Mary Jenifer

(Mary Jenifer)

Mary Jenifer – நம் லட்சிய கனவுகள் என்றும் உறங்குவதில்லை,அதற்கான முயற்சிகளை நாம் தொடர்ந்து செய்தால் ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி பெறலாம்,என்று மீடியா துறையில் தொடர்ந்து போராடி இன்று சிறந்த யூடியூப்பராக பல விருதுகளும், வெற்றிகளும் பெற்று
ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட மேரி ஜெனிபர் அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல்.

Name – Mary Jenifer
Fathers name – Paul Antony Robinson
Mothers name – Hema Robinson
Dob – 01/10/1999
Current placeperungudi, OMR
Native place Nagercoil
School name Barath Dass mat hr sec schl
Clg nameKCG College of Technology
Occupation YouTuber
Degree B.E CSE
Highlights YouTube Shorts community Ambassador , YouTube Star recognised by YouTube ( Popular south female solo creator)
Awards/recognitionTamilNadu now best vlogger female, SMILE dual performer female, TNSA favourite influencer 2023.
உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு உங்களின் குடும்பம் பற்றி சொல்லுங்கள் ஜெனி (Mary Jenifer)….?

என்னுடைய சொந்த ஊர் azhagappapuram, நாகர்கோவில், நான் கடலூரில் உள்ள ST MARY’s பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வுகளில் ஒன்று நான் அங்கே எனது உறவினர்கள், நண்பர்களுடன் விளையாடியது, அதற்கு அடுத்து அப்பாவின் வேலை காரணமாக சென்னை வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, அதற்கு அடுத்து சென்னையில் உள்ள Bharat Dass mat her sec school படித்தேன். அதற்கு அடுத்து
KCG COLLEGE OF TECHNOLOGY ல் B.E. CSE படித்தேன்.என்னுடைய குடும்பம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் மகிழ்ச்சியான குடும்பம்.என்னுடைய ஒவ்வொரு வெற்றிகளுக்கும் பின்னால் இருப்பவர்கள் அவர்களே.

எப்பொழுது இருந்து உங்களுக்கு மோனோ ஆக்டிங் மற்றும் பேச்சு போட்டியின் மீது ஆர்வம் வந்தது ஜெனி (Mary Jenifer )…?

நான் கடலூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு மோனோ ஆக்டிங் மீது ஆர்வம் இருந்தது. நான் பள்ளியில் படிக்கும் போது நான் பள்ளி நிகழ்ச்சிகளில் மோனா ஆக்டிங் செய்து பரிசுகள் பெற்று உள்ளேன்.இது மட்டும் இல்லாமல் பேச்சு போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெற்று உள்ளேன். அதன் பிறகு சென்னை வந்த பிறகு அதற்கான வாய்ப்பு நான் படித்த பள்ளியில் கிடைக்கவில்லை. விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனக்கு அதில் ஆர்வம் அதிகம் இல்லை. அதற்கு அடுத்து நான் மோனா ஆக்டிங் மற்றும் பேச்சு போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

உங்களுடைய கல்லூரி வாழ்வு பற்றி சொல்லுங்கள் ஜெனி…?

நான் Computer Engineering படித்தேன் என்னுடைய College life la தான் மீண்டும் நான் பேச்சு போட்டியில் பேச ஆரம்பித்தேன். அங்கு உள்ள கிளப்பில் public speaking இருந்தது.அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.அப்பொழுதான் கொரோனா லாக் டவுன் வந்தது.
Placement வேலை கிடைப்பதில் சிரமமாக இருந்தது,அப்பொழுது என்ன செய்யலாம் என்று நான் யோசிக்கும் போது தான் ஏன் நம்ம ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்க கூடாது என்ற ஓர் எண்ணம் உருவானது. அதற்கு முன்பு வரை எனக்கு யூடியூப் பார்க்கும் பழக்கம் கூட இல்லை.இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இல்லை.எனக்கு செல்பி எடுக்கும் பழக்கம் கூட இருந்தது இல்லை.

