San Rechal Gandhi

WhatsApp Image 2023 06 17 at 2.38.28 PM 1 1

அழகும் திறமையும்
நிறைந்து
திறமைகள் நிறங்களை நிராகரிப்பது இல்லை
என்ற தன்னம்பிக்கையோடு மேடையில்
அன்னம் போல் நடை பயின்று ரசிகர்களின்
மனங்கவர்ந்து
வரும். மாடலிங் தேவதை San Rechal உடன் ஒரு அழகான நேர்காணல்.

உங்களின் மிஸ் இந்தியா கனவு பற்றி சொல்லுங்கள்…(San Rechal)

மிஸ் இந்தியா ஆக வேண்டும் என்பது எனது கனவு என்று சொல்வதை விட.
அதுவே என் வாழ்வின் லட்சியம் ஆகும்.
அதற்கான கோச்சிங் கிளாசில் சேருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.
எவ்வளவு தான் நம்மிடம் திறமைகள் இருந்தாலும்.
அதை வெளி கொண்டு வர பொருளாதாரமும் தேவைப்படுகிறது.
அதையும் தாண்டி நாம் நம் கனவினை வென்று சாதிக்க வேண்டும்.
அதற்கான ஸ்பான்ஸர்கள் எனக்கு கண்டிப்பாக கிடைப்பார்கள் என்ற
நம்பிக்கை என்னிடம் உள்ளது.

நீங்கள் மாடல் என்ற நிலைக்கு வருவதற்கு கடந்து வந்த கடின பாதைகள் பற்றி சொல்லுங்கள்…?

கடின பாதைகள் என்றால்…?
என்னுடைய நிறத்தினால் நிறைய இடங்களில் நிராகரிக்கபட்டுள்ளேன்.
என்னுடைய கலருக்கு பவுன்டேசன் இருக்கிறதா என்று மேக்கப் பீல்டில் இருப்பவர்கள் ஏற்று கொள்ள வைப்பதற்க்கே எனக்கு பல மாதங்கள் தேவைப்பட்டது.
என்னோட skin tone க்கு முதலில் white கலர் பவுண்டேசன் உடன் கண்ணுக்கு போடுகிற மை சேர்த்து தான் போட ஆரம்பித்தார்கள்.
அதுக்கு பிறகு தான் இந்த கலர்ல இருக்கிறவங்களுக்கும் மேக்கப் போடலாம் அப்படிங்கிறதே ஏற்று கொள்ள ஆரம்பிச்சாங்க.
நிறையா இடத்துல என்னோட கலர பத்தி பேசுறப்ப நான் சண்டை எல்லாம் போட்டு இருக்கேன்.
நம்மளோட ஒரிஜினல் கலர் என்னாங்கிறதே மறந்து விட்டு.
இன்னைக்கு எல்லாரும் கலரை வச்சு நிராகரிக்கிறது ஒரு தவறான கண்ணோட்டம்.
என்னை ஒரு மாடல்ன்னு யாரும் முதலில் சொல்ல சொல்ல இவங்க ஒரு dark model.
அப்ப white இருக்கிறவங்களை ஒயிட் மாடல்ன்னு சொல்ல வேண்டியது தானே.
அவங்கள மட்டும் ஏன் model சொல்லனும் சொல்லுங்க பார்க்கலாம்.
இப்ப மேக்கப் போடுறாவங்களை பாருங்க சில பேர் கழுத்து ஒரு கலர்லையும், முகம் ஒரு கலர்லையும் இருக்கும்.
அங்க உங்களோட எந்த கலர் வெளில தெரியுது.அதை எப்படி நீங்க ஏற்று கொள்கிறீர்கள் .
கலர்ங்கிறது just நம்மோட உடம்போட எலும்புகளை மூடுற ஒரு தோலோட நிறம்
அவ்வளவு தான்.
அதை தவிர நாம அதுக்கு முக்கியத்துவம் குடுத்து பேசுறது முட்டாள் தனம்.

