செந்தூர பூவே என்று சில் என்று மனம் வீசி…..
விஜய் டிவியில் தன் நடிப்பின் மூலம்
ரோஜா டீச்சராக..
மக்கள் மனதில் அழகாய் மலர்ந்திருக்கும்…..
கேரளத்து பைங்கிளி ஸுரி நிதியே…..
பள்ளி கல்வி காலங்களில் உனது நடிப்பு நடனம் என
பங்களிப்பு இல்லாத நிகழ்வுகள் ஏது?
அப்பொழுதே வந்தது சில வாய்ப்புகள்….
கல்லூரி கல்வி முடித்தாய் கலை உலகில் உனக்கென
தனி இடம் வகித்திட
அயராது முயற்சித்தாய்…
மலையாள பிளவர் டி.வியில் மலர்வாடி
சீரியலில் கங்காவாக
அறிமுகமானது நடிப்பின் முகம்….
பாரதியின் கனவில் கருத்தரித்த சாதனை பெண்ணாய்….
உன்னை மாற்றி சாதிக்க
கலை துறையில் சிறகுகள் விரித்து உயர பறந்தாய்…
இந்தியன் பிலிம் மாடலாக தமிழ் மலையாளம் என்ற இரண்டு மொழிகளிலும்
அழகாக வெற்றி நடை பயின்று மேடையில்
விருதுகள் பல பெற்றாய்…..
திரை உலகில் இருந்து சில வாய்ப்புகள் உன்னை தேடி வர….
மலையாளத்தில் சாய பென்சில்
தமிழில் நாங்களும் நல்லவர்கள் தான்
என்ற இரண்டு திரைபடங்கள்…
உனது நடிப்பில் தொடங்கிய போதிலும்
இடையே நிறுத்தப்பட்டது பல
சூழ்நிலைகளால்…..
அதை கண்டு மனம் நோகாது ….
சிந்தித்து முயன்றாய்….
சன்லைட் தொலைக்காட்சியில்
சிமிக்கி கம்மலின் மூலமாக வாய்ப்பு வர.,
இருப்பினும் கலர்ஸ் தொலைக்காட்சியில்
தறிநெய்திடும் அன்ன லெட்சுமியாக….
நெசவு தொழிலின் மேன்மை உரைத்து
நெசவாளியின் ஒருமித்த குரலாக
அவர்கள் உணர்வுகளில்
வெளிபட்டு…
நடிப்பில் புகழ் பெற்றாய்……
மலையாள டெலிவிஷன்கள் தமிழ் டெலிவிஷன்கள்
திரை துறை என….
சாதனைகள் படைத்து வரும் இளம் கதாநாயகியே….
இசையின் மீது உனக்கோ எல்லையற்ற
காதல்……
உனது நடிப்பில் வெளியான மீயூசிக் ஆல்பங்கள்
தே லாஸ்ட் பிப்டின் ஆஃப் டீப்
நிமர்க்கி சாங்-2
மலபார் லவ் 4
இன்னும் ஒருசில ஆல்பங்கள்…
மக்களிடம் இசைத்து ஒலித்திட…
வெற்றிகள் பல பெற்று விருதுகள் குவித்தாய்….
உனது அன்னையின்
உற்காசகம் ஊட்டலில்…
நடிப்பு உலகில் ஜொலித்திடும் நட்சத்திரமாய் இன்று மின்னுகின்றாய்….
உன்னை தொடர்ந்து வரட்டும் சின்னத்திரை
வெள்ளி திரையில்
வெற்றிகள் பல….
சாதனைகள் பேசட்டும்
பெண்ணே நாளைய
நடிப்புலகில் உனது பெயரை…
என வாழ்த்தி சிறப்பிக்கிறது .