Shanaya Daphne

WhatsApp Image 2023 06 17 at 2.38.26 PM 1 1

யார்? இந்த நடிகை ஷணாயா டாஃப்னி


இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சிறந்த நடிகைகளுள் தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் இருப்பவர் தான் நடிகை ஷணாயா டாஃப்னி
இவர் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் கல்லூரியில் பையோ மெடிக்கல் இன்ஜினியரிங் பயின்றார்.( Bio medical Engineering)
முதலில் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் .B.sc bio chemistry பிரிவில் சேர்ந்து ஒரு மாதம் படித்தார் ஷணாயா டாஃப்னி .இடையே இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கவோ.. அங்கிருந்து தன் கல்லூரி கல்வியை நிறுத்தி விட்டு . இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தார் இவர்.

அங்கே தனது கல்வியை முடித்த ஷணாயா டாஃப்னி
பணியாற்ற தொடங்கினார்.
இருந்தாலும் இவர் மனதில் எதை பற்றியோ ஒன்றின் தேடலும் ஆர்வமும் இருந்து கொண்டே இருந்தது. தன் உடன் இருந்தவர்கள் தன்னம்பிக்கை கொடுக்கவே .கலை துறை சார்ந்து எதாவது ஒரு நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு தனக்கான இலக்கு எதுவென்று தேட தொடங்கினார் நடிகை ஷணாயா டாஃப்னி

நடிகை ஷணாயா டாஃப்னியின்|| நடிப்பின் தொடக்கம்||

நடிகை ஷணாயா டாஃப்னி சிறுவயதில் இருந்தே கலைத்துறை சார்ந்த நிகழ்வுகள் நிகழ்ச்சிகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்
தனக்கு தானே சூழ்நிலைகளை கற்பனை செய்து கொண்டு நடித்து பார்ப்பார்
அவ்வாறு செய்து பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகமாகவே இருந்தது
ஆனால் தான் ஏன்? அவ்வாறு செய்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை
பின்னாளில் தான் ஒரு நடிகையாக வளர்வதற்க்கு அது தான் அடித்தளமாக அமைந்திருக்கும் என்பதும் நடிகை ஷணாயா டாஃப்னி க்கு தெரியாத ஒன்றே.
இருந்தாலும் தனது முயற்ச்சியை கைவிடாமல் தன் முயற்ச்சிகளை செய்து கொண்டு இருந்தார் நடிகை ஷணாயா டாஃப்னி.ஒருவரின் முயற்சி அவரை வெற்றியின் வழியில் உயர்த்தும் என்பதற்கு நடிகை ஷணாயா டாஃப்னி சிறந்த எடுத்துக்காட்டாவார்.

நடிகை ஷணாயா டாஃப்னியின்||குடும்ப பிண்ணணியும்||சினிமா நிராகரிப்பும்||.


சினிமா துறை பற்றி சிறிதும் அறியாத குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகை ஷணாயா டாஃப்னி.
அவ்வாறு இருக்கையில் இவர் எவ்வாறு நடிகையானார் என்று நாம் எண்ணலாம்.
ஷணாயா டாஃப்னி தான் நடிகையாக வேண்டும் என்ற தனது கருத்தை பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் அதை ஆதாரிக்கவில்லை மாறாக எதிர்க்கவே தொடங்கினர்.எனவே நடிப்பின் மீது ஏற்பட்ட தீராத காதலினால் தன்
வேலையை விட்டு விட்டு . சென்னை வந்தார் நடிகை ஷணாயா டாஃப்னி
அங்கே வந்தவுடன் தன் பெற்றோரிடம் எந்த ஒரு தொடர்பும் இல்லாமலே தனக்கான வாய்ப்புக்களை தேட தொடங்கினார் நடிகை ஷணாயா டாஃப்னி.

நடிகை ஷணாயா டாஃப்னியின்|| ஆடிசன்களும்|| சினிமா தேர்வுகளும்||


சிறிதும் சினிமா துறை அனுபவம் அற்றவராக தான் நடிப்பதற்க்காக மட்டுமே சென்னை வந்தவருக்கு
எங்கிருந்து ஆதரவும் வாய்ப்புக்களும் வரும்.தான் எதிர்பார்த்த நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் இவரின் முயற்ச்சியை விமர்சிக்கவே செய்தனர்.
சினிமாவின் மீது பற்று கொண்டவர்கள் இவரை உற்சாகம் படுத்தினர்.இந்த தன்னம்பிக்கை மேலும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தை அதிகரிக்க செய்தது
பல சினிமா பட ஆடிசன்களின் தேர்வில் பங்கேற்றார்.
அவ்வாறு வேறு ஒரு பட வாய்ப்ப்பிற்க்காக அவர் பங்கு பெற்ற ஆடிசனின் மூலம் கிடைத்தது சினிமா படம் ஒன்றிற்க்கான வாய்ப்பு
அந்த படத்தின் பெயர் ஜாம்பி ஆகும்.இதுவே இவரின் முதல் பட வாய்ப்பு ஆகும்.ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் நடிகை ஷணாயா டாஃப்னி.

