Rising Star

WhatsApp Image 2023 06 17 at 2.38.25 PM 1 1

suja

காதலும் ஆர்வமும் எப்போது ஏற்பட்டது சொல்லுங்கள் சுஜா….? நான் ஒரு classical dancer & draining of GURU SRI DURGHA CHARAN RANBIR.என்னுடைய 2 1/2 வயதில் இருந்தே நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். National level awards ஒடிசி நடனத்தில் வாங்கியுள்ளேன்,இதைத்தவிர bollywood dance trainer under bolly wood choreographer ganesh achacharya. டான்சில் நான் வாங்கிய awards என்றால். DD BHARTI CHANNEL (RUNAK JHUN JHUN SHOW) ALL INDIA CLASSICAL DANCE AND MUSIC COMPETITION- RUNNER. RAJIV SAMMAN BY CHIEF MINISTER OF ORISSA. MEERA SAMMAN BY MEERA KALA MANDIR.RAJAISTHAN . HIP GRAM SAMMAN BY WESTERN ZONE CULTURAL CENTER. RAJASTHAN. உங்களின் மாடலிங் அனுபவங்களும் விருதுகளும் பற்றி சொல்லுங்கள் சுஜா…? மாடலிங் என்பது எனது ஃபேஷன் ஆகும்.நான். Little miss OrsiaJunior miss India\’s beautiful hair. இது நான் junior level வாங்கின awards மாடலிங்கில். இதை தவிர, நான் 2015 ல் சென்னை வந்தேன்.இங்கே சென்னை வந்த பிறகு. The face of Chennai 2015Miss madras 2016 Runner. அதுக்கு அடுத்து Miss Karnataka international 2016 runners Miss India miss super talent 2017 (Runners) And Tvc, ramp show, prind ads … என்று மாடலிங் துறையில் பணியாற்றி வருகின்றேன்…! நடிப்பின் மீது உங்களுக்குள் உண்டான காதல் பற்றியும் நீங்கள் நடித்த படங்கள் பற்றியும் கூறுங்கள்…? நடிப்பு என்பது என்னுடைய கனவு ஆகும். நான் முதலில் சென்னை வந்தபோதுஎன்னை போட்டோ சூட் எடுத்தவர் கார்த்திக் சீனிவாசன் அவர்கள் தான். அப்பா தான் நீ நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தால்.அதற்கான துறையாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவை தேர்ந்தெடு என்று கூறியவர். நான் தற்பொழுது அமையா என்ற ஒரு படத்தில் Titelo role நடித்து வருகிறேன். அந்த படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது இந்த படம் எனது திறமையான நடிப்பிற்க்கு சான்றாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை தவிர காஞ்சனா 3 ல் ஒரு கேரக்டர் ரோலில் நடித்து உள்ளேன். அடுத்து மாமா கி..கி.. இதை தவிர Web series madras mansion VIU ott and Mrs. HR on youtube இதை தவிரநெஞ்சாம் கூட்டுக்குள் ளே..! ஒரு short film பண்ணுணேன். இது டொரோன்டோ இன்டர் நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்ல30 அவார்ட்ஸ்க்கு மேல பெற்றது. அதுக்கு அடுத்து பொரி உருண்டைன்னு ஒரு காமெடி பிலிம் பண்ணுனேன். அது எனக்கு பெஸ்ட் காமெடிக்கான ஆக்டர்ன்னு பெயர் வாங்கி தந்தது. நடிப்பு,நடனம், மாடலிங் தவிர பிற துறைகளின் மீது உள்ள உங்களின் பணிகள் பற்றி கூறுங்கள் சுஜா…? பிற துறைகள் என்றால்..? நான் டியூப்லைட் புரொடெக்ஷனில் கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்றி வருகின்றேன்.இந்த நிறுவனமானது 200 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.இதை தவிர ஹபி தி லவ் யுவர் செல்ஃப் என்ற ஆன்லைன் ஷாப் ஒன்றை நடத்தி வருகின்றேன். உங்களுக்கு மன அழுத்தமான நேரங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்…? அப்படி இருந்தால் நான் நிறையா பாடல்கள் கேட்பேன்..! இயற்க்கை யின் அழகை ரசிப்பேன். நடிப்பில் உங்களின் கனவு லட்சியம் என்று எதனை நினைக்கின்றீர்கள்…? ஒரு நல்ல படத்தில்சிறந்த கதையில் சிறப்பான கதாபாத்திரம் ஏற்று நடிக்க வேண்டும் என்பது எனது கனவு ஆகும். உங்களை போல் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் கூறுவது…? நம்ம எல்லாருக்கும் கனவு என்பது நிச்சயமாக இருக்கும். அது எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை நிறைவேற்ற நாம் போராட வேண்டும். அந்த போராட்டத்தில் நம்மை விமர்சிக்கும் நிறையா நபர்களின்விமர்சனத்தை நாம் சந்திக்க நேரிடும். அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாம் முன்னேறி சென்றால் நாம் வெற்றி பெறலாம் என்பதே ஆகும். சிறந்த நடிகையாக வேண்டும் என்ற சுஜா சூர்யாவின் கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்..! ✍️சுபா கிட்டு

