Rising Star

மாலதி நாராயணன் (Malathy Narayan)

Malathy Narayan

மாலதி நாராயணன் (Malathy Narayan) – Doctor , Director, producer, actor and script writer என்று சினிமாவின் பல்வேறு முன்னணி துறைகளில் சாதித்து வரும் Doctor Malathy Narayan அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல். Name Malathy Narayan Fathers name Narayan  Mothers name Ramachandra  Dob 7th December  Native place Malaysia Kuala Lumpur School name smk sri selayang  Clg name Russian state medical university Highlights Gold medalist and valedictorian of my batch in university  Feature film Miriam maa Awards/recognition Best newcomer 2024 SIFPA 2024 Occupation Doctor, Actress, Director, Producer  Movie names or ablum or advertisements names Short film- fresillia, dual sim உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan)…? நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மலேஷியாவில் உள்ள கோலம்பூர் தான். என்னோட school studies வந்து மலேஷியாவில் உள்ள Smk sri selayang school ல complete பண்ணுணேன், Medicine படிச்சது Russian state medical University . உங்களுடைய Doctor துறை பற்றி சொல்லுங்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan)…? மாலதி நாராயணன்(Malathy Narayan)- எனக்கு மிகவும் பிடித்த ஒரு உயிர் காக்கும் பணி அதை நான் மிகவும் நேசிக்கின்றேன் தற்போது‌ IRELAND ல் 9 வருடங்களாக Doctor ஆக பணியாற்றி வருகின்றேன். மருத்துவராக இருக்கும் உங்களுக்கு சினிமா துறையின் மீது எவ்வாறு ஆர்வம் வந்தது மாலதி நாராயணன்(Malathy Narayan)…? Malathy Narayan – எனக்கு acting and dance பிடிக்கும் அதுனால அதை try பண்ணலான்னு ஒரு feel இருந்தது. நான் அந்த சமயம் Ireland இருந்தேன்.ஆனா ஒரு பைலட் மூவி நடித்தேன் ஆனா அது ரிலிஸ் ஆகல. அந்த சமயம் எனக்கு எந்த விதமான சினிமா back round ம் கிடையாது. அந்த சமயத்தில எனக்கு பரியேறும் பெருமாள் படத்தோட director srithar sir அறிமுகம் கிடைத்தது.என்னோட நண்பர் கூட நான் அவங்களை சொல்லுவேன் அவங்கிட்ட என்னோட own story பற்றி சொல்லிட்டு இருந்தேன்.அவங்க தான் சொன்னாங்க நீங்க இதை படமா (flim) பண்ண முடியாம போனாலும் ஒரு short film பண்ணுங்கன்னு என்னை encourage பண்ணுணாங்க .ஆனால் அந்த நேரம் எனக்கு direction, script writing பற்றி எல்லாம் தெரியாது அதை அவங்களுக்கிட்டே நான் சொன்னபோது நீங்க short film பண்ணுங்கண்ணு சொன்னாங்க. அப்படி நான் பண்ணுண்ண short film தான் fresillia, அந்த படத்தோட script நான் தான் 1week ல write pannunan.அந்த short film director வேல்முருகன், நான் அதுல co-director work பண்ணுணேன் and அந்த short film act பண்ணுணேன். உங்களுடைய short film பற்றி சொல்லுங்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan)…? உங்களுடைய Dream Project பற்றி சொல்லுங்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan)…? மாலதி நாராயணன்(Malathy Narayan)-என்னோட dream project 7 years முன்னாடியே write பண்ணி வச்சு இருக்கேன்.அதுக்கான ஒரு பெரிய டீம்க்காக wait பண்ணுறேன்.அது அமையும் போது கண்டிப்பாக சொல்லுறேன். உங்களுக்கு சினிமா துறையில சாதிக்க உதவியாக இருந்தவங்கன்னு நீங்கள் யாரை சொல்வீர்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan) …? சினிமா துறையில் சாதிக்க எனக்கு துணையாக இருந்தவர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என்னோட friends அவங்களோட family. என்னோட friend அம்மா திருமதி.ஜெயந்தி என்னோட fresillia short film movie தியேட்டர்ல ரிலிஸ் ஆக financial வும் சரி எனக்கு ஒரு அம்மாவாகவும் support பண்ணுணாங்க.அதுக்கு அடுத்து என்னோட friend’s circle vj ஆஷிக் அவங்களும் support பண்ணுவாங்க. இதுவரைக்கும் support வும் இருக்காங்க. உங்களுடைய Doctor field யையும் cinema filed யையும் எப்படி handle பண்ணுறீங்க மாலதி நாராயணன்(Malathy Narayan)..? மாலதி நாராயணன்(Malathy Narayan)- நான் சினிமா துறையில் work பண்ண வந்துட்டா அதுக்காக hard work பண்ணுவேன் ஏன்னா நான் இந்தியாவில் தான் சினிமா துறையில் இருக்கேன் எனக்கான 90% followers இங்க தான் இருக்காங்க, Ireland போன பின்னாடி நான் ஒரு doctor தான் அங்க இருப்பேன்.அங்க உள்ளவங்களுக்கு என்னோட சினிமா life பற்றி தெரியாது அவங்களை பொறுத்த வரைக்கும் நான் ஒரு doctor,சினிமாவுக்கா நான் என்னோட doctor work விட வேண்டும் என்று நான் நினைக்கல.அதுக்காக doctor work கா நான் சினிமாவையும் விட மாட்டேன், சினிமாங்கிறது இன்னைக்கு இந்த field ல உயரத்துல இருக்கிறவங்க நாளைக்கே கீழ வரலாம் அது ஒரு நிரந்தரம் இல்லாதது,ஆனா doctor professional அப்படி இல்லை அது நிரந்தரமானது. தமிழ் கல்வி படிப்பது பற்றி உங்களின் பார்வை என்னவாக இருக்கிறது மாலதி…? மாலதி நாராயணன்(Malathy Narayan)- தமிழ் school படிச்சா எதுவும் achive பண்ண முடியாதுங்கிறது எல்லாம் ஒரு மூட நம்பிக்கைன்னு கூட சொல்வேன். ஏன்னா மலேஷியாவில் நான் ஒரு தமிழ் பள்ளியில தான் படித்தேன். நீங்கள் வாங்கிய Awards பற்றி சொல்லுங்கள் மாலதி நாராயணன்(Malathy Narayan)…? உங்களைப்போல் சாதிக்க வரும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது..? மாலதி நாராயணன்(Malathy Narayan)- எந்த ஒரு முயற்ச்சியிலையும் முதலிலேயே வெற்றி கிடைக்காது அந்த வெற்றிக்காக தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி உங்களை தேடி வரும், நீங்கள் சினிமாவின் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து சிறந்த நடிகையாக வலம் வரவும் சிறந்த மருத்துவராக சாதனைகள் புரியவும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.   சுபா கிட்டு

Malathy Narayan Read More »

