PRATHU

WhatsApp Image 2023 05 25 at 3.35.05 PM

ஆதி என்ற கதாபாத்திரம் மூலம்
மக்களின் மனதில் அன்பில் அடிமையாகி இருக்கும்…

இன்றைய விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் சிறந்த நடிகனே…

துள்ளி திரிந்த மழலை பருவத்தில் மின்னி ஒளிர்ந்தது பேச்சு திறமை…..

தோல்விகள் பல கடந்து
சாதிக்க துடித்தாய்
சரித்திரத்தின் வெற்றி பக்கங்களில் உன்னை எழுதிவிட….

மாடலாக தொடங்கியது உனது கலைத்துறை பயணம் அழகாய்….

திறமை கொண்ட நடிப்பும்
உனது வசீகரப்பான தோற்றமும்

விளம்பர படங்கள் உன்னிடம் வாய்ப்புகள்
நாடி வர வழிவகுத்தது….

உனது கடின முயற்ச்சிகளால் ஓய்வின்றி உழைத்தாய்
……

அதில் அமுல் இந்தியா.
ஜி.வி.எம் அவர்களின் தயாரிப்பில் மலபார்கோல்டு விளம்பர படங்கள்

விளம்பர உலகில் உனக்கென ஒரு தனி இடத்தை முத்திரை பதித்து சென்றது…

தோல்விகள் இன்றி வெற்றி வரலாறுகளா
அறவே இல்லை…

தோல்விகள் கண்டு மனம் வருந்தாது…
தடைகள் கண்டு உனது
இலக்கு தடம் மாறி போகாது….

சோதனைகளை
இன்முகம் கொண்டு வரவேற்று
சாதிக்க துடித்தாய்…

மிஸ்டர் டேலன்ட் சோ
சவுத் இன்டியா
2018
பேஸ் ஆப் சென்னை
சோ என
வெற்றி ஒளி வீசினாய்
கலைத்துறை வானில்….

சீறும் சிறுத்தையென
எதிர் கொண்டு
சின்னத்திரை களம் புகுந்தாய்…..

நீ சாதிப்பாய் என்று
கலைஉலகம் அதன்
கைகளில் ஏந்தி கொண்டது…..

நண்பர்கள் உன் திறமை கண்டு ஊக்குவிக்க….

2000 பேர்க்கள் கலந்து கொண்ட ஆடிசன் சோவில்

சிவகார்த்திகேயனின்
டயலாக்கினை பேசி
முன்னேறி சென்றாய்
வெற்றியை நோக்கி..

பேச்சுக்கென ரசிகர்கள் பட்டாளம்
உனது நடிப்புக்கென
ரசிகர்கள் பட்டாளம்
என்று படை திரண்டு
பாராட்டிட ….

வெப்சீரியல் .. யூடியூப் ஆங்கர் என பல கோணங்களில் உனது
திறமைகள்…

சின்னத்திரை மேடையில் அரங்கேறியது…..

இவ்வளவு திறமைகளை கொண்ட
உன்னை மறுத்திடுமா
சின்னத்திரை….

ஜெயாமேக்ஸ்ஸ் சேனலில் இருந்து வந்தது அழைப்பு
மேக்ஸ்ரிச்அவுட் சோவினை தொகுத்து வழங்கிட…..

ஆங்கர் உலகில் புகழின்
பெயர் பெற்றாய்….

கர்ஜிக்கும் சிங்கமாய்
கலை உலகில் போராடி
வெற்றி பெறும் கலைஞனே…

இது போன்ற எண்ணற்ற வாய்ப்புகள்
உன் சிந்தை திறன்
கண்டு வந்து சேர்ந்திட

சின்னத்திரை மட்டும் அல்லாது வெள்ளி திரையிலும் வெற்றி
நாயகனாய் சாதித்திட

நாளைய கலை உலகம் உன்னை கண்டு
வியந்து வாழ்த்திட …

திறமையின் உருவான நாயகனான ப்ரூதோஸை
வாழ்த்தி மகிழ்கிறது .

✍🏿 subha kittu

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×