suja Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.25 PM

Aszika saran

நீங்கள் சென்னைவாசியா ஆஷிகா…? ஆமாம் நான் சென்னைவாசி தான், இருந்தாலும் எனது சொந்த ஊர் பீகார், ஆனாலும் பிறந்து வளர்ந்தது படிச்சது எல்லாம் சென்னை தான், நீங்கள் மாடலிங் துறைக்கு எவ்வாறு வந்தீர்கள் பற்றி எங்களிடம் அழகாக சொல்லலாமே ஆஷிகா….? முதலில் நான் மாடலிங் துறைக்குள் வருவேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை, என்னுடைய நண்பர்கள் நீ மாடலிங் செய்தால் நல்லா இருக்கும், மாடலிங் துறையில் முயற்சி பண்ணி பார் என்று எனக்கு ஒரு தன்னம்பிக்கை கொடுத்தனர், அதன் பிறகே நான் மாடலிங் பேஜன்ட்டில் கலந்து கொண்டேன். அதில் runner ஆகவும் வந்தேன்.அதுவே என்னால் மாடலிங் துறையில் தொடர்ந்து சாதிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை தந்தது, அப்படியே தொடர்ந்தது எனது மாடலிங் துறையில் வளர்ச்சியும், வெற்றியும். மாடலிங் துறையில் இருந்த நீங்கள் எவ்வாறு சினிமா துறைக்குள் வந்தீர்கள் ஆஷிகா…? மாடலிங் துறையில் இருந்தது நான் சினிமாதுறைக்கு வருவதற்கு முன்னால் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது, அதில் நடித்தேன் அது நடிப்பில் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கற்று தந்தது.அதற்கு அடுத்து எனக்கு தெரிந்த நண்பர்களின் மூலமாக எனக்கு movies ல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அப்பொழுதுநான் நினைத்தேன் மாடலிங் மட்டும் இல்லாமல் எனது சிறந்த நடிப்பின் மூலம் சினிமா துறையில் நிலைத்து நிற்க்க முடியும் என்று,Modeling, photoshoot \’s and adds போய் கொண்டு இருந்த எனது வாழ்க்கை சினிமாவின் பக்கம் திரும்பியது, நீங்கள் நடிக்கும் படத்திற்க்கு எவ்வாறு கதை தேர்வு செய்கிறீர்கள் என்று கூறுங்கள் ஆஷிகா…? நல்ல கதையில் சிறந்த ஒரு கதாபாத்திரம் என்று நான் தேர்வு செய்கின்றேன்,சின்ட்ரல்லா படத்தில் எனக்கு last timeing ல தான் வாய்ப்பு கிடைத்தது, இருந்தாலும் சிறந்த கதைக்காக அந்த படத்தில் நடித்தேன்,அதை போன்று எனக்கு அடுத்தடுத்து வரும் படங்களின் வாய்ப்புக்களிலும் கதைக்கும் கதாபாத்திரத்திற்க்கும் முக்கியத்துவம் கூடுத்தே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றேன்…! உங்களின் த்ரில்லர் மற்றும் சைக்கோ த்ரில்லர் கதாபாத்திரங்கள் பற்றி கூறுங்கள் நாங்களும் ஒரு த்ரில் உடன் கேட்க்கின்றோம்…? த்ரில்லர் மற்றும் சைக்கோ த்ரில்லர் கதாபாத்திங்கள் எனக்கு தானாகவே நண்பர்களின் மூலம் அமைந்தது, அதில் என்னுடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கவே ரசிகர்களுக்கு அது பிடித்துபோனது, சின்ட்ரல்லாவை தொடர்ந்து வந்த படங்களிலும் எனக்கு த்ரில்லர் கதாபாத்திரங்களே கிடைத்தது.