Roselin

Roselin

‘நீ நீயாக இரு‘ ரோஸ்லின்(Roselin) – நீ நீயாக இருப்பதற்கே பல போராட்டங்களை கடந்து தான் வெற்றி பெற வேண்டும்,என்ற தன்னம்பிக்கையை தனக்கு துணையாக கொண்டு தன் முயற்சிகளால் Product Designer ராக முன்னேற்றம் கண்டு வெற்றி பெற்று வரும் ரோஸ்லின் அவர்களுடன் ஒரு அழகிய நேர்காணல். Name Roselin  Fathers name Rajan Mothers name Kumari Dob 27:10:1999 School name Sagaya Madha Matriculation Hr.sec.school Occupation Product Designer உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் ரோஸ்லின்(Roselin)…?  நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.என்னுடைய அப்பா திரு. ராஜன் அவர்கள் ஒரு பெயிண்டர். அம்மா திருமதி.குமாரி அவர்கள், என்னுடைய பெற்றோர்களுக்கு 18 வருடங்கள் கழித்த பின்னர் பிறந்த பெண்குழந்தை தான்நான், சென்னையில் உள்ள Sagaya matha Matriculation Higher Secondary school ல் 12th வரை படித்தேன், அதன் பின்னர் சோகோவில் படித்தேன். உங்களின் சிறுவயதில் இருந்தே நீங்கள் product designer ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததா ரோஸ்லின்(Roselin)…?  இல்லை – டாக்டர் ஆக வேண்டும் என்பதே என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் என்னால் பணம் இல்லாததால் படிக்க முடியவில்லை. நான் பிளஸ்டூ முடித்த பின்பு என்னுடன் படித்த எல்லோரும் கல்லூரியில் சேர்ந்தனர் அதன் பின்பு என் மாமாவின் மூலம் சோகோ பற்றிய விபரங்கள் தெரிய வந்தது.அதன் பின்னர் அதில் எக்ஸாம் எழுதினேன் அங்கே எனக்கு இடம் கிடைத்தது என்னுடைய படிப்பை சோகோவில் தொடர ஆரம்பித்தேன். உங்களின் Product Designer Work பற்றி சொல்லுங்கள் ரோஸ்லின்(Roselin)…? ரோஸ்லின்(Roselin)-நான் படித்து முடித்த பின்னர் எனக்கு அங்கேயே Product Designer Work கிடைத்தது.இன்று என்னுடைய பணியில் கவனம் செலுத்தி முன்னேற்றம் கண்டு உள்ளேன் இன்னும் பல முன்னேற்றங்கள் கண்டு வெற்றி பெறுவேன். என்னுடைய வேலையினால் என்னுடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.நாங்கள் குடியிருந்த சுனாமி குவார்ட்ஸ்ஸில் இருந்து என்னுடைய பெற்றோர்களை ஒரு வாடகை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளேன்.என்னுடைய கடின உழைப்பினால் முன்னேறி சொந்தமாக ஒரு வீடு வாங்கி அவர்களை அங்கே மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்ற கனவு எனக்கு உள்ளது. உங்களுடைய கனவு லட்சியம் என்று எதை சொல்வீர்கள் ரோஸ்லின்(Roselin)…? ரோஸ்லின்(Roselin)-என்னுடைய கனவு லட்சியம் என்றால் ஃபேஷன் தொடர்பா என்னுடைய வேலை இருப்பதால். 4 or 5 years முடிந்ததும் புட்டிக் Start பண்ணலாண்ணு இருக்கேன்.அதை வெற்றிகரமாக நடத்தணும் அப்படிங்கிறது தான் என்னோட கனவு லட்சியம். Product designer ராக இருக்கும் நீங்கள் இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட் மீது எவ்வாறு ஆர்வம் செலுத்தினார்கள் ரோஸ்லின்(Roselin)….? ரோஸ்லின்(Roselin) -இன்ஸ்ட்டாகிராம் பக்கம் மீது ஆர்வம் செலுத்துவதற்கு எனக்கு நேரம் இல்லை தான். இடையில் எனக்கு ஏற்பட்ட சில டிப்ரசனில் இருந்து வெளிவருவதற்க்காக ஏதாவது செய்யலாம் என்று நினைத்த போதுதான் இன்ஸ்ட்டாகிராம் பக்கம் எனது கவனம் சென்றது. என்னுடைய ஆபிஸிற்க்கு நான் இருக்கும் இடத்திலிருந்து நான்கு மணி நேரம் டிராவல் பண்ணி செல்ல வேண்டும். அந்த நேரங்களில் இன்ஸ்ட்டாகிராமில் போஸ்ட் போட தொடங்கினேன்.என்னை சுற்றி உள்ளவர்கள் பல பேர் கேட்பார்கள் உனக்கு எதுக்கு இந்த வேலை. ஏன் டிரஸ் எல்லாம் இந்த மாதிரி போடுற அப்படி இப்படின்னு கேட்பாங்க ஆனா அது எல்லாம் நான் கடந்து வந்துருவேன். நாம ஒண்ணு செய்யலான்னு நினைக்கும் போதே விமர்சனம் வர தொடங்கிரும் வெளில உள்ள நபர்களால அதுக்காக நாம அந்த வேலையை செய்யாம விடக்கூடாது நமக்கு ஒரு விஷயம் நிம்மதியும் சந்தோஷமும் பிறருக்கு தீங்கு இல்லாமல் கிடைக்குதுன்னா அது நாம செய்யலாம்.அடுத்தவங்க சொல்லுறதுக்காக எல்லாம் நம்மளை நம்மை மாற்றிக்க வேண்டிய எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை. ஒரு product designer ஆகவும் இன்ஸ்ட்டா பிரபலமாகவும் இருக்க நீங்க கடந்து வந்த தடைகள், விமர்சனங்கள் பற்றி சொல்லுங்கள் ரோஸ்லின்(Roselin)…?  ரோஸ்லின்(Roselin) -நிறையா விமர்சனங்கள் இருக்கு ஏன் உங்க பொண்ணை இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறீங்க அடுத்த வீட்டுக்கு போற பொண்ணு தானே அப்படின்னு எங்களை சுற்றியுள்ளவர்கள் என்னுடைய அம்மாவிடம் சொல்லும் போது அம்மா அதை எல்லாம் தாண்டி தான் படிக்க வைச்சாங்க. நான் என்னுடைய வேலை தொடர்பா வெளில எங்காவது நான் போகும் போது என்னா இங்க அங்க போறாங்க உன்னோட பொண்ணு வெளில எல்லாம் போறாங்கன்னு விமர்சனம் வரும் ஆனா எங்க அம்மா அதைப் பற்றி எல்லாம் என்கிட்ட வந்து கேட்க்கமாட்டாங்க அவங்களுக்கு நான் எல்லாம் சரியாக தான் செய்வேன் அப்படிங்கிற நம்பிக்கை எப்போதும் இருக்கும்,என்னை விமர்சிப்பவர்களை பற்றி எல்லாம் நான் கவலை பட்டது இல்லை. நான் எப்படி முன்னேறி செல்ல வேண்டும் அதை பற்றி மட்டும் தான் நான் சிந்திப்பேன். உங்களை மாதிரி சாதனைகள் செய்ய போராடுறவங்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புறீங்க ரோஸ்லின்(Roselin)…? முதலில் உன்னை பாரு.உனக்கு என்ன வேண்டுமோ அதை நீயே முடிவு பண்ணு,அதுல வெற்றி பெற்ற அது உன்னுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி.தோல்வி பெற்றா அதுக்கு அடுத்து நீ என்ன பண்ணணுண்ணு முடிவு பண்ணு. உன்னோட முடிவை நீயே எடுத்தா அடுத்தவங்களை குறை சொல்ல வேண்டியது இல்லை,உன்னோட வாழ்க்கையில ஒரு வெற்றி கிடைக்கணும் அப்படின்னா நீ போராடு அதுக்காக காத்திரு உன்னோட முயற்சிக்கு கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி கிடைக்கும்.ஆகவே நீ நீயாக இரு .இதை தான் நான் follow பண்ணுறேன்.இதையே தான் பிறருக்கும் சொல்லுறேன். உங்களுடைய Highlights பற்றி சொல்லுங்கள் ரோஸ்லின்(Roselin)…? Always eager to connect, Inspire , learn and grow  மிகவும் நன்றி ரோஸ்லின். உங்களுடைய கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்.   சுபா கிட்டு

Roselin Read More »

Kaviashvini

கவிஐஸ்னி (Kaviashvini)

Modeling – Short films- Conceptual shoot,என பல திறமைகள் கொண்டு மலேசியா மீடியா துறையில் வலம் வந்து கொண்டு இருக்கும் கவிஐஸ்னி அவர்களுடன் ஒரு அழகான நேர்காணல். Name Kaviashvini Fathers name Tanjong Malai Mothers name Ganthi Mathi Dob 2nd March 1995 Native place Malaysia School name Assunta High School Clg name MSU Management and Science University  Current place Malaysia, Kuala Lumpur  Occupation IT, Project Manager Degree Bachelor in Information Communication and Technology  Awards/recognition/nominees Filmfreeway for conceptual shoot andShort film (suvargal) உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் கவிஐஸ்னி (Kaviashvini) ?  என்னுடைய சொந்த ஊர் மலேஷியா, கோலாலம்பூர். நான் என்னுடைய School studies Assunta High School ல் Complete பண்ணுனேன்,College studies MSU-Management and science UNIVERSITY ல் Bachelor in information Communication and Technology படித்து முடித்தேன், IT project Manager(PRINCE2 CERTIFICATE )ஆக பணிபுரிந்து வருகிறேன். உங்களது பார்வையில் உங்களுடைய மாடலிங் தொடக்கம் பற்றி சொல்லுங்கள் கவிஐஸ்னி (Kaviashvini) …? என்னுடைய அண்ணன் ஒரு போட்டோகிராப்பர் அவருடை போட்டோகிராப்பிங்கில் மாடலிங் செய்யத் தொடங்கினேன்,அது என்னுடைய ஃபேஷன் ஆக மாறவே மாடலிங் தொடர்ந்து செய்து வருகிறேன். உங்களுக்கு எவ்வாறு Conceptual shoot பண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது கவிஐஸ்னி (Kaviashvini) …? என்னுடைய conceptual shoot மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதே சமயம் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணிணேன். அதனால் தான் இந்த Conceptual shoot எடுத்து பதிவிட தொடங்கினேன்.இது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகளே எனது Conceptual shoot வீடியோக்கள் பதிவிட எனக்குள் ஒரு எண்ணத்தை உருவாக்கும். உங்களுக்கு எவ்வாறு Short films நடிக்க வாய்ப்பு கிடைத்தது கவிஐஸ்னி அதைப் பற்றி சொல்லுங்கள்(Kaviashvini) ..?  நான் மாடலிங் பண்ணும் போதே எனக்கு ஷார்ட் பிலிம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்ட்ரோ மீடியாவில் (மலேஷியா டிவி சேனல்) போட்டிக்காக என் குறும்படத்தை சமர்ப்பித்திருக்கேன். அதை தவிர பல Short films நடித்து உள்ளேன். நடித்தும் வருகிறேன். உங்களுக்கு இந்த மாடலிங் துறையில் வழிகாட்டியா இருந்து வருபவர்கள் யார்? அவர்களைப் பற்றி சொல்லுங்கள் கவிஐஸ்னி..? எனக்கு மாடலிங் துறையில் support கை இருப்பவர்கள் என்னுடைய அண்ணன் கவிகுமார் அண்ணி சங்கீதா. உங்களுக்கு மாடலிங் மற்றும் short film, conceptual shoot தவிர மிகவும் பிடித்த ஒரு விஷயமாக எதை சொல்வீர்கள் கவிஐஸ்னி (Kaviashvini) ..?  எனக்கு என்னுடைய family யுடன் அதிக நேரம் செலவிட பிடிக்கும்.இதை தவிர Robert green எழுதிய புத்தகங்கள் பிடிக்கும்.அதிலும் நான் மிகவும் விரும்பி படித்த  அதற்கு அடுத்து painting , dance, book, பிடிக்கும். உங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக எதை சொல்வீர்கள் கவிஐஸ்னி (Kaviashvini)…?  எனக்கு ஐந்து வயது இருக்கும் போது என்னுடைய பெற்றோர்கள் வெளியில் சென்று இருந்தார்கள் நான் மட்டும் வீட்டில் தனியா இருந்தேன்.அப்போது திருடர்கள் வந்து விட்டார்கள்.அந்த சமயம் எங்கள் வீட்டில் இருந்த நாய் தான் குரைத்து அக்கம் பக்கம் இருப்பவர்கள் வர உதவி என்னை காப்பாற்றியது.அது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். மீடியா துறை சாதனை தவிர உங்களின் கனவு என்று எதை சொல்வீர்கள் கவிஐஸ்னி (Kaviashvini) …?  நான் street dogs oraganising (NGO) ஒன்றை தொடங்கி அவைகளை பாதுக்க வேண்டும் என்பதாகும். நான் தற்பொழுது Mfd-((MFD Dog whisperers)ஒன்றில் இணைந்தும் பணியாற்றி வருகிறேன்,இதை தவிர ஒரு சிறந்த Business (fashion related/fitness),தொடங்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. உங்களைப் போல் பல துறைகளிலும் சாதிக்க விரும்புபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் கவிஐஸ்னி (Kaviashvini) …?   உங்களுடைய தன்னம்பிக்கையும், ஆர்வமும் மட்டுமே நீங்கள் சாதிக்க உங்களுக்கு துணையாக இருக்கும். எனவே நீங்கள் சாதிக்க விரும்பும் துறைகளில் தன்னம்பிக்கையும், ஆர்வமும் உங்களுக்கு வேண்டும்.இந்த இரண்டும் இருந்தால் இந்த உலகம் உங்களை சிறந்த வெற்றியாளராக மாற்றும். உங்களின் நேர்காணல் எங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது கவிஐஸ்னி நீங்கள் சிறந்த மாடலாகவும்.சிறந்த நடிகையாகவும் வலம் வர வாழ்த்தி மகிழ்ந்து..! மீடியா துறை தவிர பிற துறைகளிலும் உங்களின் கனவுகள் நிறைவேற மீண்டும் வாழ்த்தி மகிழ்கின்றோம். சுபா கிட்டு.