இப்ப jewelry add பாருங்க நிறையா மாடல்கள் வருவாங்க.
அதை அவ்வளவு ஒரு கலரா காட்டுவாங்க.

ஏங்க white இருக்கிறவங்க மட்டும் தான் jewelry போடுறாங்களா. அப்படி போட்டா jewelry sales ரெம்ப குறைவாக தான் இருக்கும்.

ஏன் மக்களோட பார்வையில அந்த ஒரு கற்பனையை கொண்டு போய் சேர்க்கணும்.

Dark ka இருக்கிறவங் jewelry போட்ட இன்னம் அழகா இருப்பாங்க அந்த மாதிரி உண்மையை மாடல்கள் வச்சு எடுக்காலம்.

என்னோட கலர சொல்லி என்னை வேணாண்ணு சொல்லுவாங்க அந்த இடத்தில எல்லாம் என்னோட திறமையை பாக்க மாட்டாங்க.

அங்க எல்லாம் என்னோட குரல் உயரும்.அதை பாத்து என்னை மாதிரி ஒவ்வொரு துறையிலும் இருக்கிறவங்க வெளில வர ஆரம்பிச்சாங்க அவங்களும் பேச ஆரம்பிக்க தொடங்கினார்கள்.

அதுவே எனக்கு ஒரு வெற்றி தான்.

ஆனால் இப்ப இப்ப தான். நிறம் இல்லாமல் திறமையை மட்டும் பார்த்து தேர்ந்தெடுக்கிற நிறையா talent show நடக்க்கிறது.

முதலில் எனக்கு ஏற்பட்ட தடைகளின் போது என்னை நானே நம்ப தொடங்கினேன்.

அதுவே என் ஒவ்வொரு வெற்றியை நோக்கிய முயற்ச்சிகளுக்கும் நம்பிக்கையாக அமைந்துள்ளது.

மாடலிங் துறைக்கு நீங்கள் எவ்வாறு வந்தீர்கள் அதைப் பற்றி பேசலாம் San Rechal..?

மாடலிங் துறை என்பது என்னை பொறுத்த வரை புதிதான ஒன்று தான்.
எனது குடும்பத்தில் உள்ள யாருக்கும் மாடலிங் அனுபவம் என்பது சிறிதும் கிடையாது.
இருந்தாலும் என்னுடைய சிறிய வயதில் இருந்தே வெஸ்டர்ன் உடைகளை எனது அம்மா எனக்கு அணிந்து விடுவார்.
பிறகு அது எனக்கு பிடித்த உடையாக மாறியது.
ஆனால் அது பலரின் பார்வையில் விமர்சன பேச்சுக்களாக மாறும்.
உடை என்பது ஒரு மனிதனின் வாழ்வை எவ்வாறு தீர்மானிக்கும்.அது நாகரீகத்தின் போக்கில் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து கொண்டே தான் வருகின்றது.

\”ஆரம்பத்தில் ஆடைகள் அணியாத மனிதன்
உடை அணிய தொடங்கியது நாகரீகத்தின் வளர்ச்சி தானே…!

ஏன் அவர்கள் ஆடை அணியவில்லை அணிந்தார்கள் என்று யாரும் விமர்சிக்கவில்லை.
அதை நாம் ஏற்று கொண்டோம்.

அதை போல் தான் அன்றைய உடைகளிலிருந்து இன்றைய உடை மாற்றம் வரை என்பது என்னுடைய கருத்து.

என்னுடைய ஆர்வம் தான் என்னை ஒரு மாடலாக உருவாக தூண்டியது.

இன்று நான் ஒரு western மாடல்.
அதற்கு பல தடைகளை கடந்து தான் வந்துள்ளேன்.
இன்றளவும் கடந்து கொண்டு தான் இருக்கின்றேன்.

Black model and Indian model இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன….?

