போராட்டங்கள் என்பது இவனுக்கு புதிதல்ல
பள்ளியில் சிறந்த பேச்சாளனாய் விளங்கிய உன்னை!
சின்த்திரையின் அரட்டை அரங்கம்
மக்களிடம் சிரிப்பும் சிந்தனையுமாக கொண்டு சேர்த்திட!
வறுமையை தனக்கு துணையாக
கொண்டு!
கலைத்துறை மேடைகளில் ஏறிவிட
கனவுகள் பல கண்டு!
வாய்ப்புகள் தேட துணிந்தான்! சிங்கார
சென்னையில்!
ஏவிஎம் ஸ்டுடியோவில் சந்திரன் அவர்களின் அறிமுகம்! நம்பிக்கை தரவே!
பல நிறுவனங்களின் வாசல் படிகள் ஏறி!இறங்கினான்!
அவமானங்கள் அங்கே கண்டபோதும்
அதனை அலட்சியங்கள் செய்து!
சோதனைகளின் முள் சாலையை கடந்து
முன்னேறி சென்றாய்!
விஜய் டிவியின் கலக்கபோவது யாரு ன்
நகைச்சுவை மன்னனே
ஒத்தை ரோசாவையாய் நகைச்சுவையில்
மக்களின் உள்ளங்களில் மலர்ந்த
பொன்னான புன்னகை கலைஞனே!
குறும்படங்களிலும் நடிப்பில் சாதனை படைத்தாய்
திருநங்கையான கதாபாத்திரம்
உனக்கு மேலும் புகழ் சேர்த்து
சென்றது!
சிந்தனைகள் உள்ள உன் நகைச்சுவை
சீர்திருத்த கருத்துக்கள்!
சமுதாய அவலங்களை
கலையட்டும்
இனிவரும் வாய்ப்புக்களும் உனது
வெற்றியை புன்னகைத்து உயர்த்தட்டும்!
வெள்ளி
திரையில் உன் திறமைகள் வெளிவரும்
காலம் வெகு தொலைவில் இல்லை!
சின்னத்திரை வெள்ளி திரையில் சாதனைகள் படைக்க காத்திருக்கும்
சிறந்த நாயகனே!
நகைச்சுவையில் ஆயிரம் மேடைகள் கண்ட உனது புகழ்.. மென்மேலும் வளரட்டும்
என புன்னகை கிரீடம்
சூடி உன்னை வாழ்த்துகிறது .