Shri Janani

WhatsApp Image 2023 06 17 at 2.38.28 PM 2

நமக்கு சோறு தான் முக்கியம்| ஸ்ரீ ஜனனி| வாழ்வியல்|

உணவுகளை ஆராய்ந்து சுவைப்பதில் ஆர்வம் கொண்டவர் ஸ்ரீ ஜனனி. இவர் சிங்கார சென்னையில் 9.4.1999ல் பிறந்தவர்
தன் கல்லுாரி கல்வியில் இரண்டு பட்ட படிப்புக்களையும் உணவு துறையில் பயின்றவர்.சிறு வயதில் இருந்தே உணவின் மீது தீராத காதலும் ஆர்வமும் கொண்டவர்
இவரின் கனவே எதிர்காலத்தில் ரெஸ்ட்டாரன்ட் ஆரம்பிக்க வேண்டும் என்பதே
நாகரீக போக்கின் வளர்ச்சியில் உணவிற்க்காக நேரம் ஒதுக்கி நாம் ருசித்து ரசித்து சாப்பிடுவது என்பது மிகவும் குறைவும் அரிதும் ஆகும்.அவ்வாறு இருக்கையில் உணவின் முக்கியத்துவமும் அது எங்கே தரம் வாய்ந்ததாக கிடைக்கும் எனவும் ஆராய்ந்து மக்களின் பார்வைக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் பிளாக்கின் மூலம் கொண்டு சேர்க்கும் இவரின் அரிய பணியை நாமும் பார்ட்டி தான் ஆக வேண்டும்

சோறு தான் முக்கியம்| தலைப்பிட்ட| ஸ்ரீ ஜனனி

சோறு என்பது தமிழரின் உணவு முறைகளில் இன்றியமையாத ஒன்றாகும்… நீரின்றி எவ்வாறு உலகு அமையாதோ அதைப் போன்று சோறு இன்றியும் தமிழரின் வாழ்வு அமையாது என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் உணவில் நீங்காத இடம் பெற்று இருப்பது சோறு தான்…! ஏர் ஓட்டும் உழவு தேசத்தில் சோறுக்கு என்றும் குறைவு என்பதே இல்லை தான்.. இந்த தலைப்போடும் இது ஒன்றிதான் போகிறது

ஸ்ரீ ஜனனியின்| food review | பயணம்| எவ்வாறு தொடங்கியது

முதலில் இவரின் பயணம் உணவு முறைகள் பற்றிய நோக்கங்கள் இல்லாமலும் எந்த வித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் தொடங்கியது என்றே கூறலாம்… குடும்பத்தினரோடு பிறந்தநாள் நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி கல்லூரி விடுமுறை நாட்களில் உணவு விடுதிகளுக்கு ( ஹோட்டல்) செல்வது இவரின் வழக்கம் அவ்வாறு செல்கையில் அங்கே இவர் ரசித்து உண்ணும் உணவுகளை புகைப்படம் எடுப்பது இவருக்கு பிடித்தமான ஒன்றே…! இது இவர் இந்த உணவினை வீட்டில் செய்து பார்ப்பதற்கு உதவியாக
இருந்தது…!

இந்த போட்டோக்களை என்ன செய்வது செல்போனில் இருந்தால் அழிந்து விடும் வாய்ப்புகள் அதிகம் எனவே

தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பிளாக்கையும் உருவாக்கி முதலில் இந்த போட்டோக்களை பதிவு செய்தார்.நண்பர்கள் வட்டத்திலும். பார்வையாளர்கள் வட்டத்திலும்
அது முதலில் ஓரளவுக்கு பார்வையார்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது இவ்வாறே முதலில் தொடங்கியது ஸ்ரீ ஜனனியின் உணவு ஆராயும் ( food review) பயணம்

கொரோனா காலமும்|ஸ்ரீ ஜனனி யின் food review( உணவு ஆராய்வும்)