கவிஐஸ்னி (Kaviashvini) Read More »

DHARANI RAJENDRAN

DHARANI RAJENDRAN

கடின உழைப்பிற்கு என்றும் தோல்வி என்பதே இல்லை மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் தன் திறமையின் மூலமாகவெற்றி பெற்று வரும்தாரணி ராஜேந்திரன் உடன் ஒரு அழகான நேர்காணல். Name Dharani rajendran Fathers name Rajendran Mothers name Amutha Dob 28/04/1997 Native place coimbatore School name manis hr sec sch Clg name psg cas, bharathiyar university, srm delhi Current place coimbatore Occupation phd scholar , past 1 year working as hod maths in cbse school Awards/recognition gold medalist in msc, got cheif guest in many places Movie names or ablum or advertisements names breakup, marakuma nenjam, Queen(Q) உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் தாரணி ( DHARANI RAJENDRAN )…? என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். நான் தற்பொழுது கோயம்புத்தூரில் வசித்து வருகிறேன்.நான் தற்பொழுது PhDSrm டெல்லியில் படித்து வருகிறேன். படிப்பில் ஆர்வம் அதிகம் தான் நான் B sc மற்றும் MSC ல் gold medalist. கோல்டு மெடலிஸ்ட்டா இருந்தா உங்களுக்கு நடிப்பின் மீது எவ்வாறு ஆர்வம் இருந்தது (DHARANI RAJENDRAN )… ? நடிப்பின் மீது எப்படி ஆர்வம் வந்தது என்றால் அது சரி வர நினைவில் இல்லை,நான் கோயம்புத்தூரில் உள்ள பள்ளியில் என் படிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்கு ஆசிரியராக ஒரு வருடம் பணியாற்றினேன். அதற்கு முன்னதாகவே இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் என்னுடைய ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தேன். அப்பொழுது தான் எனக்கு நடிப்பில் ஆர்வம் வந்தது என்று நினைக்கின்றேன். நான்கு வருடங்களுக்கு மேல் இன்ஸ்ட்டா பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வருகிறேன். தொடக்கத்தில் அவ்வளவாக முதலில் ரீச் ஆகவில்லை பார்வையாளர்களிடம்.ஆனால் தொடர்ந்து என்னுடைய கடின உழைப்பும் திறமையான நடிப்பும் இன்று இன்ஸ்ட்டா பக்கத்தில் என்னை ஒரு பிரபலமாக மாற்றியுள்ளது என்றால் அது என்னுடைய ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களவே சென்றடையும் என்று சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியே. உங்களின் மாடலிங் துறை பற்றி சொல்லுங்கள் தாரணி ராஜேந்திரன் …? நான் மாடலிங்கிள் 25 shoot செய்து உள்ளேன்.ராம்ப் வாக்கில் பங்கேற்று உள்ளேன். உங்களின் film வாய்ப்புகள் பற்றி சொல்லுங்கள் தாரணி ராஜேந்திரன் ( DHARANI RAJENDRAN) …? என்னுடைய திறமையான நடிப்பின் மூலமாகவும், இன்ஸ்ட்டா பக்கத்தில் என்னுடைய ரீல்ஸ் மூலமாகவும் சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன்.எனக்கான கதாபாத்திரத்திற்க்காக காத்து இருக்கிறேன்.அதற்கான கடின முயற்ச்சிகளையும், பயிற்ச்சிகளையும் செய்து வருகிறேன்.சீரியல் துறையிலும் வாய்ப்புகள் வருகின்றன. அது சினிமாவாக இருந்தாலும் சீரியலாக இருந்தாலும் அதில் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன்.இதை தவிர இரண்டு short film நடித்து உள்ளேன். நீங்கள் மாடலிங் மற்றும் நடிப்பு என உங்களின் லட்சிய கனவுகளுக்கு உங்களுக்கு துணையாக இருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் தாரணி…? முதலில் நான் இதைப்பற்றி என் குடும்பத்தினரிடம் சொல்லிய போது. அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் கூட அதை அவர்கள் நிராகரிக்கவில்லை. உனக்கு சரி என்றால் நீ அதை செய் என்று தான் கூறினார்கள்.ஏனென்றால் அவர்களுக்கு நான் படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமே ஆரம்பத்தில் இருந்து.அதற்கு அடுத்து என்னுடைய முயற்சிகளிலும் வெற்றிகளிலும் துணையாக இன்று வரை இருப்பவர்கள் என்னுடைய பிரண்ட்ஸ்கள் தான். நீங்கள் சினிமா துறையில் கடந்து வந்த தடைகள் பற்றி சொல்லுங்கள் தாரணி ( DHARANI RAJENDRAN )…? நான் கடந்து வந்த தடைகள் என்றால் என்னிடம் திறமைகள் இருந்தும் சில இடங்களில் என்னுடைய நேர்மையான குணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது. அதைப் பற்றி நான் பெரிதாக என்றும் வருத்தப்பட்டது இல்லை. அதற்கு அடுத்து நடிப்பு துறையை பொருத்த வரை பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். நீங்கள் நடித்துள்ள advertisment name பற்றி சொல்லுங்கள் தாரணி…? Advertisment name என்றால் breakup, marakkuma nenjam, Queen (Q) உங்களைப் போல் நடிப்பு துறையில் சாதிக்க போராடும் வர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…? எந்த ஒரு செயலைப்பற்றி அதிகம் யோசித்து உழைக்கின்றீர்களோ அதில் உங்களுக்கு ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.இது நடிப்பு மட்டும் இல்லை எல்லா துறைகளுக்கும் பொருந்தும். சினிமா உலகம் பற்றி உங்களின் பார்வை தாரணி…? இங்கே திறமை இருந்தும் பல காரணங்களால் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது கிடைக்காமல் போகிறது. என்பதே மிகவும் கவலை தருகிறது. தாரணி உங்களுடனான இந்த நேர்காணல் எங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது.சினிமா துறையில் நீங்கள் சிறந்த நடிகையாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.

DHARANI RAJENDRAN Read More »

