நடிகை மேனகாவின்| வாழ்வியலும்| நடிப்பு உலக பயணமும்|
இன்று டெலிவிஷன் சீரியல்களிலும் திரை துறையிலும் வளர்ந்து வரும் நடிகையாய் இருப்பவர் தான் நடிகை மேனகா இவர் நடிகை மட்டும் இல்லை மிக சிறந்த மாடலும் ஆவார்.
நடிகை மேனகா தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் 21.6.1996 ல் பிறந்தவர்.இவரின் தந்தை சிறந்த புகைப்பட கலைஞர்.இவருக்கு சிறுவயதில் இருந்தே தன்னை அலங்கரித்து புகைப்படம் எடுத்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் தான்.மேலும் தன் தந்தை புகைப்பட கலைஞர் என்பதால் நடிகை மேனாகாவின் ஆர்வம் சிறுவயதில் இருந்தே சற்று அதிகரித்தே காணப்பட்டது என்று கூறலாம். இவ்வாறு இருந்தவர் திரையில் எவ்வாறு அறிமுகமானர் என்பதை நாம் இங்கே பார்க்கலாம்.
நடிகை மேனாகாவின் கல்வியும்| கல்லூரி வாழ்க்கையும்|
நடிகை மேனகா தனது பத்தாம் வகுப்பு வரை தனது சொந்த ஊரிலே கல்வி பயின்றார்.பின்னர் பதினொன்றாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் நோக்கத்தோடு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர்
மலர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்ந்தார் ஆனால் அங்கே நன்கு கல்வி பயின்றார்.
அங்கே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததினால் மேனகாவிற்க்கு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டது. தனது பள்ளி கல்வியை முடித்த மேனகா தனது
கல்லூரி கல்வியை எங்கு தொடர்வது என்று
யோசித்தார்.
முதலில் தெரிவு செய்த இடமோ ஊட்டி தான்.பின்னர் அதில் மாற்றம் செய்யப்பட்டு கோயம்புத்தூரில் உள்ள RVS கல்லூரியில் B.sc computer science பயின்றார்.
தன் கல்லூரி கல்வி முடித்த போதே ஹைதராபாத். பூனே.சென்னை என பல இடங்களில் உள்ள நிறுவனங்களில் இருந்து வந்தது இவருக்கு வேலை வாய்ப்ப்புக்கள்.
நடிகை மேனகாவின்| சென்னை பயணமும்| IT பணியும்|
நடிகை மேனகா கல்லூரி கல்வி முடித்த பின்னர் சென்னையில் உள்ள IT companyல் வேலை கிடைத்து சென்னை வந்தார்.தனது சகோதரி ஏற்க்கனவே சென்னையில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் அவர் சென்னையில் தங்கியிருந்த பிளாட்டில் தானும் இணைந்து தங்கி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் IT ல் பணியாற்றினார்.
இருந்தாலும் இவரின் மனம் முழுமையாக நிறைவு பெறவில்லை.
ஏதோ ஒன்றின் தேடல் இருந்து கொண்டே இருந்தது.அது என்னவென்று அவர் அறியமலே
நடிகை மேனகாவின் | டெலிவிஷன் வாய்ப்புக்களும்| நிகழ்ச்சிகளும்|
நடிகை மேனகா பள்ளியில் படிக்கும் போதே நடனம் பாட்டு பாடுவதில் ஆர்வம் மிகுந்தவர். மேலும் நடிகர் சிவ கார்த்திகேயனின் தீவிர ரசிகையாவார்.
இவ்வாறு இருக்கும் பொழுது தான் இன்று டெலிவிஷனில் மிகவும் பிரபலமான இருக்க கூடிய அருண் மற்றும் அரவிந்தின் அறிமுகம்
இவருக்கு கிடைத்தது.
இவர்கள் சிறு வாய்ப்பினை மேனகாவிற்க்கு வழங்கவே
முதல் டிவி நிகழ்ச்சியே சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தின்
பேன் பேஸ் ஷோ தான்
நடிகை மேனகாவிற்க்கு.
இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைகாட்சியில் சில சூட்டிங் promo க்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.
மேலும் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியில் கன்ட்ஸ்டென்டாகவும் கலந்து கொண்டார்.
