குயில் என தன்
குரலின் இனிமையினால் ரசிகர்களின் மனம்
தீண்டி
நடிப்பு நாட்டியம்
இசை என
கலைகளின் அனைத்து அழகிய
முகங்களிலும் ஒளிர்ந்து
வெள்ளி திரையில்
ஒளிர்ந்தும் மேலும்
அழகுற ஒளிர காத்திருக்கும் cute beauty பவித்ராவிடம்
ஒரு அழகான நேர்காணல்.
உங்களின் நடனம் இசை பாடல் பற்றி
அழகான உங்களின் குரலில் இனிமையாக
எங்களுக்காக கூறுங்கள் பார்க்கலாம்..?
என்னுடைய சிறிய வயதில் இருந்தே எனக்கு இசையின் மீது தீராத காதல்.
நான் பிளஸ் ஒன் படிக்கும் போதே
என்னுடைய பரதநாட்டிய நிகழ்ச்சியினை அரங்கேற்றம் செய்தேன்,அது மட்டும் இல்லாமல் கர்நாட்டிக் மீயூசிக்கும் அரங்கேற்றம் செய்தேன், எனக்கு பாடுவதில் மிகவும் ஆர்வம் அதிகம்.
உங்களின் இசை உலக வாழ்வில் நடிப்பின் பயணம் எப்போது தொடங்கியது…?
இந்த ஒரு வருட காலமாக தான்
என் நடிப்பின் மூலமாக நடிப்பு துறையில் முன்னேறி வருகின்றேன்.
நடிப்பு என்பது என்னுடைய பேஷன்.
சினிமா துறையில் சிறந்த ஹீரோயினி ஆக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் ஆகும்.
அதையும் தாண்டி சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்.
சிறந்த குணச்சித்திர நடிகையாக வேண்டும் என்பதும்
எனது கனவு ஆகும்.
அதற்கான வாய்பிற்க்காக நான்
காத்திருக்கின்றேன்.
மிகவும் விரைவாகவே வெள்ளி திரையில் எனது நடிப்பு வெளிவரும் அது மக்களின் மனதில் என்னை ஒரு திறமையான நடிகையாக நிலை நிறுத்தும்… அந்த தருணங்களே என் வாழ்வில் சிறந்த மகிழ்ச்சியான தருணங்கள் ஆகும்.
நாட்களும் நேரங்களும் எனக்கான அந்த மகிழ்ச்சியான தருணங்களை ஏந்தியே காத்திருக்கின்றன என்பது எனது நடிப்பின் திறமை மீது நான் கொண்ட நம்பிக்கை ஆகும்.
நீங்கள் பாடிய பாடல்களின் ஆல்பங்கள் உங்களின் குறும்படங்கள் பற்றி சொல்லுங்கள்
இந்த ஒரு வருடத்தில்
நான் நடிப்பு மற்றும் இசை துறையில் அடைந்துள்ள முன்னேற்றம் என்னை பொறுத்த வரையிலும் ஒரு மன நிறைவையே அளிக்கின்றது என்றே சொல்கிறேன்
ஏன் என்றால்.இங்கே கலை உலகை பொறுத்தவரையிலும்.இங்கே திறமையானவர்கள் மிகவும் அதிகம்
ஆனால் அவர்களுக்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு.
அதுவும் யாருடை உதவியும் இல்லாமல் சினிமா சார்ந்த துறைகளில் முன்னேறுவது என்பது நாம்\” கண்களை கட்டி கொண்டு சரியான இலக்கை அடைய போராடும் கஷ்ட்டங்கள் நிறைந்த நிலையே ஆகும்.
நானும் அதே போல் தான்.
என்னுடைய திறமையினாலே இந்த குறுகிய காலத்தில் இசை மற்றும் நடிப்பு துறையில் முன்னேறி வந்துள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சியும் மேலும் தன்னம்பிக்கையும் தருகின்றது.
நான் இரண்டு பைலட் ஃபிலிம் மில் லீட் கேரக்டரில் நடித்துள்ளேன். சில மியூசிக் ஆல்பங்கள் பாடியும், பல மீயூசிக் ஆல்பங்கள் பாடி கொண்டும் இருக்கின்றேன். இது மட்டும் இல்லாமல் அவார்டுக்காக அனுப்பப்பட்டுள்ள குறும்படங்களில் நடித்து உள்ளேன்.
மேலும் என்னுடைய விருப்பங்களில் ஒன்று வேறுபட்ட பெண் கதாபாத்திரம்
ஏற்று நடிக்க வேண்டும் என்பது ஆகும்.
Pilot film – Manik Antony
And uruttu.
(Going to be released in mxplayer)
Music album name illatarasi.
இந்த கலை துறையில் நீங்கள் கடந்து வந்த கடின பாதைகள் பற்றி….?
என்னை பொறுத்த வரையிலும் எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற வேண்டும் என்றாலும்.அதில் பல கஷ்டங்களையும் நிராகரிப்புகளையும் கடந்தே வர வேண்டும்.
அதிலும் சினிமாவை பொறுத்தவரை அது கொஞ்சம் அதிகம் என்றே கூறலாம்.
ஒரு 100 ஆடிசனில் கலந்து கொள்ளும் போது அதில் இரண்டு ஆடிசனில் தான் தேர்வு செய்ய படுவோம்.அதிலையும் ஒன்று தான் சூட்டிங் வரை போகும்.அதுவும் release ஆவது என்பது கடினமே.
உங்களின் படிப்பு பணி பற்றி சொல்லுங்கள்…?
நான் பிளஸ் டூ திருச்சியில் பயின்றேன் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றேன்.
பின்பு NIT நாக்பூரில் இன்ஜினியரிங் பயின்றேன். தற்போது ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகின்றேன்.
இருந்தாலும் அந்த வேலை எனக்கு மனநிறைவை தந்தாலும்.
சினிமா மற்றும் இசை துறையில் நான் ஈடுபடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினையும் மன நிறைவினையும்
தருகின்றது.
என்னை பொறுத்த வரையிலும் வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என்பது இருக்க தான் செய்யும்.
நாம படிச்ச படிப்புக்கான வேலையை விருப்பம் இல்லாமல் செய்யிறத விட நமக்கு புடிச்சு ஒரு வேலை செய்யிறப்ப
ஒரு மன நிறைவு கிடைக்கும்.
ஏன்னா நம்மளோட கல்வி நமக்கு ஒரு சுமையா மாறிட கூடாது என்பது என்னுடைய கருத்து ஆகும்.
Cute beauty பவித்ரா அவர்களின் வெள்ளி திரை மற்றும் இசை உலக சாதனைகள் தொடர்ந்து வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம்.
✍️சுபா கிட்டு