“Model, Actor, என பல திறமைகளை கொண்டு மாடலிங் மற்றும் திரை உலகில் ஜொலித்து வரும் சினி ( Sini Yudhan ) அவர்களுடன் ஒரு நேர்காணல்“
DOB
4/3/1996
Native place
palakkad
Current place
Coimbatore
Highlights
kappa tv of the model
Movie names
The Messi & Once upon a time in Madras
உங்களுடைய சொந்த ஊர் மற்றும் படிப்பு பற்றி சொல்லுங்கள் சினி (Sini Yudhan )
என்னுடைய பூர்விகம் கேரளாவாக இருந்தாலும் கூட நான் வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர் .
நீங்கள் எத்தனை வருடங்களாக மாடலிங் செய்து வருகிறீர்கள்.அதில் எவ்வாறு உங்களுக்கு ஆர்வம் வந்தது?
2 years நான் மாடலிங் பண்ணுறேன். எனக்கு சின்ன வயதில் இருந்து மாடலிங் மீது ஆர்வம் எல்லாம் இருந்தது இல்லை. கொரோனோ காலகட்டத்தில் தான் ஒரு பொழுதுபோக்குக்காக ஒரு போட்டோ சூட் நடத்தி அதை இன்ஸ்டா பக்கத்திலை பதிவிட தொடங்கினேன். அது என்னோட பிரண்ட்ஸ் மற்றும் இன்ஸ்ட்டா பாலோயர்ஸ் மத்தியில வரவேற்க்கப்பட்டது. அதை அப்படியே தொடர்ந்து பண்ண ஆரம்பித்தேன். இப்பொழுது அதற்கான பயிற்சிகள் பெற்று மாடலிங் துறையில் சிறந்த மாடலாக வலம் வருகிறேன்.
உங்களின் Movie வாய்ப்புகள் மற்றும் அதன் அனுபவம் பற்றி சொல்லுங்கள் சினி..?
திரை உலகில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல அதற்காக எத்தனையோ வருடங்கள் பலர் போராடி காத்து இருந்து வருகின்றனர். தங்களுடைய திறமைகளை நிருபிக்க. ஆனால் அந்த வாய்பு என்பது மாடலிங் நான் செய்து வரும் இந்த குறுகிய கால இடைவெளியிலே எனக்கு கிடைத்தது என்னுடை திறமைக்கு வெகு விரைவாக கிடைத்த வாய்ப்பாகவே நான் நினைக்கின்றேன். அதில் எனக்கு மகிழ்ச்சியும் தான்.
நடிகர் பரத் உடன் ஒரு movie ல் lead role ல் நடித்து வருகிறேன்,இதை தவிர மூவி வாய்ப்புகள் வருகின்றன. அதில் என்னுடை கதாபாத்திரம் என்னவென்று தேர்வு செய்து வருகிறேன்.
நீங்கள் மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் சாதித்திட கடந்து வந்த தடைகள் பற்றி சொல்லுங்கள் சினி…?
நம்ம லட்சியத்தை அடையணுண்ணா அதுக்காக போராடி தான் வெற்றி பெறணும். எந்த ஒரு விஷயத்தையும் நம்ம எளிதில் கடந்து போக முடியாது. அதை நாம வெற்றியா மாற்றுவதும் தோல்வியா மாற்றுவதும் நம்மிடம் தான் உள்ளது ,ஒரு முறை நான் கோயம்புத்தூரில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு விளம்பர படத்திற்கு ஆடிசனுக்காக சென்று இருந்தேன்.அதில் என்னை நடிக்க சொல்லி தேர்வு செய்து காத்து இருக்க சொன்னார்கள்.ஆனால் அதில் இருந்து நான் நிராகரிக்கப்பட்டேன். அந்த விளம்பர படத்தில் வேறு ஒரு பெண் நடித்தார்.
அப்பொழுது எனக்கு கஷ்ட்டமாக இருந்தாலும் கூட, ஏன் என்னால் முடியாது என்று எனக்குள்ளே ஒரு கேள்வி எழுப்பி அதில் எப்படி ஜெயிப்பது.என்னிடம் திறமை இருந்தும் கூட என்னால் ஏன் அங்கு செலக்ட் ஆக முடியலன்னு முயற்சி பண்ண ஆரம்பித்தேன். அந்த டைம்ல கோயம்புத்தூர் ல எனக்கு ஒரு Add வந்தது. அந்த ஆடிசன்ல நான் நல்லா பர்பாம் பண்ணுணேன். அந்த add எனக்கு ஒரு நல்ல பேரு வாங்கி தந்தது, அதற்கு அடுத்து தொடர்ந்து பல விளம்பர படங்களின் வாய்ப்பு எனக்கு வரத்தொடங்கியது.
Sini Yudhan
என்னுடைய மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் எனக்கான நேர்மையை நான் கடைபிடித்து வருகிறேன்,அதுவே எனக்கு என்னுடைய மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் வெற்றி பெற துணை நிற்கும் என்று நம்புகின்றேன்.
நடிப்பு துறையில் முதலில் நீங்கள் கால்தடம் பதிக்கும் போது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது ?
கொஞ்சம் தயக்கம் இருக்க தான் செய்தது. ஏன்னா மிக பெரிய நடிகர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் மத்தியில் நடிப்பது என்னை போல் புதிதாக நடிக்க வருபவர்களுக்கு ஒரு சிறு தயக்கத்தை ஏற்படுத்தும்.ஆனால் அதற்கு மாறாக நான் அவர்களுடன் நடிக்கும் போது எனக்கு அவர்கள் support பண்ணுணது எனக்கு மிகவும் நம்பிக்கையாகவும். மகிழ்ச்சியாகவும் இருந்தது.
நீங்கள் மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் முன்னேற்றம் அடைய உங்களுக்கு நம்பிக்கை அளித்தவர்கள் பற்றி…?
என்னோட family தான் first சொல்லுவேன்.உன்னால முடியும் அப்படின்னு எனக்கு நம்பிக்கை கொடுத்தது அவங்க தான். அதுக்கு அடுத்து என்னோட friends.
உங்களுடைய கனவுகள் என்ன என்பதை பற்றி சொல்லலாமே…?
கனவுன்னா சினிமா துறையில் நல்ல நடிகை என்று எல்லோராலும் பாராட்டப்பட வேண்டும்.அதுக்கான கடின உழைப்பினையும் முயற்சியையும் நான் மேற்கொண்டு வருகிறேன்.
உங்களை போல் சாதிக்க போராடுபவர்களுக்கு நீங்கள் சொல்ல வருவது…?
நமக்கான கனவுகளின் பாதையை கடினம் என்று எண்ணாமல் அதை எளிதாக கடந்து விடலாம் என்று நாம் நினைப்பதே நம்முடைய வெற்றிக்கு முதல் வழி தான்.
உங்களின் நேர்காணல் நாங்கள் மட்டும் இன்றி உங்களின் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது, உங்களின் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்.