இவ்வாறு தனது புகைபாபடங்களை பதிவிட்டு வந்த போது தான் கொரோனா லாக்டவுன் வந்தது..இதில் இவர் வீட்டில் இருந்தவாரே பல வகையான உணவுகளை தானே சமைத்தார்.சமைத்ததோடு மட்டும் அல்லாது அதை பிளாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிரவும் தொடங்கினார்.. இருப்பினும் உணவு போட்டாக்களை மட்டும் பதிவிடுவது இவருக்கு மனநிறைவு அளித்திடவில்லை..அதை வீடியோ எடுத்து பதிவிட்டார்.பின்னர் அந்த உணவு போட்டோ வீடியோக்களுக்கு வாய்ஸ் ஓவர் செய்தார்..போட்டோக்கள் பதிவிட்டதை காட்டிலும் மக்களின் கவனத்தை ஈர்த்தது நல்ல வரவேற்ப்பை பெற்றது இவர் செய்த உணவு பற்றிய வாய்ஸ் ஓவர் வீடியோக்கள்

இவ்வாறு கொரோனோ காலகட்டத்தில் இவரின் உணவு ஆராயும் ஆர்வம் மேலும் அதிகமானது.

ஸ்ரீ ஜனனி| எவ்வாறு ஒரு உணவு விடுதியில்| உணவுகளை ஆராய்ந்தார்|

முதலில் ஹோட்டலுக்கு செல்லும் ஸ்ரீ ஜனனி அங்குள்ள உணவு வகைகளை ரசித்து ருசித்து சாப்பிடுவார்.பின்னர் ஓரிரு நாட்களோ வாரங்களோ கழித்து அங்கே சென்று தான் ஏற்க்கனவே இந்த ஹோட்டலுக்கு வந்த சாப்பிட்டு சென்றேன்..இங்கே இந்த வகையான உணவு நல்ல சுவையுடன் இருப்பதால் மீண்டும் வந்தேன் என்று கூறி அவர்களிடம் அனுமதி வாங்கியே அங்குள்ள உணவுகளை வீடியோ எடுப்பார்..அதை தான் இன்ஸ்டாகிராம் மற்றும் பிளாக்கின் பக்கங்களில் பதிவிடுவார்..இதை பார்க்கும் நண்பர்களும் பார்வையாளர்களும் இந்த ஹோட்டலுக்கு சென்று அங்கே வயிறாற சாப்பிட்டு மனநிறைவும் மகிழ்வும் அடைவது உண்டு

ஆரம்பத்தில் |தான் செய்யும் food review|ல் விமர்சிக்கப்பட்ட ஸ்ரீ ஜனனி|

முதலில் வெளிவட்டத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் குடும்பநபர்கள் ஆகியோரின் பார்வையில் இவரின் இந்த வேலை தேவையற்ற ஒன்றாகவே தெரிந்தது..இதை ஏன்? நீ செய்யிற ஒன்றுக்கும் உதவாது என்று எல்லாம் சொல்லி இவரை விமர்சிப்பார்கள்
இருந்தாலும் அந்த விமர்ஙனங்களின் வலைவிரிப்பில் இவர் மாட்டி கொள்ளவில்லை
முதலில் தனித்து போராட தொடங்கினார்
தனக்கென்று ஒரு புகழ்வாய்ந்த வெற்றி இடத்தினை food review செய்வதில் பிடித்தார்

முதலில் இவரை வீண் வேலை என்று பேசியவர்கள் இவரின் வளர்ச்சியை கண்டு பாராட்டினர்.

இவரின் அப்பா , அண்ணன் போன்றோர் இவருக்கு துணையாக நிற்க்க தொடங்கினர்

மேலும் தரம் வாய்ந்த உணவுகள் எங்கு கிடைக்கும் என்பதையும் இவரின் வேலைக்கு உதவியாக கூற தொடங்கினர்.

விமர்சனங்கள் வெற்றியை நோக்கி நம்மை அழைத்து செல்லும் வழி என்பது
ஸ்ரீ ஜனனி யின் வாழ்வில் உண்மையே.

