கவிஐஸ்னி (Kaviashvini)

Kaviashvini

Modeling – Short films- Conceptual shoot,என பல திறமைகள் கொண்டு மலேசியா மீடியா துறையில் வலம் வந்து கொண்டு இருக்கும் கவிஐஸ்னி அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல்.

NameKaviashvini
Fathers nameTanjong Malai
Mothers nameGanthi Mathi
Dob2nd March 1995
Native placeMalaysia
School nameAssunta High School
Clg nameMSU Management and Science University 
Current placeMalaysia, Kuala Lumpur 
OccupationIT, Project Manager
Degree Bachelor in Information Communication and Technology 
Awards/recognition/nomineesFilmfreeway for conceptual shoot and
Short film (suvargal)

உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் கவிஐஸ்னி (Kaviashvini) ?

 என்னுடைய சொந்த ஊர் மலேஷியா, கோலாலம்பூர். நான் என்னுடைய School studies Assunta High School ல் Complete பண்ணுனேன்,College studies MSU-Management and science UNIVERSITY ல் Bachelor in information Communication and Technology படித்து முடித்தேன், IT project Manager(PRINCE2 CERTIFICATE )ஆக பணிபுரிந்து வருகிறேன்.

உங்களது பார்வையில் உங்களுடைய மாடலிங் தொடக்கம் பற்றி சொல்லுங்கள் கவிஐஸ்னி (Kaviashvini) …?

என்னுடைய அண்ணன் ஒரு போட்டோகிராப்பர் அவருடை போட்டோகிராப்பிங்கில் மாடலிங் செய்யத் தொடங்கினேன்,அது என்னுடைய ஃபேஷன் ஆக மாறவே மாடலிங் தொடர்ந்து செய்து வருகிறேன்.

உங்களுக்கு எவ்வாறு Conceptual shoot பண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது கவிஐஸ்னி (Kaviashvini) …?

என்னுடைய conceptual shoot மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதே சமயம் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணிணேன். அதனால் தான் இந்த Conceptual shoot எடுத்து பதிவிட தொடங்கினேன்.இது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகளே எனது Conceptual shoot வீடியோக்கள் பதிவிட எனக்குள் ஒரு எண்ணத்தை உருவாக்கும்.

உங்களுக்கு எவ்வாறு Short films நடிக்க வாய்ப்பு கிடைத்தது கவிஐஸ்னி அதைப் பற்றி சொல்லுங்கள்(Kaviashvini) ..?

 நான் மாடலிங் பண்ணும் போதே எனக்கு ஷார்ட் பிலிம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்ட்ரோ மீடியாவில் (மலேஷியா டிவி சேனல்) போட்டிக்காக என் குறும்படத்தை சமர்ப்பித்திருக்கேன்.

அதை தவிர பல Short films நடித்து உள்ளேன். நடித்தும் வருகிறேன்.

உங்களுக்கு இந்த மாடலிங் துறையில் வழிகாட்டியா இருந்து வருபவர்கள் யார்? அவர்களைப் பற்றி சொல்லுங்கள் கவிஐஸ்னி..?

எனக்கு மாடலிங் துறையில் support கை இருப்பவர்கள் என்னுடைய அண்ணன் கவிகுமார் அண்ணி சங்கீதா.

உங்களுக்கு மாடலிங் மற்றும் short film, conceptual shoot தவிர மிகவும் பிடித்த ஒரு விஷயமாக எதை சொல்வீர்கள் கவிஐஸ்னி (Kaviashvini) ..?

 எனக்கு என்னுடைய family யுடன் அதிக நேரம் செலவிட பிடிக்கும்.இதை தவிர Robert green எழுதிய புத்தகங்கள் பிடிக்கும்.அதிலும் நான் மிகவும் விரும்பி படித்த 

  • The 48 loss of power.
  • The law of human nature.

அதற்கு அடுத்து painting , dance, book, பிடிக்கும்.

உங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக எதை சொல்வீர்கள் கவிஐஸ்னி (Kaviashvini)…?

 எனக்கு ஐந்து வயது இருக்கும் போது என்னுடைய பெற்றோர்கள் வெளியில் சென்று இருந்தார்கள் நான் மட்டும் வீட்டில் தனியா இருந்தேன்.அப்போது திருடர்கள் வந்து விட்டார்கள்.அந்த சமயம் எங்கள் வீட்டில் இருந்த நாய் தான் குரைத்து அக்கம் பக்கம் இருப்பவர்கள் வர உதவி என்னை காப்பாற்றியது.அது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும்.

மீடியா துறை சாதனை தவிர உங்களின் கனவு என்று எதை சொல்வீர்கள் கவிஐஸ்னி (Kaviashvini) …?

 நான் street dogs oraganising (NGO) ஒன்றை தொடங்கி அவைகளை பாதுக்க வேண்டும் என்பதாகும். நான் தற்பொழுது Mfd-((MFD Dog whisperers)ஒன்றில் இணைந்தும் பணியாற்றி வருகிறேன்,இதை தவிர ஒரு சிறந்த Business (fashion related/fitness),தொடங்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.

உங்களைப் போல் பல துறைகளிலும் சாதிக்க விரும்புபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் கவிஐஸ்னி (Kaviashvini) …?

  உங்களுடைய தன்னம்பிக்கையும், ஆர்வமும் மட்டுமே நீங்கள் சாதிக்க உங்களுக்கு துணையாக இருக்கும். எனவே நீங்கள் சாதிக்க விரும்பும் துறைகளில் தன்னம்பிக்கையும், ஆர்வமும் உங்களுக்கு வேண்டும்.இந்த இரண்டும் இருந்தால் இந்த உலகம் உங்களை சிறந்த வெற்றியாளராக மாற்றும்.

உங்களின் நேர்காணல் எங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது கவிஐஸ்னி நீங்கள் சிறந்த மாடலாகவும்.சிறந்த நடிகையாகவும் வலம் வர வாழ்த்தி மகிழ்ந்து..! மீடியா துறை தவிர பிற துறைகளிலும் உங்களின் கனவுகள் நிறைவேற மீண்டும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

சுபா கிட்டு.

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×