இவ்வாறு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே IT ல் பணிபுரிந்தும் வந்தார்
இவர் கலந்து கொண்ட டிவி ஷோக்கள் அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டத்தில் நல்ல வரவேற்ப்பினை பெற்று தந்தது.மேலும் அவர்களின் உற்ச்சாகம் இவருக்கு டிவி துறையில் சாதித்திட ஊக்கம் தந்து.
நடிகை மேனகாவிற்க்கு| ஏற்பட்ட விபத்து|
இவ்வாறு தனது IT பணி டிவி நிகழ்ச்சி என்று பிஸியாக இருந்து கொண்டு இருந்தவரின் மேனகாவின் வாழ்க்கையில் அந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தினால் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு தனது IT வேலையையும் அவரால் தொடர்ந்து சரிவர செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் தனது வீட்டில் ஓய் வெடுக்க தொடங்கினார்.மேலும் இந்த சூழ்நிலையில் கொரோனா கால லாக்டவுன் வரவே
தான் என்ன செய்வதென்று அறியாமல் ஓய்வினை தொடர்ந்தார் இதனால் இவரின் உடலின் எடையும் கூடியது.
IT ல் பணிபுரிந்த மேனகா| எவ்வாறு மாடல் ஆனார்|
தான் அடுத்து என்ன செய்வது என்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி போயிருந்த நிலையில்.
தனது சகோதரியின் திருமணம் முடிந்தது.இவரின் தனிமை கொஞ்சம் அதிகரிக்கவே தொடங்கியது.
அந்த சமயம் தான் தனது அம்மா செய்து வந்த கார்மென்ட்ஸ் தொழிலை தான் ஏற்று நடத்தலாம் என்று முடிவு செய்தார்.
தானகே இரண்டு மிஷின்களை வாங்கி போட்டு அதில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி ஆடைகளை வடிவமைக்க தொடங்கினார்.அவ்வாறு தான் வடிவமைத்த ஆடைகளை தனது வலை தளங்களின் பக்கங்களில் பதிவிட்டார்.இது ஓரளவிற்கு வரவேற்ப்பினை பெற்று இவரின் தொழில் செய்யும் ஆர்வத்தை அதிகரித்தது.
தான் வடிவமைத்த ஆடைகளை வேறு மாடல்கள் அணிந்து விளம்பர படங்கள் எடுக்கும் முயற்ச்சிகளை மேற்க்கொண்டார்.
இருந்தாலும் இவரின் மனம் நிறைவு அடையவில்லை.
மேலும் சிறுவயதில் இருந்தே போட்டோ சூட்கள் தன்னை செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய இவருக்கு.
தானே மாடலாக இருந்தால் என்ன தான் வடிவமைக்கும் ஆடைகளுக்கு என்று எண்ணம் தோன்றியது.
அதன் படியே தான் வடிவமைக்கும் ஆடைகளை தான் அணிந்தும் மற்றும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அணிவித்தும் தனது ஆடை விளம்பரங்களுக்கான புகைப்படங்களை எடுத்தார் நடிகை மேனகா.அதை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டார்.
இதனை அவர் தனது தொழில் வருமானத்திற்க்காக செய்தாலும்.
முழுமையாக அவரின் மனம் நிறைவு பெறவில்லை.
தேடல்கள் இருந்தும் தொடர்ந்தும் கொண்டே தான் இருந்தது.
பிறகு தனது சொந்த ஊரிலே உள்ள பீயூட்டி பார்லர் நிறுவன உரிமையாளர் தனது மாணவர்களுக்காக மேனகாவை மாடலாக வரும் படி அழைப்பு விடுத்தார்.
இதன் படியே அழகாக tractional உடையில் மேனகாவை அலங்கரித்தார். பீயூட்டி பார்லர் நிறுவனர்.அதில் போட்டோக்கள் எடுத்து கொண்டார் மேனகா.
இதற்கு வருமானமாக 2500 ரூபாய் தரப்பட்டது.
இதை இவர் வாங்கும் போது ஒரு மன நிறைவு ஏற்படடது.
தனது தேடல் இதில் தான் உள்ளது என்பதை அப்பொழுது தான் புரிந்து கொண்டார் மேனகா.
நடிகை மேனகாவின்| திரை துறை அறிமுகம்|
தனது பெற்றோரிடம் தனக்கு சீரியலில் நடிக்கும் விருப்பம் இருப்பதாக கூறினார் மேனகா. பெற்றோர் மறுத்து விட்டனர்.