நானும் அதை விரும்பி ஏற்றே நடித்தேன். ஆனால் என்னுடைய நிஜவாழ்க்கையில் நான் ஒரு அமைதியான பெண் தான். நீங்கள் மாடலிங் மற்றும் சினிமா துறையில் வருவதற்கு நீங்கள் கடந்து வந்த தடைகள் பற்றி சொல்லுங்கள் ஆஷிகா…? தடைகள் இல்லாத துறைகளே இல்லை.அதையெல்லாம் தாண்டி தான் நாம் ஜெயித்து ஆக வேண்டும். முதலில் என்னுடைய குடும்பத்தில் யாரும் மீடியா துறையின் பிண்ணனியில் இல்லை, இருந்தாலும் கூட அவர்கள் எனக்கு எந்த ஒரு எதிர்ப்பும் சொல்லவில்லை, நண்பர்களின் support இருந்தாலும் கூட நான் ஒரு தனிநபராகவே இருந்து போராடி வர வேண்டியது இருந்தது. இப்படியே தோல்விகள், நிரகாரிப்புக்கள் சிலவற்றை கடந்து போராடியே இன்று மீடியா துறையில் எனது முன்னேற்றமான வளர்ச்சி தொடர்ந்து வருகின்றது. சினிமா மற்றும் மாடலிங் இல்லாமல் வெப்சீரியல் பண்ணியிருக்கேன், நான் நன்றாக நடனம் ஆடுவேன். நீங்கள் வாங்கிய விருதுகள் பற்றியும்உங்களின் நடிப்பில் வெளிவந்த படங்கள் பற்றியும் கூறுங்கள் ஆஷிகா…? நான் வாங்கிய Awards என்றால் Sita awardsMiss promising actor 2022. Mr&Miss fashion icon 2017. Miss kriya 2017 runner up. Miss Tamil Nadu 2018 finalist, Miss photogenic 2018, கிங்ஸ் ஆப் டான்ஸ் விஜய் டிவி சீசன் -12016, YouTube series: funny factor -Alaparraigal series, அதுக்கு அடுத்து நான் நடித்த படங்கள் என்றால். சின்ட்ரல்லா (2021)Metro 2 (yet to release) அதுக்கு அடுத்து AGP – லட்சுமி மேனன் lead ( Released Jan 2022) பிரபு தேவா project jus completed. Web series one completed-yet to release. அதுக்கு அடுத்து என்னோட add shoot Namba unnavau. Otto shirts brand. Azar app. Viral sign government add.Done lots of photoshoots. உங்களை போல் இன்று சாதிக்க போராடும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ஆஷிகா…? உங்களின் திறமை மீது நீங்கள் நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள்எந்த தடைகள் வந்ததாலும் அதில் உங்கள் கவனத்தை செலுத்தாமல் உங்களின் லட்சியங்களை நோக்கி செல்லுங்கள்,கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். உங்களின் லட்சியம் கனவுகள் பற்றி..? சினிமா துறையில் நான் ஒரு சிறந்த நடிகையாக வர வேண்டும் என்பதே எனது கனவு மற்றும் லட்சியம் ஆகும். Modeling, actors and multi-talented Ashika saran அவர்களின் சிறந்த நடிகையாக ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற நாமும் வாழ்த்துக்கள் கூறுவோம்.

