மேடைகளில் நடை பழகி
தவழ்ந்து வரும் நிலவே
உன் ஆடை அலங்கார
பாவனைகள் கண்டு
கீழே கை தட்டி
மகிழ ரசிகர்கள் கூட்டம்
ஏராளம்.
மீடியா துறையில்
இவள் நடித்த
சீரியல்கள் நம்
கண்ணுக்குள் நிற்க்கின்றது.
குறும்படங்கள், மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்று
மீடியா துறை மட்டும்
இல்லாமல் பல துறைகளிலம் சாதனை
புரிந்து வரும் நடிகை
மற்றும் ஈவன்ட் ஆர்க்கனைஸர் சரண்யாவுடன் ஒரு சந்திப்பு
சரண்யாவின் சாதனைகளுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்?
என் சாதனைகளுக்கு பின்னால் இருப்பது என்னுடைய துணிச்சலும் தன்னம்பிக்கை மட்டுமே
அதுவே எனக்கான வெற்றியை நான் அடைந்தற்க்கும். இனிமேல் அடைவதற்க்கும் என்னை அழைத்து செல்லும்.நம் ஒவ்வொருவர் இடத்திலும் இது கண்டிப்பாக உண்டு.
உங்களின் சீரியல் வாய்ப்பு
முதலில் உறவினர் மற்றும் நண்பர்கள் என ஒரு இயக்குனர் மூலம் ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியில் அரண்மனை கிளி சீரியலில் அது ஒரு லாயர் கேரக்டர்
அந்த கதைக்கு அது அழுத்தமான கேரக்டர் தான்.அது மக்களிடம் என்னை ஒரு நடிகையாக கொண்டு சேர்த்தது
உங்களின் ஆர்வம் ராம் ஷோ . மற்றும் பேஷன் ஷோவின் மீது எவ்வாறு திரும்பியது
அரண்மனை கிளி சீரியலுக்கு பின்பே ராம்ஷோ மற்றும் பேஷன் ஷோவின் மீது எனக்கு ஆர்வம் வந்தது
ஏன்? நம்மால் முடியாது
என்று.
முதலில் கைரா ஈவன்ட் சிட்டி சென்டரில் நடத்திய மிஸஸ். சவுத் இண்டியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
மிஸஸ் சவுத் இண்டியா டைட்டில் பெற்றேன்
அதற்கு அடுத்து பேஸ் ஆப் கோயம்புத்தூர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு
பேஸ் ஆப் கோயம்புத்தூர் டைட்டில் பெற்றேன்.
அதற்கு அடுத்து மிஸஸ் ஒக்கேரா இண்டியா ஆன்லைனில் நடத்திய
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் டென்
வின்னிங் தர வரிசையில் வந்தேன்.
துணிச்சல் சரண்யா ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை உருவாக்கியது எப்போது
நம்ம நிறையா ஈவன்ட் ல கலந்துக்கிறோம்.ஏன் நம்மளே சொந்தம்மா ஒரு ஈவன்ட ஆர்க்னைஸரா ஆக கூடாதுன்னு எனக்குள்ள ஒரு எண்ணம் உருவாகியது.
அந்த எண்ணத்தோட ஆரம்பம் தான்.என்னோட லா பேஸன் ஈவன்ட் கம்பெனி( laa fashion event company)
என்னோட மகன் பெயரோட எழுத்தை வச்சு ஆரம்பிச்சேன்.
ஆனா அதோட குயின் நான் தான்
அதோட முதல் ஷோ வந்து நான் எங்கு என்னோட பேஷன் லைப்ப ஆரம்பிச்சனோ
அதே சிட்டி சென்டர்ல
தான் நடத்தினேன்
50 மாடல் வச்சு அந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்தேன்.
அதுக்கு அடுத்து பிரைட் ஆப் மாம் ஷோ பண்ணுணேன் அந்த ஷோவில் 50 குழந்தைகள் அவங்க அம்மாவுடன் கலந்து கொண்டு அழகாக நடந்து வந்தாங்க
அதுக்கு அடுத்து நான் பண்ணுண்ண ட்ராவல் ஷோன்னா தமிழகத்தின் ஐ கான் ஷோ தான்.
தமிழ் நாட்டுல இருக்கிற எட்டு பகுதிகளை தேர்வு
செஞ்சு ஆடிசன் நடத்தினோம் அதுல 300 பேர்கள் பங்கேற்றனர்.
