Kavitha Rajmohan

WhatsApp Image 2023 05 26 at 3.35.41 PM 2 1

தேன் என செந்தமிழ் செவி தன்னில் பாய்ந்திடும்…!

இயற்கை அழகு சூழ்ந்த
இலங்கையில் பிறந்து…!

தன் கொஞ்சிடும் தமிழால் மக்களின் மனதை கொள்ளை கொண்ட …!

கவிதா ராஜ்மோகன் அவர்களே…!

கலை பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த போதும்…!

தன் கடின முயற்ச்சியால் சிங்கள தீவின் வானொலி….!

நிகழ்ச்சி தொகுப்புகளில் புகழின்
சிகரம் தொட்டவள் நீ..!

பால் மனம் மாறா மலழை பருவம் முதலே
மேடைகள் ஏற தொடங்கியது உனது
நடிப்பின் பயணம்…!

ரோடியோ நிகழ்ச்சிகளில் சாதனைகள் படைத்த செந்தமிழ் பெண்ணே…!

இலங்கையின் சூரியன் எப் எம் ல் நீ தொகுத்து
வழங்கிய நிகழ்ச்சிகள்..!

மீடியா உலகில் உனக்கென தனி சிறப்பினை பெற்று தந்திட…!

மேலும் சக்தி எப் எம் லும் தொடர்ந்து உனது நிகழ்ச்சி தொகுப்பின்
சாதனை பயணங்கள்…!

சின்னத்திரையில் உனது திரை விமர்சனங்களும்..!

சமையல் நிகழ்ச்சிகளும்…!

சில்லென்ற உனது மலழை நிகழ்ச்சிகளும்…!

கேட்பவர் மனதில் உனக்கென தனி இடம்
பெற்று தந்து விட…!

என்றும் அவர்கள் செவி
தன்னில் நீங்காது ஒலிக்கின்றது உனது
இனிமையான குரல்….!

ரேடியோ உலகில்
சோதனைகள் பல வென்று…!

வெற்றி பெற்ற சிங்க பெண்ணே…!

உனது கணவரோடு இணைந்த உனது நிகழ்ச்சி தொகுப்பு வெற்றியின் தனி சிறப்பே….!

அயல்நாட்டு ஷோக்கள்
உனது தொகுப்பில்
மிகவும் சிறப்பான ஒன்றே…!

உனது வெற்றியின் ரகசியமாய்…சக தோழர்களையும் அன்பின் மனம் கொண்டு….!

நடந்திடும் பணிவான குணம் விளங்கி விட…!

மேலும் ரோடியோ கலை துறையில் உனது
சாதனைகள் தொடரட்டும்….!

உனது அழகான சுந்தர
தமிழில் அரேங்கேறி
வெற்றி வாகை சூட்டப்படும் நிகழ்ச்சி
தொகுப்புகள்…!

சாதனைகள் படைக்க
போராடும் இளைஞர்களுக்கு…

தன்னம்பிக்கை கொண்ட உன் போராட்டங்கள்….!

ஊக்கமாக விளங்கட்டும்…!

இனிவரும் காலங்களும்
உனது திறமை எண்ணி
பெருமை கொண்டு…!

வெற்றி வாய்ப்புகள் வழங்கி விருதுகள்
பெற்று….!

வெற்றி திருமகளாக என்றும் நீ வலம் வர..!

உம்மை வாழ்த்தி சிறப்பிக்கிறது .

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×