Aranthangi Nisha

Aranthangi Nisha

நகைச்சுவை உலகில் ஜொலிக்கும் தங்க தாரகையாய்புன்னகை என்னும் ஆபரணம் சூடிய பாரதியின் புதுமை பெண்ணாய்……. புதுக்கோட்டை அறம் தாங்கி கிராமத்தில் பொன் மகளாய் பிறப்பெடுத்து….. ஏழ்மை எண்ணி நகைத்த போதிலும்அதை கண்டு சிறிதும்கலங்காது…. புயலென சீறி கர்ஜித்தசிங்க பெண்ணே… புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி உன் திறமைக்கு அடிகோலாய்…. கருத்தம்மா என்று அடைமொழி இட்டு அன்று அழைத்தவர்களுக்கு தெரியுமா….. இன்று கருத்தாழம் மிக்க நகைச்சுவை சிந்தனைகளின் பிறப்பிடத்தின் ஊற்றுநீ என்று…. திறமை உள்ளவர்களை முதலில் எண்ணி நகைக்கும் விசித்திர சமுதாயம் இது…. மனம் நோகும் போது எல்லாம் நகைச்சுவை நடிகர் வடிவேல் அவர்களின் நகைச்சுவை ஊன்றுகோலாய் தோல்விகள் பல கடக்க துணையாய் நின்றது… பெண்கள் என்றும் சாதிக்க பிறந்தவர்களேஅந்த பெண்களின் சாதனை சரித்திரம் தன்னில் முயற்ச்சியும்சாதனையும் பொன் எழுத்துக்களாய் உன்புகழ் பாடட்டும் கல்லூரி காலம் கனவினை மெய்பித்ததுபட்டி மன்ற பேச்சாளராய் பலர்அறிந்திட செய்தது…. வாய்ப்புகள் உன்னை நாடி வரிசையில் தவம் நின்றிடவே….. இதன் இடையே இல்லற வாழ்வின் துணையான ரியாஸ் இருகரம் கோர்த்து லட்சிய பாதையில் இணைந்துபயணிக்க…. தடைகள் பல தகர்த்து எறிந்தாய் தங்க பெண்ணே…… ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் என்றநிதர்சனங்கள் மாறி…. உங்களின் வெற்றிக்கு பின்னால் உங்கள் கணவர்…. திறமைகள் பல உன்னை அணி வகுத்துதன் பெயர் இட்டு கொள்ள…. அழைத்தது சின்னத்திரையில் விஜய் டி.வி. கலக்கப்போவது யாரு சீசன் 5உன் நகைச்சுவையைதிரையிட்டு காட்டியதுவெளி உலகிற்கு… பெண்கள் முன்னேற்றம் என்றாலே விமர்சித்து வீண் பலி போடும் உறவுகளின் மத்தியில்…. சிறிதும் அதை எண்ணிமனம் நோகாதுஉங்களை சாதிக்க வைத்த ரியாஸ் அவர்களின் செயல்இந்த சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டே… சின்னத்திரையில்பல போராட்டங்களையும்கடந்து வெற்றி சாதனைகள்Vj ..Mr mrs சின்னத்திரை…கூக்கு வித் கோமாளி ..பிக்பாஸ் 4 என நீண்டு செல்ல… 800க்கும் மேற்பட்ட மேடை நிகழ்வுகள்…யூடியூப் சேனல் என்று புகழின் உச்சம் தொட்டசெந்தமிழ் பெண்ணே…. உன்னை கண்டு பெருமிதம் கொள்கிறதுபெண்கள் இனம்… வெள்ளித்திரையிலும்வீறு கொண்டு களம்இறங்கி சாதனைகள் என்பதுஉனக்கு சாதாரண நிகழ்வு என்று திறமைமீது நம்பிக்கை கொண்டு நடித்த திரைப்படங்களின்வரிசைகள் இதோ கலகலப்பு_2இரும்பு திரைஆண்தேவதைகோலமாவு கோகிலா உன் விடா முயற்சிக்குவெற்றி கனியாய் விளங்கி வலம் வர… மேலும் தொடரட்டும் திரையுலக வெற்றி பயணம்…. நிறம் கண்டு மனம் வெந்து.. வறுமையின் பிடியில் தன் திறமைகளை மரணிக்க வைக்கும் பெண்களிற்க்கு…. நம்பிக்கை வித்திடும்உன் நகைச்சுவை கலைஉலகின் போராட்டவெற்றி பயணம்….. பணம் கொண்டு ஆற்றமுடியாத மனதின் கவலைகள் எல்லாம்உன் புன்னகை கொண்டு ஆற்றிடும்புன்னகை அரசியே பொன் இதழ்கள் சிந்தும்நகைச்சுவை அமிர்தத்தை கேட்டு வியந்திட தவம் இருக்கிறது இச் சமுதாயம்….. புனிதம் நிறைந்த உங்களின் நகைச்சுவைபணி தொடரட்டும்.. சின்னத்திரை வெள்ளி திரை என்று திக்கெட்டும் உங்களின்புகழ் வெற்றி முரசு கொட்ட வாழ்த்துகிறது.

Aranthangi Nisha Read More »