WhatsApp Image 2024 03 31 at 7.29.00 PM

Rekha srii

தன்னுடைய அழகான ரீல்ஸ் மூலம் இன்ஸ்டா பக்கத்தில் பிரபலமாகி வரும் மாடல் ரேகா ஸ்ரீ உடன் ஒரு அழகான நேர்காணல். Name Rekha srii Fathers name KANDHASAMY Mothers name SANTHAMANI Dob 30.06.2001 Native place Nallichittipalayam village School name kg school Clg name kg college of arts and science Current place Nallichittipalayam Occupation model Instagram influencer Degree Bachelor of computer application Awards / regonanision zeal awards ( favourite eye catcher )and AR. entertainer -( best insta frame )Special moment of ( Rathnam College of arts and science invited guest of this college ) உங்களுடைய சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் ரேகா ஸ்ரீ….? அதுக்கு அடுத்து நான் படிச்சது எல்லாம் இந்த பகுதியில் இருக்கிற Kg school மற்றும் kg arts and science college ல தான்.எனக்கு நர்ஸிங் படிக்க விருப்பம் இருந்தது, ஆனால் என்னால் நர்ஸிங் படிக்க முடியவில்லை, அதுக்கு அடுத்து நான் கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.தற்போது TNPSC தேர்வுக்காக படித்து வருகிறேன். உங்களுக்கு எப்பொழுது மீடியா துறையில் ஆர்வம் வந்தது ரேகா…? எனக்கு ஆரம்பத்தில் மீடியா துறையில் ஆர்வம் எல்லாம் ஒன்றும் இல்லை. நான் கல்லூரியில் படிக்கும் போது பிரண்ட் டிக்டாக் போடுவாங்க அதுலை நானும் இருப்பேன்.அதுலை ஓரளவுக்கு எனக்கு பார்வையாளர்களிடம் வரவேற்பு இருந்தது.அதுக்கு அடுத்து சரி நம்ம ஏன் தனியா டிக்டாக் பதிவுகள் போட கூடாதுன்னு நினைச்சு நான் போட ஆரம்பிச்சேன் அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது, அதுனாலை தொடர்ந்து பதிவுகள் போட ஆரம்பித்தேன்.அந்த சமயம் டிக்டாக் தடை பண்ணுவாங்க.அதுக்கு அடுத்து இன்ஸ்டா பக்கம் ஆரம்பித்து அதுலை என்னோட ரீல்ஸ் எல்லாம் பதிவிட ஆரம்பித்தேன்.அது எனக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஒரு நல்ல அறிமுகத்தையும் வரவேற்ப்பையும் கொடுத்தது.நான் இன்ஸ்டா பக்கம் பிரபலமாகி வரும் போது தீடீர்ன்னு என்னோட ID block ஆகிரும்.இந்த மாதிரி மூன்று முறை நடந்திருக்கு.இப்ப நான் பயன்படுத்துறது என்னோட நான்காவது ID .முதல் இன்ஸ்ட்டா ID ல 20k வரைக்கும் பார்வையாளர்கள் இருந்தாங்க.அந்த சமயம் எல்லாம் ID பான் ஆகும் போது. நான் அழுது இருக்கேன். இதையெல்லாம் தாண்டி தான் என்னோட reels அதுக்கு அடுத்து என்னோட மாடலிங் மூலமா இன்னைக்கு இன்ஸ்ட்டா பக்கத்தில் நான் முன்னேறி வந்துள்ளேன்.எதுவுமே இல்லை என்ற நிலையில் கூடநமக்கிட்ட இருக்கிறதை வச்சு சந்தோஷ படணும்அப்படி நான் சந்தோஷமா நினைக்கிற ஒரு விஷயம் என்றால் அது இன்ஸ்டா கிராம் தான். எனக்குள்ள ஒரு தன்னம்பிக்கை கொடுத்து அது தான். எனக்கான ஒரு அடையாளமா தான் நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்கிறேன்.அது மூலமாக தான் நான் மக்களின் பார்வையில் பட்டேன்.அங்கே என் திறமைக்கான அங்கீகாரம் கிடைத்தது. இவ்வாறு தான் எனக்கு மீடியா துறையில் ஆர்வம் வந்தது. நீங்கள் மீடியா துறைக்குள் வரும் போது நீங்கள் சந்தித்த தடைகள் என்ன….? நான் மீடியா துறைக்குள் வருவதை என் வீட்டில் உள்ளவர்கள் முதலில் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் என்னுடைய அம்மா துணையாக இருந்தார்கள் எனக்கு.அவர்களையும் அருகில் இருந்தவர்கள் இது எல்லாம் வேண்டாம் என்று சொன்னதும். அவர்களும் மீடியா துறை எல்லாம் வேண்டாம் என்று கூற தொடங்கினார்.அதற்கு அடுத்து ஒரு வழியாக போராடி தான் நான் இந்த மீடியா துறைக்குள் வந்தேன். என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. அவர்கள் சொல்வதை கூட என்னுடைய வளர்ச்சிக்கு துணையாக எடுத்து கொண்டு பயணிக்கின்றேன். உங்களின் வெள்ளி திரை மற்றும் சின்னத்திரையில் நடிப்பு கனவு பற்றி சொல்லுங்கள் ரேகா…? எனக்கு சின்னத்திரையில் நடிக்க ஆர்வம் இருந்தது. இதற்காக முயற்சிகள் செய்தேன், நான் நடிப்பதற்கு தேர்வாகிய பின்பு அங்க இருக்க கூடிய அட்ஸ்மென்ட் என்கிற விஷயத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அதை தூக்கி எறிந்து வந்து விட்டேன்.அதை போன்றே எனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது அங்கும் இதே நிலை என்பதால் நான் அந்த முயற்சியினை கைவிட்டேன். நமக்கு திறமை இருந்தாலும் கூடநம் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க கூடிய இடத்தினை நாம் சரியாக தேர்ந்தெடுத்து போக வேண்டும். அதற்காக தான் நான் காத்திருந்தேன் இப்பொழுது திரைபடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன்..! நீங்கள் மாடல் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே நீங்கள் கவிஞரானது எப்போது…? எனக்கு எழுதுவதில் ஆர்வம் அதிகம். பாடல்கள் எழுதுவேன் இரண்டு short film பாடல் எழுதியுள்ளேன். இன்னும் வெளிவரவில்லை. உங்களுடைய வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்கள் என்று நீங்கள் யாரை கூறுவீர்கள்…? என்னுடைய பெற்றோர் அதற்கு அடுத்து மீடியா துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று எனக்குள் நம்பிக்கை வர காரணமாக இருந்த என்னுடை நண்பர்கள்மற்றும் என்னுடைய ரசிகர்கள் இவர்கள் எல்லோரும் என்னுடைய வளர்ச்சிக்கு காரணமாக இருப்பவர்கள் என்று கூறுவேன். நீங்கள் வாங்கிய awards பற்றி எங்களுக்காக கூறுங்கள் ரேகா…? Zeal awards (favoit eye catcher)AR entertainer (best insta frame)Special moment of( Rathnam college of arts and science guest of this college) நீங்கள் உங்களுடைய வளர்ச்சியை எவ்வாறு உணர்கின்றீர்கள் ரேகா…? நான் மாடலாக இருந்தாலும் கூட , இதையெல்லாம் தாண்டி நான் என்னுடைய வளர்ச்சியை உணர்ந்த சில தருணம் உண்டு அதில் ஒன்று தான் Rathnam college of arts and science கல்லூரியில் gust ta ka பங்கேற்றது. அது என்னுடைய திறமையின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியின் முதல் படியாகவே உணர்கிறேன். உங்களை போல் சாதிக்க போராடுபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ரேகா …? நீங்கள் உங்களுக்கான ரோல் மாடலா ஒரு சரியான நபர் தேர்ந்தெடுங்க..! ஏன்னா நம்ம கண் முன் நல்லவர்களாக இருக்கிறவங்களோட முகம் நிஜத்தில் கெட்டவர்களா கூட இருக்கலாம். அதுனாலை அந்த விஷயத்தில் நீங்கள் சரியாக இருக்க வேண்டும் அதற்கு அடுத்து நீங்கள் எவ்வளவு பெரிய stage போனாலும் நம்ம மேல உயர்த்தி விட்டு கீழ நின்னு நம்மளை பாத்து சந்தோஷ படுறவங்கள என்னைக்கும் மறந்து விட கூடாது. இதை பின்பற்றினாலே நமக்கான வெற்றி நம்மை தேடி வரும். நீங்கள் பிறருக்கு உதவும் மனப்பான்மை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ரேகா…? என்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்கிறேன்.என்னை போல் சாதிக்க போராடும் நபர்களை வெளி உலகத்தின் வெற்றி பார்வையில் கொண்டு வர முயற்சி செய்கிறேன்.அவ்வளவு தான். இதற்காக என்னால் முடிந்த வரை பணியாற்றி வருகிறேன்.இதனால் என்னுடைய ஊரில் உள்ள பெண் மாடலிங் துறையில் உள் நுழைந்து சாதித்து வருகிறார் என்று சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி தான். ரேகா ஸ்ரீ அவர்களின் சிறந்த மாடல் நடிகை ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.

Rekha srii Read More »

IMG 20230409 122109 499 1 scaled e1697349703794

AYISHA

ஆங்கர், மாடல், நடிகை என்று பன்முக திறமை கொண்டு எட்டு வருடங்களாக மீடியா துறையில் தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற்று வரும் AYISHA (ஆயிஷா)அவர்களுடன் ஒரு சந்திப்பு. உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் ஆயிஷா…? எனது சொந்த ஊர் சென்னை . சென்னையில் உள்ள I ,W,H,S,S, SCHOOL, தான் என்னுடைய பள்ளி படிப்பை முடித்தேன்.அதன் பிறகு TAMIL NADU OPEN UNIVERSITY ல் B.A ENGLISH LITERATURE படித்தேன். Name Ayisha.A Father\’s name Ali Babu.I Mother\’s name Mariyam DOB 08.05.1995 Native place Chennai School name I.W.H.S.S.School Collage name Tamilnadu Open University Current place Mylapore Occupation Actinng Highlights Doing myself best Degree B.A – English Awards Upcoming actress & Best VJ Serials Oviya ( Colors tamil channel) Shows Climax (Raj TV show) நீங்கள் எத்தனை வருடங்களாக மீடியா துறையில் இருந்து வருகிறீர்கள்.அந்த துறையில் என்ன என்ன பணிகள் செய்து வருகிறீர்கள் அதைப் பற்றி கூறலாமே….? நான் மீடியா துறையில் எட்டு வருடங்களாக இருந்து வருகிறேன்.ஆரம்பத்தில் ஆங்கரிங் தான் பண்ண ஆரம்பித்தேன்.2015 ல் – MK TUNS CHANNEL ல் ஆங்கரிங் செய்தேன்.அதனை தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் வர தொடங்கின.5 to 6 வருடங்கள் RAJ TV CHANNEL ல் ஆங்கரிங் செய்தேன்.அதில் CELEBRITY INTERVIEW, LIVE PROGRAM , RECORDING SHOWS, போன்ற நிகழ்ச்சிகள் செய்தேன். அதற்கு அடுத்து 7 வருட இடைவெளிக்குப் பின் சீரியலில் நடிக்க தொடங்கினேன்.ZEE TAMIL CHANNEL ல்யாரடி நீ மோகினி.COLOURS TAMIL CHANNEL ல் ஓவியா, SUN TV ல் லட்சுமி ஸ்டோர்ஸ், போன்ற சீரியலில் நடித்து உள்ளேன். எனக்கு MOVIE வாய்ப்புகள் வந்தது, ஆனால் அதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்தது இல்லை. அதனால் எனக்கு மிகவும் பிடித்து ஆர்வம் உள்ள துறையானா மாடலிங் கில் எனது கவனத்தை செலுத்தி வருகிறேன். இருந்தாலும் எனக்கு ஆங்கரிங் மற்றும் நடிப்பும் மிகவும் பிடித்துள்ளது. மாடலிங்கில் உங்களது லட்சிய கனவுகள் பற்றி சொல்லுங்கள் ஆயிஷா…? மாடலிங் துறையில் மிக சிறந்த இடத்தினை அடைய வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும்.அதற்கான முயற்சிகளை செய்து வருகிறேன்.ஒரு நிறுவனத்தின் மிக சிறந்த மாடலாக இருக்க வேண்டும் என்பது எனது கனவு ஆகும்.கனவுகள் என்பது நாம் சாதிக்க நினைக்கும் லட்சியத்திற்க்கு தன்னம்பிக்கை கொடுப்பது ஆகும்.எனவே எனது சிறந்த மாடலாக வேண்டும் என்ற கனவு எனது முயற்சிகளுக்கும் பெறவிருக்கும் வெற்றிக்கும் தன்னம்பிக்கை கொடுத்து என்னை அதற்காக தயார் செய்தும் வருகிறது.மாடலிங் துறையில் நான் மிகவும் பிரபலமான நபராக வலம் வர வேண்டும்.இது தான் எனது எண்ணமும், செயலும் ஆகும். நீங்கள் மீடியா துறையில் சாதிப்பதற்கு கடந்து வந்த தடைகள் பற்றி சொல்லுங்கள்….? நான் மட்டும் இல்லை எந்த ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்றாலும் தடைகள் பல கடந்து தான் வர வேண்டும். அது எந்த தடையாக இருந்தாலும் அதை பற்றி நினைத்து முடங்கி போகாமல் முன்னேறி செல்ல வேண்டும்.சில பேர் ஆரம்பத்தில் அந்த தடைகளை பார்த்து முடங்கி போவாங்க.இன்னும் சில பேர் காத்திருந்து அந்த தடைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து அவங்களோட வேலைகளை செய்ய தொடங்குவாங்க.எனக்கு ஏற்பட்ட தடைகளை பற்றி நான் கவலை கொண்டது இல்லை அதை கடந்து வந்து உள்ளேன்.இன்னும் கடந்து வர காத்து கொண்டும் உள்ளேன். நீங்கள் வாங்கிய AWARDS பற்றி சொல்லுங்கள் ஆயிஷா…? நான் வாங்கிய AWARDS என்றால்UP COMING ACTRESS & BEST VJ. உங்களின் மீடியா மற்றும் மாடலிங் துறைக்கு பின்னால் இருந்து உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்கள் யார்…? என்னுடைய அம்மா தான் என்னுடைய ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் இருந்து எனக்கு துணையாக இருப்பவர். உங்களை போல் சாதிக்க போராடும் நபர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..? \” பிறர் சொல்வதில் கவனம் செலுத்தாதேஉன் மனம் என்ன சொல்கிறதோ அதை செய் \” ஏனென்றால் அடுத்தவர்கள் மிகவும் எளிதாக அறிவுரை சொல்லி விட்டு நம்மை கடந்து சென்றுவிடுவார்கள்.அதை பற்றி நாம் சிந்திப்பது பயனற்றறு நமக்கானது என்னவென்று நம் மனம் தான் முடிவு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்தால் தான் நாம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற முடியும் என்பதே நான் எனக்கும் பிறருக்கும் சொல்லி கொள்வது. ஆயிஷா அவர்களின் சிறந்த மாடலாக வேண்டும் என்ற கனவு நிறைவேறி வெற்றி பெற்று பல விருதுகள் அவர்கள் பெற்றிட வாழ்த்துவோம்.