நடிகை ஷணாயா டாஃப்னியின்|| சினிமா படங்களும்|| குறும் படங்களும்|| மற்றும் நடிப்பில் பல பரிமாணங்களும்||

நடிகை ஷணாயா டாஃப்னி பல சினிமா படங்களிலும்
குறும்படங்களிலும்
நடித்துள்ளார்

இதோ இவரின் திறமையான நடிப்பிற்க்கு சான்றான படங்களின் வரிசைகள்

ஜாம்பி ( zombie combination with Madras central Gopi)இதனை அடுத்து

நடிகை வரலெட்சுமியுடன் டேனி
திரைப்படம் (Danny) மற்றும்

நடிகை ஐஸ்வர்யா மேனன் உடன் வேழம் ( vezham) இதனை தொடர்ந்து

Surveillance zone Independent movie as lead character இதில் சிறப்பான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருப்பார்.

நடிகர் நாசர் உடன்
மேதகு 2 (medhagu 2)
இதில் இவரின் நடிப்பின் திறமைக்கேற்ற கதாபாத்திரம்

யாதென கேட்டேன் ( yadhana kayeten)as female lead.
மற்றும்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்

என நடிகை ஷணாயா டாஃப்னி யின் திறமையான நடிப்பின் வெவ்வேறு திறமையான பரிமாணங்கள் நீண்டு கொண்டே செல்கிறது.

நடிகை ஷணாயா டாஃப்னியின்|| நடிப்பில் வெளிவந்த குறும்படங்கள்||

மெய் (mei) short flix
Maayai ( released in kalai puli S Danu channel)

இதை தவிர பல குறும்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஷணாயா டாஃப்னி அவர்கள்

மேலும் வென்டர் யூடியூப் சேனலில் அத்தை பொண்ணு மற்றும் 90s Weds 2kids series லிலும் நடித்துள்ளார்

Acted in an important role for black sheep series\” Yavarum nalam\”

போன்றவைகள் இவரின் திறமையான நடிப்பிற்க்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நடிகை ஷணாயா டாஃப்னி|| அவர்கள் இணைந்து நடித்த பிரபலங்கள்||

வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர்கள் ஆரம்பத்தில் மிக பிரபலமான நடிகர்களின் நடிப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை
அதுவும் போராட்டங்கள் நிறைந்த சினிமா துறையில்
இருந்தாலும் இவரின் திறமையான நடிப்பின்
மூலம் பல பிரபலங்களின் திரை படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் நடிகை ஷணாயா டாஃப்னி
அந்த பிரபலங்கள் யார்? தெரியுமா

மிகவும் பிரபலமான புகழ்வாய்ந்த நடிகையான அமலா அக்கினேனி உடன் இணைந்து ஹை ப்ரீச்டஸ் சீரியல்
மற்றும் நடிகர் நாசருடன் இணைந்து ஒரு சிறந்த கதாபாத்திரம் மேதகு 2 திரை படத்தில்
மேலும் இவரின் சிறந்த நடிப்பின் வாய்ப்பாக நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் என பல பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷணாயா டாஃப்னி

நடிகை ஷணாயா டாஃப்னியின்|| நம்பிக்கை நிறைந்த வரிகள்||

தன் நடிப்பை மட்டுமே துணையாக கொண்டு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக விளங்கும் ஷணாயா டாஃப்னி அவர்கள்.கூறும் நம்பிக்கை நிறைந்த வரிகள் என்னவென்றால்
எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் தனக்கான முயற்ச்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்
அவ்வாறு செய்வதால் மட்டுமே நமக்கான லட்சியங்களை அடைய
முடியும் என்று கூறும் நடிகை ஷணாயா டாஃப்னி
தான் சிறந்த நடிகையாக வேண்டும் என்ற தனது முயற்ச்சியை தொடர்ந்து செய்து கொண்டு வருவதாகவும்
அது தன்னை சினிமா உலகில் வெற்றி பெற செய்யும் என்று நம்பிக்கையோடு கூறும் இவர் ஒரு முறை நடிகர் பார்த்திபன் அவர்களை சந்தித்தபோது அவர் கூறிய வார்த்தைகள் மிகவும் ஊக்கபடுத்தியது. அதை இன்று வரையிலும் கடைபிடித்து வருகிறார் நடிகை ஷணாயா டாஃப்னி.
எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் தொடர்ந்து முயற்ச்சிகள் செய்து தனக்கான இலக்கினை அடைந்தாள் கண்டிப்பாக அந்த துறையில் வெற்றி பெறலாம் என்பதே அவர் கடை பிடிக்கும் வழி ஆகும்.