உங்களுடைய யூடியூப் சேனல் பற்றி சொல்லுங்கள் ஜெனி (Mary Jenifer)..?

முதலில் நான் யூடியூப் சேனல் தொடங்குவது பற்றி அப்பா, அம்மாவிடம் கூறிய போது. அவர்கள் நீ எது செய்தாலும் நீ நல்ல பெயர் வாங்கணும்.அப்படி தான் சொன்னாங்க. அப்ப என்கிட்ட கேமரா கிடையாது என்னோட போன் மட்டும் தான். அதை செல்பி ஸ்டிக்ல வச்சு மண்ணில ஊன்றி தான் எடுத்தேன்.அம்மாவுக்கு யூடியூப் சேனல் பற்றி அந்த சமயம் தெரியாது அவர்களுக்குள்ளே சிறு பயம் இருந்தாலும்.அதை வெளிய காட்டாம எனக்கு அந்த செல்பி ஸ்டிக் இருந்த போனை ஆடாம எனக்கு first கேமரா பிடிச்சவங்க அவங்க தான் ,என்னுடைய first யூடியூப் சேனல் Name ஜெனி ஹாக்ஸ் ,First யூடியூப் சேனல் நல்லா viewers reach ஆன நேரத்தில எனக்கு college la placement la job கிடைச்சது. நான் job la join பண்ணுனேன். அங்க என்னோட work perfect-ஆக செய்தேன். இருந்தாலும் கூட என்னால யூடியூப் சேனல் வேலை இரண்டையும் balance பண்ண முடியலை. என்ன பண்ணலாண்ணு யோசிக்க ஆரம்பிச்சேன்.வேலையை விட்டுறலாம்னு முடிவு பண்ணி வீட்டுலை சொன்னேன். அதுக்கு அவங்க எதிர்ப்பு எல்லாம் சொல்லல.உனக்கு எது சரியோ அதை செய் அப்படின்னு சொல்லிட்டாங்க.
வேலையை விட்டுட்டேன்.அதற்கு அடுத்து என்னுடைய இரண்டாவது யூடியூப் சேனலான ஜெனி M.J.
தொடங்கினேன். ஏதாவது ஒரு புதியதா வீடியோ பண்ணலாம் அப்படிங்கிற ஒரு எண்ணம் வந்த போது தான் நம்ம ஏன் மோனோ ஆக்டிங் பண்ணக்கூடாதுன்னு ஒரு ஐடியா வந்தது. அதை பண்ண ஆரம்பித்தேன் அதுக்கு viewers மத்தியில நல்ல வரவேற்பு இருந்தது.

உங்களுடைய யூடியூப் சேனல்களுக்கான content எப்படி தேர்வு செய்கிறீர்கள் ஜெனி(Mary Jenifer)…?

நாம் அன்றாடம் கடந்து வரும் வாழ்வில் இருந்தே content தேர்ந்தெடுக்கிறேன். இருந்தாலும் அதற்கான தேடல்கள் என்பது என்னுள் இரவு பகல் என்று பாராமல் இருந்து கொண்டே இருக்கும்,அதற்கு நான் என்றுமே நான் ஓய்வு கொடுத்தது இல்லை,என்னுடைய யூடியூப் சேனல்களின் வெற்றியாக நான் நினைப்பது. மக்களை மகிழ்ச்சி படுத்துவதே. அது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