மேனகாவின் திருமணத்திற்க்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க தொடங்கினார்கள் பெற்றோர்கள்.
தனது பெற்றோரின் விருப்பத்திற்க்கு சரி சொன்ன போதிலும்.
இவரின் மனம் நடிப்பை நாடியது.
சில போராட்டங்களுக்கு
தான் இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி
பெற்றோரின் சம்மதத்தை பெற்றார்.
தான் வாணியம்பாடி சூட் சொல்வதாக கூறி சென்னை வந்தார்.
வந்த பின்னரே பெற்றோரிடம் தான் விஜய் டிவியில் சீரியலில் நடிக்கவே சென்னை வந்ததாக கூறினார்.
நடிகை மேனகாவின் திரைபட நடிப்பு|
முதலில் விஜய் டிவி யில் நடிக்க வந்த இவருக்கு கிடைத்தது திரை துறைய வாய்ப்புக் கள் தான்.. தொடர்ந்து ஐந்து ஆறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.
இந்த திரைப்படங்கள் திரைக்கு வர தமதமாகவே
தனது வீட்டில் இருந்து மீண்டும் தனது திருமணத்திற்க்கான அழுத்தம் அதிகரித்து.
தனது கவனத்தை டிவி சீரியல் பக்கம் திருப்பினார் மேனகா
இதனை தொடர்ந்து ஜீ தமிழ் சீரியலில் ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி சீரியலில் சிறிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த சமயத்தில் மீண்டும் ஒரு விபத்திற்க்கு உள்ளான மேனகாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதில் இருந்து தனது உடல் நலம் ஆரோக்கியமாக சிறிது கால இடைவெளி தேவைப்பட்டது இவருக்கு.
அந்த இடைவெளியில் பல வாய்ப்புகள் வந்து கை நழுவி போனது இவருக்கு. தனக்கு விபத்தினால் ஏற்ப்பட்ட காயங்களை தனது பெற்றோரிடம் இருந்து மறைத்தார் நடிகை மேனகா.. நடிப்பின் மீது கொண்ட காதலால்.
|மீண்டும் நடிகை மேனகாவின் சீரியல் பயணம்|
அந்த விபத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை மேனகா மீண்டும் தனது போட்டோ சூட்டை தொடர்ந்தார்.
அதன் பின்னர் ஜீ தமிழ் சீரியலான சித்திரம் பேசுதடி தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
இதனை பார்த்த பெற்றோர்கள் மேனகாவிற்க்கு நடிப்பில் முன்னேற்றம் காண உற்ச்சாகம் அளித்தனர்.
இதனை தொடர்ந்து இவருக்கு தனது வலை தளங்களின் பக்கங்களில் பலோயர்ஸின் எண்ணிக்கை அதிகரித்து.
|சன் டிவி சீரியலில் நடிகை மேனகா|
தாலாட்டு சீரியலில் நடிகை மேனகாவிற்க்கு சிறப்பான கதாபாத்திரத்தின் வாய்ப்பு கிடைத்தது.
இதில் இவரின் நடிப்பும் திறமையாக வெளிப்படும்.
இதனால் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது.
மேலும் ஆங்கரிங் ஸ்டார் பிலிம்..திரை படம் என பிஸியாக இருந்து வருகிறார் நடிகை மேனகா.
நடிகை மேனகாவின்| திரைபடங்களின் வரிசைகள்|
நடிகை மேனகா விக்கரம் பிரபு நடிக்கும் படம் ஒன்றில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து.நடிகர் அகர்வா நடிக்கும் படத்திலும்.நடிகர் விமல் நடிக்கும் படுகா படத்திலும்..சிறு குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து .இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
|நடிகை மேனகாவின் கனவு|
இவரின் கனவு லட்சியமே டிவி தொடரில் சிறந்த நடிகையாக வேண்டும் என்பதே ஆகும்.டிவி துறையில் மட்டும் அல்லாது திரை துறையிலும் சிறந்த நடிகையாக இவர் வெற்றி பெறும் காலம் மிக அருகில் தான் உள்ளது.
இவரின் சிறந்த நடிகையாகும் கனவு நிறைவேறி விருதுகள் பெற்று மகிழ நாமும் வாழ்த்துவோம்.