ஸ்ரீ ஜனனி இன்ஸ்டாகிராம்| பிளாக்|

தொடக்கத்தில் பிளாக்கினை பற்றி எதுவும் அறியாமல் தான் உள்ளே வந்தார் ஸ்ரீ ஜனனி.

இருந்தாலும் இதில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் வாய்ஸ் ஓவர்கள் மிகுந்த பாரட்டை பெற்றது.பிளாக்கில் இருந்த சக நண்பர்கள் தன்னை ஊக்குவித்து பாராட்ட தனது உணவு பற்றிய பதிவுகளை ஆர்வத்தோடு மேலும் பதிவிட்டார் ஸ்ரீ ஜனனி.

இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இவருக்கு என அதிக பார்வையாளர்களும் பாலோவர்களும் உண்டு சோறு தான் நமக்கு முக்கியம் என்றால் முதலில் ஞாபகத்தில் வருவது ஸ்ரீ ஜனனி தான் என்று சொல்லும் அளவிற்கு
மிகவும் பிரபலமானவராக இவர் இருக்கிறார் என்றால் நாம் ஏற்று கொள்ள கூடியதே ஆகும்.

ஸ்ரீ ஜனனி யின்| கனவு ரெஸ்ட்ராண்ட்|

ஸ்ரீ ஜனனி யின் லட்சிய கனவே ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஆகும்.. இப்பொழுது எல்லாம்( home delivery food ) வீட்டில் இருந்தவாறே உணவு வகைகளை ஆடர் செய்து சாப்பிடும் பழக்கத்திற்க்கு நாம் பெரும்பாலும் அடிமையாகி காணப்படுகின்றோம்.
இது ஆரோக்கியமான பழக்கம் இல்லை என்றே கூறலாம்.அவ்வாறு நாம் சாப்பிடும் உணவின் தரம் குறைந்ததாகவே பெரும்பாலும் இருக்கும்.

இந்நிலை மாற வேண்டும் என்பது ஸ்ரீ ஜனனியின் ஆசை ஆகும். தான் ஆரம்பிக்கும் ரெஸ்ட்டாரன்டிற்க்கு வரும் மக்கள் உணவினை அதே சுவையோடு ரசித்து உண்ண வேண்டும் .இதனால் மக்கள் உணவுக்கு என்று நேரத்தினை ஒதுக்கி சுவைத்து சாப்பிடுவார்கள். இது ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்கும் என்பது இவரின் நோக்கம் ஆகும்.இவரின் கனவு ரெஸ்ட்டாரன்ட் கனவு வெகு விரைவில் நிறைவேறிட நாமும் வாழ்த்துவோம்.

ஸ்ரீ ஜனனி| கூறும் உணவு பற்றிய விழிப்புணர்வுகள்|

உணவை வீணாக்குவது என்பது நாம் இந்த சமுதாயத்திற்கு செய்யும் தீமை ஆகும்.
உணவின்றி பசியோடு இருக்கும் எத்தனை பேர்களை நாம் தினசரி வாழ்வில் பார்க்கின்றோம்.அவ்வாறு இருப்பவர்களுக்கு நாம் உணவினை கொடுத்து உதவலாம்

மேலும் தான் food review செய்யும் இடங்களில் உள்ள உணவுகளை வீணாக்காது அருகில் உள்ள பசியால் இருப்பவர்களுக்கு கொடுப்பது உண்டு.

இவ்வாறு செய்யும் ஒரு செயல் கூட இந்த சமுதாயத்திற்கு நாம் செய்யும் நன்மை தான்
என்கிறார் ஸ்ரீ ஜனனி.

ஸ்ரீ ஜனனி| தொடரும் உணவு ஆராயும் பயணம்|

இவரின் இந்த சிறப்பான பணி தொடர்ந்து சிறந்திட
இவரின் ரெஸ்ட்டாரண்ட உருவாக்கும் கனவு நிறைவேறிட நாமும் வாழ்த்தி மகிழ்வோம்

Scroll to Top
×

Hello!

"Need Assistance? Chat with Us on WhatsApp!"

×