Monisha Chandrasekaran

WhatsApp Image 2023 06 17 at 2.38.27 PM 1 1

பஞ்சு போன்ற இவளின்
பாதங்களின் அடியை
ஏந்திய மேடைகளும்
குயில் என கூவி
பாடிடும் இவளின்
குரலை தாங்கிய
மனங்களும் இன்பத்தில் மூழ்கி
போகின்றது அதில்
இருந்து மீள மனம்
இன்றி

மாடலிங் , பாடல், ஆல்பம் சாங் , நடிப்பு.பேஸன்ட்ரைய்னர் என்று பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் மாடலிங் மங்கை மோனிஷா சந்திரசேகரன் உடன் ஒரு இனிமையான சந்திப்பு.

நீங்கள் பாடகர் ஆன தருணங்களை பற்றி எங்களுடன் பகிருங்கள்

நான் ஆரம்பத்தில் ஒரு பாத்ரூம் சிங்கர் தான் எனக்குள்ளே முதலில் பாட ஆரம்பித்தேன்
அதன் பிறகு அதை என்னுடைய செல்போனில் பதிவு செய்தேன்.அதை என்னுடைய நண்பர்களுக்கும். சகோதிரிகளுக்கும் அனுப்பி வைத்தேன்.அவர்கள் என்னுடைய குரலை கேட்டு மிகவும் இனிமையாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள். அதை என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டேன்.

எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கூட நான் பாடுவது தெரியாது.நான் பாடி அனுப்பும் பதிவுகளின் பிண்ணனியில் எந்த ஒரு இசை பதிவும் இருந்தது இல்லை.
பின்னர் என்னுடைய நண்பர்கள் மூலமாகவே சங்கம் சேனலில் solo வாக பாடும் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.
அதை பற்றி நான் வீட்டில் கூறவில்லை. நான் தனியாக தான் அங்கு சென்று கலந்து கொண்டேன்.அந்த போட்டியின் பெயர் Wipe out. அதில் வெற்றி பெற்றேன் கையில் பரிசுடன் வந்த பின்பு தான் வீட்டில் இருந்தவர்களுக்கே தெரியும்.அவர்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் நீ பாடுவாயா என்று கேட்டனர். இதுவே எனது பாடல் அனுபவம்.

இதை தவிர்த்து நிறைய ஆல்பம் சாங் பாடி வருகின்றேன்.

நான் பாடிய ஆல்பம் சாங்
Ring ring kanmani
Ipl Story
Iragale sethiya kannu
போன்றவை ஆகும்.

எங்கோ ஒரு மூலையில் எனக்கு மட்டுமே கேட்டு கொண்டு இருந்த எனது குரலை இன்று பலரும் ரசித்து கேட்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மாடலிங் மற்றும் ஃபேஷன் ட்ரையினிங் பற்றி உங்களின் அனுபவம்

மாடலிங் செய்வதில் எனக்கு விருப்பம் உண்டு கல்லூரியில் படிக்கும் போதே ராம் வாக் செய்துள்ளேன்

பாட்டு மட்டுமே என்னுடைய உலகம் என்று பாடி கொண்டு இருந்த பெண் நான்.

அந்த சூழ்நிலையில் தான் எனக்கு நண்பர்கள் மூலமாக மாடலிங் காம்படிசன்ல கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அந்த சமயம் மாடலிங் பற்றி எல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது

இருந்தாலும் பங்கேற்றேன் .அந்த ஷோக்கு வந்திருந்த Judges மற்றும் பெரும்பாலன பார்வையாளர்கள் அனைவரும் என்னை பாரட்டினார்கள்.

உங்களை பார்க்கும் போது நல்ல ஒரு அனுபவம் வாய்ந்த மாடல் கேட்வாக் வருவதை போன்று உள்ளது என்று.

I won Miss fashion charm 2021 அதில் runner up டைட்டில் பெற்றேன்.

அதனை தொடர்ந்து Miss best catwalk of miss star of Tamil Nadu
டைட்டில் பெற்றேன்.