Aszika saran Read More »

WhatsApp Image 2023 06 17 at 2.38.23 PM

Darshini Arulanandam

மாடலிங் இவளின்உயிர் மூச்சுஎன்று கொண்டு..! மாடலிங் துறையில் தடைகள் பல கடந்து வந்தபீனிக்ஸ் பறவையாய்..! உயிர்த்தெழுந்து..! தன் அழகான நளின மிகு புகை படங்களில்மக்களின் மனம்கவர்ந்து…! வரும்..! மாடல் தர்ஷினி அருளானந்தம் அவர்களுடன் ஒரு அனல் பறக்கும் அழகான நேர்காணல்..! மாடலிங் துறைக்கு நீங்கள் எவ்வாறு வந்தீர்கள்…? நான் மாடல் ஆக வேண்டும் என்பது எனது சிறு வயது விருப்பமோ, கனவோ கிடையாது, நான் டாக்கரா வேண்டும் என்றே எண்ணினேன், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலம் தான், அங்கே நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன், பின்பு டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்ததால் அங்கிருந்து வெளியில் வந்து, பிளஸ் ஒன், பிளஸ் டூ, வேறு பள்ளியில் சேர்ந்தேன், அங்கே பையாலஜி எடுத்து படித்தேன்..! அங்கு தான் எனக்குள் இருக்கும் ஆர்ட் மற்றும் மாடலிங் பற்றி உணர தொடங்கினேன்,நானாக வரையவும், எழுதவும் தொடங்கினேன், நான் எனக்குள்ள திறமைகளை உணரவே இரண்டு ஆண்டுகள் ஆனது. ஆனால் அப்பொழுது எனக்கு அங்கே பல தடைகள் வந்தது…! இருந்தாலும் கூட என்னுடைய friends சிலர் என்னை ஊக்க படுத்தினர், நீ செய் என்று…! அதனை அடுத்து நான் ஆர்க்கிடெட் படிக்கலாம் என்று முடிவு செய்த பிறகு அதற்காக நான் தேர்ந்தெடுந்த இடம் சென்னை தான், நான் எடுக்கும் முயற்ச்சிகளுக்கு இங்கே வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பினேன், சென்னையில் ஆர்க்கிடெட் படிப்பதற்க்கா ஒரு அகடாமியில் சேர்ந்தேன், அப்பொழுது தான் நான் எழுதிய பதிவுகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட ஆரம்பித்தேன், நான் எழுதுவதற்க்கான போட்டோக்களை Goole போன்ற தளங்களில் தேடி எடுப்பதில் எனக்கு பெரும்பாலும் விருப்பங்கள் இருந்து இல்லை, அதனால் நானே போட்டோக்கள் எடுக்க ஆரம்பித்தேன், அப்பொழுது தான் என்னில் உள்ள மாடலிங் ஆர்வம் பற்றி அறிந்தேன், என்னையே புகைப்படங்கள் எடுத்து அதற்க்கு ஏற்றாற் போன்ற பதிவுகளை பதிவிட ஆரம்பித்தேன், அப்பொழுது தான் தொடங்கியது எனது மாடலிங் பயணம்…! நீங்கள் மாடலிங் துறைக்கு வருவதற்கு இருந்த தடைகள் பற்றி கூறுங்கள் தர்ஷினி…? என்னை பொறுத்த வரையிலும் எல்லாம்மே தடைகள் தான்…! நான் பள்ளியில் படிக்கும் போதே தொடங்கியது…! நீ ஏன் இதை பண்ணுற..! இதை செய்யாத போன்ற பல தடைகள் இருந்தது…! அதற்கு அடுத்து கலேஜ் அங்க எல்லாருமே நான் போடுற போஸ்ட்ட வச்சு என்னை எனக்கு தெரியாமலே பேசுறது, அடுத்து என்னோட பிரண்ட்ஸ் கூப்பிட்டு அவங்களை பயமுறுத்தி ஏன்..? கூட பேச விடாம செய்யிறது…! இந்த மாதிரி நிறையா இருந்தது…! அதையெல்லாம் தாண்டி வீட்டில் அப்பா, அம்மா, என்னை எவ்வளவு தைரியம்மா வளர்த்து இருந்தாலும் கூட, என்னை அவங்க வந்து இந்த மாதிரி எல்லாம் செய்யாத, நல்லா படின்னு தான் சொன்னாங்க,நான் என்ன பண்ணுறேன், அதையெல்லாம் பத்தி அவங்க யோசிக்கவும் இல்லை suport பண்ணவும் இல்லை…! இந்த மாதிரி சொல்ல முடியாத அளவுக்கு தடைகள், அதுக்கு அடுத்து அங்க இருந்து வெளில வந்து வேற காலேஜ்ல ஆர்க்கிடெட் join பண்ணுனேன், இப்ப என்னோட படிப்பு மற்றும் மாடலிங் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன்…! உங்களின் இன்ஸ்டா பதிவுகள் பற்றி எங்களிடம் சொல்லலாமே தர்ஷினி…? முதலில் இன்ஸ்டாகிராம் பற்றி