இறுதியாக சென்னையில் நடைபெற்ற அந்த ஷோவில் 70 பேர் பங்கேற்றனர்
அதுக்கு அடுத்து மிஸ்டர் மிஸ் மிஸஸ் பேஸ் ஆப் தமிழ் நாடு ஸ்டேஜ் ஷோ
வேல்ஸ் யுனிவர்சிட்டி பல்லாபுரத்தில் நடத்தினேன்.
அதுவும் எனக்கு ஒரு நல்ல பெயரை மக்கள் மத்தியில் வாங்கி தந்தது.
அதுக்கு அடுத்து அப் கம்மிங் அக்டோபர் மாதம் பிரைட் ஆப் இயர்
அவார்ட் ஈவன்ட் நடத்த போறேன்.
என்னோட கனவு என்னான்னா இதை ஒரு விஐய் டிவி அவார்ட் மாதிரி கொண்டு வரணும் இதன் மூலமா நிறையா திறமையானவங்களுக்கு விருது வழங்கணும்
என்பதே ஆகும்.
உங்களோட ஷார்ட் பிலிம் பற்றி சொல்லுங்க
பிகைண்ட் உட்ஸ் சேனல்ல தான் என்னோட ப்ரஸ்ட் ஷார்ட் பிலிமான எதற்க்கும் அஞ்சேல் ரிலீஸ் ஆனது.அந்த ஷார்ட் பிலிம்ல நான் அஸோஸியேட் ட்ரைக்டரா ஒர்க் பண்ணியிருந்தேன்.அதுல நான் நடிச்சும் இருந்தேன்
அதுக்கு அடுத்த என்னோட ஷார்ட் பிலிம்மான ஜஸ்ட் மிஸ் படமும் பிகைண்ட் உட்ஸ்ல தான் ரிலிஸ் ஆக போகுது
துணிச்சல் சரண்யாவான நீங்க துணிந்து போராடி வாங்கிய அவார்ட்ஸ் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லுங்கள்
அவார்ட்ஸ் சொல்லும் போது
ரிவர்ஸ் மாரத்தான் ஈவன்ட் ல ஒரு ஈவன்ட பாட்னர் பங்கேற்றேன்
அதன் மூலமாக
எனக்கு இண்டியா புக் ஆப் அவார்ட் கிடைத்தது
அதுக்கு அடுத்து நிறையா விருதுகள் பெற்றேன் என்னுடைய ஈவன்ட் ஷோக்களுக்காக
உங்களோட லட்சிய கனவுன்னா நீங்க எதை சொல்லுவீங்க
நான் ஒரு சிறந்த பெண் எண்டர்பிரணராக இருக்கணும்.என்னை மாதிரி மீடியா துறை மட்டும் இல்லாமல் வேறு எந்த துறையாக இருந்தாலும் அதில் முன்னேற முயற்சி செய்பவர்களுக்கு ஒரு ஏணி படியா இருக்கணும்
அதுக்கு அடுத்து நான் சொல்லுறது
மீடியா துறையில் சாதிக்க திறமை இருக்கிற பெண்கள் நிறையா பேர் வரணும்.மீடியா ஒரு நல்ல வாய்ப்பு வாழ்க்கையில் பெயர் புகழோடு விளங்கிட.
திருமணமான பெண்கள் தன் வாழ்க்கை அதோடு நிறைவு பெற்று விட்டது என்று எண்ணி தன்
திறமைகளை தனக்குள் புதைத்து விடுகின்றார்கள்.
அவர்கள் தனக்கான தனி திறமைகளை அறிந்து முன்னேற வேண்டும்.
என் வாழ்வில் இவ்வளவு முன்னேற்றங்களும் திருமணத்திற்கு பின்பே நடந்தது .
சரண்யா உதிர்க்கும் பொன் மொழிகள்
திசைகள் என்றால் நான்கு இருக்கும்.
அதில் உனக்கான திசை எது என்று முதலில் நீ
முடிவு செய்து பயணி,
போகும் பாதை கடினமாக இருந்தாலும் கலங்கி, நிற்க்காதே,
எப்பொழுதும் சாதனையாளர்களை முதலில் முட்டாள் என்றே விமர்சிக்கும் இந்த உலகம்.
நீ முன்னேறி செல் உனக்கான வெற்றி என்பது உன்னை நோக்கி காத்திருக்கும்.
✍🏿சுபா கிட்டு