அதனை தொடர்ந்து பல கேட்வாக் ஷோக்களில் பங்கேற்றேன்

அந்த மாதிரியான நேரத்தில் தான் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது

ஒரு பேர்னஸ் கிரிம் விளம்பர படத்திற்க்காக எனக்கு மாடலிங்கில் தெரிந்ததை அங்கு இருக்கும் மாடல்களுக்கு பயிற்சி அளித்தேன்

அந்த சமயம் அங்கிருந்து விளம்பர கம்பெனியின் CEO ரெனால்ட் அவர்கள்
என்னை முதல் முறையாக பேஸன் ட்ரைய்னராக அறிமுகபடுத்தி வேலையில் அமர்த்தினார். அதில் இருந்து தொடங்கியது எனது ஃபேஷன் ட்ரெயினர் பணி

இன்று நிறைய பேர்களுக்கு கேட்வாக் கற்று கொடுத்து வருகின்றேன் 6 ஃபேஷன் ட்ரையினிங் ஒர்க் ஷாப் பணி செய்து முடித்து உள்ளேன்.
FASHION trainer for RFE modeling Work shop batch 5. 6.7.8.9

இயற்க்கையாகவே என்னுடைய நடை அழகாக இருப்பதாக எல்லோரும் கூறுவார்கள்

என்னிடம் மீடியா துறையில் இருந்து பல்வேறு பட்ட அனுபவம் வாய்ந்த பெண்கள் பயிற்சி பெற வருகின்றார்கள்.
எனது வேலையில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்.

பெரும்பாலும் என்னிடம் ஃபேஷன் ட்ரையினிங் பயில வரும் நபர்களிடம்
எனது வேலையை மிகவும் sincere ஆக கற்று
கொடுத்து வருகின்றேன்

மாடலிங் மங்கை சிங்கர் மற்றும் பேஸன் ட்ரைய்னர் என்று உங்களுக்கு உள்ள பல்வேறு திறமைகளின் கோணங்களில் அதிகம் கடந்து வந்த தடைகள் எது

பொதுவாக தடைகள் என்பது எல்லா துறைகளிலும் இருக்கும் அதுவும் மீடியா துறையில் அளவுக்கு அதிகமாக இருக்கும்.
அதிலும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம் தடைகள் நிறையாக இருக்கும்.

நான் சிங்கரா இருந்ததை விட மாடலிங் செய்ய போறேன்னு சொல்லும் போது அதிக எதிர்ப்பு வீட்டில் இருந்தே வந்தது .
மீடியா துறை அனுபவம் என்பது எங்களது குடும்ப பிண்ணனியில் யாருக்கும் இல்லை.

அதுக்கு அடுத்து வந்த விமர்சனங்கள் எல்லாம் என அதிகமாக இருந்தது.

அதுக்கு முன்பாக நான் ஒரு பெண்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ எனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டேன்.

அதுக்கு நிறைய கருத்துக்கள் பாராட்டுக்கள் எதிர்மறையான விமர்சனங்கள் என்று நிறைய வந்தன. இருந்தாலும் ஓரளவிற்கு சமூகத்தின் பார்வையில் அது கவனிக்க பட்டது.

அதன் பிறகு கொஞ்ச நாட்கள் நான் எதுவும் செய்யவில்லை.

என்னிடமே நான் மாற்றம் காண விரும்பினேன்

என்ன செய்வது என்று யோசித்த போது
என்னுடைய தலை முடியை ஹேர் ஷேவ் பண்ண முடிவு செய்தேன்.

எனக்கு மிகவும் நீளமான முடி அதை கேன்சரால் பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கினேன்.

என்னிடம் ஒரு மாறுதல் இருப்பது எனக்கே தெரிந்தது.

இதனால் இழப்பு என்றால் நிறைய கேட்வாக் ஷோக்களில் நிராகரிக்கபட்டேன்.

இதனால் நான் எந்த தயக்கமும் கொள்ளவில்லை.

நிறைய ஷோக்களில் நிராகரிப்புக்கள் நடக்கும்.

இதை தவிர்த்து ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் பெண்கள் ஒரு துறையில் முன்னேற வேண்டும் என்றால்
நிறைய இடங்களில் Adjustment வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றார்கள்

மீடியாவை பொறுத்த வரை இது அதிகம்

நான் என் திறமைகளை மட்டுமே துணையாக கொண்டு போராடுபவள்

அதனால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன்.

மேலும் நான் பணிபுரியும் துறை சார்ந்த செயல்களை ஆர்வமுடன் கற்று வருகின்றேன்.

உங்களின் நடிப்பு அனுபவம்

நான் தமிழ் நாடு பிலிம் இன்ஸ்டியூட் ல் ஒரு குறும்படம் நடித்துள்ளேன்

எனக்கான வாய்ப்புகள் வந்தாலும் நல்ல ஒரு கதாபாத்திரம் ஏற்று நடிக்க காத்திருக்கின்றேன்.

✍🏿சுபா கிட்டு

×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×