முழுமையாக தெரியாமல் தான் அதில் பதிவுகள் போட ஆரம்பித்தேன்…! அதில் எனது பதிவுகளுக்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது, அதே சமயம் எதிர்ப்புகளும் இருந்தது, கொரோனா கால கட்டத்தில் என்னுடைய மாடலிங் புகைபட பதிவுகளும், ரீல்ஸ்களும் பதிவிட ஆரம்பித்தேன் அதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது…! அங்கிருந்து எனக்கு மாடலிங் துறைக்கான வாய்ப்புகள் வர தொடங்கியது…! இருந்தாலும் மாடலிங் மற்றும் ரீல்ஸ் இவைகளை எல்லாம் தவிர எனக்கு சமூகம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்களை கூற வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்..! நடிப்பில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா தர்ஷினி….? ஆர்வம் இருக்கின்றது, இருந்தாலும் கூட நம் தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கான ஹீரோயின் வாய்ப்புகள் மிகவும் குறைவே…! ஒரு ஹீரோயின் என்றாலே அவர்களை வெள்ளை நிறத்தில் திரையில் காட்டும் வழக்கம் இன்று வரைதமிழ் சினிமாவில் தொடர்கிறது, வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்களே தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக அறிமுக படுத்த படுகின்றார்கள், ஏன் அவ்வாறு செய்ய வேண்டும், நடிக்க வாய்ப்பு தேடும் தமிழ் பெண்களுக்கு அந்த வாய்ப்பினை தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் தரலாமே…! இது என்னுடைய கருத்து ஆகும். நான் நானகவே நடிக்க விரும்புகிறேன், இதற்கு எதற்கு நிற வேறுபாடுகள், இந்த நிலை தமிழ் சினிமாவில் மாற வேண்டும் என்பது என் விருப்பம் ஆகும். இந்த சமுதாயத்தின் பார்வையில் மாடலிங் பற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்…? இந்த சமுதாயத்தின் பார்வையில் மாடலிங் அதை ஆதரிப்பவர்கள் பலர் இருந்தாலும்..! அதற்கு எதிராக பேசுபவர்களும் இருக்கின்றார்கள்…! நான் ஒரு பதிவு இன்ஸ்டாவில் போட்டேன் என்றால்..! அதை பார்ப்பவர்கள் எந்த மாதிரி comments பண்ணுகின்றார்கள் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தாலும் கூட…! அடுத்தவரை விமர்சிப்பது என்பது தவறான ஒன்றே ஆகும்…! ஆனால் இந்த தடைகள் அனைத்தையும் மீறியே மாடலிங் மட்டும் அல்ல பிற துறைகளிலும் நாம் சாதிக்க வேண்டும்…! உங்களின் மாடலிங் வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்கள் என்று நீங்கள் யாரை கூறுகின்றீர்கள் தர்ஷினி…? என்னுடைய மாடலிங் வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்கள், முதலில் என்னுடைய பெற்றோர்கள் துணையாக இருக்கவில்லை. இருந்தாலும் தற்பொழுது அவர்கள் முழுமையாக ஆதரவு தரவில்லை என்றாலும் என்னுடை மாடலிங் துறையை சிறிது ஆதரிக்கின்றனர், அதற்கு அடுத்து என்னை சுற்றியுள்ள நண்பர்கள்..! உங்களை போல் சாதிக்க வரும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் தர்ஷினி…? என்னை போல் சாதிக்க வருபவர்களுக்கு முதலில் நான் சொல்ல விரும்புவது,யார் என்ன சொன்னாலும் அதை எல்லாம் தகர்த்து எறிந்து உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து உங்களது முயற்ச்சியில் நீங்கள் வெற்றி பெற போராடுங்கள் அதுவே நீங்கள் உங்கள் மீது நீங்கள் வைக்கும் மிகப்பெரிய வெற்றி முயற்சி ஆகும்..! (தர்ஷினி அருளானந்தம் அவர்களின் மாடலிங் கனவுகள் நிறைவேறி அவர் சிறந்த மாடலாக வர வேண்டும் என்று வாழ்த்துவோம்..!