உங்களின் யூடியூப் சேனல்களுக்கு வீடியோ எடுப்பதற்கு உதவியாக இருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் ஜெனி (Mary Jenifer)..?
உதவியாக இருப்பவர்கள் என்றால் என்னுடை தம்பி மற்றும் எனது பெற்றோர். எங்களின் உறவினர் குடும்பம்.சென்னை வந்தபோது நாங்க வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் என்னுடைய நண்பர்கள் இவர்களுடைய suporrt  னால் தான் நான் எல்லா வித தடைகளையும் தாண்டி என்னால் தொடர்ந்து ஆரம்பத்தில் வீடியோ பதிவிட முடிந்தது. என்னுடைய தம்பி மற்றும் கஸின்ஸ் பசங்க இரண்டு பேர் எனக்கு வீடியோ எடுப்பது எடிட்டிங் செய்வது என்று இன்று வரை உதவி செய்து வருகிறார்கள்.
யூடியூப் சேனல்களில் உங்களுக்கான தனித்துவமான இடம் மற்றும் அதில் நீங்கள் வாங்கிய விருதுகள் பற்றி சொல்லுங்கள் ஜெனி (Mary Jenifer) ?
  • யூடியூப் சேனல் Highlights -YouTube Shorts.
    community ambassador.YouTube star recognised by You Tube (South female solo creator)
  • Awards பற்றி சொல்ல வேண்டும் என்றால்
    Tamil Nadu now best vlogger female.
  • SMALE dual performer female,
  • TNSA favourite influencer 2023.
பிரபல யூடியூப் சேனலராக இருக்கும் உங்களுக்கு சினிமா பற்றி கனவு உள்ளதா (Mary Jenifer) …?
 சினிமா துறையில் எனக்கு வாய்ப்புகள் வந்து போதும்.அதை பற்றிய கனவு என்பது என்னிடம் இல்லை. எதிர்காலம் என்ன தீர்மானிக்கும் என்பது நம்மால் கணிக்க முடியாத ஒன்றே..! சினிமா துறையில் எனக்கான வாய்ப்புகள் வரும் போது அதற்காக திறமையோடு காத்திருப்பவர்களுக்கு அதை அனுப்புகிறேன். என்னுடைய கனவு தற்பொழுது என்னுடைய யூடியூப் சேனல் 5 மில்லியன் viewers கடந்து செல்ல வேண்டும் என்பது ஆகும்.
நீங்கள் யூடியூப்பராக கடந்து வந்த தடைகள் பற்றி சொல்லுங்கள் ஜெனி…?

தடைகள் இல்லாமல் நாம் எதையும் சாதிக்க முடியாது. முதலில் என்னுடைய உறவினர்கள் பெண் பிள்ளை யூடியூப் சேனல் எல்லாம் ஆரம்பிக்கலாமா என்ற ஒரு விமர்சனம் எனது அம்மா அப்பாவிடம் சென்றது.ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இரண்டாவது என்னுடைய யூடியூப் வீடியோ விற்க்கு வரும் கமாண்ட் அது என்னை முதலில் மிகவும் மன அழுத்தத்திற்கு கொண்டு சேர்த்தது.அதில் இருந்து என்னை வெளியில் கொண்டு வந்தவர் என்னுடைய அம்மா, அதற்கு அடுத்து யூடியூப் சேனல் copy right problem என்று பல தடைகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து இன்று என்னுடைய யூடியூப் சேனலை நடத்தி வருகிறேன். எதுவும் எளிதாக கிடைத்து விட்டால் வாழ்க்கை எளிதாக இருந்து விடும். வாழ்க்கையின் புதிர் சுவாரஸ்ஸியங்களை பற்றி தெரிந்து கொள்ள நாம் பல தடைகளை கடந்தே வர வேண்டும்.

உங்களைப் போல் மீடியா துறையில் சாதிக்க வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ஜெனி…?

நீங்கள் ஒரு செயலை செய்ய தொடங்குகின்றீர்கள் என்றால் அதை தொடர்ந்து செய்யுங்கள். அதை பின்பு செய்யலாம் என்று ஒதுக்கி விடாதீர்கள்,அது உங்களுக்கு ஓர் நாள் கண்டிப்பாக வெற்றி அளிக்கும்,வரலாறு என்பது முதலில் தோல்வியை சந்தித்து வெற்றி பெற்றவர்களே,இந்த உலகத்தின் முன்பு அறிமுகப்படுத்தும்,மிகவும் நன்றி மேரி ஜெனிபர். தங்களுடனான இந்த உரையாடல் மகிழ்ச்சி தருகின்றது.

மேலும் உங்களுடைய யூடியூப் சேனலில் 5 மில்லியன் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.

   ✍️சுபா கிட்டு
Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×