மயில் தோகை விரித்தாடி
நடனம் பழகும் இவளிடம்
தன் திறமை மிகுந்த அழுகுற நடனத்தால்
மக்களின் மனம்
வென்ற நாட்டிய
பெண்ணே…!
பள்ளி காலத்தில் தொடங்கியது உன் நடனத்தின் பயணம்
நடனம் மட்டும் இவளின்
அறிமுகம் அல்ல
பள்ளி நாட்களில்
ஆர்ட்டிஸ்ட், நேஷ்னல் பிளேயர்.சிங்கர் என்று
திறமையின் பல
பெயர்கள்
முகவரிகள் இட்டு
கொண்ட உன்னிடத்தில்
சாதிக்க போராடும் பெண்களை எளிதில்
விமர்சித்து விடுபவர்கள் இங்கே
பலர் உண்டு
அதில் வெந்து தனிந்துவிடாது
சாம்பலில் உயிர் பெறும்
பீனிக்ஸ் பறவையாய்
சிறகுகள் விரித்து
பறந்தாள் நடன
வானில்
எண்ணற்ற நடன மேடைகளில் இவள்
காலின் சலங்கை
கொஞ்சி ஒலித்திட
வந்தது பல நடன வாய்ப்புகள் உன்னை
தேடி
இசை இன்றி நடனமோ
இவர் இன்றி உனது
நடனத்தின் அசைவுகளோ
உன் லட்சிய பாதையில்
இணைந்து கைகோர்க்கும் கணவர்
முரளிதரன்
உன் வெற்றியின் பின்னால் இருந்து
உயர்த்திடும் நல்
மனிதராய்
அவரை புகழ்ந்து
வணங்கிட உனக்கு
மொழிகள் போதாது
என்று உன் கண்கள் கூறுகிறது நன்றிகள்
காதலாலய்
உற்ற துணையாக உயிர் தோழி
ரிதன்யா
உடன் இருந்து
தன்னம்பிக்கை ஊட்டும் அம்மா மீனா நாயர்
உன் மனமோ
நன்றிகளின் மகிழ்வாய் இன்றும்
இவர்களுக்கு
உன் வலிகள் கடந்த
நடனத்தின் சாதனை
பயணங்கள்
இனிவரும் இளைய
தலை முறைக்கு
நம்பிக்கை பாதையாக
அமையட்டும்
தமிழகம் மட்டுமின்றி
உலகெங்கிலும் உன்
ஒர்க் ஷாப்பில்
இருந்து திறமை வாய்ந்த நடன
கலைஞர்கள் பலர்
உருவாகட்டும்
வெள்ளி திரைகளில் பல கொரியோ கிராபி
வாய்ப்புகள் நாடி
வந்து
விருதுகள் உன் கரங்களில் ஒளிரட்டும்
என்று
உம்மை இன்றும் என்றும் வாழ்த்தி மகிழ்கிறது .