Darshini Arulanandam Read More »

WhatsApp Image 2023 05 26 at 3.35.42 PM

GV Krishna

குழந்தை நட்சத்திரமாக தொடங்கியது இவனின்வெள்ளி திரையின்வெற்றி பயணங்கள்! சென்னையில் பிறந்த சிங்க தமிழனே! தன் 13 ம் வயதில் இருந்தே வாழ்வின்வறுமையோடு!போராட தொடங்கினான்! ஆங்கரிங் உலகில் 9 மணிநேர உலக சாதனை புரிந்த! சரித்திரம் பேசும் கலைஞனே! மிமிக்ரி ஸ்கிரிப்ட் ரைட்டிங் மாடலிங்ஷார்ட் பிலிம்! டப்பிங்!என! பல முக திறமை கொண்ட படைப்பாளனே! உனக்கு வெள்ளி திரையில் இயக்குனர் சிகரம்! பாலசந்தர்! நல்வாய்ப்பினை வழங்கிட! தொடர்ந்துஉனது வில்லதனமான நடிப்பில்! திரைப்படங்கள்!பரத் உடன்5ம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி!கிருஷ்ணலீலை! அட்டகத்தி தினேஷ் உடன் நானும் சிங்கில் தான்! விஜய் சேதுபதி.. ஜெயசூர்யா உடன் இறைவி! சித்தார்த் உடன்நாற்பதிகாரம் 79 என நீண்டு செல்ல! வரவிருக்கும் பகவான் திரைப்படமும் உன்திறமைக்கு வெற்றிபடமாக! அமையட்டும்! திரையில் சாதிக்க எண்ணும் இளைஞர்களுக்கு! தனியொருவனாய் வெள்ளி திரையில்நீ தோன்றிய! கஷ்ட்டங்கள் கடந்துவந்த லட்சியகாலங்கள் ஆதரவாகவிளங்கட்டும்! திரை உலகில்! உனது!சிறந்த வில்லனாக வேண்டும் என்ற கனவு! வெகுவிரைவில் வெற்றி பெற்று!கலை துறையில்! உயர்ந்த விருதுகள்பெறட்டும்! உன் அம்மாவும் பாட்டியும் உனது வளர்ச்சிக்கு! துணையாக இருந்துவிட! வெள்ளி திரையில் பலவெற்றி திரைப்படங்கள்உனது நடிப்பில்! வெளிவந்து! உனது சாதனைகளின்புகழ் பரவட்டும் என்று வாழ்த்துகிறது!

GV Krishna Read More »

WhatsApp Image 2023 05 26 at 4.53.20 PM

SANTHIYA

இவள் ! தாயின் கருவில் ஜனித்த போதேகேட்டு உணர்ந்த கதைகள் ஏராளம்! மடை திறந்த வெள்ளெமென 4 வயதில் இருந்தே தொடங்கியதுமேடை பேச்சுக்கள்! இவளோ! வீர மங்கை தான் பள்ளி கல்லூரிநாட்களில் கபடி விளையாட்டில்! சாதனை படைத்திடும்! சாதனை பெண் இவள்!ஏட்டில் சட்ட கல்விகற்று! தன் உரத்த சிந்தனைபேச்சுக்களால்சமுதாயத்தில் இடியெனமுழங்கி குரல் கொடுத்த! உம்மை! சின்னத்திரையில் இமயம் டி.வி.ஆங்கராய்அறிமுகப்படுத்தியது! சன்டிவி ஆதித்யா ஜெயா டிவி என பலமுன்னனி சேனல்களில்நீ ஆங்கரில் இன்றுவெற்றிகள் பெற்று வந்திடவே! பல ஆடிசன்கள் உனது திறமையை உற்று நோக்காது நிராகரித்ததநிலையிலும்! சோர்ந்து போகாது! மீடியா உலகில் சாதிக்கபிறப்பெடுத்தாய்! தன்னம்பிக்கையே உருவான வெற்றி பெண்ணே! சன்டிவியில் திருப்பு முனையாக வந்துகண்மணி சீரியலின்வாய்ப்பு! அதில் உனது நடிப்புதிறமை வெளிவரவே! தொடர்ந்து சீரியலில்உனக்கு வாய்ப்புகள்!சத்யா! காற்றின் மொழி!சுந்தரி நீயும் சுந்தரன் நானும்! நம்ம வீட்டுபெண் என! சின்னத்திரையில் ஆதவன் ஜெயசந்திரன்அறிமுகங்கள்! கலை துறையில் நீ முன்னேறி செல்ல உனக்கு நம்பிக்கை வழிகாட்டியது! தேடல் மிகுந்த உனதுநடிப்பு பயணத்தில்வரும் வாய்ப்புகள்உன்னைநடிப்பில் சாதித்திடசெய்யட்டும்! பெற்றோர்கள் இவளின்வெற்றிக்குபக்கபலமாக இருந்திடவே! சின்னத்திரையில் தொடரகிறது இவளின்நடிப்பின் சாதனைகள்! நடிப்பில் சாதனைகள்படைத்திட துடித்தெழும்இளைஞர்களுக்கு! உனது போராட்டங்களும் நம்பிக்கையும் நிறைந்தமுயற்ச்சிகளும்!வெற்றிகளும்! ஊக்கமாக விளங்கட்டும்! சின்னத்திரையில் உனது நடிப்பை கண்டுவியந்த ரசிகர்களின்மனம்! வெள்ளி திரையில் உன்னை கண்டு மகிழ்ந்திட காத்திருக்கிறது! வெள்ளி திரை சின்னத்திரை என நடிப்பில் வெற்றி விருதுகளின் மாலை சூடி! உன்னை சாதனை பெண்ணாக கலை துறை போற்றி! மகிழ்ந்திட! புன்னகை மலர்கள் கொண்டு வாழ்த்துகிறது மோட்டிவ்வேட்டிவ் தமிழா!