AYISHA Read More »

WhatsApp Image 2023 08 27 at 4.20.05 PM 1 e1697349838105

சந்தியா தட்சிணாமூர்த்தி

நடனம் இன்றி இவள் இல்லை இவள் இன்றி நடனமும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பரதநாட்டியம் மற்றும் பல்வேறு வகையான நடனம் கற்று அந்த நடனத்தையே தன் உயிராக சுவாசித்து ஆஸ்திரேலியாவில் அந்த பல வகையான நடனத்தைபிறருக்கு கற்று கொடுத்து வரும் டிக்டாக் பிரபலம் சந்தியா தட்சிணாமூர்த்தி அவர்களுடன் ஒரு சந்திப்பு.. Name Sandya Dakshinamurthy Father\’s name Dakshinamurthy Srinivasan Mother\’s name Jayanthi Dakshinamurthy Native Bangalore University Curtin University Current place Perth Australia Degree B.com Occupation Customer service specialist – Bank Ads Ahm insurance/Hoyts உங்களின் சொந்த ஊர் பற்றி சொல்லுங்கள் சந்தியா…? என்னுடைய சொந்த ஊர் பெங்ளூர் ஆனால் தற்பொழுது நானும் எனது குடும்பமும் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறோம்.இங்கு உள்ள BANK ஒன்றில் நான் பணிபுரிந்து வருகிறேன். BANK பணியாளராக இருக்கும் உங்களுக்கு பரதநாட்டியம் மற்றும் பல்வேறு வகையான நடனங்களின் மீது எவ்வாறு எப்பொழுது ஆர்வம் வந்தது சந்தியா….? நான் இப்பொழுது தான் BANK ல் வேலை செய்கிறேன். ஆனால் பரதநாட்டியம் என்பது என் உயிர் உணர்வோடு கலந்து என்றே சொல்வேன்.ஏனென்றால் எனக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது ஒரு தீராத காதல் என்றே சொல்ல வேண்டும்.அதன் படியே பரதநாட்டியமும் கற்று கொண்டேன்.என்னுடைய ஆறு வயதிலேயே பல மேடைகளில் என்னுடைய பரதநாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளது.அதனை தொடர்ந்து பல்வேறு வகையான நடனங்களை நான் கற்று கொண்டேன்.அன்றிலிருந்து இன்று வரை நடனம் என்பது என் வாழ்வோடு இணைந்தே பயணித்து வருகிறது. இப்பொழுது என்னுடைய வீட்டில் மாலை நேர free style dance வகுப்புகளை நடத்தி வருகிறேன்.இதில் பல மாணவர்கள் நடனம் கற்று வருகின்றனர் இது எனக்கு நிறைவான ஒரு மன மகிழ்ச்சியினை அளிக்கிறது.கலைகள் என்பது நம்மோடு அழிவது அல்ல நாம் பிறருக்கு கற்று கொடுப்பதினால் வாழ்வது என்பது என்னுடைய எண்ணம் ஆகும். உங்களின் வேலை பணி நடனம், நாட்டியம் வகுப்புகளுக்கு இடையே உங்களின் கவனம் எவ்வாறு டிக்டாக் பக்கமாக திரும்பியது சந்தியா…? நான் என்னுடைய media videos மற்றும் பொழுது போக்கு videos போன்றவற்றை டிக்டாக்கில் பதிவிட ஆரம்பித்தேன் என்னுடைய dance தொடர்பான வீடியோக்களை பதிவிட்டேன்.அது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இது எனக்குள்ளும் ஒரு நம்பிக்கை தந்தது தொடர்ந்து இன்று வரை டிக்டாக் தளத்தில் என்னுடைய reels பதிவிட்டு வருகிறேன்.இதில் என்னை support பண்ணி வரும் comments களை ஏற்று கொள்வேன்.அதில் என்னுடைய சிறு தவறுகளை சுட்டிக் காட்டி இருந்தால் அதை மாற்றி கொள்வேன்.அதற்கு மாறாக தேவையற்ற comments களை நான் எடுத்து கொள்வதில்லை.அதில் நான் கவனம் செலுத்துவதும் இல்லை. உங்களின் இந்த முயற்ச்சிகளுக்கும் வெற்றிகளும் துணையாக உங்களுடன் இருப்பவர்கள் யார் சந்தியா…? என்னுடைய குடும்பம் தான் என்னுடைய முயற்ச்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் பின்னால் இருக்கிறார்கள் என்று சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு நடிப்பின் மீது ஆர்வம் உள்ளது என்று சொல்கிறீர்கள் விரைவில் தமிழ் திரையுலகில் உங்களை நாங்கள் காணலாமா….? எனக்கு நடிப்பதில் விருப்பம் அதிலும் தமிழ் சினிமாவில் நடிக்க மிகவும் ஆசை தமிழ் படங்கள் அதிகமாக பார்ப்பேன், ஆனால் அதற்கு யார் எனக்கு வழிகாட்டியாக இருப்பார்கள் யாரை அணுகி வாய்ப்பு கேட்பது என்பது எனக்கு தெரியவில்லை.இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறேன். என் மீதும் என் நடிப்பின் மீதும் எனக்கு தன்னம்பிக்கை அதிகம் உள்ளது.நம் எண்ணமே செயலாகும் என்பது என்னுடைய தன்னம்பிக்கை ஆகும்.இதை தவிர தமிழ் சினிமா அவார்ட் நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பேன். நீங்கள் உங்களுக்கும் , பிறருக்கும்சொல்லி கொள்ள விரும்பும் தன்னம்பிக்கை வரிகள் சந்தியா….? வாழ்க்கை என்பது ஒரு பயணம் அதில் இன்பம் துன்பம் என எந்த இடையூறுகள் வந்தாலும் அதை நேராக எதிர் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக பயப்பட்டாலுமா ஓடி மறைந்தது கொண்டாலும் எதுவும் மாறிவிட போவதில்லை அதை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும். அது தோல்வியானால் அனுபவம். வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அவ்வளவு தான். சந்தியா தட்சிணாமூர்த்தி அவர்களின் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு விரைவில் நிறைவேறி சிறந்த நடிகையாக அவர் வலம் வர நாம் வாழ்த்துவோம் ✍️சுபா கிட்டு

சந்தியா தட்சிணாமூர்த்தி Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.27 PM 2

