ஆன்லைன் ஷாப்பிங் மூலம்
மக்களின் பார்வையில்
நீங்காது நிலை பெற்று
இருக்கும் கலைஞனே!
தொழில் கல்வி முடித்து!
தொலைதூர கல்வியில் ஆறு வருடங்கள் சைக்காலஜி
தன்னை கற்று!
இயந்திரமயமாக மாறி போன இந்த சமுதாயத்தில்
மக்களின் மனதோடு
உரையாட துணிந்தான்!
மீடியா உலகின் மீது
இவனுக்கோ தனி ஆர்வம்!
ஆரம்பத்தில் கால் சென்டர் vj என
பணிபுரிந்த போதும்!
வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு தன்னை வழிகாட்டியாக
மாற்றினான்!
இன்றோ சென்னையில் 50…100.. ட்ரெய்னிங்
சென்டர்கள்…
என பத்து ஆண்டுகளாக தொடர்கிறது 15 வெப்சைட்டில் இவனது
வெற்றி சாதனைகள்!
முதலில் மீடியா உலகில்
வாய்ப்புகள் தேடி
முன்னேறி சென்று
உனது நிகழ்வுகள்!
ரோட்ரி கிளப்பில் சொக்கலிங்கம் அவர்களின் நட்பினால்
பல மேடைகள்
ஏறி புகழ் பெற்றது!
உனது லட்சிய வழிகளில் தடைகள்
நீக்கினாய் தனி மனிதாய்!
மீடியா துறையில்
சாதனை படைத்திட
வெற்றியின் சுவடுகளின் பின்னால்
முன்னேறி சென்றாய்!
Mc நிறுவனம் தன்னை
சென்னையில்
தொடங்கி விட!
உனக்கு துணையாக நின்றவர்களில்
ஒருவர் தான்
தோழி நந்தினி அவர்கள்!
சாதனைகள் படைத்திட
எண்ணும் இளைஞர்களுக்கு
உனது திறமை மிகுந்த
வழிகாட்டல்!
நம்பிக்கையின் உயிர்
ஊட்டி சென்றிட!
உன்னை சுற்றி பல
திறமைமிக்க நண்பர்களின் வட்டம்
விரிவடைந்து!
மீடியா..மூவி என
பல கோணங்களில்
வெளிபட்டது
உனது திறமைகள்!
உலகில் தலை சிறந்த
ஆங்கராக வேண்டும்
என்ற உனது எண்ணம்
கனிந்து நிறைவேறட்டும்!
தடைகள் என்பதை கண்டு உனது தன்னம்பிக்கையை
இழக்காது!
அச்சம் இன்றி
போராடும் இளைஞனே!
உன்னை கண்டு
இந்த சமுதாயம்
பெருமை கொள்ளட்டும்!
இலங்கையில் உனது மேடை நிகழ்வுகள்
அரங்கேறும் காலம்
விரைவில் வந்து
உன்னை சேரட்டும்!
உன்னை போன்று
இன்றைய இளைய சமுதாயம்!
பிறரின் வளர்ச்சிக்கு
உதவி மகிழட்டும்!
என உம்மை வாழ்த்தி
வளர்கிறது .