நடிகை ஷணாயா டாஃப்னி|| கடந்து வந்த கடின பாதைகள்|| சினிமா துறையில்||

தான் நடிக்க வந்த காலகட்டத்தில் தான் நிறைய போராட்டங்களை சந்திக்க நேர்ந்தது என்று கூறும் இவர்
தொடக்கத்தில் பெப்ஸி ஊழியர்கள் ஸ்ட்ரைக். ஜீ எஸ் டி. கோவிட் என பல சூழ்நிலைகளில் படங்களின் ஆடிசன்கள் பெரும்பாலும் நடை பெறாமல் இருந்தது
அந்த நேரத்திலும் தனது நடிப்பிற்க்கான வாய்ப்புகள் தேடும் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது என்று கூறும் நடிகை ஷணாயா டாஃப்னி
அதனால் மனம் சோர்ந்து போகவில்லை தொடர்ந்து தனது முயற்ச்சிகளை செய்து கொண்டு இருந்தார்
அதன் வெற்றியாக கிடைத்து சினிமா வாய்ப்புகள் நடிகை ஷணாயா டாஃப்னிக்கு

நடிகை ஷணாயா டாஃப்னியின்|| சினிமா சாதனைகள்||


பொதுவாக சினிமாவை நேசிப்பவர்கள் அதில் சாதிக்க பல சூழ்நிலை போராட்டாங்களை கடந்தே ஆக வேண்டும்
அதிலும் எவரின் உதவியும் இன்றி சினிமாவில் சாதிப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது

சினிமாவில் தன் சாதனை எதுவென்று கூறும் நடிகை ஷணாயா டாஃப்னி
தன் நடிப்பினை மட்டுமே
கொண்டு
சினிமாவை பற்றி ஆரம்பத்தில் அறியாமல்
வந்து
இன்று தன்னை அடையாளபடுத்தும் அளவிற்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வருவதே தனக்கான பெரும் சாதனை என்று கூறுகிறார் நடிகை ஷணாயா டாஃப்னி

நடிகை ஷணாயா டாஃப்னி||அவர்களின் திருமண வாழ்வு||

நடிகை ஷணாயா டாஃப்னி அவர்களின் திருமணம் ஒரு காதல் திருமணம் ஆகும்
தன் கணவரும் ஒரு சிறந்த நடிகர் .
ஷணாயா டாஃப்னி அவர்களின் கணவர் இவரை நடிப்பு துறையில் முன்னேறி செல்ல ஊக்கபடுத்தி வருகிறார்.
இதை போன்றே நடிகை ஷணாயா டாஃப்னியும் தன் கணவருக்கு நடிப்பு துறையில் சாதித்திட சிறந்த தோழியாக ஊக்க படுத்தி வருகிறார் இருந்து வருகிறார். தன் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தன் கணவரை எண்ணி மனம் நெகிழ்ந்து கூறுகிறார் நடிகை ஷணாயா டாஃப்னி மேலும் தொடக்கத்தில் சினிமா துறையை நிராகரித்த பெற்றோர்கள்
பின்பு அவரின் திறமையான நடிப்பினை கண்டு மகிழ்ந்து நடிப்பு துறையில் சாதனைகள் படைத்திட உற்சாகம் ஊட்டி வருகின்றார்கள்
என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் நடிகை ஷணாயா டாஃப்னி

நடிகை ஷணாயா டாஃப்னி அவர்களின்||கனவும்||நடிப்பில் அவரின் லட்சியமும்||

நடிகை ஷணாயா டாஃப்னி அவர்கள் தான் சிறந்த கதாபாத்திரத்தினை ஏற்று நடிக்க வேண்டும்
என்றும் அது திரையில் தனக்கான அடையாளத்தை நடிப்பில் பெற்று தர வேண்டும் என்றும் கூறும் இவர் சினிமாவை பொறுத்த வரை முதலில் திரையில் சிறந்த நடிகையாக அமையும் கதாபாத்திரம் முதலில் கிடைக்க வேண்டும். அதன் பின்னரே ஒரு நடிகர் நடிகைகளுக்கு வெற்றி தோல்வி என்பது என்று கூறுகிறார் . அவ்வாறு தனக்கு கிடைக்கும் கதாபாத்திரம் தோல்வியுற்றாலும் அது தனக்கு மகிழ்ச்சியையே தரும் என்கிறார் நடிகை ஷணாயா டாஃப்னி . அந்த கதாபாத்திரம் ஆனது தனக்கான புகழை தேடி தருவாதாக மட்டும் இருக்க கூடாது
தன்னை சிறந்த நடிகையாக அடையாளபடுத்த வேண்டும் என்று கூறும்
இவர்
தன் உயிர் மூச்சு உள்ளவரை சினிமாவை சுவாசிக்க வேண்டும் தினசரி சூட்டிங் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் நடிகை ஷணாயா டாஃப்னி.

இவர் ஒரு சிறந்த நடிகையாக வேண்டும் என்றும் இவரின் கனவு நிறைவேறி பல வெற்றிகள் பெற வேண்டும் என்றும் நாம் வாழ்த்துவோம்

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×