பியூட்டி குயின் Ronnie Nityanand ( beauty queen)அழகாய் இவளின்
இதழ் அசைவுகள் பூசி
கொள்ளும் புன்னகை
சாயங்கள்
பிறரை அழகாக்கி மகிழ்வதே இவள் வாழ்வின் நோக்கங்கள்
நடன மங்கையாய்
நாட்டியம் ஆடி
அசைந்து வரும்
வண்ண மயிலென
அமைதியை (மெடிடேசன்)கல்வியாய்
போதிக்கும் அறிவு
சிலையென
மீடியா மற்றும் காஸ்மெட்டிக் மார்க்கெட்டிங் என்று
துளி நேர ஓய்வும் இல்லாத காஸ்மெட்டிக் தயாரிப்பாளர் Ronnie Nityanand உடன் அழகான நேர்காணல்
உங்களின் படிப்பு
காஸ்ட்ராயாலஜி (அழகு பொருட்கள் தயாரிப்பு)
அழகில்லாத உயிர்கள் என்று எதுவும் இல்லை
உயிரற்ற பொருட்களின்
உருவங்கள் கூட மிகவும்
அழகானதே.
என்று எண்ணுபவள் நான்.
எனது படிப்பும் அழகு பொருட்கள் தயாரிப்பை சார்ந்தது தான்.
காஸ்ட்ராயாலஜி படிச்ச நீங்க எப்படி மெடிடேசன் டீச்சர் ஆனீர்கள்
மெடிடேசன் செய்வதின் மூலம் மனம் அமைதியாகும்
இங்கே வாழ்பவர்கள் அனைவருக்கும் அமைதி என்பது தேவையான ஒன்று தான். அதில் நானும் ஒருவர் என்று எண்ணுகிறேன்.அதனால் மெடிடேசன் பள்ளி ஒன்றில் பணி புரிகின்றேன்.
பியூட்டி குயின் Ronnie Nityanand டான்ஸர் Ronnie Nityanand ஆனது எப்படி
எனக்கு நடனத்தில் ஆர்வம். அதனால் நடனத்தை மிகவும் நேசித்து பழகினேன்
இப்பொழுது நான் ஒரு உகந்தா டான்ஸர்
உங்களின் மீடியா அனுபவம் பற்றி மனம் திறங்கள் கேட்க்கலாம்
மீடியா வாய்ப்பு என்பது எனக்கு நண்பர்கள் மூலமாகவே கிடைத்தது
நடிப்பு என்பது ஒரு சாதாரண செயல் இல்லை
அதற்கு நிறையாக கடின உழைப்பு தேவை
என்னை பொறுத்தவரை நான் நடித்து இந்த ஆண்டில்
வெளிவர உள்ள
இரண்டு ஸ்டார் ஃபிலிம், இரண்டு வெப் சீரியஸ்,1 சீரியல்.. என்று அனைத்தும் நடிப்பில் எனக்கு ஒரு நல்ல நடிகை என்று ஒரு பெயரினை பெற்று தரும் என்று எண்ணுகிறேன்.இதை தவிர இரண்டு ஆல்பம் பண்ணியிருக்கேன்.அதோட பெயர் YEAH YEAH pulla. Album
உங்களது ஸ்டார்டஸிக்கல் கம்பெனி பற்றி
என்னோட ஸ்டார்டஸிக்கல் கம்பெனி விரிவு படுத்த வேண்டும் என்பது எனது ஆசை.
சேல்ஸ் மார்க்கெட்டிங்கில் நல்ல
ஒரு முன்னேற்றமான இடத்தை பிடிக்க வேண்டும்
இங்கு ஏற்க்கனவே ஐந்து பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்
என் கம்பெனியின் பிராண்ட் நேம் IVO CAT
புரொடெக்ட் நேம் CHEZ GLO.
குழந்தைகளின் அழகு தேவதை Ronnie Nityanand
முதலில் எனது சொந்த ஆர்கானிக் குழந்தைகளுக்கான
அழகு சாதன பொருட்களை தயாரித்து உள்ளேன்
அது மார்க்கெட்டிங் வட்டத்தில் அடுத்த மாதத்தில் இருந்து விற்பனைக்கு வர உள்ளது.அதற்க்கு அடுத்து ஆண்.பெண். இருவருக்குமான அழகு பொருட்களை அறிமுக படுத்த உள்ளேன்.
இவைகள் நம் ஸ்கின்னிற்க்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவையாகும்
கல்லூரி மாணவிகளுக்கும் பெண்களுக்கும் வழிகாட்டும் Ronnie Nityanand
பொதுவாக பெண்கள் அனைவரும் முன்னேற்றம் பெற வேண்டும் என்று எண்ணுகிறேன்.இரவில் தனது காஸ்மெட்டிக் தயாரிப்பு பணியிலும் பகலில் கல்லூரி வகுப்பில் மாணவிகளுக்கு இதனை பற்றி சொல்லி
கல்லூரியை விட்டு வெளிவரும் போதே
அவர்களுக்கான பணியை அவர்களுக்கு உரிய சம்பளத்தோடு
பெற்றிட வழி காட்டுகின்றேன்