நிமிர்ந்த நன் நடையும்
நேர் கொண்ட பார்வையும்…
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்…..
என பாரதியின் சிந்தை
கருவறையில் தோன்றிய பெண்ணே…
நடிப்பு என்பது உனக்கு
பிறப்பின் பெரும் வரமே……
முத்தமிழ் கலைகளில் ஒன்றான நாடக கலை
உன் உதிரத்தில் உறைந்த ஒன்றே….
நாடக கலைஞரான அப்பாவின் ஊக்குவிப்பு
உனது பள்ளி நாடக மேடையில் வெற்றி பரிசுகளாய் குவிந்தது……
மீளாத துயரம் உன்னை
இருள் சூழ்ந்து கொண்டது
உன் அப்பாவின் பிரிவால்…..
கண்ணீர் தீ சுடரில்
எரிந்து விடாது
காலத்தின் போக்கில்
வறுமையோடு துணிந்து போராடி தொடர்ந்தது உனது கல்லூரி கல்வி……
சாதிக்க பிறந்தவர்களே
பெண்கள்….
வறுமை கண்டு வாழ்விழந்து
போகாது திறமை கொண்டு முன்னேற
தொடங்கியது உனது
நடிப்பின் உயிர் துடிப்பு….
ஆங்கர் ஆக தொடங்கியது உனது
சாதனை பயணம்….
கல்லூரி கல்வியின் இரண்டாம் ஆண்டிலே
உனது குறும்பட நடிப்பு…..
எண்ணி சிரித்திடுவார்
இகழ்ந்து பேசிடுவார்
அதிலும் பெண் என்றால் பெரும் பழி
கூறிடுவார் உற்றாரும்
உறவினரும்…
அது சாதிக்கும் உனக்கு
தடைகளோ
என்று கலைந்து….
மீண்டும் தொடர்ந்தது உனது முயற்ச்சியின்
வெற்றி இலக்குகள்….
அலைபேசியில் சிறு முயற்ச்சிகள் ஆரம்பத்தில் தடைகளாக உன்னை
தடுமாற வைத்த போதும்….
தோல்விகள் வெற்றியின் முதல் கல்
என நம்பிக்கை உனக்கு
நீயே ஊட்டி…..
சாதிக்க துடித்தாய்…
இன்று நீயோ சாதனை
பெண்களின் பட்டியலில்…
குறும்படம்..ஆல்பம் சாங்காஸ்..வெப் சீரியலென பல
பிம்பங்களின் பிரதிபலிப்பில்….
கிருஷ்ணகிரியில்
ஒரு நாடக கலைஞனின்
மகளாய் பிறப்பெடுத்து….
பல துறைகளில் சாதிக்கும் சாதனை
பெண் கீர்த்தானவே…
சின்னத்திரை வெள்ளி திரைகளில்
வெகு விரைவாக தங்களின் நடிப்பினை
காண காத்திருக்கிறது
வரும் காலம்….
வாய்ப்புகள் உங்களை
நாடி வந்து
உங்களின் திறமை
வளரட்டும்….
வெற்றி விருதுகள் பல
வழங்கட்டும் கலை உலகம்…
என வாழ்த்தி மகிழ்கிறது.
நன்றி
💐 Subha kittu