மேனகா

நடிகை மேனகாவின்| வாழ்வியலும்| நடிப்பு உலக பயணமும்| இன்று டெலிவிஷன் சீரியல்களிலும் திரை துறையிலும் வளர்ந்து வரும் நடிகையாய் இருப்பவர் தான் நடிகை மேனகா இவர் நடிகை மட்டும் இல்லை மிக சிறந்த மாடலும் ஆவார்.நடிகை மேனகா தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் 21.6.1996 ல் பிறந்தவர்.இவரின் தந்தை சிறந்த புகைப்பட கலைஞர்.இவருக்கு சிறுவயதில் இருந்தே தன்னை அலங்கரித்து புகைப்படம் எடுத்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் தான்.மேலும் தன் தந்தை புகைப்பட கலைஞர் என்பதால் நடிகை மேனாகாவின் ஆர்வம் சிறுவயதில் இருந்தே சற்று அதிகரித்தே காணப்பட்டது என்று கூறலாம். இவ்வாறு இருந்தவர் திரையில் எவ்வாறு அறிமுகமானர் என்பதை நாம் இங்கே பார்க்கலாம். நடிகை மேனாகாவின் கல்வியும்| கல்லூரி வாழ்க்கையும்| நடிகை மேனகா தனது பத்தாம் வகுப்பு வரை தனது சொந்த ஊரிலே கல்வி பயின்றார்.பின்னர் பதினொன்றாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் நோக்கத்தோடு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர்மலர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்ந்தார் ஆனால் அங்கே நன்கு கல்வி பயின்றார். அங்கே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததினால் மேனகாவிற்க்கு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டது. தனது பள்ளி கல்வியை முடித்த மேனகா தனதுகல்லூரி கல்வியை எங்கு தொடர்வது என்றுயோசித்தார். முதலில் தெரிவு செய்த இடமோ ஊட்டி தான்.பின்னர் அதில் மாற்றம் செய்யப்பட்டு கோயம்புத்தூரில் உள்ள RVS கல்லூரியில் B.sc computer science பயின்றார். தன் கல்லூரி கல்வி முடித்த போதே ஹைதராபாத். பூனே.சென்னை என பல இடங்களில் உள்ள நிறுவனங்களில் இருந்து வந்தது இவருக்கு வேலை வாய்ப்ப்புக்கள். நடிகை மேனகாவின்| சென்னை பயணமும்| IT பணியும்| நடிகை மேனகா கல்லூரி கல்வி முடித்த பின்னர் சென்னையில் உள்ள IT companyல் வேலை கிடைத்து சென்னை வந்தார்.தனது சகோதரி ஏற்க்கனவே சென்னையில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் அவர் சென்னையில் தங்கியிருந்த பிளாட்டில் தானும் இணைந்து தங்கி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் IT ல் பணியாற்றினார். இருந்தாலும் இவரின் மனம் முழுமையாக நிறைவு பெறவில்லை. ஏதோ ஒன்றின் தேடல் இருந்து கொண்டே இருந்தது.அது என்னவென்று அவர் அறியமலே நடிகை மேனகாவின் | டெலிவிஷன் வாய்ப்புக்களும்| நிகழ்ச்சிகளும்| நடிகை மேனகா பள்ளியில் படிக்கும் போதே நடனம் பாட்டு பாடுவதில் ஆர்வம் மிகுந்தவர். மேலும் நடிகர் சிவ கார்த்திகேயனின் தீவிர ரசிகையாவார். இவ்வாறு இருக்கும் பொழுது தான் இன்று டெலிவிஷனில் மிகவும் பிரபலமான இருக்க கூடிய அருண் மற்றும் அரவிந்தின் அறிமுகம்இவருக்கு கிடைத்தது.இவர்கள் சிறு வாய்ப்பினை மேனகாவிற்க்கு வழங்கவே முதல் டிவி நிகழ்ச்சியே சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தின்பேன் பேஸ் ஷோ தான்நடிகை மேனகாவிற்க்கு. இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைகாட்சியில் சில சூட்டிங் promo க்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியில் கன்ட்ஸ்டென்டாகவும் கலந்து கொண்டார். இவ்வாறு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே IT ல் பணிபுரிந்தும் வந்தார் இவர் கலந்து கொண்ட டிவி ஷோக்கள் அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டத்தில் நல்ல வரவேற்ப்பினை பெற்று தந்தது.மேலும் அவர்களின் உற்ச்சாகம் இவருக்கு டிவி துறையில் சாதித்திட ஊக்கம் தந்து. நடிகை மேனகாவிற்க்கு| ஏற்பட்ட விபத்து| இவ்வாறு தனது IT பணி டிவி நிகழ்ச்சி என்று பிஸியாக இருந்து கொண்டு இருந்தவரின் மேனகாவின் வாழ்க்கையில் அந்த விபத்து ஏற்பட்டது. விபத்தினால் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு தனது IT வேலையையும் அவரால் தொடர்ந்து சரிவர செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனது வீட்டில் ஓய் வெடுக்க தொடங்கினார்.மேலும் இந்த சூழ்நிலையில் கொரோனா கால லாக்டவுன் வரவேதான் என்ன செய்வதென்று அறியாமல் ஓய்வினை தொடர்ந்தார் இதனால் இவரின் உடலின் எடையும் கூடியது. IT ல் பணிபுரிந்த மேனகா| எவ்வாறு மாடல் ஆனார்| தான் அடுத்து என்ன செய்வது என்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி போயிருந்த நிலையில்.தனது சகோதரியின் திருமணம் முடிந்தது.இவரின் தனிமை கொஞ்சம் அதிகரிக்கவே தொடங்கியது. அந்த சமயம் தான் தனது அம்மா செய்து வந்த கார்மென்ட்ஸ் தொழிலை தான் ஏற்று நடத்தலாம் என்று முடிவு செய்தார். தானகே இரண்டு மிஷின்களை வாங்கி போட்டு அதில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி ஆடைகளை வடிவமைக்க தொடங்கினார்.அவ்வாறு தான் வடிவமைத்த ஆடைகளை தனது வலை தளங்களின் பக்கங்களில் பதிவிட்டார்.இது ஓரளவிற்கு வரவேற்ப்பினை பெற்று இவரின் தொழில் செய்யும் ஆர்வத்தை அதிகரித்தது. தான் வடிவமைத்த ஆடைகளை வேறு மாடல்கள் அணிந்து விளம்பர படங்கள் எடுக்கும் முயற்ச்சிகளை மேற்க்கொண்டார். இருந்தாலும் இவரின் மனம் நிறைவு அடையவில்லை. மேலும் சிறுவயதில் இருந்தே போட்டோ சூட்கள் தன்னை செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய இவருக்கு.தானே மாடலாக இருந்தால் என்ன தான் வடிவமைக்கும் ஆடைகளுக்கு என்று எண்ணம் தோன்றியது. அதன் படியே தான் வடிவமைக்கும் ஆடைகளை தான் அணிந்தும் மற்றும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அணிவித்தும் தனது ஆடை விளம்பரங்களுக்கான புகைப்படங்களை எடுத்தார் நடிகை மேனகா.அதை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டார். இதனை அவர் தனது தொழில் வருமானத்திற்க்காக செய்தாலும். முழுமையாக அவரின் மனம் நிறைவு பெறவில்லை.தேடல்கள் இருந்தும் தொடர்ந்தும் கொண்டே தான் இருந்தது. பிறகு தனது சொந்த ஊரிலே உள்ள பீயூட்டி பார்லர் நிறுவன உரிமையாளர் தனது மாணவர்களுக்காக மேனகாவை மாடலாக வரும் படி அழைப்பு விடுத்தார். இதன் படியே அழகாக tractional உடையில் மேனகாவை அலங்கரித்தார். பீயூட்டி பார்லர் நிறுவனர்.அதில் போட்டோக்கள் எடுத்து கொண்டார் மேனகா. இதற்கு வருமானமாக 2500 ரூபாய் தரப்பட்டது.இதை இவர் வாங்கும் போது ஒரு மன நிறைவு ஏற்படடது. தனது தேடல் இதில் தான் உள்ளது என்பதை அப்பொழுது தான் புரிந்து கொண்டார் மேனகா. நடிகை மேனகாவின்| திரை துறை அறிமுகம்| தனது பெற்றோரிடம் தனக்கு சீரியலில் நடிக்கும் விருப்பம் இருப்பதாக கூறினார் மேனகா. பெற்றோர் மறுத்து விட்டனர். மேனகாவின் திருமணத்திற்க்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க தொடங்கினார்கள் பெற்றோர்கள். தனது பெற்றோரின் விருப்பத்திற்க்கு சரி சொன்ன போதிலும்.இவரின் மனம் நடிப்பை நாடியது. சில போராட்டங்களுக்குதான் இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்வதாக கூறிபெற்றோரின் சம்மதத்தை பெற்றார். தான் வாணியம்பாடி சூட் சொல்வதாக கூறி சென்னை வந்தார். வந்த பின்னரே பெற்றோரிடம் தான் விஜய் டிவியில் சீரியலில் நடிக்கவே சென்னை வந்ததாக கூறினார். நடிகை மேனகாவின் திரைபட நடிப்பு| முதலில் விஜய் டிவி யில் நடிக்க வந்த இவருக்கு கிடைத்தது திரை துறைய வாய்ப்புக் கள் தான்.. தொடர்ந்து ஐந்து ஆறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். இந்த திரைப்படங்கள் திரைக்கு வர தமதமாகவே தனது வீட்டில் இருந்து மீண்டும் தனது திருமணத்திற்க்கான அழுத்தம் அதிகரித்து. தனது கவனத்தை டிவி சீரியல் பக்கம் திருப்பினார் மேனகா இதனை தொடர்ந்து ஜீ தமிழ் சீரியலில் ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி சீரியலில் சிறிய வாய்ப்பு கிடைத்தது. இந்த சமயத்தில் மீண்டும் ஒரு விபத்திற்க்கு உள்ளான மேனகாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதில் இருந்து தனது உடல் நலம் ஆரோக்கியமாக சிறிது கால இடைவெளி தேவைப்பட்டது இவருக்கு. அந்த இடைவெளியில் பல வாய்ப்புகள் வந்து கை நழுவி போனது இவருக்கு. தனக்கு விபத்தினால் ஏற்ப்பட்ட காயங்களை தனது பெற்றோரிடம் இருந்து மறைத்தார் நடிகை மேனகா.. நடிப்பின் மீது கொண்ட காதலால். |மீண்டும் நடிகை மேனகாவின் சீரியல் பயணம்| அந்த விபத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை மேனகா மீண்டும் தனது போட்டோ சூட்டை தொடர்ந்தார். அதன் பின்னர் ஜீ தமிழ் சீரியலான சித்திரம் பேசுதடி தொடரில் வாய்ப்பு கிடைத்தது. இதனை பார்த்த பெற்றோர்கள் மேனகாவிற்க்கு நடிப்பில் முன்னேற்றம் காண உற்ச்சாகம் அளித்தனர். இதனை தொடர்ந்து இவருக்கு தனது வலை தளங்களின் பக்கங்களில் பலோயர்ஸின் எண்ணிக்கை அதிகரித்து. |சன் டிவி சீரியலில் நடிகை மேனகா| தாலாட்டு சீரியலில் நடிகை மேனகாவிற்க்கு சிறப்பான கதாபாத்திரத்தின் வாய்ப்பு கிடைத்தது. இதில் இவரின் நடிப்பும் திறமையாக வெளிப்படும். இதனால் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. மேலும் ஆங்கரிங் ஸ்டார் பிலிம்..திரை படம் என பிஸியாக இருந்து வருகிறார் நடிகை மேனகா. நடிகை மேனகாவின்| திரைபடங்களின் வரிசைகள்| நடிகை மேனகா விக்கரம் பிரபு நடிக்கும் படம் ஒன்றில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து.நடிகர் அகர்வா நடிக்கும் படத்திலும்.நடிகர் விமல் நடிக்கும் படுகா படத்திலும்..சிறு குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து .இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார். |நடிகை மேனகாவின் கனவு| இவரின் கனவு லட்சியமே டிவி தொடரில் சிறந்த நடிகையாக வேண்டும் என்பதே ஆகும்.டிவி துறையில் மட்டும் அல்லாது திரை துறையிலும் சிறந்த நடிகையாக இவர் வெற்றி பெறும் காலம் மிக அருகில் தான் உள்ளது. இவரின் சிறந்த நடிகையாகும் கனவு நிறைவேறி விருதுகள் பெற்று மகிழ நாமும் வாழ்த்துவோம்.

