Rajalakshmi

WhatsApp Image 2024 05 25 at 12.52.38 PM

“வாழ்க்கை என்பது குறுகிய காலமே..!
அதில் நம்மால் முடிந்த வரை பிறரை மகிழ்வித்து வாழ வேண்டும் என்ற மிகவும் அழகான குறிக்கோள் கொண்டு. கல்லூரி புரொபஸர். சிறந்த பரத நாட்டிய மங்கை. சமூக சேவகர்.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை என பல்வகை திறமை கொண்டு வலம் வரும் ராஜலெட்சுமி ( Rajalakshmi )அவர்களுடன் ஒரு இனிமையான நேர்காணல்.

Name Rajalakshmi
Fathers name Goapalakrishnan
Mothers namevasugi
Dob 29/11/1999
Native place Chennai
School name voc vidyalaya
Clg name CTTE college
Current placeChennai periyar Nagar
Occupation acting, professor in Ambedkar Government College
Degree MSW medical and psychiatric
HighlightsNothing is impossible until we do without any with betrailing
Awards/recognitionbest actress & dancer awards star icon achievers & SITA
Movie names or ablum or advertisements namesYaathisai

உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் ராஜலெட்சுமி ( Rajalakshmi )?

என்னுடைய சொந்த ஊர் சென்னை தான். School studies எல்லாம் Voc Vidyalaya படித்தேன். CTTE கல்லூரியில் MSW (Medical and psychiatric)படித்தேன். அடுத்ததாக PhD படிக்க உள்ளேன்.

ஒரு கிளாசிக்கல் டான்ஸர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்போது உருவானது( Rajalakshmi ) …?

நான் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே நடனம் ஆடுகிறேன். பரதநாட்டியம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய ஐந்து வயது என்றே நினைக்கிறேன் அப்பொழுது இருந்தே பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பரதநாட்டியத்தில் B.A. படித்து உள்ளேன்.

நீங்கள் பரதநாட்டியம் கற்றுக்கொண்டது உங்களது கல்லூரி வாழ்வில் எப்படி முக்கிய பங்கு வகித்தது அதைப் பற்றி சொல்லுங்கள் ராஜலெட்சுமி( Rajalakshmi ) ?

என்னுடைய கல்லூரி வாழ்வில் நாட்டியம் என்பது ஒரு முக்கிய பங்கு வகித்தது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் நான் எங்கள் கல்லூரியில் கல்ச்சுரல் சார்பாக எந்தவொரு நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதில் முக்கி பங்கு வகித்துள்ளேன்.அது எனக்கு ஒரு மகிழ்ச்சியான உணர்வை தந்தது.

கல்லூரி படிப்பு, பரத நாட்டியம் என்று மிகவும் பிஸியாக இருந்த நீங்கள் எப்படி சினிமா துறைக்கு வந்தீர்கள்? நடிகையாக வேண்டும் என்ற கனவு உங்களுள் இருந்ததா( Rajalakshmi ) ?

நான் நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எண்ணுள் இருந்தது இல்லை. எனது கல்லூரி படிப்பின் போது என்னுடைய HOD மேம் அவர்களின் பெயர் மெடில்லா அவர்கள் மூலமாகவே எனக்கு யாத்திசை பட வாய்ப்பு கிடைத்தது.ஏனென்றால் நான் ஒரு கிளாசிக் டான்ஸர். அந்த படத்திற்கு ஒரு பரதம் தெரிந்த நபர் தேவை என்பதால் அந்த வாய்ப்பிற்க்காக நான் சென்றேன். அப்பொழுது என்னுள் நாட்டியத்தில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற தேடல் இருந்து.
யாத்திசையில் கொரியோகிராப்பிற்க்காக நான் சென்ற போது அவர்கள் 7th சென்ச்சுரிக்கான நடனத்தைக் பற்றி என்னிடம் சொன்னார்கள்.அதைப்பற்றி நான் ஆய்வு செய்ய தொடங்கினேன். அப்பொழுது அந்த படத்திற்கான ஹீரோயின் ஆடிசன் நடைபெற்றது. அதில் தேர்வானவர்களில் சிலருக்கு அந்த ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பரத நாட்டியம் ஆடுவது என்பது சிறது கடினமான ஒன்றாக இருந்தது. இறுதியில் நான் ஏன் அதில் நடிக்க கூடாது என்ற எண்ணம் தோன்றவே அதில் நடிக்க சம்மதித்தேன். இதற்காக என் உடல் எடையை கடின உடற்பயிற்சிகள் மூலம் குறைத்தேன்.
இவ்வாறு தான் ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் நான் அறிமுகமானேன். தற்போது அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் வருகின்றன.அதில் நடித்து கொண்டு இருக்கின்றேன்.

தற்போதைய சினிமா உலகில் வாய்ப்பு தேடி வரும் நபர்களின் நிலை என்னவாக இருக்கிறது உங்களின் பார்வையில் அதைப் பற்றி சொல்லுங்கள் ராஜலெட்சுமி( Rajalakshmi )..?

சினிமா உலகில் வாய்ப்பு தேடி வரும் நபர்களிடம் திறமை இருந்தும் இங்கே பலர் நிராகரிக்கப்படுகிறார்கள் அதற்கு காரணம் இன்றைய சமூக வளைதளங்கள் என்பது என்னுடைய கருத்து. பொதுவாக இன்ஸ்ட்டாகிராம் போன்ற பக்கங்ககளில் திறமை இருப்பவர்களுக்கு நிறைய பாலோயர்ஸ் அமைவது இல்லை. இதனால் பட வாய்ப்புக்களுக்காக அவர்கள் ஆடிசனுக்கு சென்றாலும் கூட அவர்கள் மக்கள் மத்தியில் அறிமுகம் அல்லது பிரபலமான முகம் இல்லை என்று பல இடங்களில் அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.சினிமா உலகம் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்க்கான நடிப்பு திறமை அவர்களிடம் உள்ளதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். தமிழ் சினிமா உலகம் அன்று மிகச்சிறந்த நடிகர்களை எல்லாம் அவர்கள் திறமையின் மூலமே தேர்ந்தடுத்தது.ஆனால் இன்று அந்த நிலை மாறி வருவது வருத்தம் அளிக்கின்றது.

