எதை நீ நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகின்றாய் என்று சினிமா பயணத்தில் தன் மேல் நம்பிக்கை கொண்டு திரை உலகில் நடிகையாக மின்னிடும் நடிகை சபிதாராய் அவர்களுடன் ஒரு மகிழ்வான நேர்காணல்.
Name | Sabbitaroi |
Mother’s Name | Prema |
Date of Birth | 25-10-1989 |
Native Place | Coimbatore |
School Name | C.H.S.S |
College Name | Madras University |
Current Place | Chennai |
Occupation | Actress In Movies |
Degree | M.A Public Admission |
Awards/Recognition | – Got Award From Ulaganayagan Kamalhasaan for Vikram movie – Irumbuthirai 100days award |
Movie Names/Album/Advertisements | Vikram , Sardar, 1947 August 16 , J Baby , Irumbuthirai , Prince , Siren , Dhillukudhootu part 2 |
உங்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் சபிதாராய் (Sabbitaroi) ..?
என்னுடைய சொந்த ஊர் என்றால் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள பொள்ளாச்சி. நான் பள்ளி படிப்பை C.H.S.S.பள்ளியில் படித்தேன்.
Madras University ல் M.A. படித்தேன்.
சினிமாவின் மீது உங்களுக்கு எப்போது ஆர்வம் வந்தது இல்லை சிறுவயதில் இருந்தே நீங்கள் நடிகையாக வேண்டும் என்ற கனவு இருந்ததா சபிதாராய் (Sabbitaroi) ..?
எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.அத்தகைய ஆர்வம் எனக்குள் வரக்காரணம் என் அம்மா என்றே நினைக்கிறேன். என்னுடைய அம்மா ஒரு ஆர்ட்டிஸ்ட் அவங்கள் சினிமா துறையில் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கும் போதே என்னுடைய சிறுவயதில் நான் Movies நடித்துள்ளேன். இடையில் என்னுடைய படிப்பின் காரணமாக நான் நடிப்பதை பற்றி யோசிக்கவில்லை.ஆனால் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளேன் சினிமா மீது எனக்குள் எப்போதும் தீராத காதல் உண்டு.
நீங்கள் சிறந்த நடிகை என்பதை தவிர நீங்கள் ஒரு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்ற பார்வையில் உங்களைப் பற்றி சொல்லுங்கள் சபிதாராய்(Sabbitaroi) ..?
நான் பல Movies டப்பிங் பேசியுள்ளேன்.நான் டப்பிங் பேசிய படங்களிலும் நான் நடித்தும் உள்ளேன். வாரிசு படத்தில் டப்பிங் பேசியுள்ளேன். ஒரு நடிகையாக நீங்கள் ஆகவில்லை என்றால் நீங்கள் எந்த துறையில் சாதித்து இருப்பீர்கள்..? நான் நடிகையாக வரவில்லை என்றால். டப்பிங் ஸ்டுடியோ வைக்க வேண்டும் என்பது எனது கனவு ஆகும்.இதை தவிர ஒரு Business Woman ஆக வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.
சினிமாவில் உங்களின் கதாபாத்திரத்தை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள் சபிதாராய் (Sabbitaroi) ..?
சினிமாவில் நான் எனக்கு வாய்ப்புகள் வந்தாலும் கூட நான் எனக்கான கதாபாத்திரத்தையே தேர்வு செய்து நடிக்கிறேன்.அது மக்களின் மனதில் நீங்காத இடம் பெற வேண்டும் என்பது எனது எண்ணம் ஆகும்.
சினிமா துறையில் உங்களின் கனவு என்னவாக இருக்கிறது அதைப் பற்றி சொல்லுங்கள் சபிதாராய் ..?
சினிமா துறையில் என்னுடைய கனவு என்றால் சிறந்த நடையாக வேண்டும். சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்க வேண்டும் என்பதே ஆகும். அது நான் ஏற்று நடிக்கும் சிறிய கேரக்டர்களுக்கு கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.
உங்களது சினிமா வாழ்வில் உங்களுக்கு துணையாக இருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் சபிதாராய் (Sabbitaroi) …?
