Rekha srii

WhatsApp Image 2024 03 31 at 7.29.00 PM

தன்னுடைய அழகான ரீல்ஸ் மூலம் இன்ஸ்டா பக்கத்தில் பிரபலமாகி வரும் மாடல் ரேகா ஸ்ரீ உடன் ஒரு அழகான நேர்காணல்.

NameRekha srii
Fathers nameKANDHASAMY
Mothers name SANTHAMANI
Dob30.06.2001
Native placeNallichittipalayam village
School namekg school
Clg namekg college of arts and science
Current placeNallichittipalayam
Occupationmodel Instagram influencer
DegreeBachelor of computer application
Awards / regonanision zeal awards ( favourite eye catcher )and AR. entertainer -( best insta frame )
Special moment of ( Rathnam College of arts and science invited guest of this college )

உங்களுடைய சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் ரேகா ஸ்ரீ….?

என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லிசட்டி பாளையம்,இது என்னோட அம்மா பிறந்த ஊர், இங்க தான் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம். 

அதுக்கு அடுத்து நான் படிச்சது எல்லாம் இந்த பகுதியில் இருக்கிற Kg school மற்றும் kg arts and science college ல தான்.
எனக்கு நர்ஸிங் படிக்க விருப்பம் இருந்தது, ஆனால் என்னால் நர்ஸிங் படிக்க முடியவில்லை, அதுக்கு அடுத்து நான் கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.தற்போது TNPSC தேர்வுக்காக படித்து வருகிறேன்.

உங்களுக்கு எப்பொழுது மீடியா துறையில் ஆர்வம் வந்தது ரேகா…?

எனக்கு ஆரம்பத்தில் மீடியா துறையில் ஆர்வம் எல்லாம் ஒன்றும் இல்லை. நான் கல்லூரியில் படிக்கும் போது பிரண்ட் டிக்டாக் போடுவாங்க அதுலை நானும் இருப்பேன்.அதுலை ஓரளவுக்கு எனக்கு பார்வையாளர்களிடம் வரவேற்பு இருந்தது.அதுக்கு அடுத்து சரி நம்ம ஏன் தனியா டிக்டாக் பதிவுகள் போட கூடாதுன்னு நினைச்சு நான் போட ஆரம்பிச்சேன் அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது, அதுனாலை தொடர்ந்து பதிவுகள் போட ஆரம்பித்தேன்.
அந்த சமயம் டிக்டாக் தடை பண்ணுவாங்க.
அதுக்கு அடுத்து இன்ஸ்டா பக்கம் ஆரம்பித்து அதுலை என்னோட ரீல்ஸ் எல்லாம் பதிவிட ஆரம்பித்தேன்.அது எனக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஒரு நல்ல அறிமுகத்தையும் வரவேற்ப்பையும் கொடுத்தது.
நான் இன்ஸ்டா பக்கம் பிரபலமாகி வரும் போது தீடீர்ன்னு என்னோட ID block ஆகிரும்.இந்த மாதிரி மூன்று முறை நடந்திருக்கு.இப்ப நான் பயன்படுத்துறது என்னோட நான்காவது ID .
முதல் இன்ஸ்ட்டா ID ல 20k வரைக்கும் பார்வையாளர்கள் இருந்தாங்க.அந்த சமயம் எல்லாம் ID பான் ஆகும் போது. நான் அழுது இருக்கேன். இதையெல்லாம் தாண்டி தான் என்னோட reels அதுக்கு அடுத்து என்னோட மாடலிங் மூலமா இன்னைக்கு இன்ஸ்ட்டா பக்கத்தில் நான் முன்னேறி வந்துள்ளேன்.
எதுவுமே இல்லை என்ற நிலையில் கூட
நமக்கிட்ட இருக்கிறதை வச்சு சந்தோஷ படணும்
அப்படி நான் சந்தோஷமா நினைக்கிற ஒரு விஷயம் என்றால் அது இன்ஸ்டா கிராம் தான். எனக்குள்ள ஒரு தன்னம்பிக்கை கொடுத்து அது தான். எனக்கான ஒரு அடையாளமா தான் நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்கிறேன்.அது மூலமாக தான் நான் மக்களின் பார்வையில் பட்டேன்.அங்கே என் திறமைக்கான அங்கீகாரம் கிடைத்தது. இவ்வாறு தான் எனக்கு மீடியா துறையில் ஆர்வம் வந்தது.

நீங்கள் மீடியா துறைக்குள் வரும் போது நீங்கள் சந்தித்த தடைகள் என்ன….?