உங்களுடைய டான்ஸ் அகாடமி பற்றி சொல்லுங்கள் அதில் எந்தவகையான நடனத்தை நீங்கள் கற்று தருகின்றீர்கள்( Rajalakshmi )…?

நான் ராஜலெட்சுமி பைன் ஆர்ட்ஸ் அகடாமி என்ற பரதநாட்டிய அகடாமி ஒன்றை சென்னையில் நடத்தி வருகிறேன்.இங்கே பாரம்பரிய முறைப்படி நாட்டியத்தை என்னுடைய மாணவர்களுக்கு கற்று தருகிறேன்.நாட்டியம் பழகும் ஆர்வமும், திறமையும் இருந்தும் கூட சிலரால் வறுமையின் காரணமாக நாட்டியம் பழகுவது என்பது இயலாமல் போகிறது.அவ்வாறு உள்ளவர்களுக்கு என்னால் இயன்ற வரை இலவசமாக நாட்டியம் கற்றுக் கொடுக்கின்றேன்.நான் என்னுடைய நடன அகடாமியை மிகவும் ஆத்மார்த்தமாக நடத்துகிறேன்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக சேவகராக உங்களின் பணிகள் பற்றி சொல்லுங்கள் ராஜலெட்சுமி?

பாதிக்கப்பட்ட மற்றும் நலிவுற்ற மக்களுக்கு நாம் ஓரிரு நாள் சமூக சேவை செய்வதால் அது அவர்களின் நிலையை மாற்றிவிடாது. அதற்கு மாறாக அவர்களின் அந்த நிலை மாற அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அளித்து வாழ வழிகாட்ட வேண்டும்.அவ்வாறு செய்வதால் இந்த சமுதாயத்தில் அவர்களின் வறுமை மறைந்து வாழ்க்கை தரம் உயரும். இதையே என்னுடைய சமூக பணிகளிலும் மேற்க் கொண்டு சமூக சேவை செய்து வருகிறேன்.

யாத்திசை படத்தில் உங்களின் கொரியோகிராபி பற்றி சொல்லுங்கள் ராஜாலெட்சுமி..?

அதில் நான் பாராம்பரிய நடனத்தின் ஆரம்பநிலையான தாசி ஆட்டம், சதுராட்டம் கொரியோகிராபி செய்தேன்.அது எனக்கு ஒரு வித புது அனுபவத்தை தந்தது. சினிமாவை பொறுத்தவரை மிகவும் புகழ் பெற்றவர்கள் செய்யும் செயல்களே பேசப்படும்.வளர்ந்து வரும் கலைஞர்களின் திறமைகள் ஏனோ மறைக்கப்படுகின்றன. அது போலவே யாத்திசை படத்தில் என்னுடைய கொரியோகிராபியும் பெரிதாக பேசப்படவில்லை. இருந்தாலும் கூட நான் என்னுடைய நடன பணியை மிகவும் சிறப்பாக செய்தேன்.

யாத்திசை படக்குழுவில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள் ( Rajalakshmi )…?

மிகவும் அழகான அனுபவங்கள் என்றே கூற வேண்டும். அந்த படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அதிகப்படியான உடல் உழைப்பினை அளித்துள்ளனர்.அதிலும் அஸிஸ்டன்டன் டைரக்டர் 17 பேர் மழை, வெயில் பாராமால் உழைத்து உள்ளனர். இக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்கிறேன். அதில் யாத்திசை இயக்குனர் திரு. தரணி ராஜேந்திரன் அவர்கள்.
மற்றும் வீனஸ் இன்போ டெயின்மென்ட்‌ திரு .சக்தி அவர்கள் இந்த இருவருக்கும் மிகவும் நன்றி சொல்கிறேன்.

உங்களின் எதிர்கால கனவுகள் பற்றி சொல்லுங்கள் ராஜலெட்சுமி..?

சிறந்த நடிகையாக வேண்டும் என்பதே என்னுடைய கனவு மற்றும் விருப்பம் ஆகும். எனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறேன்.அது மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.

சினிமா துறையில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது அதை பற்றி உங்களின் பார்வை…?

பெரும்பாலும் ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்களின் கதாபாத்திரம் இருப்பது இல்லை. இந்த நிலைமை மாற வேண்டும். விரல் விட்டு எண்ணும் அளவிலேயே பெண் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் உள்ளன என்பது சிறிது வருத்தம் தருகிறது.

நீங்கள் சினிமா மற்றும் நடனத்துறையில் வாங்கிய விருதுகள் பற்றி சொல்லுங்கள் ராஜலெட்சுமி ?

Best actress & dancer awards star icon achievers & SITA.

உங்களைப் போல் சினிமா துறையில் சாதிக்க வருபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ராஜலெட்சுமி…?

எத்தனை தடைகள் வந்தாலும் அதில் கவனம் செலுத்தாமல் உங்களின் இலக்குகள் நோக்கி செல்லுங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். உங்களின் இந்த நேர்காணல் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.சிறந்த நடிகையாக வேண்டும் என்ற உங்களின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×