்கொண்டேன். அதற்கு அடுத்தாற்போல் அந்த போட்டிகளில் கலந்து கொணடேன்.
அதில் MRS.INDIA 23. MRS UNIVERSE 23 AWARDS வாங்கி வெற்றி பெற்றேன்.

உங்களுடைய சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் வைஷாலி?

சொந்த ஊர் டில்லி தற்போது வசிப்பது சென்னையில்.

உங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள்?

  ஒரு துறையில் நான் மட்டும் அல்ல வேறு எவராக இருந்தாலும் முன்னேறி போய் சாதனை படைக்க வேண்டும் என்றால் பல விமர்சனங்களை கடந்தே வர வேண்டும். என்னை யார்?தெரியாமல் என்னைப்பற்றி விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை.என்னிடம் உள்ள குறை நிறைகளை என் அருகில் உள்ளவர்கள் கூறும் போது அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நம்மை பற்றி விமர்சிப்பவர்கள் யாரும் நம்முடைய முயற்ச்சிகளின் இன்ப துன்ப பயணங்களில் உடன் வர போவதில்லை என்று எண்ணுகிறேன்.

உங்களை போல் சாதிக்க போராடுபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது…? – Jewellery Designer Vaishali Dhanda

ஒரே இரவில் நாம் வெற்றி பெற முடியாது, அதற்காக தொடர்ந்து போராட வேண்டும். நம் கடின முயற்சி அதற்கு அடுத்து வெற்றி பெறுவதற்கான போராட்டங்களுக்கு பின்பே நாம் வெற்றி பெற முடியும். நம்மை பற்றி விமர்சிப்பவர்களை பற்றி நாம் திரும்பி பார்த்தோம் என்றால் கண்டிப்பாக தோல்வி அடைவோம்.அவர்களின் விமர்சனங்களை கடந்து நாம் சாதனைகள் படைக்க வேண்டும்- Jewellery Designer Vaishali Dhanda

திருமணமான பெண்கள் சாதிப்பதில் உள்ள தடைகள் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? – Jewellery Designer Vaishali Dhanda

திருமணம் என்பது உங்களது கனவுகளை புதைத்து விடாது.

நீங்கள் உங்களது லட்சிய கனவுகளில் வெற்றி பெற போராடுங்கள்

அதில் கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி அடைந்து சாதனை பெண்களாக நீங்கள் இந்த உலகில் வலம் வருவீர்கள்.

அப்பொழுது இந்த உலகமே உங்களை வியந்து திரும்பி பார்க்கும்.

நீங்களும் சாதிக்க போராடும் பெண்களுக்கு எடுத்துகாட்டாக இருக்கலாம்.

அறிவு, திறமை, அழகு கொண்டு தன் கடின உழைப்பினால் முன்னேறி இன்று ஜுவல்லர்ஸ் டிசைனர், மிஸஸ் யுனிவர்ஸ், மிஸஸ் இந்தியாவாக வலம் வந்து சாதனை படைத்து வரும் வைஷாலி தண்டா அவர்களின் கனவுகளும், லட்சியங்களும் நிறைவேறி இன்னும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துவோம்.

     ✍️சுபா கிட்டு
Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×