SHANTHI

WhatsApp Image 2023 06 16 at 5.05.59 PM

சிறு வயதில் இருந்தே கற்பனை உலகில் சிறகடித்து பறந்தாள் இவள்….!

சிங்கப்பூர் தன்னில் பிறந்த செந்தமிழ் மனம் மாறாத சிங்க பெண்ணே…!

கலை ஆர்வம் என்பது இவளின் வண்ண கனவுகளின் உயிரோட்டம் தான்…!

தமிழ் சினிமா செய்திகளை தனது நோட்டு புத்தகங்களில் ஒட்டி…!

அன்றே சாதனைகள் படைத்திட புறப்பட்டாள்…!

ஆரம்பத்தில் ஆதிக்கமும் அவமானங்களும் இவளை துரத்திய போதும்….!

வீறு கொண்டு நடைபயின்றால் பாரதியின் மகளாய்…!

சோசியல் மீடியாக்கள் இவளை நிராகரித்த சோதனைகள் பல உண்டு…!

இருப்பினும் மனம் கலங்காது போராட தொடங்கினான் தனது லட்சியங்களை வெற்றி
பாதைக்கு அழைத்து செல்ல…!

இன்றோ இவள் அழகு பொருட்களின் அணி வகுப்பு நிறுவனங்களை…!

சிறந்து அறிமுகப்படுத்தும் சிறந்த வெற்றி பெண்ணாய்…!

நாகரீக வாழ்க்கையில் இவளின் லைஃப் ஸ்டைல் பிளாக்கர்….!

இன்று சிறந்ததொரு சிந்தனைகளின் வழிகாட்டியாய் நிலைத்து நிற்க்க…!

சாதனைகள் படைத்து
சரித்திரம் உன்னை புகழ்த்திட வலம் வருவாய்…! சங்க தமிழ் பெண்ணே…!

உனது எதிர்கால கவுகள் நிறைவேறும் காலங்கள் என்பது வெகுதூரம் இல்லை…!

உனது மலர்கள் சந்திக்கணும் என்ற விருப்பம் இனிதே நிறைவேறட்டும்…!

சிங்கப்பூரில் சிறந்த முதல் தமிழ் பெண்ணாய் லக்ஸுரியஸ் லைஃப் ஸ்டார் பிளாக்கர் என்ற..!

உனது அங்கீகார லட்சியம் வெற்றி பெற்று உனது புகழ் பாடட்டும்…!

பெற்றோர்களும் நண்பர்களும் உடன் இருந்து நம்பிக்கை கரம்
கொடுக்க…!

இவளின் சாதனைகள் தொடரட்டும்…!

இனிவரும் இளைஞர்களுக்கு உனது கடின போராட்டங்களின்…!

கஷ்டங்கள் நிறைந்த சாதனைகளின் வெற்றி
புன்னகை வழிகாட்டியாக…!

இருந்து வாழ்த்தி வரவேற்க்கட்டும்…!

ஆர்வம் நிறைந்த எவரின் லட்சியங்களும்
தோற்றதில்லை…!

என்ற உனது தன்னம்பிக்கை நிறைந்த வரிகள்…!

எதிர்காலத்தில் இன்னும் உனக்கு வெற்றிகள் பெற்று தரட்டும்…!

என்று உம்மை மகிழ்ந்து வாழ்த்துகிறது .

✍🏿subha kittu

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×