என்னுடைய அம்மா தான்.அவர் தான் என்னுடன் துணையாக இருக்கிறார்.அதுவே நான் ஒரு நடிகையாக முன்னேறி செல்ல எனக்கு துணையாகயும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.
நீங்கள் நடிகையாக கடந்து வந்த கஷ்டங்கள், தடைகள் பற்றிய உங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சபிதாராய் (Sabbitaroi) ..?
தடைகள், கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை பயணம் என்பதே கிடையாது.இது எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் வருவதும் போவதும் உண்டு. இதையெல்லாம் கடந்தே நாம் சாதிக்க வேண்டும். ஒரு நடிகையாக இதை நான் கடந்து வந்து இருக்கின்றேன். சினிமா வாழ்க்கையில் அவமானங்களும், கஷ்ட்டங்களும் ஒரு பகுதி அதை கடந்து தான் பலரும் வர வேண்டும்.
நடிப்பு துறையில் நீங்கள் நடிகையாக வாங்கிய விருதுகள் பற்றி சொல்லுங்கள் சபிதாராய் ..?
நான் நடிகையாக விருதுகள் வாங்கிய போது மகிழ்ச்சியாக இருந்தது. நான் வாங்கிய விருதுகள் என்றால் Got Award From Ulaganayagan Kamalahasaan for Vickram movie, Irumbuthiri 100 days award.
நீங்கள் நடித்த படங்கள் பற்றி சொல்லுங்கள் சபிதாராய் (Sabbitaroi) ..?
Vikram. Sardar, 1947 August 16, J Baby, irumbuthirai, prince, Siren,Dhillukudhootu part 2, etc இன்னும் பல படங்களில் நடித்து உள்ளேன். தற்போது நடித்து கொண்டும் வருகிறேன்.
நீங்கள் உங்கள் வாழ்வின் நம்பிக்கையாக எதை நினைக்கின்றீர்கள் சபிதாராய் (Sabbitaroi) …?
முதலில் நான் என்னை நம்புகின்றேன்.எனக்குள் நம்பிக்கையாக இருப்பது இந்த பரந்த உலகம் தான். ஏனென்றால் நான் என்ன நினைக்கின்றேனே அதை உடனடியாக அது தரவில்லை என்றாலும் அது எனக்கு எந்த சமயத்தில் கிடைக்க வேண்டுமோ அதை தருகின்றது.
உங்களைப் போல் சினிமா துறையில் நடிக்க வரும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் சபிதாராய் Sabbitaroi …?
சினிமா என்பது உங்களது நம்பிக்கையை கடைசி நேரத்தில் கூட மாற்றி உங்களை காத்திருக்க வைக்கும்.ஆனால் நீங்கள் முயற்சி செய்தால் உங்களின் திறமைக்கான வெற்றி இங்கே கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனாலும் கூட உங்களின் வெற்றி என்பது நீங்கள் கேமரா முன்னாடி நின்று நடிக்கும் வரை உறுதி செய்யப்படாமலே இருக்கும். நீங்கள் அந்த இடத்தில் நடித்த பின்பே அது நடிப்பில் உங்களுக்கான வெற்றியாக நீங்கள் கருத வேண்டும். அவ்வாறு நடக்காமல் நீங்கள் சில இடங்களில் நிராகரிக்கப்பட்டு வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும் நேரங்கள் உங்களுக்கு மன வலியை தந்தாலும் கூட அது உங்களை வலிமை படுத்தும் golden time ஆகும். அப்பொழுது நீங்கள் மன உறுதியோடு முயற்சிகள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஏனென்றால் இங்கே ஒவ்வொரு துறையிலும் நிராகரிக்கப்பட்டவர்களே பெரும்பாலும் அந்த அந்த துறையில் சாதனையாளராக இருக்கின்றார்கள். உங்களின் நேர்காணல் எங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது.நீங்கள் சிறந்த நடிகையாக வேண்டும் என்ற வாழ்த்தி உங்களின் டப்பிங் ஸ்டுடியோ கனவும் மிக விரைவில் நிறைவேற வாழ்த்துகின்றோம். மேலும் சிறந்த நடிகையாக தேசிய விருது நீங்கள் வாங்க வாழ்த்துக்கள் Sabbitaroi .
✍️சுபா கிட்டு.