மேனகா Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.27 PM 1 1

Monisha Chandrasekaran

பஞ்சு போன்ற இவளின்பாதங்களின் அடியைஏந்திய மேடைகளும்குயில் என கூவிபாடிடும் இவளின்குரலை தாங்கியமனங்களும் இன்பத்தில் மூழ்கிபோகின்றது அதில்இருந்து மீள மனம்இன்றி மாடலிங் , பாடல், ஆல்பம் சாங் , நடிப்பு.பேஸன்ட்ரைய்னர் என்று பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் மாடலிங் மங்கை மோனிஷா சந்திரசேகரன் உடன் ஒரு இனிமையான சந்திப்பு. நீங்கள் பாடகர் ஆன தருணங்களை பற்றி எங்களுடன் பகிருங்கள் நான் ஆரம்பத்தில் ஒரு பாத்ரூம் சிங்கர் தான் எனக்குள்ளே முதலில் பாட ஆரம்பித்தேன்அதன் பிறகு அதை என்னுடைய செல்போனில் பதிவு செய்தேன்.அதை என்னுடைய நண்பர்களுக்கும். சகோதிரிகளுக்கும் அனுப்பி வைத்தேன்.அவர்கள் என்னுடைய குரலை கேட்டு மிகவும் இனிமையாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள். அதை என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டேன். எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு கூட நான் பாடுவது தெரியாது.நான் பாடி அனுப்பும் பதிவுகளின் பிண்ணனியில் எந்த ஒரு இசை பதிவும் இருந்தது இல்லை.பின்னர் என்னுடைய நண்பர்கள் மூலமாகவே சங்கம் சேனலில் solo வாக பாடும் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.அதை பற்றி நான் வீட்டில் கூறவில்லை. நான் தனியாக தான் அங்கு சென்று கலந்து கொண்டேன்.அந்த போட்டியின் பெயர் Wipe out. அதில் வெற்றி பெற்றேன் கையில் பரிசுடன் வந்த பின்பு தான் வீட்டில் இருந்தவர்களுக்கே தெரியும்.அவர்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் நீ பாடுவாயா என்று கேட்டனர். இதுவே எனது பாடல் அனுபவம். இதை தவிர்த்து நிறைய ஆல்பம் சாங் பாடி வருகின்றேன். நான் பாடிய ஆல்பம் சாங்Ring ring kanmaniIpl StoryIragale sethiya kannuபோன்றவை ஆகும். எங்கோ ஒரு மூலையில் எனக்கு மட்டுமே கேட்டு கொண்டு இருந்த எனது குரலை இன்று பலரும் ரசித்து கேட்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாடலிங் மற்றும் ஃபேஷன் ட்ரையினிங் பற்றி உங்களின் அனுபவம் மாடலிங் செய்வதில் எனக்கு விருப்பம் உண்டு கல்லூரியில் படிக்கும் போதே ராம் வாக் செய்துள்ளேன் பாட்டு மட்டுமே என்னுடைய உலகம் என்று பாடி கொண்டு இருந்த பெண் நான். அந்த சூழ்நிலையில் தான் எனக்கு நண்பர்கள் மூலமாக மாடலிங் காம்படிசன்ல கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயம் மாடலிங் பற்றி எல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது இருந்தாலும் பங்கேற்றேன் .அந்த ஷோக்கு வந்திருந்த Judges மற்றும் பெரும்பாலன பார்வையாளர்கள் அனைவரும் என்னை பாரட்டினார்கள். உங்களை பார்க்கும் போது நல்ல ஒரு அனுபவம் வாய்ந்த மாடல் கேட்வாக் வருவதை போன்று உள்ளது என்று. I won Miss fashion charm 2021 அதில் runner up டைட்டில் பெற்றேன். அதனை தொடர்ந்து Miss best catwalk of miss star of Tamil Naduடைட்டில் பெற்றேன். அதனை தொடர்ந்து பல கேட்வாக் ஷோக்களில் பங்கேற்றேன் அந்த மாதிரியான நேரத்தில் தான் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது ஒரு பேர்னஸ் கிரிம் விளம்பர படத்திற்க்காக எனக்கு மாடலிங்கில் தெரிந்ததை அங்கு இருக்கும் மாடல்களுக்கு பயிற்சி அளித்தேன் அந்த சமயம் அங்கிருந்து விளம்பர கம்பெனியின் CEO ரெனால்ட் அவர்கள்என்னை முதல் முறையாக பேஸன் ட்ரைய்னராக அறிமுகபடுத்தி வேலையில் அமர்த்தினார். அதில் இருந்து தொடங்கியது எனது ஃபேஷன் ட்ரெயினர் பணி இன்று நிறைய பேர்களுக்கு கேட்வாக் கற்று கொடுத்து வருகின்றேன் 6 ஃபேஷன் ட்ரையினிங் ஒர்க் ஷாப் பணி செய்து முடித்து உள்ளேன்.FASHION trainer for RFE modeling Work shop batch 5. 6.7.8.9 இயற்க்கையாகவே என்னுடைய நடை அழகாக இருப்பதாக எல்லோரும் கூறுவார்கள் என்னிடம் மீடியா துறையில் இருந்து பல்வேறு பட்ட அனுபவம் வாய்ந்த பெண்கள் பயிற்சி பெற வருகின்றார்கள்.எனது வேலையில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். பெரும்பாலும் என்னிடம் ஃபேஷன் ட்ரையினிங் பயில வரும் நபர்களிடம்எனது வேலையை மிகவும் sincere ஆக கற்றுகொடுத்து வருகின்றேன் மாடலிங் மங்கை சிங்கர் மற்றும் பேஸன் ட்ரைய்னர் என்று உங்களுக்கு உள்ள பல்வேறு திறமைகளின் கோணங்களில் அதிகம் கடந்து வந்த தடைகள் எது பொதுவாக தடைகள் என்பது எல்லா துறைகளிலும் இருக்கும் அதுவும் மீடியா துறையில் அளவுக்கு அதிகமாக இருக்கும்.அதிலும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம் தடைகள் நிறையாக இருக்கும். நான் சிங்கரா இருந்ததை விட மாடலிங் செய்ய போறேன்னு சொல்லும் போது அதிக எதிர்ப்பு வீட்டில் இருந்தே வந்தது .மீடியா துறை அனுபவம் என்பது எங்களது குடும்ப பிண்ணனியில் யாருக்கும் இல்லை. அதுக்கு அடுத்து வந்த விமர்சனங்கள் எல்லாம் என அதிகமாக இருந்தது. அதுக்கு முன்பாக நான் ஒரு பெண்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ எனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டேன். அதுக்கு நிறைய கருத்துக்கள் பாராட்டுக்கள் எதிர்மறையான விமர்சனங்கள் என்று நிறைய வந்தன. இருந்தாலும் ஓரளவிற்கு சமூகத்தின் பார்வையில் அது கவனிக்க பட்டது. அதன் பிறகு கொஞ்ச நாட்கள் நான் எதுவும் செய்யவில்லை. என்னிடமே நான் மாற்றம் காண விரும்பினேன் என்ன செய்வது என்று யோசித்த போதுஎன்னுடைய தலை முடியை ஹேர் ஷேவ் பண்ண முடிவு செய்தேன். எனக்கு மிகவும் நீளமான முடி அதை கேன்சரால் பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கினேன். என்னிடம் ஒரு மாறுதல் இருப்பது எனக்கே தெரிந்தது. இதனால் இழப்பு என்றால் நிறைய கேட்வாக் ஷோக்களில் நிராகரிக்கபட்டேன். இதனால் நான் எந்த தயக்கமும் கொள்ளவில்லை. நிறைய ஷோக்களில் நிராகரிப்புக்கள் நடக்கும். இதை தவிர்த்து ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெண்கள் ஒரு துறையில் முன்னேற வேண்டும் என்றால்நிறைய இடங்களில் Adjustment வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றார்கள் மீடியாவை பொறுத்த வரை இது அதிகம் நான் என் திறமைகளை மட்டுமே துணையாக கொண்டு போராடுபவள் அதனால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன். மேலும் நான் பணிபுரியும் துறை சார்ந்த செயல்களை ஆர்வமுடன் கற்று வருகின்றேன். உங்களின் நடிப்பு அனுபவம் நான் தமிழ் நாடு பிலிம் இன்ஸ்டியூட் ல் ஒரு குறும்படம் நடித்துள்ளேன் எனக்கான வாய்ப்புகள் வந்தாலும் நல்ல ஒரு கதாபாத்திரம் ஏற்று நடிக்க காத்திருக்கின்றேன். ✍🏿சுபா கிட்டு