SANTHIYA Read More »

JANANI

JANANI

மைம் ஆர்ட்டிஸ்ட்டாக தொடங்கியது இவளின் நடிப்பின் பயணம் ஐந்து வருட கலையுலக போராட்டங்களில் இவள்கண்ட அவமானங்களை! நினைத்துகண்ணீர் கவலைகளில்புதைந்து போகாது! எதிர்மறையான துன்பம் தரும்விமர்சனங்களில்வீழ்ந்துவிடாது! நடிப்பு துறையில் சாதித்திட வீறு கொண்டு வெகுண்டுஎழுந்தாள்! நரிக்கூட்டம் யூடியூப் சேனலில் துவங்கி! நவரசபட்டறை நம்மபையன் யூடியூப்சேனல்களில்தனது திறமையின்மூலம் முன்னேறி சென்று! வெற்றி கண்ட உன்னை வெள்ளி திரை பொன்னான வாய்ப்புக்கள் வழங்கி வரவேற்றது! சோதனைகள் என்பதுதிரை உலகில் மிகவும்சாதாரணமான நிகழ்வுகள் தான்! தன் திறமையை குறைவென நினைத்துஎண்ணி இகழ்ந்தவர்களின்மத்தியில்! இன்று இவளே சிறந்தநடிகையாக வெற்றிகள்பெற்று! நடிப்பில் சிறந்தத குணசித்திரநாயாகியானாள்! பெற்றோரும் தனதுதன்னம்பிக்கையும் இலட்சிய பயணத்தில் துணை நிற்க்க! தொடர்கிறது இவளின்திரை உலகின்சாதனைகள்! விலைமதிப்பற்ற உனதுநேரங்களை விலங்குகளை நேசித்துசெலவிடும் ! மனம் என்றும் பாசத்தின் இமயம் தான்! இதுவரையும் இனிமேலும் வர இருக்கும் உனது திரைப்படங்கள்! வெற்றி படங்களாக அமைந்து உனது புகழ்திசைகள் தோறும்அதிர்ந்து ஒலிக்கட்டும்! சாதித்திட துடித்திடும் இளய சமுதாயத்திற்க்குஉனது சோதனைகள் நிறைந்த சாதனை பயணம்! சான்றாக விளங்கட்டும்! வெள்ளி திரைகள் பல கண்டு! வெற்றி மகிழ்ச்சிகள் பெற்று! சின்னத்திரை வெள்ளி திரைகளில் வெற்றிநடிகையென வெற்றியின் தங்க மகளாய் விருதுகள் பலவாழ்த்தி! மகிழ்ந்திட! அளவற்ற மகிழ்ச்சி கொண்டு வாழ்த்துகிறது . ✍🏿 subha kittu

JANANI Read More »

KEERTHANA NEDUNCHEZHIYAN

Keerthana Nedunchezhiyan

நிமிர்ந்த நன் நடையும்நேர் கொண்ட பார்வையும்…நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்….. என பாரதியின் சிந்தைகருவறையில் தோன்றிய பெண்ணே… நடிப்பு என்பது உனக்குபிறப்பின் பெரும் வரமே…… முத்தமிழ் கலைகளில் ஒன்றான நாடக கலைஉன் உதிரத்தில் உறைந்த ஒன்றே…. நாடக கலைஞரான அப்பாவின் ஊக்குவிப்புஉனது பள்ளி நாடக மேடையில் வெற்றி பரிசுகளாய் குவிந்தது…… மீளாத துயரம் உன்னைஇருள் சூழ்ந்து கொண்டதுஉன் அப்பாவின் பிரிவால்….. கண்ணீர் தீ சுடரில்எரிந்து விடாதுகாலத்தின் போக்கில்வறுமையோடு துணிந்து போராடி தொடர்ந்தது உனது கல்லூரி கல்வி…… சாதிக்க பிறந்தவர்களேபெண்கள்…. வறுமை கண்டு வாழ்விழந்துபோகாது திறமை கொண்டு முன்னேறதொடங்கியது உனதுநடிப்பின் உயிர் துடிப்பு…. ஆங்கர் ஆக தொடங்கியது உனதுசாதனை பயணம்…. கல்லூரி கல்வியின் இரண்டாம் ஆண்டிலேஉனது குறும்பட நடிப்பு….. எண்ணி சிரித்திடுவார்இகழ்ந்து பேசிடுவார்அதிலும் பெண் என்றால் பெரும் பழிகூறிடுவார் உற்றாரும்உறவினரும்… அது சாதிக்கும் உனக்குதடைகளோஎன்று கலைந்து…. மீண்டும் தொடர்ந்தது உனது முயற்ச்சியின்வெற்றி இலக்குகள்…. அலைபேசியில் சிறு முயற்ச்சிகள் ஆரம்பத்தில் தடைகளாக உன்னைதடுமாற வைத்த போதும்…. தோல்விகள் வெற்றியின் முதல் கல்என நம்பிக்கை உனக்குநீயே ஊட்டி….. சாதிக்க துடித்தாய்… இன்று நீயோ சாதனைபெண்களின் பட்டியலில்… குறும்படம்..ஆல்பம் சாங்காஸ்..வெப் சீரியலென பலபிம்பங்களின் பிரதிபலிப்பில்…. கிருஷ்ணகிரியில்ஒரு நாடக கலைஞனின்மகளாய் பிறப்பெடுத்து…. பல துறைகளில் சாதிக்கும் சாதனைபெண் கீர்த்தானவே… சின்னத்திரை வெள்ளி திரைகளில்வெகு விரைவாக தங்களின் நடிப்பினை காண காத்திருக்கிறதுவரும் காலம்…. வாய்ப்புகள் உங்களைநாடி வந்துஉங்களின் திறமைவளரட்டும்…. வெற்றி விருதுகள் பலவழங்கட்டும் கலை உலகம்… என வாழ்த்தி மகிழ்கிறது. நன்றி 💐 Subha kittu