நான் மீடியா துறைக்குள் வருவதை என் வீட்டில் உள்ளவர்கள் முதலில் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் என்னுடைய அம்மா துணையாக இருந்தார்கள் எனக்கு.
அவர்களையும் அருகில் இருந்தவர்கள் இது எல்லாம் வேண்டாம் என்று சொன்னதும். அவர்களும் மீடியா துறை எல்லாம் வேண்டாம் என்று கூற தொடங்கினார்.
அதற்கு அடுத்து ஒரு வழியாக போராடி தான் நான் இந்த மீடியா துறைக்குள் வந்தேன். என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. அவர்கள் சொல்வதை கூட என்னுடைய வளர்ச்சிக்கு துணையாக எடுத்து கொண்டு பயணிக்கின்றேன்.

உங்களின் வெள்ளி திரை மற்றும் சின்னத்திரையில் நடிப்பு கனவு பற்றி சொல்லுங்கள் ரேகா…?

எனக்கு சின்னத்திரையில் நடிக்க ஆர்வம் இருந்தது. இதற்காக முயற்சிகள் செய்தேன், நான் நடிப்பதற்கு தேர்வாகிய பின்பு அங்க இருக்க கூடிய அட்ஸ்மென்ட் என்கிற விஷயத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அதை தூக்கி எறிந்து வந்து விட்டேன்.
அதை போன்றே எனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது அங்கும் இதே நிலை என்பதால் நான் அந்த முயற்சியினை கைவிட்டேன்.

நமக்கு திறமை இருந்தாலும் கூட
நம் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க கூடிய இடத்தினை நாம் சரியாக தேர்ந்தெடுத்து போக வேண்டும்.

அதற்காக தான் நான் காத்திருந்தேன் இப்பொழுது திரைபடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன்..!

நீங்கள் மாடல் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே நீங்கள் கவிஞரானது எப்போது…?

எனக்கு எழுதுவதில் ஆர்வம் அதிகம். பாடல்கள் எழுதுவேன் இரண்டு short film பாடல் எழுதியுள்ளேன். இன்னும் வெளிவரவில்லை.

உங்களுடைய வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்கள் என்று நீங்கள் யாரை கூறுவீர்கள்…?

என்னுடைய பெற்றோர் அதற்கு அடுத்து மீடியா துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று எனக்குள் நம்பிக்கை வர காரணமாக இருந்த என்னுடை நண்பர்கள்
மற்றும் என்னுடைய ரசிகர்கள் இவர்கள் எல்லோரும் என்னுடைய வளர்ச்சிக்கு காரணமாக இருப்பவர்கள் என்று கூறுவேன்.

நீங்கள் வாங்கிய awards பற்றி எங்களுக்காக கூறுங்கள் ரேகா…?

Zeal awards (favoit eye catcher)
AR entertainer (best insta frame)
Special moment of( Rathnam college of arts and science guest of this college)

நீங்கள் உங்களுடைய வளர்ச்சியை எவ்வாறு உணர்கின்றீர்கள் ரேகா…?

நான் மாடலாக இருந்தாலும் கூட , இதையெல்லாம் தாண்டி நான் என்னுடைய வளர்ச்சியை உணர்ந்த சில தருணம் உண்டு அதில் ஒன்று தான் Rathnam college of arts and science கல்லூரியில் gust ta ka பங்கேற்றது. அது என்னுடைய திறமையின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியின் முதல் படியாகவே உணர்கிறேன்.

உங்களை போல் சாதிக்க போராடுபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ரேகா …?

நீங்கள் உங்களுக்கான ரோல் மாடலா ஒரு சரியான நபர் தேர்ந்தெடுங்க..!

ஏன்னா நம்ம கண் முன் நல்லவர்களாக இருக்கிறவங்களோட முகம் நிஜத்தில் கெட்டவர்களா கூட இருக்கலாம்.

அதுனாலை அந்த விஷயத்தில் நீங்கள் சரியாக இருக்க வேண்டும்

அதற்கு அடுத்து நீங்கள் எவ்வளவு பெரிய stage போனாலும் நம்ம மேல உயர்த்தி விட்டு கீழ நின்னு நம்மளை பாத்து சந்தோஷ படுறவங்கள என்னைக்கும் மறந்து விட கூடாது.

இதை பின்பற்றினாலே நமக்கான வெற்றி நம்மை தேடி வரும்.

நீங்கள் பிறருக்கு உதவும் மனப்பான்மை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ரேகா…?

என்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்கிறேன்.
என்னை போல் சாதிக்க போராடும் நபர்களை வெளி உலகத்தின் வெற்றி பார்வையில் கொண்டு வர முயற்சி செய்கிறேன்.
அவ்வளவு தான். இதற்காக என்னால் முடிந்த வரை பணியாற்றி வருகிறேன்.இதனால் என்னுடைய ஊரில் உள்ள பெண் மாடலிங் துறையில் உள் நுழைந்து சாதித்து வருகிறார் என்று சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி தான்.

ரேகா ஸ்ரீ அவர்களின் சிறந்த மாடல் நடிகை ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.

 ✍️சுபா கிட்டு
Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×