ஆறாம் வகுப்பில் இருந்தே எம்.ஜி.ஆர்.
சிவாஜியென ஆரம்பித்தது மிமிக்ரி பயணம்!
விஜய் டிவியின் கலக்கபோவது யாரு சீசன் 6ன் நகைச்சுவை
நாயகனே….
இன்று பல குரல்களில் ஒலிக்கின்றது உனது திறமையின் புகழ்!
பள்ளி கல்லூரி காலங்களிலேயே
பல குரல்களின் மன்னனாய்
நண்பர்களை மகிழ்வித்து வலம்
வந்தாய்!
சாதிக்க துடித்திடும் உம்மை
சில நேரங்களில் சோதனைகள் துரத்தியது உண்டு!
பொறியியல் கல்வி பயின்று ஐடியில் மூன்று
ஆண்டுகள் பணிபுரிந்தபோதும்
உனது கனவு காத்திருந்தது மிமிக்கிரி
துறையில் சாதனைகள்
படைத்துவிட!
விஜய் டிவியில் கலக்கபோவது யாரு சீசன் 5 ஆடிசனில் பங்கேற்ற போதிலும்..
சிறிது சரிவு கண்டாய்
அது உன் சிந்தனைகளை முடக்கி
விடுமா என்ன?
தொடர்ந்து முயன்று
தோல்விகள் பல கடந்தாய்!
மீண்டும் ஒரு ஆடிசன்
விஜய் டிவியில்
கலக்கபோவது யாரு சீசன் 6ல்
தாமஸனின் முன்னிலையில் அதில்
தகுதி தேர்வு பெற்று
விட….
உன் வாழ்வில் தடைகள்
பல நீங்கியது!
மீடியாவில் உனக்கென தனி
முத்திரை ஒன்றை
பதித்து சென்றது!
உலகெங்கிலும் விஜய் டிவியில் ஒலிக்க தொடங்கியது உனது
புகழ்!
சாம்பின் சாம்பியன்2
அஞ்சாத சிங்கம்
காமெடி ராஜா
கலக்கபோவது யாரு
என பல நிகழ்ச்சிகளில்
மக்களின் மனதில் புன்னகையோடு உறவாட. தொடங்கி
அவர்களின் பொன் மகனானாய்!
கோவை குணா ரோபோசங்கர் சிவகார்த்திகேயன் என
பலர் உனக்கு
முன்மாதிரியாக அமைந்து விட!
மேலும் நம்பிக்கை உற்ச்சாகம் கொண்டாய்
சின்னத்திரையில் சாதனைகள் படைத்து
வரும் இவனை
வெள்ளி திரை வாய்ப்பு
வழங்கி அழைத்து
கோஷ்டி திரைப்படம்
மூலமாக!
தொடரட்டும் வெள்ளி திரையில் பல வெற்றி படங்கள்!
சின்னத்திரை வெள்ளி திரைகளில் நடிப்பு
மிமிக்ரி என்று பல
வெற்றி வாய்ப்புகள்
பெருகட்டும்!
கலைத்துறையில் சாதிக்க முயலும்
இளைஞர்களுக்கு..
உனது சாதனை பயணம் நம்பிக்கை
பாடமாக அமையட்டும்
கலை துறையில் நீ பல
விருதுகள் பெற்று வெற்றி சரித்திரம் உம்மை ! பேசிட!
வாழ்த்தி மகிழ்ச்சி
அடைகிறது .
✍🏿 subha kittu