Keerthana Nedunchezhiyan Read More »

WhatsApp Image 2023 05 26 at 5.15.21 PM

Subathini

வளர்ந்து வரும் துணை நடிகையாய் வெள்ளி திரையில் தன் நடிப்பின்மூலம்….! சாதனைகள் புரிந்து வரும் சாதனை பெண்இவள்…! கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகதொடங்கியது இவளின்நடிப்பு பயணம்….! சோதனைகளின் வலிகள் இவளை சூழ்ந்த போதிலும்….! தன் விடா முயற்ச்சியின்மூலம் நடிப்பு துறையில்போராடி ….! தனக்கென தனி முத்திரை பதித்தாள்….! நடிப்பில் பாய்ந்திடும் புலியாய் 30 க்கு மேற்பட்ட படங்களில்நடித்து….! வெள்ளி திரையில் சிறந்த நடிகைகயானாள்….! சாதிக்க போராடும் இவளை நிராகரிப்புகள்நெருங்கி விமர்சித்ததுஉண்டு….! அவற்றை எண்ணி வருந்ததாதுதுணிந்தெழுந்தாள்….! அறம் வனமகன் போன்றதிரைப்படங்கள்…..! இவளின் நடிப்பிற்க்கு முத்தாய்ப்பாக மகுடம்சூட்டியது….! தன் பெற்றோரும் நண்பர்களும்நடிப்பு துறையில்….! சாதித்திட நம்பிக்கை தந்திட….! எதிர் வரும் தடைகள் பல உடைத்தெறிந்துகலை துறையில்முன்னேற தொடங்கினாள்…..! இவளின் நடிப்பில் வெளிவர இருக்கும் எதிர்க்கும் துணிந்தவன்திரைபடத்தில்…..! மலர்மகள் கதாபாத்திரம் சிறந்தவெற்றி நடிகையாகவிருதுகள் பல பெற்றுதரட்டும்….! இனி வர காத்திருக்கும்யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படமும் இவளின் நடிப்புக்கு சிறந்த சான்றாகஅமையட்டும்….! கலை துறையில் சாதிக்க போராடும்இளைஞர்களுக்கு….! உனது தன்னம்பிக்கை நிறைந்த முயற்ச்சிகளின் வெற்றிகள்…..! நம்பிக்கை உயிர் ஊட்டட்டும்….! கலை துறை வெற்றி வாய்ப்புகள் பல வழங்கிஉன்னை வாழ்த்தட்டும்..! வெள்ளி திரை சின்னத்திரைகளிலும்இனி வரும் காலங்களில்…..! உனது நடிப்பின் சாதனை பயணம் தொடரட்டும்….! நடிப்பை தன் இறுதி மூச்சு உள்ளவரைநேசிக்க துடிக்கும்சிங்க பெண்ணே…! கலை துறையில்வின்னை எட்டும்சாதனைகள் புரிந்துநீ மகிழ்ந்து வாழ்ந்திட…! மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம். ✍🏿 subhakittu

Subathini Read More »

Scroll to Top