என்னோட கலர வச்சு இங்க இருக்கிறவங்க எல்லாம் என்னை பிளாக் மாடல்ன்னு சொல்லுறாங்க.
ஆனால் வெளிநாடுகளில் எல்லாம் என்னை ஒரு இன்டியன் மாடல்ன்னு தான் சொல்லுறாங்க.
இந்த மாதிரி ஒரு வேறுபாடு நம்மில் இடம் தான் இருக்கிறது.
எப்பவும் ஒருத்தவங்களோட திறமையை வச்சு தான் சொல்லணுமே தவிர அவங்களோட நிறத்த வச்சு சொல்லக்கூடாது.

உங்களுடைய படிப்பு கனவுகள் பற்றி..?

நான் Medical Admission க்கு prepare செய்கின்றேன். Neet exam க்கு படித்து வருகின்றேன்.என்னுடைய மிஸ் இந்தியா கனவு நிறைவேறியவுடன் .
மருத்துவம் படித்து
Biology center ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது லட்சியம் ஆகும்.

அது மட்டும் இல்லாமல் சவுத் இன்டியன் மாடல் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்க வேண்டும் என்பதும் எனது கனவு ஆகும்.

உங்களின் பொது வாழ்வு பற்றி….?

பொது வாழ்வு என்றால் நான் Neet தேர்விற்க்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகின்றேன்.

மாதம் ஒரு முறை கிராமத்தில் உள்ள நூலகங்களுக்கு சென்று வாசிக்க தெரியாத மக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த கதைகளை வாசித்து காட்டுகின்றேன்.

இதை தவிர வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் கூட நாம் நிற பிரிவினை பார்க்கின்றோம்.
அவ்வாறு இருப்பது கூடாது என்று வலை தளத்தில் பதிவுகள் செய்கின்றேன்.

உங்களின் தனி திறமைகள் பற்றி…?

நான் ஒரு மேடை பேச்சாளர் அதை சார்ந்து பரிசுகள் பல பெற்றுள்ளேன். தற்பொழுது முதல்வராக இருக்கும் திரு.ஸ்டாலின் அவர்களிடம் ரூ. 10000 பரிசும் பெற்றுள்ளேன்.

நீங்கள் மாடலிங் துறையில் பெற்றுள்ள டைட்டில்கள் பற்றி சொல்லலாமே எங்களுக்கும் ரசிகர்களுக்கும்…?

டைட்டில்ஸ் சொன்னா
மிஸ் பாண்டிச்சேரி.
மிஸ் கருப்புநிறத்தழகி.
மிஸ் டார்க்கஸ்ட் குயின்.
மிஸ் சைனிங் ஸ்டார்.
எம்பியரிங் மாடல் சவுத்.

Above all title winner.

Next

Queen of madras 1 st runner up.

Miss BFW \”22\” RUNNER UP.

இப்பொழுது இவ்வளவு தான்.

உங்கள் மாடலிங் வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்கள்…?

முதலில் என்னுடைய அப்பா எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னுடைய முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்.
அவருடைய பெயர் Gandhi Devaraju.

அதற்கு அடுத்து என்னுடைய நண்பர் SATHYA
நான் சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் உன்னால் முடியும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை தந்து என்னை இவ்வளவு வெற்றிகள் காண செய்தவர்.

நீங்கள் உங்களை போல் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு கூறுவது…?

உங்களிடம் பணம் இல்லையென்றால்
இல்லை என்றே சொல்லுங்கள்.
பிறருக்காக உங்களுடைய கஷ்டங்களிலும் பணம் செலவு பண்ணுவதை நிறுத்துங்கள்.
அது யாராக இருந்தாலும்.

உங்களுக்கான முயற்ச்சிகளை நீங்கள் உங்களை மட்டுமே நம்பி செய்யுங்கள்.

அவ்வளவு தான்…!

San Rechal Gandhi அவர்களின் மிஸ் இந்தியா கனவு நிறைவேறி அவர் மிஸ் வேர்ல்ட் டாக வலம் வந்து மகிழ நாம் வாழ்த்துவோம்.

✍️சுபா கிட்டு.

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×