Monisha Chandrasekaran Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.27 PM

Aishwarya vadivu

சாதிப்பதற்க்கு ஒரு லட்சிய கனவு போதுமோகேமராவின் மூலம்காட்சிகளை காதலித்துகொண்டுநடனம்.ஓவியம்.நடிப்பு.பாட்டுஎன்று பல துறைகளில்முன்னேறி சாதித்துவரும்ஐஸ்வர்யா வடிவுடன் ஒரு வண்ணமயமான நேர்காணல். சென்னை girl ஐஸ்வர்யா வடிவு கேமரா women ஐஸ்வர்யா வடிவு இரண்டு கேரக்டரின் சாதனைகள் பற்றி சொல்லுங்கள் சென்னை கேள் ஐஸ்வர்யா ரெம்ப சுட்டி தனங்கள் செய்பவள்நான் கல்லூரியில் படிக்கும் போதும் என்னை சுட்டி தனங்களின் குயின் என்று கூட சொல்லலாம் அந்த அளவிற்கு நான் நாட்டி கேள். எனக்கு பிடித்த ஒரு செயல் செய்ய வேண்டும் என்றாலும் கூட பிறரின் பார்வையில் அது எவ்வாறு விமர்சிக்க படும் என்பதை பற்றி சிந்திப்பவள். ஆனால் கேமரா women ஐஸ்வர்யா தனக்கு பிடித்த செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். அதில் எவ்வாறு சாதனைகள் புரிவது என்பதை பற்றி மட்டுமே சிந்திப்பவள். பிறரின் விமர்சனங்களை பற்றி கவலைபடுபவள் இல்லை. எனக்கான வாழ்வை நானே வாழ வேண்டும் என்று என்னுபவள். கனவுகளை நீங்கள் எவ்வாறு எப்பொழுது காதலிக்க ஆரம்பித்தீர்கள் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என்று சொல்லலாம்.இந்த துறையில் மட்டுமே கனவுகள் கண்டு சாதிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் இல்லை. எனக்கு ஆர்வம் அதிகம் இருக்கும் அனைத்து துறைகளிலும் நிறைய அனுபவங்களை கற்று கொள்ள வேண்டும். அதன் மூலம் நான் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவள் நான்.அதனால் எனக்கு கனவுகள் நிறைய உண்டு. கனவுகள் என்பது ஓர் இரவோடு முடிவது இல்லை.ஒவ்வொரு இரவுகளிலும் ஒரே மாதிரியான கனவுகளை நாம் கண்பது இல்லை. அவ்வாறு இருக்கும் பொழுது. நாம் ஏன் ஒரே இலட்சியத்தை வைத்து கொண்டு அதில் கனவுகள் கண்டு அதன் பின்பு ஓட வேண்டும். சாதனைகள் புரிந்திட இந்த உலகத்தில் நிறைய துறைகள் இருக்கும் போது. எனவே நான் எனது கனவுகளை காதலிக்கிறேன் என் மனதை உற்ச்சாக படுத்தி என்னை அன்போடு வெற்றியை நோக்கி அழைத்து செல்வதும் என் கனவுகளே. ஐஸ்வர்யா வடிவின் ஷார்ட் ஃபிலிம் மற்றும் ஆல்பம் சாங் பற்றி உங்களின் இனிமையான குரலில் சொல்லுங்கள் பார்க்கலாம் நான் கல்லூரியில் படிக்கும் போதே எனது நண்பர்கள் நான் செய்யும் அழகான குறும்பு நடிப்பினை கண்டு. நீ ஏன் நடிக்க கூடாது என்று கேட்டார்கள்.அது தான் என் நடிப்பின் தொடக்கம் என்று கூறலாம்.முதலில் அவர்களோடு மற்ற நண்பர்கள் எடுக்கும் ஷார்ட் பிலிம்சூட்டிங் சென்று அவர்கள் அங்கு எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்று பார்க்க தொடங்கினேன். கேமரா direction and script work அதுவே எனக்குள் அவற்றை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. அந்த ஷார்ட் பிலிம்மில் எனக்கு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . என்னுடைய முதல் ஷார்ட் பிலிம் minalani tamilselviஅந்த ஷார்ட் பிலிம்ல என்னோட முகம் தெரியாத ஒரு சிறிய ரோல் பண்ணியிருப்பேன். இரண்டாவதாக நான் பண்ணுண்ண ஷார்ட் பிலிம். நாவல். அதுக்கு அடுத்து அறம் செய்ய விரும்பு.அதனை தொடர்ந்து இதா மச்சா லவ் கானா ஆல்பம் பாடல்களில் நான் டான்ஸர் Work பண்ணியிருக்கேன். அதுக்கு அடுத்து கருப்பழகி கானா ஆல்பம் சாங் உங்களின் போட்டோ கிராப்பிங் அனுபவம் பற்றி மற்றும் உங்களுக்குள் உள்ள திறமைகள் பற்றி மனம் திறங்கள் முதலில் நான் நடிப்பதற்க்காவே மீடியா துறைக்கு வந்தேன். கேமரா துறையின் மீது எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. நிறையா ஷார்ட் பிலிம்ல் கேமரமேனாக வேலை பார்த்த அனுபவம் உண்டு. ஆனால் நடிப்பை விட எனக்கு கேமரா direction வாய்ப்பு கிடைத்தது.அதை பற்றி நான் பணியாற்றிய ஷார்ட் பிலிம் மூலம் கற்று கொண்டேன். இப்பொழுது ஷார்ட் பிலிம் மற்றும் சினிமா துறையில் பணிபுரியும் கேமராமேன்களுக்கு அஸிஸ்டென்ட் கேமராமேனாக பணி புரிந்து வருகிறேன்.இதுமட்டும் இல்லாமல் கேமரா சார்ந்த வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை தற்பொழுது வரை செய்து வருகிறேன். மேலும் வரவிருக்கும் kombi kadu என்ற film ல்Assistant camera women பணிபுரிந்து வருகிறேன். இதை தவிர்த்து Assistant director in my ex boyfriend film ல் பணிபுரிந்து வருகின்றேன் திறமைகள் இதுதான் என்று வரையறை இல்லைநான் ஒரு actors டான்ஸர்.drawing artist.Singer and model.இன்னும் நிறைய விஷயங்களை வெவ்வேறு துறைகளில் கற்று கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். இது தான் ஒருவரின் சாதனை என்று வரையறை செய்து அந்த வட்டத்திற்க்குள் அடங்கி விடுவதில் எனக்கு சிறிதும் விருப்பம் இல்லை.இது தான் நான். நீங்கள் மீடியா துறையில் சாதித்திட கடந்து வந்த தடைகள் தடைகள் என்று சொன்னால் . என்னோட குடும்பம் நான் நடிக்க போறேன்னு சொல்லுறப்ப அதை அவங்க ஏற்று கொள்ளவில்லை.அதுக்கு அடுத்து சில நண்பர்கள்.உறவினர்கள் எல்லாரும் உன்னால் எல்லாம் நடிக்க முடியாது ஏனென்றால் உன்னுடைய ஸ்கின் நிறம் குறைவு.உன்னோட health problem . இதையெல்லாம் மீறி நீ எப்படி சாதிக்க முடியும்.அந்தமாதரி எல்லாம் சொல்லுறப்ப எனக்கே ஒரு சமயம் ஏன் மேல நம்பிக்கை இல்லாமல் போயிருச்சு.கொஞ்ச நாள் எதுவும் முயற்சி பண்ணம்மா இருந்தேன்.அதற்க்கு அடுத்து நானா சிந்திச்சு பார்த்தேன் ஏன் நாம பிறரரோட விமர்சனத்துக்காக வாழணும்.நமக்குள்ள திறமை இருக்கும் போது நினைச்சு.ஒவ்வொரு வாய்ப்புக்களா நண்பர்கள் மூலம் தேட ஆரம்பிச்சேன். அதுல இப்ப ஓரளவிற்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன். நாம வாழ்ந்து சாகும் போது நம்மள நம்ம சார்ந்தவர்களுக்கும் மட்டும் தெரியக்கூடாது.இந்த சமுதாயத்தில இருக்கிறவங்களுக்கும் தெரியணும்.அந்த மாதிரி தான் வாழணும்.அதுக்கு நாம சாதிச்சு ஒரு பிரபலம் ஆகணும்.அது தான் என்னோட ஆசை. உங்களோட படிப்பு மற்றும் முதல் உங்களின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிர்வு பற்றி நான் BBA Airline and Airport management pursuing பயின்று வருகிறேன். ஒரு பார்லரில் பகுதிநேர பணிபுரிந்து வந்தேன்.அப்பொழுது ஹையாத்ஹோட்டலில் ஒரு ஷோ நடந்தது. அதில் கொஞ்சம் மாடன் உடை அணிந்து dance பண்ணணும்.அப்ப மேக்ப் எல்லாம் முடிச்சிட்டு அங்க ஒரு lighting room இருந்து அங்க நான் ஒரு போட்டோ எடுத்துஅதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போட்டேன்.மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருந்தது. அதுக்கு முன்பு நான் என்னோட இன்ஸ்டா பக்கத்தில் போட்ட போட்டோஸ் விட இந்த போட்டோவிற்க்கு அதிக வரவேற்பு இருந்தது.சரி மக்கள் நமக்கிட்ட இந்த மாதிரி ஒரு திறமைய எதிர்பாரக்கிறாங்கன்னுஎனக்குள்ள அந்த சமயம் ஒரு எண்ணம் தோன்றியது. ✍🏿சுபா கிட்டு

Aishwarya vadivu Read More »

Scroll to Top